Loading

நட்சத்திரம் 8

“மஹி உனக்குத் தெரிய வேண்டிய நேரத்துல எல்லாம் தெரியும் அது வரைக்கும் இந்த மாதிரி ஹாஸ்பிட்டல் போறதெல்லாம் வேண்டாம் மஹி” எனப் பேசியபடி காரின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தான் தீரன்.

“என்ன பொறுத்தவரைக்கும் நீங்க எப்பவும்  ஸ்டேரேஞ்சர் தான்” எனச் சொன்னவளின் நுனிவிரல் காரின் கதவில் இருந்த அவன் விரலை தீண்ட அங்கேயே மயங்கி சரிந்தாள் மகிழினி.

‘எந்நேரமும் இவ மயங்கி மயங்கி விழறதும், விழறவளைத் தூக்கிட்டு போறதுமே எனக்கு வேலையா போச்சு’ என நினைத்தவன் உறங்கி கொண்டிருந்தவளின் உச்சந்தலையில் நடனமாடிய கூந்தலை ஒற்றை விரல் கொண்டு ஒதுக்கிவிட்டவன்,

“மஹி உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும், என்னை விட்டு எங்கேயும் போயிறாதே, நான் உன்கிட்ட இருக்கக் கூடாதுன்னு தானே நினைக்குற, நீ தேடினாலும் கிடைக்காத இடத்துக்குப் போயிறேன், லவ் யூ மஹி” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

****

மயக்கம் தெளிந்து எழுந்தவள் அறை முழுவதையும் பார்த்தாள் பிரகதீரன் அங்கு இல்லை.

“தீரன் ..! தீரன் ..!” எனக் குரல் கொடுத்த படி படியிறங்கி வந்தவளை பார்த்து,

“மஹி அவன் இவ்வளவு நேரம் உங்க ரூம்ல தான் இருந்தான், இப்ப தான் கிளம்பி வெளியே போனான் மா” என நீலவேணி சொல்ல,

“என்னோட போன்” என மறுபடியும் அவள் அறைக்குள் வந்தவள் தீரனின் எண்ணை தொடுதிரையில் தேட ‘அய்யோ கோபத்துல டெலிட் பண்ணிட்டோமே ‘ எனப் புலம்பியபடி கீழே இறங்கி வந்தவள்,

“அத்தை, அத்தை ..!” பதட்டத்தில் ஒலித்தது மகிழினியின் குரல்.

“என்னமா பொறுமையா சொல்லு “ என நீலவேணி கேட்க

“அவரோட போன் நம்பர் வேணும், அவசரமா வேணும்” என்றவளின் குரலில் பதட்டம் குறையவில்லை,

அவள் செல்ப்பேசியை வாங்கித் தீரனின் எண்ணைப் பதிவு செய்து கொடுத்தார் நீலவேணி.

வேகமாக அழைப்பெடுத்தபடி பூச்செடிகள் நிறைந்திருந்த தோட்டத்தை வந்தடைந்தவள் பல முறை அழைப்பு விடுத்தும் மறுமுனையில் தீரனின் குரல் கேட்காமல் சோர்ந்து போனவளின் செவிகளில் கேட்டுக்கொண்டே இருந்தது அவனின் குரல் “நீ தேடினாலும் கிடைக்காத இடம் போகிறேன்” என்ற தீரனின் குரல் கேட்டுக்கொண்டே இருக்க,

தன்னவனைத் தேடி வீட்டை விட்டு வெளியே புறப்பட்டாள் மகிழினி தன் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு சென்னை மாநகரத்தின் சாலையில் சிட்டாய் பறந்து கொண்டிருந்தாள். அவள் முதலில் வந்து சேர்ந்த இடம் வானவில் எப்எம், அவளைப் பார்த்து கதிரவன் வரவும்,

“கதிர்..! தீரன் எங்கே அவரை நான் பார்க்கணும்“ எனப் பேசிய மகிழினியை பார்த்து

“பர்ஸ்ட் ரிலக்ஸா உக்காருங்க மகிழ், பிரகதீரன் சார் இங்க வரலை ஆக்‌ஷூவலா அவர் ஸ்டேசன் ஹெட் கிடையாது” என அவன் சொல்ல அவள் அதிர்ந்து நிற்கவில்லை , அவள் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது தீரனின் குரல்..

ஒரு வேளை அந்த லேக்கிற்குப் போயிருப்பானோ என்ற சந்தேகத்தில் கூகுள் மேப் உதவியுடன் பயணத்தைத் தொடங்கியிருந்தாள் மகிழினி.

தன்னால் எந்தக் கெடுதலும் தீரனுக்கு வந்து விடக்கூடாது என்ற எண்ணமே அவளைத் தேடுதலில் ஊக்கம் செய்தது இடை இடையே வண்டியை நிறுத்தி பிரகதீரனுக்கு அழைப்பெடுத்து முயற்சி செய்து முயற்சியில் தோற்றும் போனாள் தீரனின் மஹி.

அவள் கூகுள் மேப் காட்டிய இடத்தில் பனைமரங்கள் நிறைந்திருக்க லேக் எங்கிருக்கிறது எனப் புரியாமல் விழித்த மகிழினியை பார்த்த முதியவர் ஒருவர் அவளருகே வந்து “என்ன பாப்பா இங்க வந்து நிக்குற?” என விசாரிக்க,

“இங்க பக்கத்துல ஏரி எதாவது இருக்கா தாத்தா..? ” கேள்வியைத் தொடுத்தவளின் வி்ழிகள் ஒரு நிலையில் இல்லாமல் சுழன்று கொண்டிருந்தது

“ஏரியா..? ” என யோசித்தவர் “ஓ அந்த ஏரியா?? வண்டிய இங்கேயே நிறுத்திட்டு இந்தக் காட்டுக்குள்ள கொஞ்ச தூரம் நடந்து போ தாயி காட்டு நடுவுல இருக்கும் ” என அவர் சொல்ல

அவள் முதல் முறை வந்த போது இரவென்பதால் அது காடு என்பதே அவளுக்குத் தெரியாமல் போயிருந்தது

“பாப்பா, தாத்தாக்கு டீ குடிக்கக் காசு” எனப் பரிதாபமாய் அவர் கேட்க ஐம்பது ரூபாயை அவர் கையில் திணித்துவிட்டு காட்டுக்குள் விரைந்து சென்றாள் மகிழினி

ஓங்கி உயர்ந்து விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் தேக்கு மரக் காட்டிற்க்குள் நுழைத்தவள் சருகுகள் சத்தம் சரசரக்க ஓடியவளின் இதழ்கள் “தீரன் தீரன்..! ” என்ற பெயரை கத்தியபடி சென்றவளின் குரலே எதிரொலியாய் வர எதிரிலிருந்து மாலை சூடியவனின் குரல் கேளாமல் பாவை நெஞ்சம் தவிக்க

“தீரன்…! நீங்க எங்கே போனீங்க” எனக் கத்தியவளின் நீர் துளிகள் மண்ணில் பட அவளின் கண்ணீர் சிந்திய இடங்களில் நீல நிறமாய்ப் பூத்திருந்த பூக்களைக் காணத் தவறியிருந்தாள் மகிழினி…

அப்பொழுது அவளின் செல்போன் சிணுங்க தீரனே அழைப்பு விடுத்திருந்தான்.

“தீரன்..! தீரன்..! நீங்க எங்க இருக்கீங்க, உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே” எனக் கேட்டவளின் குரலில் நடுக்கம்,

“நான் ஒரு ஆர்டர் விசயமா வெளிய வந்திருக்கேன் மஹி, நீ எங்க இருக்க மஹி” அவன் குரலிலும் பதட்டம்,

“நான் ஷைனிங் ஸ்டார் லேக் வந்திருக்கேன் தீரன், நீங்க பௌர்ணமி அன்னைக்கி கூட்டிட்டு வந்தீங்களே அங்க தான்” என அவள் சொல்ல

“மஹி என்ன சொல்ற, உன்னை யாரு அங்கே போகச் சொன்னது” எனப் பதறிப்போய் அவன் கேட்க

“நீங்க தானே தீரன் சொன்னீங்க தேடினாலும் கிடைக்காத இடத்துக்குப் போறேன்னு” என அவள் சொல்ல

இங்குத் தீரனின் மனதில் பயம் குடிக்கொள்ள “முதலில் நீ அந்தக் காட்டுக்குள்ள இருந்து வெளிய வா மஹி நான் அங்கே தான் வந்திட்டு இருக்கேன், பத்து நிமிடத்தில் வந்திருவேன் ” எனச் துரிதமாகச் சொன்னான். 

“எனக்கு வந்த வழி தெரியல தீரன்., எல்லா வழியும் ஓரே மாதிரி இருக்கு, நான் உள்ள இருக்கேன் வாங்க” என அவள் சொல்ல

“டேக் கேர் மஹி.. வந்திடுறேன்” என அழைப்பை துண்டித்தான் தீரன் எதோ அவன் வருத்ததில் சொன்னது இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும் என்பதை அவன் எதிர் பார்த்திருக்கவில்லை

அவளோ மறுபடியும் நடக்க ஆரம்பித்தாள்., சிறுது நேரத்தில் அவர்கள் பயணம் செய்த மோட்டார் படகு தரையில் நின்றிருக்க.

‘இது என்ன தரையில நிக்குது அன்னக்கி தண்ணிக்குள்ள தானே இருந்துச்சு“ என நினைத்தபடி மோட்டர் படகின் அருகே செல்ல அது நின்றுருந்த இடம் அவள் மனதை குழப்பமடைய செய்தது. தரையைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஏரி இருந்த சுவடே இல்லாமல் வறண்டப் பாலைவன பூமியாய்க் காட்சியளித்தது அந்த இடம்.

‘அதெப்படி   வெறும் மூன்று நாளில் லேக் இருந்த இடத்தில் இப்படி வறண்டு பலைவானம் போல் காட்சியளிக்கும்’ என யோசித்தபடி நிற்க

“ஏய் இங்கே பார்த்தியா நம்ம தேவதை வந்துட்டாங்க நமக்கெல்லாம் விடிவு காலம் வர போகுது” என்ற குரல் அவளுக்குக் கேட்க

“என்ன தவிர இங்க யாரவது இருக்கிங்களா..? யார் இப்ப பேசினது .?” எனக் கத்தியவளின் செவிகளை எட்டியது தீரனின் குரல்

“மஹி ..!” என்றவனின் அழைப்போடு சேர்ந்தாற்போல் ஒலித்தது புரவியின் குரல் அதையெல்லாம் பொருட்படுத்தாது தன்னவன் குரல் கேட்ட திசையை நோக்கி ஓடினாள் மகிழினி

“தீரன் எங்க இருக்கீங்க” எனக் கத்தியபடி ஒடியவளுக்கு மூச்சு வாங்க

“மஹி நீ அங்கேயே இரு நான் வரேன்“ எனக் குரல் கொடுக்க

சுற்றிலும் தேக்குமரங்களும் பனை மரங்களும் இருக்க, குரல் வந்த திசையை நோக்கி நின்றிருக்க அவள் செவிகளுக்கு மட்டுமே கேட்டது அந்தக் குரல்

“நக்‌ஷத்ரா..! தீரன் ரொம்பக் கெட்டவன் நீ அவன் கூடப் போகாத இங்கேயே இருந்திரு“ என அந்த அசரீரி கேட்க,

“நீங்க யாரு? நீங்க யாரு? நான் மகிழினி“ எனப் பதில் சொல்லியவளுக்கு வேர்த்துக்கொட்ட ஆரம்பித்தது

“நீ நக்‌ஷத்ரா தான் ..! இருளின் ஒளி நான், என்னைச் சந்திக்க இன்றிரவு வருகிறாயா நக்‌ஷத்ரா..?” என அந்த அசரீரி அவளுக்குப் பதில் கொடுக்க

“என் கண் முன்னால் இப்பொழுது வந்து நில்லுங்கள், நாம் சந்திப்பதை பற்றிப் அப்பறம் பேசலாம்“ எனத் தைரியமாகவே பதில் கொடுத்தாள்

“இருளில் மட்டுமே என்னைக் காண முடியும் நக்‌ஷத்ரா..! வரும் அம்மாவாசை இரவு உனக்காகக் காத்திருப்பேன் நீ வரவேண்டும், வரும்பொழுது துருவனை அழைத்து வராதே” என அந்த அசரிரீ சொல்ல

“துருவனா..?” என அவள் யோசிக்க

“இப்போதைய தீரனே அன்றைய துருவன்” பதில் கொடுத்தது அந்த அசரிரீ

“நான் வர முடியாது உன் முகத்தை என்னிடம் காட்டு” என அவள் சொல்ல

“உன் கனவுகளுக்கான விடை வேண்டுமென்றால் வா, இல்லை என்றால் அந்தத் துருவனின் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாய்ப் போ” என்ற குரல் கேட்டு அதிர்ந்து நின்றவளை பார்த்து

“மஹி இங்க இருக்கேன்” எனத் தீரனின் குரல் கேட்டு குரல் கேட்கும் திசையில் திரும்பியவள் தீரனை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவள்,

தன்னவனை நோக்கி ஒடி வந்தவள் கட்டியணைக்கச் செல்ல வாக்கிங் ஸ்டிக்கை அவள்புறம் நீட்டி  “இதைப் பிடிச்சு நடந்து வா” என அவன் சொல்ல அதைப் பிடித்து நடக்க ஆரம்பித்தாள்

“உன்னை ஏமாத்துறான் நம்பதே“ என மறுபடியும் அசரீரி கேட்க திரும்பி பார்த்தவளின் வழிகளில் அது சிக்கவில்லை

“நீ யாரு?“ எனச் சத்தமாய் கத்தியிருந்தாள். 

“யாரை மஹி கேட்கிற என்னையா?” எனத் தீரன் திரும்ப,

“இல்லை தீரன் ஒண்ணுமில்லை” எனச் சாமாளித்து வைத்தாள் மகிழினி.

“நீ எதும் பேசாதே நான் சொல்வதைக் கேள். உனக்கு நம்பிக்கை வரும்” என அந்த அசரிரீ சொல்ல அவள் தலையை மட்டும் அசைத்தாள்.

“துருவன்னு கூப்பிடு” எனக் கட்டளையிட்டது அசரிரீ

“துருவன்..!” என மெல்லிய குரலில் அழைத்தாள் மகிழினி

“நக்ஷத்ரா..!” எனத் திரும்பியவன் அவள் விழிகளை ஆராய்ந்தான் நீல நிறமாக மாறவில்லை‘ இது மஹி தான் , இந்தப் பெயர் எப்படி இவளுக்குத் தெரியும் ‘ என யோசனையில் இருக்க

“நக்‌ஷத்ரான்றது யாரு தீரன்“ என மகிழினி பின்னே வந்தபடி கேட்க

“நம்ம இங்கே இருந்து முதலில் கிளம்பலாம் வெளிய போய்ப் பொறுமையாய் பேசிக்கலாம்” எனத் தீரன் சொல்ல

“என் குரலை நீ கேட்பதை அவன் அறிந்துக்கொண்டான் அதான் உன்னை வெளியே அழைக்கிறான், இந்தக் காட்டின் எல்லை தாண்டினால் என் குரல் உனக்குக் கேட்காது பெண்ணே, அம்மாவாசை அன்று வா உன் கனவின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்வாய்” என அசரீரி அவள் காதருகே கேட்க

தேக்கு மரக்காட்டை விட்டு வெளியே வந்த நொடி அசரிரீயின் குரல் நின்று போனது.

“நான் உள்ளே போகணும் தீரன், யாரோ என்கிட்ட பேசுறாங்க, எனக்கு அந்தக் குரல் கேட்டுச்சு” என மகிழினி சொல்ல,

“அதெல்லாம் நீ எடுக்குற டேப்ளட்ஸ்னால வர இல்யூசன்ஸ்” எனத் தீரன் சொல்ல,

“என்னை ஏன் தீரன் இப்படிப் பயம் காட்டுனிங்க, எதுக்காக என்ன விட்டு போறேன்னு சொன்னீங்க, உங்களைத் தேடித்தான் இந்தக் காட்டுக்குள்ளே வந்தேன்” என மகிழினி அவனைச் சாட,

“சாரி மஹி எதோ வருத்தத்துல பேசிட்டேன், அதுக்காக என்னை இவ்வளவு தூரமா தேடி வருவ.?” எனப் பிரகதீரன் பேசிய படி அவளைக் காரினுள் அமரச் சொல்ல முன் இருக்கையில் அமர்ந்தாள் மகிழினி.

“அந்த லேக்கில் இருந்த தண்ணி எங்க போச்சு தீரன்” என அவன் முகம் பார்த்தாள் மகிழினி.

“அது வந்து மஹி பௌர்ணமி அன்னைக்கி அதுல தண்ணி வந்திரும்” எனச் சாதாரணமாய்ச் சொல்ல,

“என்னை மர்மங்கள் சூழ்ந்திருக்கு தீரன், எல்லாமே என்ன எதையோ நோக்கி ஓடச் சொல்லுது, எனக்கு ரொம்பப் பயமா இருக்கு என்னை விட்டு எங்கேயும் போக மாட்டிங்களே“ என ஆக்ஸிலேட்டரில் இருந்தவனின் கையை மென்மையாகப் பற்றினாள் தீரனின் மகிழினி.

முதல் முறை அவளின் தொடுதல் ஜென்மங்கள் கடந்த தன்னவளின் தொடுதல் அவன் மேல் உள்ள நம்பிக்கையைப் பறைசாற்ற. மகிழினியின் கண்களில் காட்சிகள் பிம்பமாய்ப் பட்டு மறைந்தது.

ஓங்கி உயர்ந்த மரங்களின் நடுவே ஒய்யாரமாய் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள் பெண்ணவள் பூக்களால் அலங்கரிக்கபட்ட ஊஞ்சலில் வெந்நிற தேவதையாய் ரத்தினங்கள் மின்னும் கீரிடத்துடன் கார்குழல் காரிகையாய் குழந்தைத் தனம் மாறச் சிரிப்புடன் ஆனந்த ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் அவள்.

பட்டெனக் காட்சிகள் மறைய சிந்தனையில் இருந்தவளின் கைகள் அவன் கை மேல் இல்லை.

“இப்போவெல்லாம் பகல் கனவே வர ஆரம்பிச்சிருச்சு தீரன், ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கணும்” எனச் சொல்லிய படி சாலையைப் பார்த்திருந்தாள் மகிழினி.

இப்ப நான் உங்க கைய பிடிச்சேன்ல தீரன்” என அவள் கேட்க,

“இல்லை மஹி , நீ எதோ குழப்பத்துல இருக்க, வீட்டுக்கு போய் நல்லா தூங்கி எழுந்திரி எல்லாம் சரியாகிடும்“ எனச் சொல்லியபடி சாலையில் கவனம் செலுத்த குழம்பி போனவள் சற்றுக் கண் அயர்ந்தாள்.

‘உறங்கும் போதும் என் தேவதை அழகு’ என நினைத்த படி இமை மூடிக் கிடந்த தன் அழகு தேவதையை ரசித்தவன் கைக்கெட்டும் தூரத்தில் தன்னவள் ஜென்மங்கள் கடந்த காதல் இணைந்திருந்தாலும் ஆசையைத் தன்னவளின் நுனி விரல் தொடவும் அஞ்சி நடுங்கும் அளவுக்குச் சூழ்நிலை, தானாக நெருங்க முடியவில்லை என்ற கவலை, தனக்குள்ளே ஆசைகளை மூழ்கடித்தபடி அமர்ந்திருந்தான் தீரன்.   

யுகங்கள் தாண்டிய என் காதலின் மௌனமே,

உன் ஸ்பரிசம் தீண்டா விரல் நுனியில்

என்னுயிரை அடக்கி வைக்கிறேன்!

காலம் வீசிய சாபத்தின் சுவரெழுப்பி,

உன் விழிமுன்னே அந்நியனாய் நின்றாலும்…

என் நெஞ்சாக் கூட்டின் ஓசையெல்லாம்

‘நக்ஷத்ரா’ என்றே துடிக்கிறதே!

அம்மாவாசையின் இருள் உன்னை விழுங்கும் முன்,

என் விண்மீனை மீட்டெடுக்க சாபத்தின் விலங்கை உடைப்பேன்..

என் நட்சத்திரமே

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்