
அரை மணி நேர பயணத்தில் அதி மற்றும் நிவேதாவின் இடையில் மெல்லிய நட்பு ஒன்று இழையோடியது …..
“வேதா இன்னும் ரெண்டு நிமிசத்துல வீடு வந்துடும்…. நீ ஓகே தானு சமாளிப்பல…. இல்ல உனக்கு இன்னும் டைம் வேணுமா…. கொஞ்ச நேரம் கழிச்சி கூட வீட்டுக்கு போகலாம் சொல்லு… என்ன பண்ணலாம் வேதா” என்று நிவேதாவிடம் கேட்டான்……
“எவளோ நேரம் கழிச்சி போனாலும் அவங்கள பார்த்து தான் ஆகனும் சோ இப்பயே போலாம் கொஞ்சம் தெளிவா தான் இருக்கேன் அவங்க பேசுனா நீங்களாம் இல்லையா…. வசும்மா, அண்ணா, பிரியா, நீங்க இருக்கீங்க பாத்துக்க மாட்டிங்களா” என்று அதியிடம் கேட்டாள்…..
அவனும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே தலை அசைத்தான்…. இரண்டு நிமிடத்தில் வீடும் வந்தது…. ஒரு நொடி தயங்கி வீட்டினுள் சென்றாள்….. அவள் வீட்டினுள் நுழைந்தவுடன் அவள் பார்த்தது தன் கையை வெட்டிக் கொள்ள முயலும் சாந்தாவையும் அவரை தடுக்க முனையும் வசும்மா மற்றும் நிஹாவையும் தான்…. ருக்மணி அம்மா இன்னமும் உறங்கி கொண்டு தான் இருந்தார் ….
பாலய்யா நிதிஷ் பிரியா அந்த இடத்தில் இல்லை …. மூவரும் வெளியே சென்று இருந்தனர்… சாந்தா கையை வெட்டிக் கொள்ள போவதை பார்த்து இருவரும் அதிர்ச்சியாக இருந்தனர்… அதியின் அதிர்ச்சி எல்லாம் சில நொடி தான்…. விரைவாக செயல்பட்டு அவர் கையில் இருந்த கத்தியை தூர வீசி இருந்தான்… ஆனால் கத்தியின் முனை அவனின் கையை பதம் பார்த்து இருந்தது…..
அதனால் கொஞ்சம் ரத்தம் வெளியேறியது… அது அவனுக்கு அவ்வளவு பெரியதாக தெரியவில்லை…. ஆனால் அவனின் கையில் ரத்தத்தை பார்த்து நிவேதாவிற்கு ஏனென்று தெரியாமல் உள்ளம் பதறியது….. உடனடியாக முதல் உதவி பெட்டியை எடுத்து வந்து அவனின் கைக்கு மருந்தை போட்டாள்…..
அவன் “அதுலாம் வேண்டாம் வலிக்கல” என்று கூறியும் விடவில்லை…. மருந்து போட்ட பின் தான் விட்டாள்…. அதற்குள் சாந்தாவை சமாதானம் செய்து தூக்க மாத்திரை குடுத்து தூங்க வைத்து விட்டு வசும்மா மற்றும் நிஹா வெளியே வந்தனர்…. வசும்மா முதலில் அதியின் கை காயத்தை பார்க்கவில்லை தற்போது தான் பார்த்தார்… அவரும் பதறி போய் “வலிக்குதா” என்று கேட்டார்…
அவன் “அதுலாம் வலிக்கல ம்மா” என்று கூறிவிட்டு நிதிஷை கேட்டான்….
“அவனும் பிரியாவும் சாந்தாவோட வீட்டுக்கு போய் இருக்காங்க… அவளோட பொருள் எல்லாம் எடுத்துட்டு வர” என்று கூறினார்…
“அப்பறம் நிஹாவோட அப்பா அவர் சேகரிச்ச டாக்குமெண்ட்ஸ் எடுத்துட்டு வர அவர் வீட்டுக்கு போய் இருக்காரு…” என்று கூறினார்….
“ஏன் சூசைட் செய்ய போனாங்க ???? நல்லா தானு இருந்தாங்க நான் போற அப்ப கூட” என்று வசும்மாவிடம் கேட்டான்….
“நல்லா தான் இருந்தா…. ஆனா நிஹா அவளோட அம்மா பக்கம் போய் அவங்கள அவளோட மடியில படுக்க வெச்சிக்கிட்டா…. அதை பார்த்து தான் சாந்தா ரொம்ப கோவமா பேசுனா அப்பறம் பக்கத்துல இருந்த கத்தியை எடுத்து கையை வெட்டிக்க போனா” என்று கூறினார்….
“சரி விடுங்க ம்மா .. ” என்று கூறிவிட்டு … “ம்மா நான் வீட்டுக்கு போகட்டா அப்பத்தா தனியா இருப்பாங்க கிளம்பட்டா???” என்று கேட்டான்….
“ரொம்ப நன்றிப்பா எங்களுக்காக உன் வேலைய விட்டுட்டு இங்க வந்ததுக்கு ஆமா அம்மா தனியா இருப்பாங்க…. நீ கிளம்பு நான் நாளைக்கு வந்து அம்மாவை பாக்குறேன்னு சொல்லு” என்று கூறினார்…..
“ஓகே ம்மா நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு கிளம்பும் போது நிதிஷ் மற்றும் பிரியா வீட்டுக்கு வந்தனர்… அவர்களும் அதியின் கை கட்டை பார்த்து பதறி என்ன ஆனது என கேட்டனர்…. வசும்மா தான் நடந்த அனைத்தையும் கூறினார்…..
அதி நிவேதாவை ஒரு பார்வை பார்த்து விட்டு “ஐயோ நிதிஷ் இது அவளோ பெரிய காயம் இல்லை சின்னது தான் உங்க தங்கச்சி பெருசா போட்டு இருக்காங்க…… நீங்க வேணும்னா வீட்டுக்கு வந்து பாட்டியோட ரியாக்சன் பாருங்க” என்று கூறினான்….
இவர்கள் பேசியதை நிஹா ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்…. பிறகு தன்னை சமன் செய்து கொண்டு நிவேதாவின் அருகில் சென்றாள்…. அதுவரை சிரித்து பேசிக் கொண்டு இருந்த அனைவரும் அமைதி ஆகினர் ….
“உன்னை நான் படுத்துன கஸ்டத்துக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…. மன்னிப்பு கேட்டு என்ன நான் நியாய படுத்திக்கல….. நான் பண்ணதுக்கு உன்னால மன்னிக்கவும் முடியாது….. இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறினாள்… அனைவரும் நிவேதா என்ன கூறுவாள் என பார்த்தனர்….
சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தாள்… பிறகு தன்னை சமாளித்து நிஹாவை பார்த்து பேச ஆரம்பித்தாள்….
“எனக்கு விவரம் தெரிஞ்சி நான் உங்கிட்ட பேசுனது கூட இல்லை… உன் பக்கத்துல வந்தாலே அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க…. நானும் அப்ப ரெண்டு மூணு வயசு குழந்தை தானு அவங்களுக்கு தெரியாம போய்டிச்சி….. அப்ப இருந்தே நீ இருக்க பக்கமே வர மாட்டேன்….
நான் ஏயிட் படிக்குற அப்ப நீயா என் பக்கம் வந்த… நீயா என்கூட சண்டை போட்ட…. நீயா தான் போய் கீழ விழுந்த….. ஆனா எல்லாரும் கேட்ட அப்ப உன்னோட செயின் நான் வேணும்னு கேட்டேன் நான் தரலனு தள்ளி விட்டுட்டனு சொன்ன…… அன்னிக்கு நான் எவளோ அடி வாங்குன தெரியுமா…. ரெண்டு நாள் எனக்கு அவங்க சாப்பாடு போடல….
ரெண்டு நாள் கழிச்சி பெரியம்மா வந்தாங்க வீட்டுக்கு…. நான் ஸ்கூல் கூட போகல…. நீ ஜாலியா சொகுசா பெட்ல தான் படுப்ப….. நான் ஸ்டோர் ரூம் மாதிரி இருக்க ரூம்ல தான் தூங்கணும்…. அந்த ரெண்டு நாள் யாருமே என்ன வந்து பாக்கல… பெரியம்மா பெரியப்பா தான் வந்தாங்க…. நான் என்ன நிலமைல இருந்தேன் தெரியுமா?????? என்று கேட்டு அழுதாள்….
நான் ஏஜ் அட்டென்ட் பண்ணி இருந்தேன்…. முதல் நாள் நைட்டே பண்ணி இருக்கேன்… அதிகமா பிளட் லாஸ் ஆகி இருக்கு… சாப்பிடாம இருந்தது.. எல்லாம் சேர்ந்து நான் மயக்கத்துல இருந்து இருக்கேன்…. அடுத்த நாள் மதியம் தான் பெரியம்மா வந்தாங்க… என்று கூறினாள்… அவளால் பேசக்கூட முடியவில்லை…. அழுதுகொண்டே பேசியதால் மூச்சு வாங்கியது…..
பிரியா தான் மேற்கொண்டு கூறினாள்…. “உன்னோட பயம் அவளோட உயிருக்கே ஆபத்தா இருந்தது தெரியுமா???? நானும் போய் இருந்தேன்…. நான் சிக்ஸ் மந்த்ஸ் முன்னாடி தான் ஏஜ் அட்டென்ட் பண்ணி இருந்தேன்… நாங்க ரெண்டு பெரும் தான் உள்ள போனோம்…. எப்படி பேச்சு மூச்சு இல்லாம எவளோ ரத்தம் போய் மயக்கத்துல இருந்தா தெரியுமா???
நாங்க தான் அவளை குளிக்க வெச்சி டிரஸ் மாத்தி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம் தெரியுமா??? அவ மயக்கத்துல இருந்து எழவே ரெண்டு நாள் ஆச்சி….. உன்னோட எக்ஸ் அப்பா அம்மா கிட்ட சொன்னா உடனே ஜாதகம் பாக்க தான் போறாங்க…. எதோ கூமுட்டை ஜோசியர் நிவேதா ஜாதகம் உயிர் பலி குடுக்கும்னு சொன்னானாம்…. ஜாதகம் பார்த்துட்டு வரும் போது ஜஸ்ட் மிஸ்ல ஆக்சிடென்ட்ல இருந்து தப்பிச்சாங்களாம்… அப்டி தான் சொன்னாங்க தெரியுமா????
அவளை எங்க கூட அத்தம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க…. கொஞ்ச நாள் எங்க வீட்டுல தான் இருந்தா… ஊரு உலகத்துக்கு பயந்து திரும்பியும் அங்க கூட்டிட்டு போனாங்க… அங்க போய் அவளை தான் எல்லா வேலையும் செய்ய வெச்சாங்க… எவளோ கஷ்டப்பட்டா தெரியுமா???” என்று நிஹாவிடம் கேட்டாள்… பதிலின்றி நின்று இருந்தாள்….
தற்போது நிவேதாவே தொடந்தாள்…. “அது வரைக்கும் என்னோட ஸ்கூல் பீஸ் கட்டிட்டு இருந்தவங்க…. அதுக்கப்பறம் என்ன கண்டுக்கவே இல்லை…. லீவ் முடிஞ்சி ஸ்கூல் போன பீஸ் கட்டலைனு வெளிய நிக்க வெச்சிட்டாங்க… பிரியாக்கு பீஸ் கட்ட வந்த பெரியப்பா என்ன வெளிய நிக்க வெச்சது பத்தி கேட்டாங்க… அப்பறம் பெரியப்பா தான் பீஸ் கட்டுனாங்க…..
டென்த்ல டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்…. லெவந்த்ல பர்ஸ்ட் டைம் பப்ளிக் எக்ஸாம் எழுதி அப்பயும் டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்….. டவெல்த்ல ஸ்டேட் செகண்ட்…. ஆனா ஒரு விஷ் கூட பண்ணல… நான் உன்ன என்னோட படிப்புல கம்பர் பண்ணல என்ன நடந்ததுனு சொல்றேன் அவ்வளவு தான் என்று கூறி விட்டு நீ டென்த்ல நானூத்தி ஐம்பது மார்க் தான் எடுத்த… ஆனா உனக்கு புது டிரஸ், என்ன வீட்டுல தனியா விட்டுட்டு நீங்க மட்டும் ஏற்காடு போய் ரெண்டு நாள் தங்கிட்டு வந்திங்க….
எத்தனை நாள் பீரியட்ஸ் ஆகி சமைக்க முடியாம இருப்பேன் தெரியுமா…. ஆனாலும் உங்களுக்கு சமைக்கணும்… என்னிக்கு எனக்கு உடம்பு சரி இல்லையோ அன்னிக்கு தான் நீ வேணும்னே ரொம்ப நேரம் நின்னு சமைக்க கூடிய சமையல் பண்ண சொல்லுவ… என்னால முடியலன்னு சொன்னா…. நீ போய் அவங்க கிட்ட என்ன சொல்லுவியோ தெரியாது… ஆனா என்ன போட்டு அடிப்பாங்க… அடிச்ச வலி, பீரியட்ஸ் வலி எல்லாம் சேர்ந்து சமைப்பேன் தெரியுமா??????” என்று கேட்டாள்
“எல்லாமே பண்ணிட்டு இப்ப வந்து மன்னிப்பு கேட்டா எனக்கு எல்லாம் சரி ஆகுமா ???? நான் அனுபவிச்ச வலி போகுமா ???” என்று கேள்வி எழுப்பி விட்டு ரூம் உள்ளே சென்று விட்டாள்….
யாருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை…. பாலய்யாவும் அங்கு தான் இருந்தார்…. அவர் நேரே சென்று வசும்மாவிடம் கை கூப்பி “என் பொண்ணு பண்ணதுக்கு அவளை மன்னிச்சிடுங்க அம்மா…. இனிமே அவ உங்க கண்ணுலயே பட மாட்டா…. இப்பயே அவ மாறிட்டா…. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று கூறி விட்டு தான் கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸை அவரிடம் கொடுத்து விட்டு ருக்மணி அம்மாவை எழுப்பி அழைத்து கொண்டு நிஹாவுடன் அந்த வீட்டை விட்டு சென்றார்….
( இனிமே வாய்ப்புகள் இருந்தா இவங்க மூணு பேரையும் கதைல பாக்கலாம்…. இனிமேவாச்சும் நிஹா திருந்தி பாலய்யா ருக்மணி அம்மாக்கு நல்ல பொண்ணா இருக்கட்டும்)
மற்ற மூவருக்கும் இந்த விசயம் தெரியும் என்பதால் அமைதியாக தான் இருந்தனர்… ஆனால் அதி!!!!! தான் கேட்ட விசயத்தை ஏற்று கொள்ள முடியாமல் அப்டியே சிலையாக நின்று விட்டான்….. அவன் கண்களில் இருந்து கண்ணீர் வலிந்தது…..
அப்பத்தாவும் அதியை காணாமல் வசும்மா வீடு வந்து இருந்தார்…. நிஹா பேசும் பொது தான் அவர் வந்து இருந்ததால் அவரை யாரும் பாக்கவில்லை…. அவரும் கேட்டு விட்டு அப்டியே நின்று விட்டார்…. அதியின் கண்ணீரில் தான் அவர் சுயம் பெற்றார்…. தன் பேரனிடம் சென்று “ஐயா ராசா” என்று அவனின் கையை பிடித்தார்…. அவ்வளவு தான் அவரை கட்டி கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்…. அவனின் அழுகை சத்தத்தில் உள்ளே சென்ற நிவேதா வெளியே ஓடி வந்தாள்…..
“ராசா அழுவாத…. என் ராசா அழலாம… அழுகாதையா …. ” என்று அவனை சமாதானம் படுத்தினார்… ஆனால் அவன் அழுகையை நிறுத்த வில்லை… நிதிஷ் அவனின் அருகில் சென்று அவனை தன் பக்கம் திருப்பி அவனை அணைத்து கொண்டான்….
அதியும் அணைத்து கொண்டு அவனிடம் “ஏன் டா என் அம்முவை இவளோ கஷ்டப்பட விட்ட??????…. ஏன் டா அவளை அடி வாங்கி விட்ட ?????? ” என்று அவனிடம் அழுது கொண்டே கேட்டான்….
யாரும் எதுவும் பேசவில்லை….. அவனின் அம்முவிற்கான அழுகையை யாரும் நிறுத்த சொல்லவில்லை… வசும்மா, நிதிஷ், பிரியா மூவரும் ஒரு ஆண்மகன் தங்கள் வீட்டில் பெண் பட்ட கஸ்டத்திற்கு அழுகிறான்… இவனை தவிர யார் அவளை நன்றாக பார்க்க முடியும் நினைத்து அவனை பெருமை பொங்க கண்களில் கண்ணீரோடு பார்த்து இருந்தனர்… அப்பத்தா முடிவே செய்து விட்டார் நிவேதா தான் தங்கள் வீட்டு மருமகள் என….
நிவேதா வந்ததை யாரும் பார்க்கவில்லை அவள் அதியின் அழுகையில் அப்டியே கதவில் சாய்ந்து நின்று விட்டாள்…. சற்று முன் கம்பிரமாக தன்னுடன் பேசிக் கொண்டு வந்த ஒருவன் தனக்காக அழுகிறான்…. அதுவும் அவனின் அம்மு என்று கூறி அழுகிறான் என்று தெரிந்து சிலை என நின்று விட்டாள்….
அதி கண்களை துடைத்து கொண்டு வசும்மாவின் முன் நின்றான்… ” அம்மா உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன் நான் அம்முவை காதலிக்குறது…. அவளை நான் நல்லா பாத்துக்குறேன் ம்மா…. தயவு செஞ்சி அவளை எனக்கே தந்துடுங்க அம்மா ப்ளீஸ்” என்று கேட்டான்
அப்பத்தாவும் வசும்மாவிடம் வந்து “எங்க வீட்டு மீனாட்சியை எங்களுக்கே தந்துடு வசு” என கேட்டார்…..
வசும்மா நிதிஷ் பிரியா என்ன பதில் கூறுவர்??????????? நிவேதா அதியின் காதலை ஏற்று கொள்ளவளா??????? அவளின் என்ன சொல்கிறாள்???????? என அடுத்து பதிவில் பார்க்கலாம்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



அடேங்கப்பா லவ் புரோபோசல் இப்படி ஆகிடுச்சு … அதி நிவியை இவ்வளவு லவ் பண்றானே … சூப்பர் … நிவி நிஹா வை நல்லா பேசுன மா