Loading

சக்கரை தழுவிய நொடியல்லவா!

அத்தியாயம் 36

கனத்த இமைகளைக் கஷ்டப்பட்டு திறத்தாள் மதுதாரா. முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பதே அவளுக்குத் தெரியவில்லை. இமைகளைத் தட்டி தட்டி சிப்பி விழிகளைத் திறந்து, சுற்றி முற்றி பார்க்க அவள் இருப்பது மருத்துவமனை அறை என்பது விளங்கியது.

அங்கிருந்த செவிலியர் தான் அவளைக் கவனித்துக் கொண்டார். “மேடம்! என்னைப் பாருங்க.. எழுப்பாதீங்க. எங்கயும் வலி எதாவது தெரியுதா?” எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் வந்துவிட்டார்.

“மேடம் எப்படி இருக்கீங்க? எதாவது டிஸ்டபென்ஸ் இருக்கா? பெயின் எங்கயாவது இருக்கா?” எனக் கனிவுடன் கேட்க, அவளால் உறக்க பதில் கூறமுடியவில்லை. ஆனாலும் முயன்று “இல்லை.. டயர்ட்டா இருக்கு. லைட்டா பெயின் இருக்கு.. அதிகமா இல்ல.. கொ.. கொஞ்சம் மூச்சு வாங்குது” என நாலு வார்த்தை பேசும் முன் அவளுக்கு மூச்சு வாங்கியது.

மருத்துவர் “கொஞ்சம் அப்படி தான் இருக்கும் டேப்லட்ஸ் ரெகுலரா எடுத்துக்கிட்டா கொஞ்ச நாள்ல சரியாகிடும். ரிலாக்ஸ்ஸா இருங்க. நர்ஸ் அவங்களுக்கு இத போடுங்க” என அவளுக்கான ஊசியை எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த படுக்கையில் உள்ள நோயாளியைப் பார்க்கச் செல்ல, அவர் பின்னாலே சென்ற மதுவின் கண்கள் விரிந்தது.

“டா.. டாக்டர்” எனக் கொஞ்சம் உறக்க அழைக்க, என்னவோவெனப் பதறி மருத்துவரும் வர,

“அ.. அப்பா அப்பாவுக்கு என்னாச்சு?” எனக் கேட்கவும் தான் அவர்களது மடத்தனம் உணர்ந்தனர். இரு படுக்கைக்கும் இடையில் இருந்த திரை விலகி இருக்க அன்புவை பார்த்துவிட்டாள் மது. கண்விழித்ததும் அதிர்ச்சியடைய கூடாது என்பதற்காகப் பொருமையாக,

“கூல். கூல். ஹீ இஸ் ஆல்சோ நார்மல். கொஞ்சம் அப்ஸர்வேஷன்ல தான் இருக்காரு. நோ வொரீஸ். உங்க ஹெல்த்துக்கு அது இப்போ நல்லதில்ல. ரிலாக்ஸ். இன்னைக்கு உங்கள நார்மல் ரூம்க்கு மாத்துவாங்க. அவர நாளைக்கு மாத்துவாங்க அவ்ளோதான். ரிலாக்ஸ்..” எனக்கூறி செவிலியரை முறைத்தார்.

அவருக்கும் தன் தவறு புரிய, திரையைச் சரிசெய்ய, மது அவரைத் தடுத்துவிட்டாள்.

“அதான் தெரிஞ்சிருச்சே அப்புறம் என்ன திறந்தே இருக்கட்டும். நான் அப்பாவ பார்த்துட்டே இருக்கேன்” எனக்கூற,

“டாக்டர் திட்டுவாங்க மேடம்.. அப்பாவுக்கும் நார்மல் தான். நீங்க ரெஸ்ட் எடுங்க” என நாசூக்காகக் கூறியவர் அன்புவை கவனிக்க சென்றுவிட்டார்.

வெளியே இன்னும் அடங்குவேனாவென நின்றார் ஆனந்தி. “சித்தார்த்து! அம்மா உனக்கு நல்லதுக்கு தான்யா இப்படிலாம் பண்ணினேன். நான் படிக்காதவ தான அதான் அறிவில்லாம பண்ணிட்டேன். வாயா வூட்டுக்கு போலாம்” என அழைத்தார். தப்பி தவறியும் உள்ளே உயிரைக் கையில் பிடித்துக் காத்திருக்கும் இரு ஜீவன்களைப் பற்றிய நினைப்பு இல்லை ‘என்ன ஜென்மமோ’ என தான்அங்கிருந்த அனைவரும் பார்த்தனர்.

சித்தார்த் “ஏம்மா! ஏன் இப்படி இருக்க?” எனச் சக்தி எல்லாம் வடிந்த குரலில், அயர்ச்சியாக வந்தது வார்த்தை.

“நமக்கு அவங்க வேணாம் ராஜா.. நீ வா நம்ம வூட்டுக்கு போலாம்”

“கடைசி வரைக்கும் திருந்த மாட்டியாம்மா? உனக்கு என்னைப் பிடிக்குமானு எனக்குத் தெரியாது, ஆனா எனக்கு உன்னை எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? உலகத்துல உள்ள எல்லாத்தையும் விட உன்னைத் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஏன்னா நீ என் அம்மா, ஆனா உனக்குச் சிந்துவ மட்டும் தான் பிடிக்கும்.

விவரம் தெரியாத வயசுல பால் கூடக் குடுக்காம விட்டுட்டு போனீயாம்.. அத்தை எனக்கும் சேர்த்து பால் கொடுத்து, புள்ளை போலப் பார்த்தாங்களாம் அம்மாச்சி அடிக்கடி என்கிட்ட சொல்லிருக்கு. அதெல்லாம் எனக்கு ஞாபத்துல இல்லம்மா..

ஆனா ஞாபகம் தெரிஞ்சு அம்மானு நான் உன்கிட்ட வரும்போது வயித்துல பாப்பா இருக்கா தள்ளிப்போனு சொன்ன.. புரியாத வயசுல உனக்கு என்னைப் பிடிக்காதோனு நினைச்சு எவ்ளோ அழுதுருப்பேன் தெரியுமாம்மா!” எனக்கேட்க, ஆனந்தி “அது மாசமா இருக்கும்போது வயித்துல முட்டிருவனு” எனத் தயக்கமாகக் கூற,

“அப்போ எனக்கு அது புரிஞ்சிருக்காதேம்மா.. பொறுமையா சொல்லிந்தா எனக்கும் புரியும்ல.. அப்புறம் சிந்து வந்தபிறகு நான் உன் கண்ணுலயே தெரியலயே.. அவ மட்டும் தான போதும்னு தான நீங்களும், அப்பாவும் இருந்தீங்க.. அப்போ நான்? எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சிங்களா? நான் எவ்ளோ வேதனை பட்டேன் தெரியுமா?

எழில் சித்தி ஆதவன் பிறந்தபிறகு அகிலாவ பாக்கலயா? ஈகை அத்தை மது பிறந்தபிறகு அஸ்வந்த்தை பாக்கலயா? ஊர்ல யாரும் முதல் பிள்ளைகளைப் பாக்கலயா? எல்லாரும் பாப்பாங்களே ஆனா நீ மட்டும் ஏன்மா என்னைப் பாக்கல?

நான் எவ்ளோ ஏங்கிருப்பேன் தெரியுமாம்மா? என்ன தான் அம்மாச்சி, மாமா அத்தைனு எல்லாரும் பார்த்தாலும் ஒரு குழந்தைக்கு அதோட அம்மா தானம்மா தேவை.. அதே மாதிரி தான நீயும் எனக்குத் தேவையா இருந்திருப்ப?

நான் தேடுனேன்மா உன்னைய.. அஸ்வந்த் அத்தை கைய பிடிச்சு நடக்கும் போதெல்லாம் எனக்கும் உன் கைய பிடிச்சு நடக்க ஆசையா இருக்கும். அஸ்வந்த் மாமா, அத்தை கூட ரூம்ல தூங்கும்போது நான் அம்மாச்சி கூட ஹால்ல தூங்குவேன். எத்தனை நாள் உன் கூடத் தூங்கனும், உன் மேல கால் போட்டுத் தூங்கனும்னு ஏங்கி இருக்கேன் தெரியுமா?

என்ன தான் அத்தை எனக்கும், அஸ்வந்துக்கும் ஊட்டினாலும் என் அம்மா நீ தான.. உன் கையால ஊட்டிவிட்டு சாப்பிட எனக்கு ஆசை இருக்காதா? ஆனா எனக்கு ஒரு நாள் கூட நீ ஊட்டினதில்லையே! நிறைய நிறைய ஆசை இருந்ததும்மா எனக்கு.. உன் முந்தாணைய பிடிச்சிட்டு உன்கூடவே அழைய.. உன் பக்கத்துல இருக்க.. உன் கூடக் கல்யாண வீடுகளுக்குப் போக ஆனா எதுவுமே எனக்குக் கிடைக்கலயே!” எனக்கூற ஆனந்தியால் பதில் கூற முடியவில்லை கண்கள் கரித்தது அந்தக் கல்மனதுக்கும்.

“உங்களையும் தேடினேன் பா.. எல்லா பசங்களும் அவங்க அப்பா தான ஹீரோ அது மாதிரி தான் எனக்கும். எல்லாரும் அவங்கவங்க அப்பா கூட ஸ்கூலுக்கு வரும்போது என்னைக் கூட்டிட்டு போக நீங்க வரலியே.. கடையில இருந்து ஒரு டிரஸ் நல்லநாளுக்கு எனக்கு வரும் ஆனா எனக்கு உங்க கூடக் கடைக்குப் போகனும், எனக்குப் பிடிச்சமான டிரஸ்ஸை எடுக்கனும்னு ஆசைபட்டேன் ஆனா.. நடக்கலயே!

மாமா கிட்ட நான் அடம்பிடிக்க முடியுமாப்பா? அத்தைகிட்ட நான் சண்டைபோட்டு கோச்சுக்க முடியுமாம்மா? இதெல்லாம் உங்க கிட்ட தான நான் பண்ண முடியும்? ஆனா எனக்கு நீங்க அந்த வாய்ப்பே கொடுக்கலயே!

பேரன்ஸ் டீச்சர் மீட்டிங்க்கு வருவீங்கள.. ஹ்ம்ம் சிந்து கிளாஸ்க்கு மட்டும்.. நான் என்ன படிக்கிறேன் எப்படி படிக்கிறேனு ஒரு நாளாவது பார்த்திருப்பீங்களா? மாமா, அத்தை தான் வருவாங்க. எந்த இடத்துலயும் எனக்குப் பேரன்ஸ் கையெழுத்தே இருக்காது எல்லா இடமும் கார்டியன் கையெழுத்து தான். எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்திங்களா?

அப்போ நான் அநாதை தான.. பெத்தவங்க இருந்தும் அநாதை தான. இப்போ வந்து வா வான்னு சொன்னா எப்படி வருவேன்? ஆனாலும் வந்தேனே கோபத்துல.. இவங்கள எல்லாம் தப்பா நினைச்சு கோபத்துல வந்தேனே அப்பக் கூட என்னையும், என் பொண்டாட்டியையும் பார்த்துக்கலையே!

என் உசுரே அவ தான் தெரிஞ்சும் இரண்டும் பேரும் கல்யாணத்து முன்னாடியும் எங்கள பிரிக்க நினைச்சு சதி வேலை பார்த்திருக்கீங்க.. கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தாம அப்பயும் அதே வில்லி வேலை பார்த்து அவளை இங்க கொண்டு படுக்க வச்ச அப்புறமும் எப்படி வருவேனு நினைக்கிறீங்க?” எனக்கேட்க, இருவரும் தலை குனிந்து நின்றனர்.

“இப்போ கூட இவ்ளோ வயசாச்சே இப்ப வரைக்கும் உங்களோட ஸ்பரிஷம் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது.. எனக்குக் கிடைக்கவே இல்லையே! எத்தனை நாள் உங்கள கட்டிப்பிடிக்கனும்னு ஏங்கிருக்கேன் தெரியுமா? அப்போ எல்லாம் என்ன தூர நிறுத்திட்டு இப்போ எப்படி நான் உங்க கூட ஒட்டுவேனு நினைக்கிறிங்க? உங்களுக்கு ஒரு மகன் இருந்தானு நினைப்பு அப்போ இல்லல.. ஒரு வாய்ப்பு நான் குடுத்தும் அத யூஸ் பண்ணிக்க தெரியலல.. இனியும் மகன்ற நினைப்பே உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு தான். பையன் பிறந்தான் ஆனா செத்துட்டானு நினை..” எனகூறி முடிக்கவில்லை, ஆனந்தியும் இளங்கோவும் கதறிக் கொண்டுவந்து ஆளுக்கொரு புறமாகக் கட்டிப்பிடிக்க, இருவரையும் ஆசை தீற ஒருமுறை அணைத்தான். அவனது வாழ்நாள் ஆசையல்லவா! இப்படியொரு தருணம் அவனது இத்தனை வருட வாழ்வில் நடக்காத விஷயமல்லவா!

அனைவரும் கண்ணீர் மல்க அவன் மனக்குறையும், வேதனையையும் பார்த்துக்கொண்டிருக்க, தாயையும், தகப்பனையையும் கட்டிக்கொண்டு நிற்கும் சித்தார்த்தை பார்த்தவண்ணம், அங்கிருந்த யாரின் கவனத்தையும் கவராதவாறு ஸ்டெச்சரில் சென்றுகொண்டிருந்தாள் மது வேறொரு அறைக்கு. அவள் மனதில் இப்போ என்ன ஓடுகிறது என அவளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். யாரும் அவளைக் கவனிக்கவில்லை இந்த உணர்வு போராட்டத்தில்.

சிறிது நேரம் அவன் மன அமைதிக்காக இருவரையும் கட்டி அணைத்தவன், தன்னை தேற்றிக்கொண்டு அவர்களிடமிருந்து பிரிந்தான்.

“அன்னைக்கு என்னை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிங்க.. இன்னைக்கு மொத்தமா என் மனச கொன்னுட்டீங்க.. என்னையும், என் மனசையும் புரிஞ்சுக்கவே இல்லையே. என்னையும், என் தாராவயும் வேண்டாம்னு சொன்னவங்க எனக்கும் வேண்டாம்.. என்னைக்கும் வேண்டாம்..”

“சித்தார்த்து” என்றனர் அதிர்ச்சியாக. கை நீட்டித் தடுத்தவன்,

“உங்களுக்கு இனி நான் புள்ளையே இல்ல. இனி என்ன ஆனாலும் எப்பவும் நான் உங்ககிட்ட வரவே போறதில்லை. புள்ளை வேணும் புள்ளை வேணும்னு தான இந்த இந்தக் குடும்பத்தை அசிங்கப்படுத்தி இந்தப் பாடு படுத்தினீங்க, உங்க சதி என்னனு தெரியாம நானும் ஆடிருக்கேன்,

இனி உங்களுக்கு ஒரே ஒரு புள்ளை தான். அது உங்க மக மட்டும் தான். அவ மட்டும் தான இதுவரை உங்களுக்குப் புள்ளையா இருந்தா இனிமேலும் அவ மட்டும் தான் புள்ளை. ஏன் உங்க கடைசி காரியம் கூட அவளே செய்யட்டும்”

“சித்தார்த்து அப்படி சொல்லாதய்யா” என அலற,

“அப்படி தான் சொல்லுவேன். சரி கடைசி காரியத்துல நெய் விளக்கு யாரு புடிக்கனும்? மகன் பிள்ளை தான? ஆனா மகனுக்குப் புள்ளையே வராதுனு சாபம் விட்டிங்கீங்க? அப்புறம் எப்படி? என் பிள்ளைக்கே இல்லாத உரிமை எனக்கெதுக்கு? தேவையில்ல.. உங்க மகள வச்சே பார்த்துக்கோங்க. இனி உங்க நிழல் கூட எம்மேல படாது.. இல்ல படக் கூடாது. கிளம்புங்க” எனக்கூற, உணர்வே இல்லாமல் இளங்கோ கீழே விழ, சித்தார்த் இம்மியும் அசையவில்லை மீண்டும் முன்பு அமர்ந்த அதே நிலையில் அமர்ந்தான்.

ஆதவனும், அஸ்வந்தும் தான் அவரைத் தூங்கி சிந்து இருந்த அறையில் விட்டுவிட்டு வந்தனர். ஆனந்தி எதுவுமே பேசவில்லை அவர் தவறை உணர்ந்தாரா என்பது கூட யாருக்கும் விளங்கவில்லை. தன்னவளை வேண்டாமென்ற குடும்பத்தை உதறிவிட்டு அவளுக்காகக் காத்திருக்க, அவளோ வேறொரு அறையில் வேறொரு முடிவோடு அவனுக்காகக் காத்திருந்தாள்.

அவளை வேறு அறைக்கு மாற்றியது கூடத் தெரியாது அங்கேயே அமர்ந்திருந்தவர்களுக்கு செவிலியர் சொல்லித்தான் தெரிந்தது. உடனே அவளது அறைக்கு அனைவரும் படையெடுக்க, அங்கோ கண்களை மூடிப் படுத்திருந்தாள். ஆம் கண்களை மட்டுமே மூடியிருந்தாள் ஆனால் மனதிலோ பல எண்ணங்கள் ஊர்வலம் நடத்த, சுளித்த புருவமும், கசங்கிய முகமும் அவள் உறங்கவில்லையென அனைவருக்குமே காட்டியது.

ஈகை “மது.. மதும்மா! எப்படிடா இருக்க” என முதல் ஆளாகக் கேட்க, விழிகளைக் கஷ்டப்பட்டு திறந்தவள் தாயின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

அஸ்வந்த் “மது எப்படிடா இருக்கு?”

“ம்ம்ம். பரவால்லண்ணா”

அஸ்வந்த் “இப்படி பயம் காட்டிட்டியே!”

ஈகை “விடுடா..” என அஸ்வந்திடம் இதற்கு மேல் பேசாதே என்பது போலக் கூறிவிட்டு மதுவிடம் “இனி எதையும் யோசிக்காத அமைதியா இருடா. நாங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம் சரியா” என ஆறுதலாகப் பேசினார்.

“ம்ம்ம். சரிம்மா. கொஞ்சம் தண்ணீ” எனக்கேட்க, வேகமாகச் சென்று கொண்டுவந்தான் சித்தார்த். ஈகை அதை வாங்கி அவளுக்குப் புகட்ட, மதுவோ அவர்கள் அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினாள் ஆனால் சித்தார்த் என்று ஒருவன் அங்கு இருப்பதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அனைவரும் அதைக் கவனித்தனர் தான் ஆனாலும் அவள் உடல்நிலை கருதி யாரும் எதுவும் பேசவில்லை.

சிறிது நேரத்தில் செவிலியர் வந்து அனைவரையும் அறையை விட்டு வெளியேறும்படிக்கூற, சித்தார்த் தயங்கி தயங்கி அவளிடம் வந்தான் ஆனால் அவளோ இறுக கண்களை மூடிக் கொண்டாள். ஆதவனும், அஸ்வந்தும் தான் அவனை வெளியில் கூட்டிக் கொண்டுவந்தனர்.

ஈகை சித்தார்த் அருகில் வந்தவர் அவன் கையில் மெதுவாகத் தட்டிவிட்டு, கண்களை மூடி ‘நாங்கள் இருக்கிறோம் எப்போதும் போல’ என்பதாய் சைகை மட்டும் காட்டிவிட்டு அன்பு இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவருக்குத் துணையாகப் பூபாலனும், எழிலும் செல்ல, சித்தார்த்துடன் ஆதவனும், அஸ்வந்தும் அமர்ந்திருந்தனர்.

சித்தார்த் “மது ஏண்டா என்கிட்ட மட்டும் பேசல?”

அஸ்வந்த் “ம்ம். உங்க அம்மா பண்ணின வேலைக்கு உனக்கு இச் இச்சுனு முத்தம் கொடுப்பானு நினைச்சியாக்கும்” எனக்கேட்க, பக்கென்று சிரித்துவிட்டான் ஆதவன்.

அஸ்வந்த் “சிரிடா சிரி.. இரண்டு பயலும் சேர்ந்து என் தங்கச்சிய இப்படி படுக்க வச்சிட்டு ஒருத்தன் ஒன்னும் தெரியாத மாதிரிக் கேள்வி கேட்குறான்.. ஒருத்தன் சிரிக்குறான்.. உங்க இரண்டு பேரோடயும் ஜென்மத்துக்கும் பேசக் கூடாதுனு இருந்தேண்டா. மனசு கேட்டுத் தொலைய மாட்டிங்குது”

ஆதவன் “அத்தான்! ஐ அம் நாட் திஸ் ஆப்ரிக்கன் மங்கி.. ஐ அம் பாவம் உங்க மச்சினன்” எனச் சித்தார்த்தைக் காட்டி குரங்கு எனக்கூற, எட்டி அவன் முதுகில் இரண்டு அடியைப் போட்டான் அஸ்வந்த்.

அஸ்வந்த் “அவனே டென்சனா உட்கார்ந்து இருக்கான் நீ காமெடியா பண்ற நாயே ஓடிரு”

ஆதவன் “அதான பார்த்தேன் இரண்டு பேரும் சேர்ந்துட்டா என்னைக் கலட்டி விட்டுவிங்களே.. எனக்கு எப்பவும் என் மது தான் துணை.. மது மட்டும் தான் துணை.. என் ஃபிரண்ட் கிட்ட போறேன்” எனக் கூறியவன், “என் ஃபிரண்ட போல யாரு மச்சான்” என முனுமுனுத்துக் கொண்டே மதுவின் அறையை எட்டிப் பார்க்க, அவளோ கண்களில் கண்ணீர் வடிய கண்ணை இறுக மூடிப் படுத்திருந்தாள். அதில் சோகமாக மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தவன்,

“அழறா”

“என்ன?” என அஸ்வந்த் கேட்க,

“என் மது அழறா.. திரும்பத் திரும்ப அழறா.. அழுதுட்டே இருக்கா.. எப்போ திரும்பப் பழைய மது வருவா?” என வருத்தமாகக் கேட்டவன் கண்களிலும் கண்ணீர் வந்தது.

சித்தார்த் “நான் போய் பேசட்டா..” எனக் கேட்க,

அஸ்வந்த் “போ. ஆனா கவனமா பேசு” எனக்கூறி அனுப்ப, மெல்ல எழுந்து அவளறைக்குள் சென்றான் சித்தார்த்.

அங்கோ கலைந்த சித்திரம்போலப் பொலிவிழந்து, உடம்பில் உள்ள சக்தி எல்லாம் வடிந்து, அநாதரவான குழந்தைபோலக் காய்ந்த சருகாய் கிடந்தாள் அவனின் தாரா. உயிரை உருவி எடுப்பது போல வலித்தது அவனுக்கு. தன்னால் தானே அவளுக்கு இந்த நிலைமை என்று நினைக்க, நினைக்க அவன் மேலே அவனுக்கு ஆத்திரம் வந்தது.

‘எங்க போச்சு என் புத்தி? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்? அடுத்தவங்கள காயப்படுத்தி பார்க்குற குணம் எப்படி எனக்கு வந்துச்சு? அதுவும் என் உயிரானவளை இப்படி ஆக்கினதே நான் தான.. கல்யாணத்து அன்னைக்கு  மட்டும் நான் வராமல் இருந்திருந்தா இவளாவது நல்லா இருந்துருப்பாளேயென நினைக்கும் போதே அவன் உடம்பு உதறியது.

முடியாது. என்னால் முடியவே முடிந்திருக்காது. என் தாரா இல்லாத வாழ்க்கையை கனவுலும் கூட என்னால கற்பனை பண்ணி பார்க்க முடியாது. என் தேவதை.. என் ராணி.. என் உயிரு. அவஇல்லாம இந்தச் சித்தார்த் இல்ல’ என நினைத்தவன் அவள் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“மது.. மது” என மெல்ல அழைக்க, கண்கள் திறக்கவில்லை ஆனால் மூடிய இமைகளுக்குள் நடனமாடும் கண்கள் அவள் உறங்கவில்லையெனக் கட்டியம் காட்டி சொன்னது.

மீண்டும் “மது.. மது” என அழைக்க அசையவேயில்லை. குரலைச் செறுமிக் கொண்டு “தா.. தாரா” எனத் தயக்கமாக அழைக்க, பளீச்செனக் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள் அவனின் தாரா. ஆனால் அந்தக் கண்களில் தான் உயிர்ப்பு இல்லை.

“மது.. வெறும் மது. அன்புவோட மக மது. இனி அன்புவோட மகளா மட்டுமே இருக்க போகும் மது. உங்க தாராவ இனி எங்க தேடினாலும் கிடைக்க மாட்டா. இனி என்னைப் பார்க்க வர வேண்டாம். நமக்கு இடையில இனி ஒன்னுமே இல்ல. புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன் ப்ளீஸ்” எனக் கஷ்டப்பட்டு மெதுவாகப் பேசிக் கைகளை வாயிலை நோக்கிக் காட்டினாள். அவனுக்கும், அவளுக்கும் இடையில் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லையே குடும்பத்தைத் தவிற. அதிர்ந்து விட்டான் சித்தார்த் இதை அவன் எதிர்பார்க்கவே இல்லையே!

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே.. அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே!

நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே.. என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே!

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன் மனசு வெந்து போச்சே.. 

என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே..

வார்த்த ஒன்னு.. வார்த்த ஒன்னு..

உறவுகள் எனக்கது புரியல.. சில உணர்வுகள் எனக்கது விளங்கல.. கலங்கரை.. விளக்கமே.. இருட்டிலே..

பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்.. மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன்.. அன்புல.. அரளிய.. விதைச்சுட்டேன்.. 

அட்ட கத்தி தான்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு.. வெட்டு கத்தியாக அது மாறி இப்போ வினையாச்சு.. பட்டாம்பூச்சி மேலே ஒரு கொட்டாங்குச்சி மூடியதே.. கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ண இப்போ காணலியே!

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. பாசம் கொட்டி வளர்த்தாலும் அம்மா அப்பாவிடம் காட்டும் உரிமையை அவர்களிடம் காட்ட முடியாதே.

    அடம் பிடிப்பதோ, ஆசுவாசம் கொள்வதோ அன்னை தந்தையிடம் தானே உரிமையாய் செய்ய இயலும்.

    சித்தார்த் தவறவிட்டவை ஏராளம்.

    இருந்தபோதும் நெருக்கடி எனும் நேரம் உரிமையாய் அவனது வீடு என்றெண்ணி அடைக்கலம் ஆன போதும் அவர்களை அரவணைக்காமல் விட்டுவிட்டது அவனுக்கு வெறுப்பை விதைத்து விட்டது.

    இனி மது மட்டுமே தாரா இல்லை என்று சொல்லி மீண்டும் சித்தார்த்தை காயப்படுத்திவிட்டால் மது.

  2. அருமையான சிச்சுவேஷன் பாட்டு. உனக்கு வேணும் சித்து. இவ்ளோ நாள் அவங்கள அழ வீட்டிங்களே.. இப்போ நீங்கெல்லாம் உட்கார்ந்து அழுங்க.