
ஹாய் டியர்ஸ்…
கதையை படித்து கருத்துக்களை பகிரும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இதோ அடுத்த பதிவு படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
“நீ ஈசியா சொல்லிட்ட இழை… ஆனா எங்கம்மாவில் இருந்து இதோ இவங்க அம்மா வரைக்குமே, அம்மாவா இருக்கிறவரை சரியா இருக்காங்க. ஆனா ‘மாமியார்’ பதவின்னு ஒன்று கிடைச்சுட்டா போதும்… ஏதோ பெரிய கீரிடத்தை சுமக்கிற மாதிரி ஆட்டிபடைப்பாங்க. ஒரு ஃபேன் போட்டுட்டு உட்காரகூட அவங்க அனுமதி வேணும். என்னமோ நான் சாப்பாட்டுக்கே வழி இல்லாம அவங்க வீட்ல இருக்கிற மாதிரி நடத்துவாங்க…” என்றாள் கவிதா.
“என்னடி சொல்ற… இந்த காலத்துல கூடவா இப்படி இருக்காங்க…”
“இருக்காங்கடி… சத்தமே இல்லாம எனக்கும் அவருக்கும் நடுவுல பிரச்சனை உண்டாகிட்டு போயிகிட்டே இருப்பாங்க. எல்லா நேரமும் நாமலே விட்டுகொடுக்க வேண்டி இருக்கும். ‘புத்திசாலிங்க விட்டுகொடுப்பாங்க’ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க…” என்ற இழையை பார்த்து பக்கென சிரித்த ராதிகா,
“அந்த தப்பை மட்டும் செய்துடாத இழை… அப்புறம் காலம் முழுக்க நீ மட்டுமே விட்டுகொடுக்க வேண்டியதா இருக்கும்.”
“ஏன்டி அப்படி சொல்ற… அடுத்தவங்களோட அனுபவமே நம்மோட வாழ்க்கையை தீர்மானிக்காதே! அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்கறதில்லை… அதேபோலதான் மனுஷங்களும் ஒரே மாதிரி இருக்கணும்னு அவசியமில்லையே.”
“இழை… ராதி சொல்ற மாதிரி ஆட்களை விரல் விட்டு எண்ணிடலாம். அவளுக்காவது மாமியார் தான் பிரச்சனை. ஆனா எனக்கு புருஷனே பிரச்சனை. அதுவும் நான் ரொம்ப அசைபட்டு கட்டிகிட்டேன். அவன் என் பீலிங்க்ஸ்க்கு மதிப்பே கொடுக்கறதில்லை தெரியுமா…” என்று தொடங்கிய நக்ஷத்ரா பேசிக்கொண்டே சென்றாள்.
“என்ன சொல்ற நக்ஷத்ரா… உன் வீட்டுக்காரர் நல்ல டைப். உனக்காகவே குடும்பத்தை விட்டுட்டு வந்தார். ரொம்ப அட்ஜஸ்டபிள்னு விஜி சொன்னா நீ இப்படி சொல்ற?”
“ப்ச்… அப்படி எல்லாம் இல்லடி. நான் கனவு கண்ட வாழ்க்கையே வேற. என் ஆசைகளை பட்டியலிட்டவள்… கொஞ்சமும் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கல. என் கேரியரையும் ஸ்பாயில் பண்ணிட்டான். அதான் அவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்துட்டேன்.”
“ஹே… என்ன சொல்ற… அப்போ குழந்தை?”
“அவனோடது தானே?! அவனையே பார்த்துக்க சொல்லிட்டேன்…” என்று அசராமல் சொல்லியவளை மற்றவர்கள் வியந்து பார்த்தனர்.
இங்கு இழையோ, ‘உணர்வை மதிப்பதில்லை’ என்றதில் அன்றைய நினைவில் அமிழ்ந்திருந்தவள் தோழி உலுக்கவும் தான் சுயம் பெற்றாள்.
“என்னடி திரும்ப அமைதியாகிட்ட…” என்று மிருதுளா கேட்க,
“இல்ல. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்ச பிறகு பேசிக்கிறேன்…”
“இதுக்கு என்ன பெருசா எக்ஸ்பீரியன்ஸ் தேவை? பொதுவாவே இது ஆணாதிக்க சமூகம் தான்! நம்மல அடிமையா வச்சிருக்கிறதுல அவங்களுக்கு ஒரு சந்தோஷம். கல்யாணத்துக்கு பிறகு நம்மளை வளரவே விடமாட்டாங்க. குழந்தை, அது, இதுன்னு நம்மளை கட்டிபோட்டுடுவாங்க. அப்படிப்பட்டவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது. அதான் டைவர்ஸ் மட்டுமில்லாம… அவன் எழவே முடியாதபடி அவன்மேல் கேஸ் கொடுத்திருக்கேன்” என்று விஷால் மீதான கோபத்தில் நக்ஷத்ரா ஆவேசமாக பேசினாள்.
“ஹே என்னடி பேசுற… அவரை காதலிச்சுதானே கல்யாணம் பண்ணிக்கிட்ட. பிடிக்கலைன்னா அமைதியா விலக வேண்டியது தானே? எதுக்கு கேஸ்…” என்று ரஞ்சி பதறியது.
“என்ன நக்ஷி பேசுற… குழந்தையை கொடுத்துட்டு வந்துட்டியா…” என்று அதிர்ந்த இழை கேட்க,
“ஆமா… ஆன்சைட் போகமுடியலை. கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ சுதந்திரமா இருந்தேன். ஆனா ஏன்டா லவ் பண்ணோம்… ஏன்டா குழந்தை பெத்துகிட்டோம்’ன்னு என்னை வெறுக்க வச்சுட்டான். அதான் அவன் குழந்தையை அவன்கிட்டே கொடுத்துட்டு… இப்போ என் கெரியரை பீஸ்ஃபுல்லா பார்க்கிறேன்…” என்றவள் அலைபேசி அழைக்கவும், அதை துண்டித்து பேசிக்கொண்டே சென்றாள்.
இழை உட்பட சிலருக்கு அவள் பேச்சில் உடன்பாடு இல்லாததால் மேலும் வாதிடாமல் உறங்கச் சென்றனர்.
சிலர் நக்ஷதிராவுக்கு ஆதரவாகவும் சிலர் குழந்தையை கொண்டு விவாதிக்கவும் — பெண்களின் பேச்சு நள்ளிரவைத் தாண்டியும் நீண்டு கொண்டே சென்றது.
மறுபுறம் நண்பர்களுடன் ஏலகிரிக்கு வந்திருந்த வசீகரன் அவசரமாக கீழே இறங்கி கொண்டிருந்தான்.
காலை அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்க, இரவு பத்து மணிவரை தோட்டத்தில் இருந்ததால் இழைக்கு லேசாக ஜுரம் கண்டிருந்தது… மெல்ல எழுந்து வெந்நீரில் குளித்து வந்தவள் தானும் தயாராக தொடங்கினாள்.
அவளுக்கு சூடாக காபி கொண்டு வந்த ஜீவிகா, “இழை, நீ எங்க கிளம்பற?”
“வேறென்ன செய்யணும் ஜீவி?” என்றவாறே சுவெட்டரை போட்டுக்கொண்டவள் காபியை பருகத் தொடங்கினாள்.
“மச்சி, உனக்கு ஃபீவர் இருக்கு டி… வெளியே வந்தேன்னா இன்னும் அதிகமா ஆகிடும். பெட்டர் நீ இங்கயே ரெஸ்ட் எடு. அப்புறம் உங்க அம்மாக்கு யார் பதில் சொல்றது?”
“ப்ச் லைட்டாதான் டி இருக்கு. அதான் அம்மாக்கு கூட சொல்லலை. நீங்க கிளம்பின பிறகு நான் மட்டும் தனியா என்ன செய்ய? இப்போ டேப்லெட் போட்டுட்டேன். ஒன்னும் பிரச்சனை இல்ல… வா போகலாம்” என்று ஷாலை முகத்தை சுற்றிக் கட்டிக்கொண்டவள்.
“நேத்து நைட் கேம்ப் ஃபையர்ல முகத்தை கவர் பண்ணாம கேர்லஸ்ஸா இருந்துட்டேன் டி…” என்றவாறே வெளியில் வர, மற்றவர்களும் வாகனத்தில் ஏறத் தொடங்கியிருந்தனர்.
“என்ன ஜீவி, நாம ரீச்சானபோது கிளைமேட் நல்லா இருந்தது. நைட்கூட ஒன்னும் தெரியல. ஆனா இப்போ இப்படி குளிருது” என்று காலை எட்டு மணியாகியும் இன்னும் குளிர் வாட்டி எடுப்பதை ரூபா சுட்டிக்காட்டி கேட்க,
“நாம சம்மர்ல வந்திருந்தா ப்ளஸன்ட்டா இருந்திருக்கும் மச்சி. ஆனா என்ன செய்ய? எல்லாரையும் இப்போதான் கோஆர்டினேட் செய்ய முடிஞ்சது. இப்போ விட்டா திரும்ப எல்லாரையும் பிடிக்க கஷ்டம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டி…” என்றவளும் ஸ்கார்ஃஃப் கட்டிக்கொண்டு எறி அமர்ந்தாள்.
ஜீவியோடு அமர்ந்த இழை மறக்காமல் மாஸ்க் எடுத்து அணிந்து கொண்டு பார்கவிக்கு அழைத்து இன்றைய நிகழ்வுகளை பகிரத் தொடங்கினாள்.
அதே நேரம் நேற்றிரவு விஷாலின் குழந்தைக்கு பிளேட்லெட்ஸ் குறைபாடு (Thrombocytopenia) ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக செய்தி கிடைத்து உடனே மருத்துவமனைக்கு சென்ற வசீகரன், அதிகாலை விஷால் தற்கொலைக்கு முயன்றதும் அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தவன் சாரதியை துணையாக இருத்திவிட்டு மீண்டும் ஏலகிரி மலைக்கு விரைந்து கொண்டிருந்தான்.
ரிசார்ட்டில் இருந்து கிளம்பி அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களின் வாகனத்தை மறித்து நிறுத்தியிருந்தான் வசீகரன். சட்டென பஸ் நின்றதில் அனைவரும் சலசலக்க, பஸ்ஸினுள் நுழைந்தவன் “நக்ஷத்ரா” என்றழைத்தவாறு அவளை தேட, பின்னே அமர்ந்திருந்தவள் சிறு திடுக்கிடலோடு எழுந்து நின்றாள்.
உடனே அவள் கையைப் பிடித்து, “கிளம்பு என்கூட” என்றான்.
“ஹலோ மிஸ்டர், யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க? அவளை விடுங்க!” என்று அவன் பின்னே கலவையான குரல்கள் கேட்கவும்…
“கரண், என்ன பண்றீங்க… கையை விடுங்க!”
“நீ இங்க என்ன பண்ற?” என்றான் அடக்கப்பட்ட குரலில்.
“அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்” என்று அலட்சியமாக பதிலளித்தாள்.
“நீயெல்லாம் மாறவே மாட்டியா நக்ஷத்ரா? எதுக்கு உன் நம்பரை மாற்றின? ஒருவாரமா விஷால் உனக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கான். அது தெரியுமா?” என்று கேட்க,
“எதுக்கு? இல்ல எதுக்கு எனக்கு தெரியணும்? இங்க பாருங்க மிஸ்டர் கரண், it’s over! இனியும் பேசுறதுக்கு ஒண்ணுமே இல்ல… நான்தான் உங்க பிரெண்டோட சங்காத்தமே வேண்டாம்னு வந்துட்டேனே. அப்புறம் எதுக்கு மாத்தி மாத்தி எனக்கு தொந்தரவு கொடுக்கணும்? எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம். நீங்க கிளம்புங்க” என்றாள்.
“ஹே நக்ஷு, யார் இந்தாளு? எதுக்கு அனாவசிய பேச்சு? முதல்ல போக சொல்லு” என்று கூறவும், சட்டென அவர்கள் புறம் திரும்பிய வசீகரன்,
“Sit down! All of you!” எனக் கர்ஜிக்க, அதில் பெண்கள் திகைத்து நின்றனர். சொல்லா புரியாது என்ற அவன் உஷ்ண பார்வையில் மெல்ல தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.
“கோர்ட்ல பார்த்துப்பியா..? என்ன பார்ப்ப ? நீ பார்க்கிறதுக்கு அவன் முழுசா இருக்கணும்” என்று ஆவேசமாக தொடங்கியன் இருக்கும் சூழல் கருதி தன் கோபத்தை கட்டுபடுத்தி..,
“இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் வீட்டை எதிர்த்து உன்னை கல்யாணம் செய்து அவனோட தகுதிக்கு மீறி வீடு கார்னு உனக்காக ஒவ்வொன்னும் செய்தவன் இன்னும் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிற? உன்னை காதலிச்ச பாவத்துக்கு இத்தனை வருஷத்துல அவன் உயிரை மட்டும்தான் விட்டு வச்சிருந்த இப்போ அதையும் எடுக்க முடிவு பண்ணிட்டியா..? அதுவும் விஷாலோட சஹானா உயிரையும் சேர்த்து எடுக்க முடிவு பண்ணிட்டியா?”
“என்ன சொல்றீங்க?” என்ற திகைப்போடு நக்ஷத்ரா…
“புதுசா என்ன சொல்லணும்? நாங்க எது சொன்னாலும் அது உன் மண்டையில ஏறபோறதில்ல இப்போ சொல்றதால மட்டும் பெருசா என்ன மாறிட போகுது?” என்று வெறுமையாக பார்த்தவனுமே நக்ஷத்ரா விஷாலை சேர்த்துவைக்க பலமுறை முயன்றிருக்கிறான் ஆனால் எதற்குமே பிடிக்கொடுக்காமல் குழந்தையை பிரிந்து வெளிநாட்டிற்கு சென்றவள் மீது அத்தனை ஆற்றாமை.
“ப்ளீஸ் சஹானாவுக்கு என்னாச்சு சொல்லுங்க?”
“ஆறுமாசமா ஆன்சைட் போயிருந்தப்போ குழந்தையை என்னன்னுகூட கண்டுக்காம இருந்துட்டு இப்போ என்ன புதுசா பாசம் பொங்குது.. இன்னைக்கு இல்லன்னா எப்போமே ஆன்சைட் போகமுடியாதா?”
“ப்ளீஸ் கரண் குழந்தைக்கு என்னாச்சு?” என்று கேட்கவும் நடந்ததை விளக்கினான் வசீகரன்.
இரண்டறை வயதான அவர்களின் பெண் சஹானாவிற்கு பிரிந்துசென்ற தாயின் மீதான ஏக்கத்தில் அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் நேற்று திடீரென பிளேட்லெட் குறைபாட்டில் குழந்தையின் நிலைகண்டு விஷால் முழுதாக உடைந்திருந்தான்.
அதோடு வெளிநாட்டில் இருந்து திரும்பியவள் இவன்மீது புகார் அளித்திருக்க பெற்றோரின் வீட்டில் இருந்த விஷால் உடனே நக்ஷதிராவை தொடர்புகொள்ள அவளோ கைபேசி எண்ணையே மாற்றி இருந்தாள்.. அவள் பெற்றோர் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றபோதும் குழந்தையை காரணம் காட்டி விஷால் மீண்டும் உறவை புதுபிக்க நினைப்பதை விரும்பாதவள் பெற்றோருக்கும் கட்டளையிட்டதில் அவள் எண்ணை தர மறுத்திருந்தனர்.
நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்ற வசீ குழந்தையின் நிலவரத்தை கேட்டறிந்தவன் நக்ஷத்திராவிற்கு அழைக்க அவள் எண் உபயோகத்தில் இல்லை… ஒருவழியாக விஷாலுக்கு தைரியமளித்து குழந்தைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து பணம் செலுத்தி.. அவனை சாப்பிட வைப்பதற்காக வெளியில் அழைத்து சென்றிருந்தான் வசீகரன்..
ஆனால் அதீத மனஅழுத்தத்தில் இருந்த விஷால் எதிர்பாரா நேரத்தில் ஹோட்டலில் இருந்து வெளியேறி வேகமாக வந்துகொண்டிருந்த வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருந்தான்..
அவன் அதிர்ஷம் கடைசி நொடிகளில் டிரைவர் வாகனத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து திசை திருப்பிட விஷாலின் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் கணிசமான அளவு உடலில் காயம் ஏற்பட்டிருக்க உடனே அவனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தான்.
நடந்ததை நக்ஷதிராவிடம் கூறி முடிக்க கண்ணீரோடு நின்றிருந்தவளிடம்.. “உனக்காக எல்லாமே இழந்தவன்கிட்ட அவன் பெண்ணும் உயிரும் மட்டும் தான் மிச்சமிருந்தது இப்போ…” என்றவன் கோபத்தோடு அவளை பார்க்க அவளிடம் அழுகை மட்டுமே.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பொறுப்புகள், கடமைகள் இருக்கும் திருமண உறவுக்குள் நுழையும் முன்னர் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதை விடுத்து ஆசைப்பட்டு செய்து கொண்ட திருமண உறவை சிறு சிறு முரண்களுக்காக கிழித்து எறிய கூடாது.
குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து அன்புடன் நடந்துகொள்ளும் ஒரு கணவன் அமைந்தும், நழுவிப்போன தொழில் முன்னேற்றம் மற்றும் சுதந்திரத்திற்காக குழந்தை பற்றியும் யோசிக்காமல் இவ்வாறு நடந்துகொள்வது தவறு.
அட பாவமே விஷால் நிலைமை இவ்ளோ மோசமா இருக்கு … இதல்லாம் பார்த்துட்டு தான் வசீகரன் ரொம்ப யோசிக்கிறானோ