Loading

KKEN-30

‘ஸ்ஸா ஸா நித தா ஸ நி ப நீ த ம த பா ம க.. நிவேதா ”

இதுவும் அது போல நிறைய நோட்ஸ் வர்ற
மாதிரி பாட்டு தான். காயத்ரிதான் காரில் வரும்போது சொல்லிக் கொண்டு வந்தார்.

காதல் திருமணம் என்று இருந்தாலும்
இவர் அப்படி ஒன்றும் மனைவியுடன் ஒட்டி உறவாடும் நபர் அல்ல.

இது உங்களுக்கு ஏற்கனவேத் தெரியும்.
நாந்தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே !

மனைவி பேசுவது என்ன என்று தெரிந்து
கொள்ள விரும்பாத சராசரி கணவன் தான் அவர்.

 

‘என்ன எப்ப பார்த்தாலும் வீட்டுக்கு வந்தா அது இல்லை இது இல்ல, அதுவும் இல்லன்னா அது வேணும் இது வேணும், அதுவும் இல்லை என்றால் அந்த வீட்டுல இப்படி, அந்த வீட்டுல இப்படி இந்த பொம்பளைங்களுக்கு வேற என்ன?’ என்ற மன நிலையில் இருந்தவர்தான் அவரும் . அதுவே கடந்த சில நாட்களில் பேச்சுக்காக ஏங்கிக் கிடந்தார். இப்போது அவள் பேசுவதில் ஒரு இக்கு இச் கூட தவற விட்டு விடக் கூடாது என்று அத்தனையும் மனதில் சேகரித்து வைத்துக் கொண்டார். நிலைமை சரியாகி விட்டால் சரி., இல்லை என்றால்?

அவர் போலவே நாமும் தேவையில்லாதது பற்றி யோசிக்க வேண்டாம். சாலையில் கவனம் செலுத்துவோம்.

வீட்டுக்கு வந்தார்கள். மீண்டும் வித்யா புராணம். ஏதேதோ சமாளிப்பு. உணவு உறக்கம். அடுத்த நாள் ?

மீண்டும் வித்யா இன்னும் வரவில்லை. மீண்டும் கவலைகள். மீண்டும் பாடல்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள் கணவனும் மனைவியும்.

“பார்த்தேன்  சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்” பழைய  அபிமன்யு படப் பாடல். அந்த  வரிகள் வரும்போது இந்த வயதிலும் வெட்கப்படும் மனைவியைக் கண்டு ஆனந்தத்திற்கு பதில் கண்ணீர் மட்டும்  வந்தது. இருந்தாலும் அவளை தொலைக் காட்சி பார்க்க வைப்பது ஓரளவு  நல்ல பலனைத் தந்தது. வெற்றியின் உதவியால் விஜயனால் சற்று தன்னை ஆசுவாச படுத்திக் கொள்ள முடிந்தது.

ஒரு நாள் அந்த நர்ஸ் தொலைப் பேசியில் யாரிடமோ வித்யாவை பற்றி தவறாக பேசிக் கொண்டிருந்ததை வெற்றி கேட்டு விட்டான்.

“அவங்க யாரு சார்! என்னோட மேடத்தை பத்தி தப்பா பேச?  இதே விஷயம் அவங்க வீட்டுல நடந்தா? வேணாம் சார். என்னோட மேடத்துக்கு யாரும் வேணாம். நானே பார்த்துக்கறேன். என்ன மிஞ்சி போனா மூத்திரம் அள்ளணும். பீ அள்ளனும். நான் வாரி கொட்டறேன். என் புள்ள மாதிரி நினச்சு நான் செய்யறேன் சார். அவங்க என் உசுரு சார். அவங்கள யாரும் தப்பா பேசிடக் கூடாது சார்.”

கண்ணீரை துடைத்துக் கொண்டு கூறும் வெற்றியை மகள் ஏன் தேர்ந்தெடுத்தாள் என்பது தந்தைக்கு புரிந்தது.

அதிபன் வித்யாவை  ஒரு மாதம்  தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினான். ஆனால் “இன்வெஸ்டர்ஸ் மீட்டிங். நீதான் போக வேணும்” பிடிவாதமாக இருந்தார் தந்தை.

“இது என்ன உன்னோட வேலையா? இருக்குடா ஒனக்கு” மனதில் விஜயனை திட்டிக் கொண்டே வேறு வழியில்லாமல் தில்லிக்கு கிளம்பினான். சென்றவனின்  பிணம்தான் சென்னைக்கு வந்தது . யாரோ முக மூடி அணிந்திருந்த மர்ம நபர்(களா)ல் சுட்டுக் கொள்ள பட்டான் .

தொழில் முறை எதிரிகள் காரணமா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

அனைத்து டீலிங்கையும் வழக்கம்போல வெற்றிகரமாக முடித்தவன் , மறு நாள் பிளைட் பிடிக்க வந்தான். அவன் காரில் இருந்து இறங்கும் அந்த ஒரே நொடி அவன் நெற்றி பொட்டில்  ஒரே ஒரு புல்லட். யார் செய்திருப்பார்கள்? நிச்சயம் நன்கு பயற்சி பெற்றவராகத்தான் இருக்க முடியும். ஏன் விருது பெற்றவராகக் கூட இருக்கலாம். அத்தனை பாடி கார்ட்ஸ் இருந்தும் எந்தப் பயனும் இல்லை.

பேரழகனாக வலம் வந்தவன். அவனிடம் மயங்காத ஆட்களே இல்லை . பேச்சு, நடை,உடை பாவனை எல்லாவற்றையும் அடக்கியவன். திமிரையும் பெண் ஆசையும் சேர்த்தே அடக்கி இருக்கலாம்.

வினை விதைத்தவன் வினை அறுத்தே தான் ஆக வேண்டும்.

இது அதோடு நிற்கவில்லை. அமைச்சர் அருணாச்சலம் மகனின் அஸ்தியை கையில் எடுத்து கொண்டு காரில் வந்து கொண்டிருந்த போது  எங்கிருந்தோ வந்த ட்ரெய்லர்  மீது மோதி விபத்தானது. ட்ரைவர் தான் சரியாக கணக்கிட்டு வண்டியை திருப்பவில்லை என்றார்கள்.

விஜயன் வீட்டிலும் செய்தியை பார்த்தார்கள். இதோ மதுவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இரு தினங்களுக்கு முன்புதான் அதிபனின் விஷயம் வந்தது. இப்போது அவன் தந்தை.

மது தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து வேலையில் சேரவே இத்தனை நாட்கள் ஆகி விட்டன. தான் நாளை  வேலையில்  சேர வேணும் என்னும் போது அதிபனின் அஸ்தி கூட கிடைக்காமல் இருக்க வழி செய்தது யாராக இருக்கும்? அந்த ட்ரைவர் யார் என்பது அவளுக்கு நன்றாகவேத் தெரியும். என்ன செய்தார்கள்?

ரூபா தான், விஷயத்தை நடத்தி முடித்து விட்டு மதுவுக்கு சொல்லியிருந்தாள் .

அந்த மூன்று பெண்கள் கொலை வழக்கில் முதலில் இறந்து போன பெண்களின் தந்தை. ஒன்று அவர் மகள். இன்னொருத்தி அவர் அண்ணனின் மகள். இருவரையுமே தோளில்  தூக்கி சுமந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி விட வேண்டும் என்ற வெறியில் இருந்தவர்.

வெளியில் விஷயம் தெரியவில்லை என்றாலும் மகள்களின் தோழிகள் மூலம், அங்கே இங்கே என்று விசாரித்து ஓரளவு விஷயத்தை தெரிந்து கொண்டார். இரண்டு உசுரை அசால்ட்டா எடுத்திட்டு கல்லூரி மூலம் நஷ்ட ஈடு கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் அமைச்சர். அவரின் உதவியாளர் மூலம் கெஞ்சி கூத்தாடி  அங்கேயே டிரைவராக வேலையில் சேர்ந்துக் கொண்டார். பழி  தீர்க்க நேரம் பார்த்தவருக்கு  சரியான சமயம் கிடைத்தது. தன்  உயிரையும் பற்றி கவலைப் படாமல் அந்த நொடியில் அவர் எடுத்ததுதான் முடிவு.

ஆனால்  அதிபனின் கொலைக்கு யார் காரணம்? அவளின் யூகம் சரியா? காலிங் பெல் சத்தம் கேட்டது.

கதவு  திறந்தவளுக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.

கதவை திறந்தவளுக்கு பெரிய ஆச்சர்யம் தான். வேறு யாராக இருக்கும் நம் அர்ஜுன்தான். இல்லை இல்லை மதுவின் அர்ஜுன். அவளுக்கானவன்.”தோளில்  பையுடன் நின்றிருந்தான் ஆணழகன்.

‘வான்னு கூப்பிடறாளா பாரு ராட்சசி’ மனம் நினைப்பதை அவன் முகமும் உடலும் வெளிப்படையாகவே காட்டும்படி காட்டிக் கொண்டான்.

‘அதான் வந்துட்டியே! வான்னு வேற கூப்பிடணுமா?’ இவளும் பேசவில்லை.

‘இது உன் வீடு இல்லையா?’  இதுவும் அவளேதான்.

“வாங்க! “திக்கி திணறி அவனை உள்ளே அழைத்தாள் .

இப்போதும் உள்ளே வரவில்லை. கைக் கட்டி நின்றான்.

‘இப்ப என்ன?’ அவன் அருகில் வந்து ! வந்து என்ன? முகம் இடிக்காமல், உதடு தொடாமல் அவன் தோளில்  இருந்த பையை வாங்கி கொண்டாள் .

போலீஸ் வேலைய விட இந்த மாதிரி ரொமான்ஸ் பண்ண வைக்கற ஆத்தர்  வேல ரொம்ப கஷ்டம் தான்.

அவனும் அமைதியாகவே வந்தான்.

“உக்காருங்க. காப்பியா? டீ யா?”

வழக்கமாக வேறு யாரவது ஒருப் பெண்ணாக இருந்தால் இந்நேரம் தன்னவனைப் பார்த்ததற்கு அவனைக் கட்டிப் பிடித்து ஓ வென்று கதறி இருப்பார்கள் . அது பெண்ணல்ல பெண்ணை ஊதாப் பூ கேட்டகரியாக இருக்கலாம். நம் நாயகி, “உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்தாலும், வீழ்வென்று நினைத்தாயோ” இரகம் . அதுனால் நீங்க எதிர்பார்த்திருந்தா அதெல்லாம் இங்க நோ தான்.

நக்கலாக ஒரு பார்வை பார்த்தான். அவன் எப்போதுமே இப்படித்தான். பேச காசு கேட்பான். அருகில் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இவள்.

“என் மூஞ்சிய கண்ண பார்த்து புரிஞ்சுக்கறத தவிர ஒனக்கு வேற என்ன வேலை ?” இடை பிடித்து மூக்கு உரசி, அவள் கண்ணில் தன்  கரு விழியை பார்த்து கேட்டவனிடம், வேறு என்ன பேச வேண்டும்?

“குளியல் அறை  இங்க இருக்கு. நீங்க குளிச்சுட்டு வாங்க. நான் பிரேக் பாஸ்ட் ரெடி பண்ணறேன்”

அவன் கதவு தாளிடும் சத்தம் கேட்டது. இவளுக்கு மூச்சு வந்தது. மீண்டும் திறக்கும் சத்தம் கேட்டது.

“என்ன?” ஓடிச் சென்று பார்த்தாள் . அவளின் ஆடைகள் கம்பியில் போட்டிருந்தது எடுத்து வெளியில் வைத்திருந்த லான்ரி  பையில் போட்டான்.

அவன் விட்ட லுக்கில் இவள் தானாகவே சாரி சொன்னாள் .

குளித்து விட்டு வந்திருந்தான். டிபன் ரெடி  அழைக்க போனாள் . கட்டழகன் இன்னும் உடை அணிந்திருக்கவில்லை.  இவளுக்கு சற்று கூச்சமாகத் தான் இருந்தது.

இட்லியும் சட்னியும் செய்திருந்தாள் .

‘என்ன இது?’ மீண்டும் லுக் தான்.

இந்த ஆஜானுபாகுவான உருவத்திற்கு இந்த குட்டி குட்டி இட்லி ஐந்து போதுமா? என்றிருந்தது அந்த பார்வை.

“நீங்க  சாப்பிடுங்க அடுத்த செட் உள்ள இருக்கு”(மேடம் நீங்க போலீஸ். இப்டி பயந்து நடுங்கறீங்க?)

வைத்திருந்த ஒரு கப் சட்னி ஒரே நிமிடத்தில் காலி ஆகி இருந்தது.

“இதோ இன்னும் கொஞ்சம் சட்னி எடுத்துக்கிட்டு வரேன்.”

“சட்னி வேணாம். ரொம்ப காரம். ஸ்வீட் வேணும்”

“சர்க்கரை போடவா?”

“வேணாம்.” அவளின் கையை பிடித்து இழுத்து அசால்டாக மடி மீது அமர்த்திக் கொண்டான்.

சில நொடிகள் தான். அவனின் உதட்டு காரம் அத்தனையும் இவளுக்கு மாறி இருந்தது.

“எப்படி இருக்கு காரம்?”

கொஞ்சம் ஜாஸ்திதான்.

இதே போலவே அவளுக்காக அவன் செய்து கொடுத்த தோசையும் அவள் வாயில் இருந்து இவன் வாய்க்கு மாறி இருந்தது.  அவனின் இந்த உதட்டு ஒற்றல் எல்லாம் அவளுக்குப் போதவில்லை. வேணும் நிறைய வேணும். தன்னுடைய அத்தனை துக்கங்களையும் அவன் உதட்டில், நெஞ்சில் புதைத்து விட வேண்டும். இருந்தாலும் நடந்தவை மாறுமா?

உணவை மாற்றிக் கொண்டவர்கள், ஏனோ வார்த்தைகளை  வெளியில் விடவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் மனதில் வைத்திருந்த பல முக்கிய கேள்விகளில் முதல் கேள்வியை கேட்டாள் அவன் காதலி.

அமைதியாக அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,

“என்ன திடீர்னு?”

‘உனக்கு தெரியாதா ‘ லுக் தான்.

“ஏதாவது பதில் சொல்லுங்க. எனக்கு பைத்தியமே புடிச்சுடும் போல இருக்கு.”

இத்தனை நேரம் சற்று தள்ளி நின்று அவளையே ஆழ்ந்து நோக்கியவன் இப்போது அவள் அருகில் வந்து நின்றான். சுவற்றின் அருகில் சாய்ந்து நின்றவள் அருகில் வந்து நின்றவன் மூச்சுக் காற்று அனலாய் வீசவும் அவனின் மன நிலையை அவள் புரிந்து கொண்டுவிட்டாள். குற்றவாளிகளின் கண்ணைப் பார்த்து புரிந்துகொள்ளும் சாமர்த்தியசாலிக்கு மனம் கவர்ந்தவனின் மனதைப் படிக்க முடியாதா என்ன?

என்ன சொல்லப் போகிறான்…

காதல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்