
அத்தியாயம் 14
வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் , ” மேக்ஸ் ஹோம் வொர்க் நோட்டை எடுத்து வைங்க எல்லாரும் . ” என்றார் .
இரண்டு நிமிடம் இடைவெளி விட்டவர் , ” ஹோம் வொர்க் முடிக்காதவங்க , எடுத்துட்டு வராதவங்க எழுந்திருங்க . ”
தீப்ஷீ மட்டுமே எழுந்து நின்றாள் .
” என்ன மேடம் ? உங்க கிளாஸ்ல எல்லாரும் முடிச்சிட்டாங்க . உங்களால முடிக்க முடியலையா ? நீ மட்டும் ஏன் முடிக்கல ? ” கேட்டார் மேக்ஸ் டீச்சர் .
” மேம் நான் நேத்தே எழுதி முடித்து என் பேக்கில் தான் வெச்சேன் ஆனா இப்போ காணும். ” என்றாள் தீப்ஷீ .
” நோட்டுக்கு கை கால் முளைத்து போய்டுச்சோ . ” என்றார் .
அதை கேட்டு அனைவரும் சிரித்தனர் தேவ் உட்பட . தீப்ஷீ அவமானமாக உணர்ந்தாள் , அவள் கண்கள் கலங்கியது .
” கம் ஹியர் . அடிவாங்கிட்டு வெளியில் நில்லு , அப்போ தான் நாளைக்காவது ஹோம்வொர்க் நோட் சப்மிட் பண்ணுவ . ”
அவள் திட்டு வாங்கியதை ரசித்தவன் , அவள் கண்களில் நீரோடு அடிவாங்க செல்வதை பார்க்க முடியாமல் ,
வேகமாக கிளாஸிக்கு முன் நின்று , ” மே ஐ கம் இன் மேம் ? ” என்று கேட்டான் தேவ் .
” எஸ் . என்ன வேண்டும் ? ”
” மேம் வேனில் தீப்ஷீ ஹோம் வொர்க் நோட் கீழே கிடந்தது அதான் கொடுக்க வந்தேன் . ” என்றான் .
” வேனில் விழுந்ததுக்கூட தெரியலை . போய் வாங்கிட்டு வா தீப்ஷீ . ” என்றார் ஆசிரியர் .
இவள் தயங்கிக் கொண்டே அவன் அருகில் சென்றார் .
நடுங்கும் கையை நீட்டினாள் .
” என்ன எங்க அம்மா கிட்ட அடிவாங்க வைத்தற்காக தான் வேண்டும் என்றே உன்னை அழவைக்க எடுத்தேன் . இனிமேல் என் கிட்ட விளையாடாதே . இந்த தேவ் யார்னு இப்போ உனக்கு புரியும்னு நினைக்குறேன் . ” என்று நோட்டை கொடுத்தான் .
அவளின் கண்ணின் நீர்துளி அவன் கையில் விழுந்தது .
அவனை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் உள்ளே சென்றாள் .
” தேங்க்யூ மேம் .” என்ற தேவ் வெளியே சென்றான் .
தீப்ஷீ நோட்டை சப்மிட் செய்தாள் .
” நீ பொய் சொல்லலை , உண்மையாவே ஹோம் வொர்க் முடித்து இருக்க . சரி எல்லாரும் கிளாஸ்ஸை கவனிங்க .” என்றார் . ‘
#####
இப்போது அதை நினைத்தாலும் தீப்ஷீக்கு உடல் நடங்கும் .
” அம்மு , இன்னும் நீ அத மறக்கலையா ? நீ அவன அடி வாங்க வெச்ச அதான் தேவ்வும் உன்ன அடிவாங்க வைக்க நினைச்சான் . ஆன , நீ அடிவாங்குறதுக்கு முன்னே அவன் தான் வந்து நோட் தந்தானே . ”
” சத்யா , அவன் தப்பு செய்தான் . அதான், அவன அடிவாங்க வெச்சேன் . நான் எந்த தப்பும் செய்யலையே . ”
” அம்மு , நாம அப்போ சின்ன பசங்க அப்போ எது சரி எது தப்புனு தெரியாது சரியா . தேவ்வை எதிரியா நினைக்காதே ? ”
” சத்யா , இந்த விசயத்தில் மட்டும் நீ சொல்லறத என்னால ஏத்துக்க முடியாது. அவனப் பத்தி பேச வேண்டாம் . நீ எப்போ வீட்டுக்கு வருவ ? ”
” பாலாவ தான் என்னை பிக்கப் பண்ண வர சொல்லியிருக்கிறேன் . நேரா மிஸ்டர் சசி வீட்டிற்கு போய் பணத்தை தந்துட்டு உன்ன பார்க்க வந்துடுவேன் . ”
” கமலாமா கிட்ட சொன்னியா சத்யா ? ”
” அதெல்லாம் நான் சொல்லிட்டேன் . ”
” சரி சத்யா சீக்கிரமா வா . பாய். ”
” பாலா வந்துட்டான் , நான் ஹாஃப் அன் ஹவர்ல அங்கிருப்பேன் . பாய் டா. ” என்றான் சத்யா .
*****
” பாலா , நிறுத்து டா இந்த வீடு தான் . டூ மினிட்ஸ் டா மச்சான் வந்துடுறேன் . ” என்றான் சத்யா .
” ஓகே டா . ” என்றான் பாலா .
காலிங் பெல்லை அழுத்தி , வெளியே காத்திருந்தான் சத்யா . வெளியே வந்த சசி , சத்யா நிற்பதை பார்த்து சந்தோஷமாக , ” ஏய் ! நேரா உள்ள வராம எதுக்கு சத்யா வெளிய நிக்குற ? உள்ள வா . ” என்றார் .
சத்யா , அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.
” சத்யா டீயா? காபியா ? ” என்றுக் கேட்டார் சசி .
” எதுவும் வேண்டாம். இந்தாங்க நான் சம்பாதித்த பணம் . ” என்று சொல்லியவன் பணத்தைத் தந்தான் .
” இல்ல சத்யா நீயே வெச்சுக்கோ ” .
” உங்களுக்கு தான் ” என்ற சத்யா டீபாய் மேல் பணத்தை வைத்தான் .
” நீ எப்படி இருக்க சத்யா ? ” என்றுக் கேட்டார் சசி .
” நல்லா தான் இருக்கேன் . ”
” நான் நல்லா இல்ல சத்யா . நான் உன்னையும் , உங்க அம்மாவையும் வேண்டாம் என்று வந்தேன் . என் இரண்டாவது மனைவியோ என்னை வேண்டாம் என்று ஓடிவிட்டாள் . தனிமை கொடுமையா இருக்கு சத்யா . ”
இதுக்கு நான் என்ன சொல்ல வேண்டும் என்பது போல் பார்த்த சத்யா , ” நான் கிளம்புறேன் . ” என்றான் .
” சத்யா , உன்னை இப்படி திறமைவாய்ந்தவனாக பார்க்க எனக்கு பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு . ” என்றார் சசி .
” உங்களின் செயலால் என்றுமே எனக்கு அவமானம் தான் . ” என்ற சத்யா வெளியே சென்றுவிட்டான் .
சசியின் கண்களில் நீர் . காலம் கடந்து வந்த ஞானத்தால் பலன் இல்லை . செய்த தவறை , மாற்றவோ , அழிக்கவோ முடியாதே . சத்யா இழந்த வாழ்க்கையை ஒருபோதும் சசியால் திருப்பி தர முடியாது.
*##*##*
மூன்று வருடங்களுக்கு பின் ,
” ஸ்டீவன் ” என்று அரங்கத்தில் உள்ள அனைவரும் உற்சாகமாக கத்திக்கொண்டிருந்தனர் .
மிகவும் பரப்பரப்பான உலக டைக்குவாண்டோ கிராண்ட் பிரிக்ஸ் தொடரின் முதல் ஆட்டம் மாஸ்கோவில் நடந்துக் கொண்டிருந்தது .
கடைசி சுற்று முப்பது வினாடியில் முடிவடைந்துவிடும் . தேவ் 13 பாயிண்ட் . ஸ்டீவன் 16 . முப்பது வினாடியில் டைக்குவாண்டோவின் அதிக பாயிண்ட் ஆன நான்கு பாயிண்ட்டை பெற்றால் தான் தேவ்வால் வெற்றிப் பெற முடியும் .
பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமாக , ஸ்டீவனுக்கு ஆதரவாக இருக்க .
தேவ் காலை சுற்றி ஸ்டீவன் தலையில் அடித்தான் .
தேவ்விற்கு நான்கு பாயிண்ட் கிடைத்தது.
பார்வையாளர்கள் , ” ஓ நோ ” என்று கத்தினர் .
பத்து வினாடி இருக்க , ஸ்டீவன் தேவ்வின் நெஞ்சில் காலால் தாக்க முயற்சி செய்ய , தேவ் எளிதாக தாக்குதலை தடுத்தான் .
நேரம் முடிய ரெப்ரி தேவ் வென்றதாக அவன் கையை உயர்த்தினார் .
‘ முதல் போட்டியில் தான் நான் ஜெயிச்சி இருக்கேன். இன்னும் நான் நிறைய போட்டியில் ஜெயிச்சி , எப்படியாவது உலக டைக்குவாண்டோ கிராண்ட் பிரிக்ஸ் தொடரின் சாம்பியன் ஆகணும் . ‘ என்று நினைத்தான் தேவ் .
இங்கு அவனுக்கு ஆதரவோ , பார்வையாளர்களோ இல்லை . தேவ்வின் கோச்சும் தேவ்வின் பி.ஏவும் தான் தேவ்விற்கான ஆதரவாளர்கள் .
டைக்குவாண்டோ , அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாத போது , அதில் ஒரு இந்தியன் திறமைசாலியாக இருந்தும் பயனில்லை. அவனுக்கு பெரியதாக அரசாங்கமோ, அல்லது
மக்களோ முக்கியத்துவம் தருவதில்லை .
அதைப் பற்றி கவலை படவில்லை தேவ். காரணம் அவனுக்கு பணம் தேவையில்லை . ஆனா , தேவ் போல் பல வீரர்கள் பணம் இல்லாததால் தங்கள் திறமையை தூக்கி எறிந்துவிட்டு தன் அன்றாட வாழ்விற்காக வாழ்கின்றனர் .
அதுப்போல் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் கனவுகளை அடைய உதவி செய்துக் கொண்டிருக்கிறான் தேவ் . ஆம் அவன் சென்னையில் மிகப் பெரியளவில் வெற்றி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திவருகிறான் .
அவன் நண்பர்களின் உதவியோடு அனைத்து விதமான ஸ்போர்ட்ஸையும் கற்றுத் தருகிறான் . அதுபோல் அனைத்து விதமான ஸ்போர்ட்ஸ் உபகரண பொருட்களையும் விற்கிறான் .
பணம் படைத்தவர்களுக்கும் , அரசியல் பலம் , சிபாரிசு உள்ளவர்களுக்கு எளிதாக கிடைக்கும் வாய்ப்பு போல் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்காக போராடி வாய்ப்பை பெற்று தந்துக் கொண்டிருக்கிறான் தேவ் .
தேவ்வை பொறுத்தவரை தனக்கு டைக்குவாண்டோ விளையாட தெரியும் . என்னால் முடிந்த வரை நான் விளையாடுவேன் . அதற்காக
தனக்கு புகழ் , வசதியெல்லாம் கிடைக்க வேண்டுமென்று தேவ் எதிர்ப்பார்ப்பதில்லை .
எல்லா பார்மாலிட்டிஸ்ஸும் முடித்த தேவ், கேம் ஆர்கனைசர் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் ரூமிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்த போது அவன் ஃபோன் அடித்தது .
ஃபோனை எடுத்து பார்த்தான் தேவ் . அதிலிருந்த கோகுல் என்ற பெயரை பார்த்ததும் அவன் உதட்டில் சின்ன சிரிப்பு .
தேவ்வின் உயிர் நண்பர்கள் பட்டியலில் சர்வேஷிக்கு அடுத்த இடம் பிடித்தவன் தான் இந்த கோகுல் .
” ஹலோ . எப்படி டா இருக்க ? ” தேவ் .
” நான் நல்லாருக்கேன் டா . நீ எப்படி இருக்க ? இன்னைக்கு மேட்ச் என்னாச்சி ? ” கோகுல் .
” இன்னைக்கு ஜெயிச்சிட்டேன் டா . ”
” சூப்பர் டா மச்சான் . இங்க சென்னைல எல்லாம் சரியா நடக்குது . நீ எதுவும் வொர்ரி பண்ணிக்காம கேம்ல கவனமா இரு . ”
” சரி டா மச்சான் . பாய். ” என்று போனை வைத்த தேவ்வின் நினைவோ பின்னோக்கி சென்றது .
தேவ்வின் கோபத்தையும், பிடிவாதத்தையும் மாற்றுவதற்க்காக அமர் (தேவ்வின் அப்பா ) அவனை ஊட்டி மிலிட்ரி ஸ்கூலில் சேர்த்தார் .
அமர் தேவ்வை ஹாஸ்டலில் விட்டுவிட்டு செல்ல , அப்போ தான் தேவ் கோகுலை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தான் . தேவ்வும் கோகுலும் ரூம் மேட் . அவனை முதலில் வெறுத்ததும், பின் அவனை நேசித்ததையும் நினைத்தால் தேவ்விற்கு ஆச்சரியமே . கோகுலுடனான சந்திப்பு நினைவுக்கு வந்தது
‘ நினைவுகள் …
கோகுலிடம் பேசக் கூட தேவ் தயாராக இல்லை. காரணம் அவனின் தோற்றம்
கொஞ்சம் கருப்பா , எண்ணை வடியும் முகம் அதில் ஒரு சோடாபுட்டி கண்ணாடி , மெலிவான உடல் என்று இருந்தான் கோகுல் .
தேவ் அவனின் பெட்டில் படுத்துக் கொண்டு அழுதான் .
” தேவ் அழாத… கொஞ்ச நாள் போயிட்டா உனக்கு இதெல்லாம் பழகிவிடும். ” என்றான் கோகுல் .
அவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் தேவ் வேறு பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான் .
பதில் சொல்லலை என்றுக் கோபப்படாமல் அமைதியாக சென்று தன் பொருட்களை அடுக்கினான் கோகுல் .
மணி எட்டானதும் கோகுல் , ” சாப்பிட வா தேவ் . இங்கு பங்ஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் . 8.15 மேல் வந்தால் முதல் நாள் வார்னிங் தருவாங்க. அடுத்த தடவை லேட்டா வந்தா சாப்பாடு தர மாட்டாங்க . ” என்றான் .
தேவ்விடம் பதில் இல்லை .
” தேவ் . ” என்றான் கோகுல் .
” லீவ் மீ அலோன் . ” என்று கத்தினான் தேவ் .
பின் கோகுல் சாப்பிட சென்றுவிட்டான் .
கோகுல் திரும்பி வந்தபோதும் தேவ் அதே நிலையில் தான் இருந்தான் . கோகுல் அவனின் வேலைகளை முடித்து தூங்க செல்லும் போது மணி 9.30 . அப்போது தான் தேவ் எழுந்தான் தன் பொருட்களை அடுக்கி வைக்க .
படுத்துக் கொண்டு அழுததால் தலை வலி தாங்க முடியவில்லை , பசி வேறு எடுக்க , வேலையும் இருக்க ,காலையில் 7 மணிக்கெல்லாம் பள்ளி போக வேண்டுமே என்று யோசித்தவன் தலையில் கை வைத்து அமர்ந்துக்கொண்டான்.
கோகுலுக்கு அவனை பார்க்க பாவமாக இருக்க . தன்மானத்தை விடுத்து மீண்டும் அவனுக்கு உதவி செய்ய முன்வந்தான் .
” தேவ் , உனக்காக இரண்டு சப்பாத்தி எடுத்து வந்தேன் சாப்பிடு . ” என்றான் கோகுல் .
அவனிடம் இருந்து வாங்கவே சங்கடமாக உணர்ந்தான் தேவ், இருந்தும் பசி ஈகோவை வென்றது .
தேவ் சாப்பிட்டு முடித்ததும் , அவனுக்கு தைலம் தந்தான் கோகுல் . அதை வாங்கி தலையில் தடவிய பின்பு கொஞ்சம் தெளிவானான் தேவ் .
” ரொம்ப தேங்க்ஸ் கோகுல் . ” என்றான் தேவ் .
” இட்ஸ் ஓகே தேவ் . உன்னோட பொருட்களை எடுத்து வைக்க உதவவா . நீ மட்டும் எடுத்து வெச்சா நேரமாகும் , காலைல சீக்கிரமா எழுந்திருக்க முடியாது . ” என்றான் கோகுல் .
” உனக்கு கஷ்டம் இல்லைனா எனக்கு உதவி செய் கோகுல் . ” என்றான் தேவ் .
” எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை . ” என்றான் கோகுல் .
பின் இருவருமாக பொருட்களை எடுத்து வெச்சிட்டு, அவரவர் பெட்டில் படுத்துக் கொண்டனர் .
” குட் நைட் தேவ் . ” என்ற கோகுல் சில நொடிகளில் தூங்கியும்விட்டான் .
” குட் நைட் கோகுல் . ” என்ற தேவ்விற்கு புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை . மிடில் லாம்ப் வெளிச்சத்தில் கோகுலை பார்த்தான் தேவ் . முன்பு அழகாக தெரியாதவன் இப்போது மிகவும் அழகாக தெரிந்தான் தேவ்வின் பார்வையில் . ‘ எவ்வளவு கோபம் காண்பித்தாலும் எனக்கு உதவி செய்தானே ‘ என்று மனதில் கோகுலை பத்தி நினைத்தான் தேவ் . பின் எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சிறு பிராயத்தில் அறியாமல் நிகழ்ந்த சிறு சிறு விடயங்களின் தாக்கத்தினால் எழுந்த தேவ் மீதான வெறுப்பு இன்னமும் தீ யிடம். எப்படி அதனை அவள் மனதினில் இருந்து துடைத்து எரிந்து அதனில் காதலை விதைக்க போகின்றானோ தேவ்?
காலம் கடந்த கவலையினால் யாருக்கு என்ன பயன்?
சத்யாவை நினைத்து அவன் பெற்றோருக்கு பெருமையும், மகிழ்வும் என்றால், அவர்களை நினைத்து அவனுக்கு வேதனையும், அவமானமும் தான்.
அவர்களது சுயநலமான செயலால் சத்யா இழந்த வாழ்வும் அவன் நிம்மதியும் திரும்ப வருமா என்ன?
பணமும், நேரமும் பொருட்டல்ல விளையாட்டின் மீதான விருப்பமும் ஆர்வமும் தான் பெரியது என்ற தேவ் எண்ணம் நன்று.
ஆமா இந்த தேவ் நல்லவனா கெட்டவனா … சத்யா நீ செய்றது தான் கரெக்ட் … தன்னோட கஷ்டங்களை மறந்துட்டு படிச்சு முன்னேற்றம் அடைஞ்சிருக்க … சூப்பர் பா …