Loading

ஆட்சியர் கனவு 28💞

திருமணம் என்பது ‘ஆயிரங்காலத்து பயிர்‘, திருமணம் ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது‘ என்று அனைவரும் கூறுவர். ஆனால் எதிர்பாராத சமயத்தில் இந்த பந்தத்தில் இணையும் இருவரும் உடலளவை விட, மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி கடமைகள் என்பது அதிகமாகிறது.

திடீரென்று முடிவாகிய திருமணம் முதலில் இனித்தாலும் அதில் ஈடுபடும் இருவர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை அல்லது அதற்கு நேரம் அமையவில்லை எனில் வருங்காலம் பாதிக்கப்படும். இதற்கு ஆண் பெண் இருவரும் மனதளவில் திருமணத்தை எதிர்நோக்கி இருக்க வேண்டும். அவ்வாறு நாம் எதிர்நோக்கி நம்மை தயாராக வைத்து இருந்தால் அதற்கு ஏற்றவாறு நம் உடலும் மனதும் இருக்கும் என்பது அறிவியல் ஆய்வு.

சிலர் திருமணம் வேண்டாம் என்றும் சிலர் திருமணத்தை தள்ளி போட வேண்டும் என்றும் கூறுவார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் யாரும் அறியா.. அதை பற்றி நாம் சிறிது பார்த்துவிடலாம்.

திருமணம் என்பது ஆண் (ம) பெண் இருவருக்கும் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும். திருமணம் என்று பேச்சு எடுத்தாலே இயல்பாகவே அனைவரின் மனதில் பயம் எழும். திருமணத்தினை வேண்டாம் என்று பயத்தினால் கடத்தி கொண்டே இருப்பார்கள். இந்த பயம் வருவதன் காரணம் திருமணம் ஆகிவிட்டால் நமது சுதந்திரமானது பாழாகிவிடுமோ என்ற பயம் தான் இன்றும் பலரிடம் நிலவி வருகிறது.

திருமண பேச்சு என்றாலே பலர் தள்ளி போடுவார்கள். இதன் பின் விளைவுகள் பலருக்கும் தெரிவது இல்லை. திருமணத்தினை கடத்தினால் தான் குடும்பத்தின் பாரத்தினை சுமப்பது போன்று இருக்கும் என்று கூறுகிறார்கள். 25 வயதிற்குள் திருமணம் ஆகாமல் அதற்கு மேல் மணம் முடிந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.

திருமணமானது 28 வயது முதல் 30 வயதில் ஏற்பட்டால் உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விடும். அதனால் 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்று கொள்ளலாம் என்று நினைப்பது மிகவும் தவறான விஷயமாகும். இது போன்று நினைத்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் நிகழ வாய்ப்பு உள்ளது.

அடுத்து மனைவி கணவருடன் சந்தோசமாக எங்கும் இருக்க முடியாது. முக்கியமாக குடும்பத்தினை நடத்துவதற்கு சரியாக எந்த திட்டமும் போட்டு செயல்படுத்த முடியாது.

திருமணம் என்பது 25 வயதில் நடந்தால் கணவன் மற்றும் மனைவி மிகவும் மகிழ்ச்சியாக ஊர் சுற்றி, வாழ்க்கையை நன்கு அனுபவித்து, வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிதலை மேற்கொண்டு வாழ்வினை நல்ல நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று யோசித்து செயல்படுவார்கள். திருமணம் 25 வயதில் ஆனால் இருவருக்கும் புரிதல் சரியாக அமைந்து குடும்ப பக்குவம் அமையப்பெறும்.

மேலும் இரவில் கணவன் மனைவி வெளியில் சென்றுவிட்டு எந்த நேரத்திலும் வரலாம். நீங்கள் அப்போது திருமணமான புது தம்பதியர்களாக இருப்பதால் யாரும் எந்த வித தடைகளும் கூற முடியாது. அதோடு உங்களுடைய சந்தோஷத்திற்கு எந்த இடையூறுகளும் இருக்காது. 25 வயதில் திருமணம் நடந்தால் உங்களுக்கு 30 வயது ஆகும் போது வாழ்க்கையில் பொறுப்புணர்வு வரும். குடும்பத்தை எப்படி நடத்தினால் எதிர்காலத்தில் நாமும் நம் குழந்தையும் சந்தோசமாக இருக்க முடியும் என்று நன்கு புரிதல் கிடைக்கும்.

தம்பதிகள் தவறுகள் செய்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அதனை பற்றி விளக்கமாக கூறி தவறை எடுத்து கூறுவார்கள். இந்த அனுபவத்தினால் உங்களுடைய குழந்தைக்கு எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் சரி செய்வதற்கு இது நல்ல அனுபவமாக இருக்கிறது.

30 வயதில் திருமணம் செய்தால் உங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு திருமணம் செய்வதற்குள் நீங்கள் முதுமை காலத்தினை அடைந்து விடுவீர்கள். உங்கள் குழந்தை கல்லூரி பயில்கின்ற போது உங்களுக்கு 50 வயது ஆகி இருக்கும். இந்த வயதில் வெளியில் வேலைக்கு செல்வது என்பது மிகவும் கடினமான  விஷயமாகும். அதனால் திருமணம் முடிப்பதற்கு சரியான வயது 25 வயதே ஆகும்.

இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், மனதளவில் திருமணத்திற்கு தங்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.. மேலும் நம் இளைஞர்கள் இன்று ஒரு குறிக்கோளுடன் தான் செயல்படுகிறார்கள். நிலையான தொழில், சொந்தமான வீடு, இரு சக்கர வாகனம் இவை எல்லாம் அவர்களின் கனவுகளில் ஒன்று.. மேலும் தனக்கு வரப்போகும் மனைவியை சிறப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனாலேயே ஆண்மக்கள் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள்.. 

அதே போல் பெண்களும் சுதந்திரம் பாழாகிவிடுமோ என்று எண்ணி அஞ்சுகிறார்கள்.. ஆனால் புரிதல் என்பது மட்டும் இருந்தால் அன்பிற்கு அடிமையாவதும் சுதந்திரம் தானே நம் ஆதி திவி போல்..

ஆதி கூறிய அனைத்து கண்டீஷன்களும் திவி ஒப்பு கொண்டாள். அதற்கு மேல் அவளும் எதுவும் பேசவில்லை. இவனும் எதுவும் பேசவில்லை. கதிரையில் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் இயற்கையை ரசித்து கொண்டு இருக்க, பல வித எண்ணங்கள் மனதில் ஓடியதால், திவி ஆதியின் கை விரல்களுக்கிடையில் தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள்.

ஆதியும் அவளுடன் கைகளை கோர்த்து கொண்டான். திவி கண்களை மூடி அமர்ந்து இருக்க, அவளின் மனமோ தன் வேலையை ஆரம்பித்தது. “என்ன திவி.. நீ என்ன லூஸா.?”

“ஏன்.?”

“லவ் பண்ணுவியாம், கல்யாணமும் பன்னிப்பியாம்.. ஆனா ஒன் இயர்ல உனக்கு டைவர்ஸ் வேணுமா.. என்ன நியாயம் இது. அவன் பாவம் இல்லையா.?  இப்போ கூட பாரேன்.. அவன் கைய பிடிச்சிட்டு உட்காந்துட்டு இருக்க.? என்ன உரிமைல இப்டி நீ இருக்க.?” என்று அவளிடம் கேள்வி கணைகளை தொடுக்க,

“இப்போ அவன் கையை நான் ஒரு நட்போடவும், ஒரு பாதுகாப்புக்காகவும் தான் பிடிச்சுக்கிட்டு இருக்கேன். அதுவும் இல்லாம அவன நான் லவ் பன்றேன்.. இனிமேலும் பண்ணுவேன்.” என்றதில், அவள் மனமோ, அவளை ஒரு மாதிரியாக பார்த்தது. “என்ன நீ லாஜிக்கே இல்லாம பேசுற.? லவ் பண்ணுவியா? இதுல மகராசி இனிமேலும் பண்ணுவீங்களா.? லூஸா நீ.. அவனோட கண்டீசன் எல்லாம் கேட்டியா.. எல்லா கண்டீசன்ஸ்லயும் உன் மேல இருக்க காதல தான் அவன் சொல்றான். அப்போவும் அவன் கிட்ட நீ டிவோர்ஸ் கேக்குற.? டிவோர்ஸ் பண்ணிட்டு எப்டி நீ அவன லவ் பண்ணுவ.? அதுக்கு அப்ரோம் உன்னோட வாழ்க்கை, அவனோட வாழ்க்கை எதுவுமே நீ நியாபகம் வச்சிக்காம பேசுற.?”

இதில் மேலும் குழம்பியவள் “காலம் எல்லாத்துக்கும் சிறந்த மருந்து.. காலமே இதுக்கு ஒரு முடிவை சொல்லும்னு நான் நம்புறேன்” என்று அடுத்து கேள்வி கேட்க இருந்த மனதை அடக்கினாள்.

ஆதியின் மனமோ ‘இவ கேட்டா நான் டிவோர்ஸ் குடுத்துடுவேணா.? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா..? இந்த ஒன் இயர் இவளே எனக்கு டிவோர்ஸ் தராதன்னு சொல்லணும்.. கண்டிப்பா சொல்லுவா எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று முடிவு கொண்டான்.

உண்மையில் இருவரின் முடிவும் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பது காலமே அறியும். காலம் சிறந்த மருந்து மட்டும் அல்ல, காலம் சிறந்த தீர்வும் கூட.

நேரம் ஆனதால் இருவரும் மருத்துவமனை நோக்கி சென்றனர்.

மருத்துவமனையில் சிவஞானத்தின் கூற்றை கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். கோகுல் தன் டாக்டர் நண்பனிடம் விசாரிக்க, ” அதுலாம் ஒன்னும் இல்ல சரியா டேப்லட்ஸ் எடுத்துகிட்டா எல்லாமே சரி ஆகிடும். நீங்க எதுவும் வொரி பண்ணிக்க வேண்டாம்” என்று சமாதானம் செய்தான்.

பாரதி “நடிப்பு நடிப்புன்னு சொல்லிட்டு கடைசில தாத்தாவ போட்டு தள்ள பிளான் பண்ணிடீங்களே” என்று கூற,

தேவ்வும் சக்தியும் அதிர்ந்தனர். சக்தி “யம்மா.. இதை நீ வெளில யார்க்கிட்டாயவது உளறி தொலைக்காத. அப்ரோம் என்னால பதில் சொல்ல முடியாது” என்று கதற,

விஷ்ணு “ம்ம் ஆமா.. அப்ரோம் ‘அசிஸ்டண்ட் கமிஷனர் ஆடிய நாடகம் உண்மையான விந்தை’ன்னு தலைப்பு செய்தி வந்திடும். ஆமா தான போலீஸ்கார்” என்று கூற, சக்தி அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்தான்.

தேவ் “நீ சொல்றதுனால எனக்கு எந்த கவலையும் இல்ல முட்டக்கண்ணி, கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு, அமைதியா இருந்த எங்கள ஐடியா கொடுங்கன்னு நோண்டி விட்டது யாரு.. ஹு இஸ் தி பிளாக் ஷீப்.. பாரதி.. மே..மே..மே.. ஹாஹாஹா.. மே.. மே..மே..” என்று எந்திரன் ரஜினி போல் கூற,

ரவீ “இப்போ திவி வந்து, ஐடியா குடுத்த மூளையை சுடலாமா இல்ல திவி இருக்குற மனச சுடலாமான்னு கேட்பா ” என்றாள். பாரதி இருவரையும் கொலைவெறியில் முறைத்து கொண்டு இருந்தாள்.

தேவ் “அப்டி லாம் சொல்ல மாட்டாங்க.. நாலு அடி, நாலு மணி நேரம் அட்வைஸ்.. இதான் நடக்கும்” என்றான் தன் கன்னங்களை தடவிக்கொண்டே..

விஷ்ணு “ரொம்ப அனுபவமோ.?” என்றதில்,

பாரதி “ம்ம்ம்.. அதுலாம்.. நானும் இவனும் அக்கா கிட்ட திட்டு வாங்கதா நாளே இல்ல” என்றாள்.

ஹரி”மேய்கிறது எருமை.. இதுல என்ன பெருமை” என்று இருவரையும் வார,

பாரதி “பைக் ஓட்ட சொன்னா, பச்சை புள்ள மாதிரி பஞ்சர் ஆனா டயர்ர உருட்டிட்டு வந்தவங்களாம் நக்கல் நய்யாண்டிலாம் பண்ண கூடாது” என்று அவனை கலாய்த்தாள்.

தேவ் “இந்த அசிங்கம் உங்களுக்கு தேவையா.?” என்று அவனிடம் கேட்க,

ஹரி “அரசியல்ல இதுலாம் சாதரணமப்பா..” என்று கூறி அசடு வழிந்தான்.

இவர்கள் பேசி கொண்டு இருக்க, திவியும் ஆதியும் வந்தனர். அனைவரும் அமைதியாகி விட, ரோஜா “டாக்டர் போலாம்னு சொல்லிட்டாரு.. கிளம்புங்க” என்று கூற, அனைவரும் கிளம்பினர்.

மகிழுந்தில் சென்று கொண்டிருக்க, திவி ஆதியை  “தியா.. தியா” என்று அழைத்தாள்.

ஆதி ஆச்சர்யமாக அவளை பார்க்க, அவளோ, ” அதான் நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்ல.. ரெண்டு நாள் வேண்டாம், ஒரு ஒரு வாரம் ஆகட்டுமே.. ரெண்டு நாள் ரொம்ப சீக்கிரம் தான தியா?” என்று அவனிடம் ஐஸ் வைத்தாள்.

ஆதியோ அவள் கூறுவதை பொறுமையாக கேட்டு கொண்டு, மனதில் ‘அடியே.. நீ ஏதோ ஆசையா தியான்னு கூப்டுறன்னு பாத்தா, உனக்கு காரியம் ஆகணும்னு கூப்டுறியா.. சரியான கேடி தான் டி நீ.. ஆனா எனக்கு இந்த ரெண்டு நாளே அதிகம்னு தோணுது.. இவ என்னடான்னா ஒரு வாரம் கழிச்சு வச்சுக்கலாம்னு சொல்றா..?’ என்று சிந்தித்து கொண்டு இருக்க, அவனின் அமைதியில் அவன் ஒத்துக்கொள்ளவில்லை என்று நினைத்தவள், “தியா.. ப்ளீஸ்… இன்னும் ஒரு வாரம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்.. எப்படியும் ஒரு வருஷம் தான் நாம ஒன்னா இருக்க போறோம்.. இந்த ஒரு வாரம் நாம கொஞ்சம் கல்யாணம்னு பீல் பன்னாலாமே” என்றாள்.

அவள் கூறியதை ஆழ்ந்து கேட்டவன்,”ம்ம்ம்.. எப்படியும் ஒரு வருஷம் தானே.. அதுக்கு எதுக்கு இந்த ஒரு வாரத்தை பீல் பண்ணி வேஸ்ட் பண்னனும்.. அது மட்டும் இல்ல யது.. உனக்கும் ஒன் இயர் ல இந்த ஒரு வாரம் எக்ஸ்டண்ட் ஆகும்ல.. சோ ரெண்டு நாள்லேயே கல்யாணம் வச்சுக்கலாம்” என்று தலை சாய்த்து குறும்பாய் கூறி திவியின் கண்களை ஊடுருவ, அவளோ அவனை ஏக்கப்பார்வைப் பார்த்தாள்.

திவி முகத்தை பாவமாக வைத்து கொண்டு, உதட்டை பிதுக்கி “ம்ம்” என்று சுருதியே இல்லாமல் கூற, ஆதி தான் இவளின் செய்கையில் விழுந்தான். ‘அய்யோ.. மை ஸ்வீட் குல்பி இப்டிலாம் பண்ணாதடி.. எனக்கு மூட் மாறுது’ என்று நினைத்து விட்டு, பின்னந்தலையை அழுந்த கோதி, தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

அனைவரும் வீட்டிற்கு வர, பவி அவசர அவசரமாக வெளியே வந்தாள். வந்தவள் “தாத்தா என்ன ஆச்சு.. செல்விமா தான் எல்லாம் சொன்னாங்க.. ஒன்னும் இல்லல தாத்தா..” என்று பதறியதில், கோகுல் தான் இவளை புரியாமலும் அதே சமயம் ரசனையுடனும் பார்த்தான். அவளின் பதற்றம் அவனை ஏதோ செய்திட, அவள் பக்கம் சாய்ந்த மனதை கடிவாளமிட்டு அடக்கி கொண்டு உள்ளே நுழைந்தான்.

ரோஜா “அதுலாம் ஒன்னும் இல்ல பவி.. பயப்படாத.. நீ எப்போ வந்த..?”

பவி “நான் எப்போவோ வந்துட்டேன் மா.. ஸ்கூல் முடிஞ்ச உடனே அக்கா தான் என்னை இங்க வர சொன்னாங்க.. அதான் இங்க வந்தேன். அப்போ தான் செல்விமா சொன்னாங்க. இப்போ எப்டி இருக்கு தாத்தா” என்று கேட்டாள்.

சிவம் “நீங்கலாம் இருக்கப்போ எனக்கு என்ன மா.. நல்லா இருக்கேன்.. உனக்கு இன்னொரு விஷயம் சொல்லவா.?” என்று அவளிடம் கேட்க, அவளோ ஆர்வமாய் ம்ம் கொட்டிட, சிவம் கோகுலை கை காட்டி “இவன் தான் சரவணன் மாமாவோட ரெண்டாவது பையன் கோகுல்.. அப்ரோம் இன்னும் ரெண்டு நாள்ல ஆதிக்கும் திவிக்கும் கல்யாணம்” என்றார்.

அவர் கோகுலை பற்றிய கூறுகையில் பெண்ணவள் எந்த உணர்ச்சியும் காட்டிடாது ம்ம் என்று கூறி விட்டு, அடுத்து கூறிய செய்தியில் என்ன சொல்வது என்றே புரியாமல் பார்த்தாள்.

பவி “அதுக்குள்ளாயா.?” என்று விழி விரித்து பின்பு, “ஜாதகம்லாம் பாத்துடீங்களா.?” என்றால் கேள்வியாய்.

இப்போது அதிர்வது அனைவரின் முறையாயிற்று. பெரியவர்கள் அனைவரும் இதை நாம் யோசிக்கவில்லை என்று அதிர்ந்து இருக்க, திட்டம் தீட்டியவர்களோ புதுசா ஒரு கேட்-ட போட்டுட்டாளே என்று கொலைவெறியில் இருந்தனர். ஆதியோ கூடி வரும் நேரத்தில் தேன் கூட்டில் கல்லை எறிந்தவள் போல் பவியை முறைத்து கொண்டு இருந்தான். ஆனால் பவி தான் பாவம் இதை எதையும் அவள் கவனிக்கவில்லை.

தேவ் “ஏன் டி முட்டக்கன்ணி, உங்க குடும்பத்துல யாருக்கும் அறிவுன்னு ஒண்ணு எப்போவும் இருக்காதா..? அண்ணி என்னடான்னா எப்ப பாரு அட்வைஸ் பண்ணி சாவடிக்குறாங்க. நீ என்னடான்னா பேசியே கொல்ற, இதுல பவி ஒரு படி மேலே போய் நாம போட்ட பிளான்ன சொதப்புறதுக்கே வந்து இருக்கா போல”என்று கூறியதில், பாரதி அவனை தீயாக முறைத்து கொண்டு இருந்தாள்.

இப்போது இவள் ஏதாவது பேசினாள் நிச்சயம் தன் தாயிடமும் அக்காவிடமும் பலத்த அர்ச்சனை கிடைக்கும் என்றே அவள் அமைதி காத்தாள்.

சிவம் “பாத்தியாடா என் பேத்தியை.. நமக்கே தோணல.. இவளுக்கு தோணி இருக்கு” என்று வாஞ்சையாய் அவளின் தலையை நீவி விட்டவர், பெருமாளிடம் “நம்ம ஜோசியருக்கு போன் போடுடா. அவரை வர சொல்லு.. எல்லாம்  பேசிடலாம்.” என்றார்.

பெருமாளும் அவருக்கு அழைப்பு விடுக்க, சிறிது நேரத்தில் வருவதாய் கூறினார் பார்ப்பனர்.

ஜோதிடர் இருவரின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு, திருமணத்தை ஒரு வாரம் கழித்து வைத்து கொள்ளலாம் என்று கூறுகையில் சிவம் “அதுக்கு முன்னாடி வைக்க முடியாதா ஜோசியரே.. “

ஜோதிடர் “இல்ல சிவம்.. ஒரு வாரம் கழிச்சு தான் முகூர்த்த நாள் வருது.. அதுவும் வளர்பிறை முகூர்த்தம்.. அப்போ கல்யாணத்தை வச்சுடலாம்” என்று திட்டவட்டமாக கூறியதில் அனைவரும் மறு பேச்சு இன்றி ஒப்புக்கொண்டனர்.

ஆதி தான் ‘இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே’ என்று நினைத்துவிட்டு திவியை தேடி சென்றான். அவள் தான் வந்த உடனே அறையில் தஞ்சம் அடைந்து விட்டாளே.

திவி பால்கனியில் நின்று இரு கைகளையும் கட்டி கொண்டு, வானத்தை வெறித்து கொண்டு இருக்க, திவியை அணைக்க நினைத்த கையை கடினப்பட்டு அடக்கிகொண்டு அவளருகே சென்றான்.

அவளருகே சென்றவன் மெதுவாக அவள் காதருகே ஊத பெண்ணவள் சிலிர்த்து போனாள். கண்களை மூடி அதை உணர்ந்தவள், அமைதியாக இருக்க, ஆதியே மௌனத்தை கலைத்தான்.

ஆதி”இதுலாம் உன் வேலை தானே.?” என்று புன்னகையுடன் வினவ,

திவி”பரவாலயே.. கண்டுபிடிச்சிட்ட..” என்று அவளுக்கு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள்.

அவளை ஒட்டியவாறே அமர்ந்து, “இது கூட தெரியலனா திவிக்கு ஏத்த ஆதியா இருக்க முடியாதுல..” என்றான் அவளின் தோளில் கைபோட்டு ஒரு பக்கமாக அணைத்த படி..

திவி தான் அவனின் நெருக்கத்தில் தவித்து போனாள். நெளிந்து கொண்டு அமர்ந்தவளை இழுத்து தன் மடியில் போட்டு கொண்டான். திவி திமிறிக்கொண்டு எழ, ஆதி”எப்டி பண்ணேன்னு சொல்லு.. நான் உன்னை விடுறேன்.. ” என்று பிடியை மேலும் இறுக்க, பெண்ணவள் தான் என்ன முயற்சித்து தோற்று போனாள்.

திவி”பவி வந்த உடனே எனக்கு தான் கால் பண்ணா.. நான் அவ கிட்ட எல்லாமே சொல்லிட்டேன்.. லாஸ்ட்டா டார்லிங்க் உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றப்போ ஜோசியர பாத்தீங்களான்னு கேளுன்னு சொன்னேன்.. அவளும் டைம் பாத்து கேட்டா, அந்த மனுசனும் ஒரு வாரம் கழிச்சு கல்யாணத்தை வச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க” என்றால் சிணுங்கி கொண்டே..

ஆதி எங்கே இதையெல்லாம் கவனித்தான், அவளின் சிணுங்களிலேயே தன்னை பறிகொடுத்தவன், அவள் கன்னம் நோக்கி குனிய, சுதாரித்த திவி ஆதியின் தொடையை அழுந்த கிள்ளினாள்.

ஆதி “ஸ்ஸ்ஸாஆஆஆ… லூசு.. எதுக்கு டி கிள்ளுன” என்று தேய்த்து கொண்டு கேட்க,

திவி”சொன்னா விடுறேன்னு சொன்னல.. விட்றா.. “என்றால் திமிறிக்கொண்டு.

ஆதி அவள் முகத்தை நோக்கி குனிந்து “அவசியம் விடனுமா குட்டச்சி” என்று விஷமமாய் கேட்க,

திவி தான் செங்கொழுந்தாய் சிவந்தாள். பாவம் அதை மறைக்கவும் முடியாமல் இருக்க ஆதி அதில் விழுந்தான் ‘கொல்றியே டி.. இதுல கல்யாணத்துக்கு அப்ரோம் நான் எப்டி டி சும்மா இருப்பேன்.. லூசு குட்டச்சி’ என்று மனதில் புலம்பி விட்டு, அவளை விடுவித்தான்.

அவளோ “ஸ்ஸ்ஸாஆஆஆ… எப்டி புடிக்குற..வலிக்குது.. சரியான உடும்பு.. அம்மா” என்று இரு கைகளையும் அழுத்தி கொண்டே கூற,

ஆதி”இதுக்கே இப்டின்னா இன்னும் எவ்ளோவோ இருக்கே குட்டச்சி” என்று முணுமுணுக்க,

திவி”ஹான்.. என்ன சொன்ன.? ” என்று கேட்டாள்.

ஆதி”இல்ல.. ஒழுங்கா சாப்பிடணும்.. அப்போ தான் இந்த மாமன் புடிச்சா வலிக்காதுன்னு சொன்னேன்”என்று குறும்பாய் கூற,

திவி”ம்ம்ம்.. ஆசை தான்.. போ டா டேய். ” என்று விட்டு இவள் வெளியே வந்தாள்.

திவியின் குடும்பம் கிளம்ப ஆயுத்தமாக, ஆதி “ஏன் அதுக்குள்ள கிளம்புறீங்க.. இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம், எல்லாரும் இங்கேயே இருக்கலாம்ல” என்றதில் திவிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ‘இவன் ஏன் மானத்தை வாங்குறான்.  டேய் லூசு மாமா அப்டிலாம் விட மாட்டாங்க டா.. அய்யோ எவ்ளோ அழகா பேசுறான் மை ஸ்வீட் ப்ரித்தியா.’ என்று மனசுக்குள் அவனை கொஞ்சிட,

சக்தி “இந்தா டா கர்சீப் தொடச்சிக்கோ.. “

ஆதி”ரொம்ப தெரியுதா டா..”என்று அசடு வழிய,

ஹரி “பச்சையாவே தெரியுது நீங்க வழியுறது.. ஹ்ம்.. தொடச்சிக்கோங்க” என்று சிரிக்க, ஆதி தான் வெட்கிபோனான்.

“பெண்களுக்கு மட்டும் தான் வெட்கம் வருமா என்ன.. ஆண்களுக்கும் இதோ வருகிறதே.. அழகனடா நீ.. “என்று திவி ஆதியை ரசிக்க,

தேவ் “அண்ணி.  போதும் எங்க அண்ணன சைட் அடிச்சது… ” என்றதில் திவி அதை கண்டுகொள்ளவே இல்லை.. ஒரக்கண்ணால் அவனை ரசித்து கொண்டு தான் இருந்தாள்.

ரோஜா “இல்ல ஆதி.  முறைன்னு ஒன்னு இருக்குள்ள.. கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிளையும் பொண்ணும் பாத்துக்க கூடாது.. கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி தான் பாக்கணும்”என்றதில் ஆதி மேலும் அதிர்ந்து திவியை நோக்கிட, திவி தான் நமட்டு சிரிப்புடன் ஆதியை பார்த்தாள். இவன் ரியாக்சனில் அனைவரும் சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தனர்.

இதற்கு மேல் ஏதாவது கூறினால் தன் மானம் போய் விடும் என்று எண்ணி ஆதியும் அமைதி காத்தான்.

திவி வீட்டார் புறப்பட, ஆதி தான் பாவம் தன் அறைக்குள் தஞ்சம் அடைந்தான்.

வீட்டிற்குள் சென்றவள் இரண்டு நாட்களில் நடந்தவற்றை மனதில் அசைபோட்டு கொண்டு இருக்க, திவியின் அழைப்பேசி சிந்தனையை கலைத்தது. வேறு யார் ஆதி தான். சிரித்து விட்டு அதை ஆன் செய்தவள் “ம்ம்ம்… சொல்லு ஆதி”

ஆதி”வீட்டுக்கு வந்துட்டியா.?”

திவி”ஹ்ம்ம்.. வந்துட்டேன்.. இதுக்கு தான் கால் பண்ணியா..” என்று கேட்டாள்.

ஆதி “அதை விடு… ஏன் டி உனக்கு தெரியும்ல கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் பாத்துக்க முடியாதுன்னு ” என்று கேட்க,

திவி “ம்ம்ம் தெரியுமே.. ” என்றாள் அசால்ட்டாக..

ஆதி”அப்ரோம் ஏன் டி குட்டச்சி சொல்லல. ” என்று பாவமாய் கேட்க,

திவி “சொன்னா மட்டும் நீ என்ன டா பண்ணுவ.? ஹான் ” என்று குறும்பாய் வினவ,

ஆதி “ஹான் கொஞ்சம் அப்டியே பால்கனி பக்கம் வந்து பாரு” என்றதில் திவி திகைத்து விட்டாள்.

திவி பால்கனி கதவை திறக்க, ஆதி அவளை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தான். “டேய் என்ன டா பண்ற.. யாராவது பாத்தா என்ன ஆகும்.?” என்று திவி பதறிட,

ஆதி ஒய்யாரமாய் அவளின் மெத்தையில் படுத்து கொண்டு, “புருஷன் பொண்டாட்டி ரூம்ல இருக்கான் யார் பாத்தா என்ன டி செல்லம்.. நீ வா வந்து இங்க மாமா பக்கத்துல உட்காரு “என்று அவளை அழைக்க, திவிக்கு தான் அயோ என்று இருந்தது.

சரியாக ரோஜா கதவை தட்ட, “போச்சு… அம்மா வந்தா என்னை தான் திட்டுவாங்க.. என்று புலம்ப,

ஆதி “என்ன பண்ணுவன்னு கேட்டல்ல.. போ செல்லம் போய் சமாளி” என்றிட,

திவிக்கு தான் கடுப்பானது “எந்திரி டா.. ப்ளீஸ்.. எந்திரிச்சு எங்கேயாவது மறைஞ்சிக்கோ” என்று அவனை கட்டிலில் இருந்து எழுப்ப, அவன் சிரித்துகொண்டே குளியலறைக்குள் நுழைந்தான்.

திவி கதவை திறக்க, ரோஜா “இவ்ளோ நேரமா கதவை திறக்க, என்ன பண்ண உள்ள.?” என்றிட,

திவி “சும்மா பேசிட்டு இருந்தேன்மா” என்று உளற,

ரோஜா”என்னது தனியா பேசிக்கிட்டு இருந்தியா..” என்று கேட்க,

திவி”அய்யோ அம்மா.. போன்ல மா.. ஆதிகிட்ட தான் பேசிக்கிட்டு இருந்தேன்” என்றாள்.

ரோஜா “திவ்யா.. இனிமே ஆதி மாப்பிள்ளையை அவன் இவன்னு சொல்லாம ஒழுங்கா மாமான்னு கூப்பிடு.. மரியாதையா பேசு.. புரியுதா… என்ன தான் என் அண்ணன் வீடா இருந்தாலும் அங்க போய் எங்களுக்கு நீ நல்ல பேர் தான் வாங்கி தரணும்..” என்று அறிவுறுத்திட,

திவி தான் “சும்மாவே அவன் ஆடுவான் இப்போ வெளில வந்து மாமான்னு கூப்பிடுன்னு டார்ச்சர் பண்ணுவானே கடவுளே” என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

ரோஜா “என்ன நான் சொல்றது புரியுதா ?” என்று கேட்க, அப்போது தன்னிலை வந்தவள் “ஹான் மா.. நல்லா புரியுது.. ” என்றாள்.

ரோஜா “சரி.. நாளைக்கு முகூர்த்த புடவை எடுக்க போறோம்.. சீக்கிரம் தூங்கு..” என்று கூறிவிட்டு செல்ல, திவி தான் அவர் பின்னாடியே சென்று கதவை தாழிட்டாள்.

வெளியே வந்த ஆதி திவியை ஒரு மார்க்கமாய் பார்க்க, திவி”டேய் என்ன டா பாக்குற.? கிளம்பு நீ” என்று துரத்த,

ஆதி மீண்டும் படுக்கையில் படுத்து கொண்டு “மாமான்னு சொல்லு.. நான் போறேன்..” என்றான் தோளைகுளுக்கியபடி.

திவி “நினைச்சேன்.. இப்டிலாம் நீ சொல்லுவன்னு.  என்னாலலாம் கூப்பிட முடியாது.. வெளில போ டா” என்று சிணுங்க,

ஆதி “இப்போ சொல்ல போறியா இல்ல அத்தைய கூப்டவா.? “என்று இருபுருவத்தை தூக்கி கேட்க,

திவி யோசித்து கொண்டு இருந்தாள்..இல்லை இல்லை அவனை ரசித்துகொண்டு இருந்தாள்.

ஆதி “அத்தை… ” என்று கத்த, திவி அவனின் வாயை பொத்தினாள்.

திவி “கொஞ்ச நேரம் அமைதியா இரு டா.. வெண்ணை..”என்று கூற,

ஆதி தான் இப்போது இவளின் நெருக்கத்தில் பதில் கூற முடியாமல் போனான்.

திவி ஆதியை பார்க்க அவன் இவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

பாவையவள் பார்வையில் என்ன கண்டாலோ, கையை எடுத்து விட்டு மெத்தையில் அமர்ந்தாள்.

ஆதி தன்னிலை வந்தவன் “நைட் நான் இங்க தான் டி படுப்பேன்” என்றதில் மேலும் அதிர்ந்த திவி “இங்க பாரு குட் பாய்ல.. சமத்தா வீட்டுக்கு போ டா.. நாளைக்கு மீட் பண்ணலாம்.. ” என்று அவனிடம் கெஞ்ச,

ஆதி சிரித்துகொண்டே அவளின் நெற்றியில் தன் முத்திரையை ஆழமாக பதித்து விட்டு, “நீ பல குழப்பதுல இருக்க, எதையும் நினைக்காம நிம்மதியா தூங்கு.. குட் நைட்..” என்று அவளை படுக்க வைத்து போர்வை போர்த்திவிட்டான்.

தன்னவனின் நெருக்கத்திலும் முத்தத்திலும் மெய் சிலிர்த்தவள், பாதுகாப்பு உணர்வோடு நித்திரையை தழுவ, ஆதி மீண்டும் அவளின் நெற்றியில் இதழை பதித்து விட்டு “இவ்ளோ காதல வச்சிக்கிட்டு ஏன் டி உன்னை நீயே ஏமாத்திக்குற.. இனிமே எந்த கஷ்டமும் உனக்கு வராது யது.. மை ஸ்வீட் பொண்டாட்டி” என்று எழுகையில், திவி ஆதியின் கைகளை பிடித்து கொண்டு இருந்தாள்.

ஆதி அதை மெல்ல பிரித்து விட்டு, அவளை பார்த்து கொண்டே வந்தவழியாக சென்றான்.

தன் வீட்டிற்கு வந்தவன் திவியை நினைத்து கொண்டு கண்களை மூட, மெல்ல உறக்கத்தை தழுவினான் ஆண்மகன்.

கனவு தொடரும்.. 🌺🌺🌺

கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்… அண்ட் கமெண்ட்ஸ் ஸ்டார்ஸ் கொடுங்க.. நிறை குறை இருந்தாலும் சொல்லுங்க… அதை நான் சரி செய்துக்கிறேன்…

ஹாப்பி நைட்.. ஐஸ்கிரீம் ட்ரிம்ஸ்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்