Loading

காதல் – 46

 

அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் தங்களின் காதல் உலகில் சந்தோஷமாக சுற்றி திரிந்து வந்தனர் அப்பொழுது விஹானிற்க்கு சஸ்பென்ஷன் பீரியட் முடிந்து கல்லூரி திறக்கவும் , தன் காதலனுக்கு தினமும் தினமும் சாப்பாடு சமைத்து கொடுத்து அவனை காலையில் கல்லூரி வழியனுப்பி விட்டு அவன் வீடு திரும்பும் வரை அவனுக்காக காத்திருப்பது என்று அஸ்வதி விஹானின் மனைவி போலவே ஆகிப்போனாள்…….

 

விஹானிற்கும் , அஸ்வதி அவனுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்வதை பார்த்து அவனுக்கு அஸ்வதி தன்னுடைய மனைவி போலவே தெரிந்தாள் இப்படியே சந்தோஷமாக சென்று கொண்டிருந்த அவர்களது நாட்களில் இடி விழுந்தது போல பணி அப்புறப்படுத்தி விட்டார்கள் என்ற செய்தி வந்தது அதைக்கேட்ட அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர் சோகத்தில் ஆழ்ந்தவர்களை விஹானா தேற்றி வைத்திருந்தாள்………

 

விஹான் கல்லூரியில் சோகமாக அமர்ந்து கொண்டு இருந்தான் …….

 

தன்னுடைய நண்பன் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்த ஹர்ஷத் அவனிடம் சென்று பேசினான்……

 

டேய் மாப்ள என்னடா ரொம்ப சோகமா உக்காந்துட்டு இருக்க ?என்னோட தங்கச்சி உன்னை அடிச்சிட்டாளா?

 

என்னோட அஸ்வதி என்ன அடிச்சா நான் ஏண்டா சோகமா இருக்க போறேன்?என்னோட  அஸ்வதி என்ன விட்டு பிரிஞ்சி போக போறாடா என்று அவன் ஹர்ஷத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்……..

 

சரி சரி அழாதடா எல்லாரும் பாக்குறாங்க என்று ஹர்ஷத் கூறவும் விஹான் கண்களை துடைத்துக் கொண்டு இருவரும் கேண்டின் வந்தனர்……

 

டேய் மச்சான் அஸ்வதி இல்லாம நான் எப்படிடா இருக்க போறேன்?  என்னோட உலகமே அவதான்டா, அவ இல்லாம நா ஒண்ணுமே இல்லடா……

 

மச்சான் இந்த பிரிவு உங்க ரெண்டு பேருக்கும் தற்காலிகமானது தான்டா நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையில இன்னும் முன்னேறனும், நிறைய சாதிக்கணும் அப்புறம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒன்னா தானே இருக்க போறீங்க? அதனால இப்போ இந்த பிரிஞ்சி இருக்குற டைம் உங்க ரெண்டு பேருக்கும் உங்க வாழ்க்கையில முன்னேறுறதுக்கான ஒரு சின்ன டைம் அதை யூஸ் பண்ணிக்கோங்க சரியா?

 

தன்னுடைய நண்பனின் கூற்றில் உள்ள உண்மையை புரிந்து கொண்ட விஹான் , இதே தாண்டா விஹானாவும் சொன்னா நீங்க ரெண்டு பேரும் சொல்றது ரொம்ப கரெக்ட்டுடா நா இன்னும் நிறைய சாதிக்கணும்,  முன்னேறனும் அப்புறமா என்னோட  அஸ்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா அவள பார்த்துக்கணும்…….

 

புரியுதுல இப்ப போய் வேலையை பாருடா எப்ப பாரு சோகமாவே உக்காந்துகிட்டு போ என்று தன்னுடைய நண்பனை வகுப்பிற்கு அனுப்பி வைத்தான் ஹார்ஷத்………

 

இங்கே வீட்டில்  அஸ்வதி சோகமாக அமர்ந்து கொண்டிருந்தாள்….

 

அஸ்வதி அவ்வாறு சோகமாக அமர்ந்து கொண்டிருப்பதை தேவராஜ் பார்த்து விட்டு  அவள் அருகினில் வந்து அமர்ந்தார்…….

 

அஸ்வா கண்ணா ஏன்டா சோகமா இப்படி தனியா வந்து  உக்காந்துட்டு இருக்க?எதுவும் பிரச்சனையா? அப்பாக்கிட்ட சொல்லுடா அப்பா உனக்கு பிரச்சனை சால்வ் பண்ணி வைக்கிறேன்……..

 

நீண்ட நாட்களுக்கு பிறகு அஸ்வதி தன்னுடைய தந்தையை மிக அருகில் பார்த்தாள்……..

 

அப்பா நம்ம ஊருக்கு கிளம்ப போறோமா?

 

ஏண்டா இங்க இருக்க உனக்கு புடிக்கலையா?

 

எனக்கு இங்க இருக்க ரொம்ப புடிச்சிருக்குப்பா……

 

அப்புறம் எதுக்கு ஊருக்கு போறது பத்தி கேக்குற?

 

அப்பா அது வந்து  காஷ்மீர்ல நிறைய பனியா இருக்கு , ரோடு எல்லாம் பிளாக் ஆயிடுச்சு அதனால தானே இவ்வளவு நாளு நம்ம இங்கேயே இருந்தோம் இப்ப ரோடு எல்லாம் கிளியர் ஆயிடுச்சாம் அப்பா அதனால நம்ம ஊருக்கு சீக்கிரமாக கிளம்பிடுவோமா ?என்று அஸ்வதி தேவராஜ்ஜீடம் பாவமாக கேட்டாள்……..

 

அஸ்வா கண்ணா உனக்கு எப்போ ஊருக்கு கிளம்பனும் தோணுதோ அப்போ நம்ம ஊருக்கு கிளம்பலாம் சரியா இப்ப நீ ஜாலியா சந்தோஷமா இரு எத பத்தியும் நினைச்சு வருத்தப்படக்கூடாது சரியா?  என்று அவர் அவளின் தலையை வருடி கொடுத்துவிட்டு சென்றார்…….

 

தேவராஜ் அவ்வாறு கூறவும் அஸ்வதிக்கு சந்தோஷம் தாளவில்லை அவள் விஹான் வரும் நேரத்தை எண்ணி அவனுக்காக காத்திருந்தாள்……

 

விஹானும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து விட்டான் …..                              அவனை அஸ்வதி வாசலிலே கட்டி அணைத்துக் கொண்டு தேவராஜ் கூறியவற்றை அவனிடம் சந்தோஷமாக கூறிக் கொண்டிருந்தாள்,  அவள் சந்தோஷத்தை பார்த்த விஹான்னிற்கும்  அவளின்  சந்தோஷம் தொற்றி கொண்டது…….

 

அஸ்வதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவளை அப்படியே தூக்கிக் கொண்டு தனது அறைக்கு சென்றான்….

 

அஸ்வதி நா உனக்கு உன்கிட்ட கொஞ்சம் விஷயம் பேசணும் என்று விஹான் அஸ்வதி சென்னைக்கு திரும்பியவுடன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவன் அவளுக்கு கூறிக் கொண்டிருந்தான்…….

 

நா  இப்போ உனக்கு சொன்னதெல்லாம் உனக்கு புரிஞ்சதா அஸ்வதி?

 

ரொம்ப நல்லா புரிஞ்சது விஹான் …….

 

நா சொல்லிக் கொடுத்தத நல்லா ஞாபகம் வச்சுக்கோ  அஸ்வதி , எப்பவும் மறந்துடக்கூடாது சரியா?

 

மறக்க மாட்டேன் விஹான் என்று அவள் அவனை இறுக்கமாக அனைத்து கொண்டாள்……..

 

சரி அஸ்வதி நம்ம ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியே போயிட்டு வருவோமா?

 

இப்ப வேணாம் கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்,  நீங்க இப்பதான் காலேஜ் விட்டு வந்து இருக்கீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க சோ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிட்டு வெளியே போலாம்…….

 

பிறகு இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே ரவுண்ட் அடித்து விட்டு வீட்டிற்கு வந்து உறங்கினார்கள்……

 

விஹான் தினமும் கல்லூரிக்கு செல்வதும் அவனுக்காக அஸ்வதி காத்திருப்பதும் தொடர்கதை ஆகிப்போக அதை பார்த்துக் கொண்டிருக்கும்  சுலோச்சனா மற்றும் அனந்திக்கு அந்த காதல்  காட்சிகளுக்கு எப்படி தடை போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்….

 

சுலோச்சனா  மற்றும் அனந்தி காஷ்மீரை விட்டு கிளம்ப ஒரு சரியான பிளான் போட்டு விட்டனர் அதை செயல்படுத்தியும் விட்டனர் ……

 

அதனால் அஸ்வதி மற்றும் விஹான் பிரியும் நேரம் வந்துவிட்டது…..

 

இன்னும் மூன்று நாட்களில் அஸ்வதி சென்னைக்கு திரும்ப போகிறாள்…..

 

அஸ்வதிக்கு தன்னுடைய உயிர் காதலனை விட்டு பிரியப் போகிறோம் என்று அழுகையாக வந்தது….  விஹானிற்கும் அதே நிலைமைதான் அவனும் தன் உயிர் காதலை விட்டு பிரியப் போகிறோம் என்று கவலையில் இருந்தான்……….

 

விஹானா தான் அஸ்வதியின் உடைமைகள் அனைத்தையும் பேக் செய்து வைத்தாள்…..

 

அஸ்வதி சென்னைக்கு கிளம்ப இரண்டு நாட்களே இருந்த நிலையில் ஹர்ஷத் அஸ்வதியை தனது வீட்டிற்கு அழைத்தான் அஸ்வதியும் அவனின் அழைப்பை ஏற்று விஹானோடு ஹர்ஷத்தின் வீட்டிற்கு சென்றாள்…..

 

ஹர்ஷத்தின்  தாயார் அவர்கள் இருவரையும் இன் முகத்துடன் வரவேற்றார்…..

 

ரெண்டு பேரும் என்ன சாப்பிடுறீங்க?

 

அதெல்லாம் ஒன்னும் வேணாம் அம்மா….

 

அது எப்படி டா கண்ணா நீங்க வீட்டுக்கு முதல் முறையா வந்து இருக்கீங்க உங்களுக்கு சாப்பிட ஏதும் கொடுக்காம எப்படி அனுப்புறது?

 

அவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது வெளியில் ஹரிசா ஹரிசா என்று விற்கும் சத்தம் கேட்டது…….

 

உங்க ரெண்டு பேருக்கும் நா ஹரிசா வாங்கி தரேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று ஹர்ஷத்தின் அம்மா வெளியில் சென்றார்……

 

ஹர்ஷத்தின்  அம்மா வெளியில் செல்வதற்குள் அந்த ஹரிசா விற்பவன் சென்று விட்டான்……..

 

இந்த ஹரிசா , காவா விக்கிறவன் எல்லாம் வியாபாரம் பண்ண வாரானா இல்ல வீட்ல பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு ஸ்பீக்கர் கட்டிக்கிட்டு இப்படி குளிர்ல சுத்திட்டு திரியுறானான்னு தெரியலையே ஒரு தடவை கூட இவன் மூஞ்சிய பார்க்க முடியறது இல்லையே என்று அவர் புலம்பி கொண்டு வந்தார்…….

 

அவர் அவ்வாறு கூறிக்கொண்டு வருவதை கேட்ட அஸ்வதி சிரித்து விட்டாள்……

 

அம்மா ஹரிசான்னா என்னது?

 

ஹரிசான்னா மெதுவா வேக வைச்ச கோதுமை அண்ட் மட்டன் சேத்து பண்ற ஒரு டிஷ் இந்த டிஷ் மோஸ்லி ரோடு சைட்ல பெரிய பாத்திரத்துல வச்சு பரிமாறுவாங்க  இதை காஷ்மீர் காலை உணவுன்னே சொல்லலாம் ……. இந்த ஹரிசா காலை வேளையில மட்டும் தான்  கிடைக்கும் அதான் உங்களுக்கு வாங்கி தரலாம்ன்னு நினைச்சேன்…….

 

அம்மா அதுக்கென்ன நா என்னோட தங்கச்சிக்கு ஹரிசா செஞ்சு குடுத்துட்டா போச்சு என்று ஹர்ஷத் மற்றும் அவனின் தாயார் பாத்திமாவும் சேர்ந்து ஹரிசா தயாரித்து கொண்டு இருந்தார்கள்……..

 

அஸ்வதி அவர்கள் எவ்வாறு ஹரிசா செய்கிறார்கள் என்று பார்த்து கொண்டு இருந்தாள்……..

 

காஷ்மீரி ஹரிஸா (Kashmiri Harissa) என்பது ஆட்டுக்கறியை மிக நிதானமாகச் சமைத்து செய்யப்படும் ஒரு சுவையான உணவாகும்……

 

ஹர்ஷத் முதலில் ஒரு பெரிய பிரஷர் குக்கரில் ஆட்டுக்கறியை எடுத்துக்கொண்டான் , அதனுடன் ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு பொடி மற்றும் உப்பு சேர்த்து, கறி மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி கொண்டான் பிறகு  கறி எலும்பிலிருந்து தானாகப் பிரியும் அளவிற்கு நன்றாக வேகவைத்து எடுத்து கொண்டான்…….

 

பிறகு அவன் கறி வெந்தவுடன், அதிலிருந்து எலும்புகளைத் தனியாகப் பிரித்து எடுத்துக்கொண்டான்  மீதமுள்ள கறியை ஒரு பெரிய மரக்கரண்டி வைத்து அவனின் தாயார் நன்கு மசித்து எடுத்து வைத்து கொண்டார்……..

 

அதன் பிறகு  அரிசி மாவைச் சுடுதண்ணீரில் கலந்து கட்டியில்லாமல் கரைத்துக்கொண்டான். அந்த அரிசிக் கலவையை மசித்த கறியுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டான்……

 

ஃபாத்திமா அம்மா அடுப்பை மிகச் சிறிய தீயில் வைத்து, அந்தக் கலவையைத் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருந்தார் , மட்டனும் அரிசியும் ஒன்றிணைந்து ஒரு மிருதுவான பேஸ்ட்  பதத்திற்கு வரும் வரை சமைத்து கொண்டே இருந்தார் ……

 

அம்மா நா வேன்னா கிளறி விடட்டா ?ரொம்ப நேரம் நீங்க கிளறிட்டே இருக்கீங்க , உங்களுக்கு கை வலிக்கும்ல……

 

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா இப்படி கிளறிட்டே இருந்தா தான் டேஸ்ட் நல்லா வரும் இதுதான் ஹரிஸாவின் மிக முக்கியமான படிநிலை……..

 

பாத்திமா அம்மா அந்த கலவையை கிளறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஹர்ஷத் மற்றொரு வாணலியில் கடுகு எண்ணெயைச் சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிவிட்டு  இந்த வறுத்த வெங்காயம் மற்றும் சூடான எண்ணெயைச் சமைத்த ஹரிசாவின் மீது ஊற்றிக் கிளறினான்……..

 

பிறகு ஏற்கனவே செய்து வைத்திருந்த சப்பாத்தியோடு இந்த ஹரிசாவை வைத்து  அஸ்வதிக்கும் விஹானிற்கும், பாத்திமா அம்மா மற்றும் ஹர்ஷத் பரிமாறினார்கள்…….

 

பிறகு ஹர்ஷத்தின் வீட்டை  அஸ்வதிக்கு சுற்றி காட்டினான்……

 

அப்பொழுது அஸ்வதி ஒரு புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்…….

 

என்ன புகைப்படம் அது?

 

தொடரும்…….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்