
காதல் – 37
நாட்கள் செல்ல செல்ல விஹான் மற்றும் அஸ்வதியின் காதல் கூடி கொண்டே சென்றது ……
அதீத காதலில் கூடல் மட்டுமே இருந்தால் எப்படி?
ஊடல் இல்லா காதல் ஏது?
அதனால் விஹான் தன் காதலி மீது கோபம் கொள்ள அவனின் அந்த கோபத்தை அவளின் பிஞ்சு உள்ளத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை , அவனின் கோபத்தை அவளிடமே போக்கி கொள்ள துடித்தான்….
அந்த கோபம் போக்கும் தருணத்தில் இருவரும் இன்னும் நெருங்கி போயினர்……
இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள அந்த சிறு ஊடல் சிறந்த காரணமாக இருந்தது……
விஹான் தன்னுடைய காதலியும் தன் வருங்கால காதல் மனைவிக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அவளுக்கு பிடித்த நிறத்தில் அறை உருவாக்கி அவள் எல்லா நேரங்களிலும் அணிய கூடிய உடைகள் , காலணிகள் என்று அனைத்தும் அவளுக்காக அவன் பார்த்து பார்த்து சேகரித்து வைத்திருந்தான்…….
அவனின் அந்த அதீத காதலில் அஸ்வதி பூரித்து போய் விட்டாள்…..
பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து அவர்களுக்கு காலை உணவு தயார் செய்து கொண்டு இருந்தார்கள்……
அஸ்விம்மா…….
சொல்….லுங்க….
ஏன்டி இவ்வளோ அழகா இருக்க? உன்ன பாக்குற சமயத்துல எல்லாம் நா இரும்பை ஈர்க்குற காந்தம் மாதிரி ஆகிடுறேன் என்று அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டே காதலாக கூறி கொண்டே அவளின் கைகளை பிடித்து கொண்டே சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டு இருந்தான்…..
மாவு பிசைந்து முடித்து விட்டு இருவரும் இம்மியும் விலகாமல் சாப்பாடு செய்து முடித்து விட்டு சாப்பிட்டு முடித்து விட்டு விஹான்னின் வீட்டிற்கு சென்றனர்……
அவர்கள் இருவரும் வீட்டுக்கு சென்ற போது ஹாலில் வீல் சேரில் சுலோச்சனா மற்றும் அனந்தி அமர்ந்து கொண்டு விஹானின் கைகளைப் பிடித்துக் கொண்டே வரும் அஸ்வதியை பார்த்து முறைத்தனர்……
அவர்கள் இருவரையும் அந்தக் கோலத்தில் பார்த்த அஸ்வதிக்கு அழுகை வந்தது ஆனால் அவள் அவர்களுக்காக அழுதால் விஹான் கோபித்துக் கொள்வான் என்று வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் கைகளை பிடித்துக்கொண்டு அவனின் அறைக்குள் சென்று விட்டாள்…….
பாரு அனந்து அந்த திமிரு புடிச்சவ கண்ணுக்கு நம்ம தெரியல போல , எப்படி பாத்தும் பாக்காத மாதிரி போறான்னு…….
ஆமா அம்மா அந்த அனாதை நாய்க்கு வந்த வாழ்வ பாருங்க , அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாம யாராவது தருவாங்களான்னு இருந்த நாய்க்கு கிடைச்ச வாழ்வ பாரு என்று இருவரும் அஸ்வதி மேல் உள்ள வயிற்றெரிச்சலை கொட்டி கொண்டு இருந்தார்கள்…….
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சரியாக அங்கு விஹான்னா வந்தாள்……
உங்க ரெண்டு பேருக்கும் எண்ணம் போல் வாழ்க்கை அப்படின்னா என்னன்னு தெரியுமா?
தெரியுமே ஏன் கேக்குற?
தெரிஞ்சா நீங்க ரெண்டு பேரும் என்னோட அன்னியாக போறவங்கள பாத்து இப்படி பேச மாட்டீங்க …….
அனந்து இங்க பாரு காமெடிய அந்த அனாதை நாய் இந்த பெரிய வீட்டுக்கு மருமகளாம் , நல்ல காமெடி விஹானா , அந்த அஸ்வதி இந்த பெரிய வீட்டுக்கு எல்லாம் மருமகளா வர தகுதியே இல்ல , வேணும்னா இப்படி பண்ணலாம் உங்க அண்ணன ஒரு ரெண்டு மாசத்துக்கு அவள கால் கேர்ளா வச்சுக்க சொல்லு அதுக்கு தான் அவ சரியா இருப்பா என்று சுலோச்சனா கூறிய மறுநொடி விஹானின் ஐந்து விரல்களும் சுலோச்சனாவின் கழுத்தில் பதிந்திருந்தது ……..
ஆம் விஹான் சுலோச்சனாவின் கழுத்தைப் பிடித்து நெறித்தான்…..
அவனின் அந்த கோபத்தை பார்த்த விஹானா அவன் கைகளை சுலோச்சனா கழுத்தில் இருந்து விடுவிடுக்க பார்த்தாள் ஆனால் அவனின் கைகளை அவளால் அசைக்கக்கூட முடியவில்லை அவனின் கோபம் அத்தனை மூர்க்கமாக இருந்தது……..
சுலோச்சனாவிற்கு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார்…..
ஏய் என்னடி நெனச்சிட்டு இருக்குற உன் மனசுல என்னோட அஸ்வதி என்னோட சாமிடி அவள பாத்து கால் கேர்ள்ன்னு சொல்ற என்ன? என்று அவனின் பிடி இறுக்கமாகி கொண்டே போக சுலோச்சனாவின் கண்கள் மயக்கத்தில் மேலே சொறுக போக……..
விஹானா அஸ்வதியை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்……
விஹான் கைய்ய எடுங்க அய்யோ , விஹான் அவங்களுக்கு மூச்சு விட முடியல கைய எடுங்க விஹான் என்று அவள் அவனின் கைகளை அவர் கழுத்தில் இருந்து எடுக்க போராடிக் கொண்டிருந்தாள்…..
ஆனால் அவனின் பிடி இரும்புப்பிடியாக இருந்தது அவளால் அவனின் கைகளை அசைக்கக்கூட முடியவில்லை……
விஹான் இப்ப நீங்க கோவத்துல இவங்களோட கழுத்து நெறிச்சி கொன்னுட்டீங்கன்னா நீங்க ஜெயிலுக்கு போயிடுவீங்க அப்புறம் நம்ம கனவு கண்ட வாழ்க்கை என்ன ஆகுறது ? தயவு செஞ்சு உங்க கைய அவங்க கழுத்துல இருந்து எடுங்க என்று அஸ்வதி கூறவும் , அவளின் அழுத முகத்தை பார்த்த விஹான் சுலோச்சனா கழுத்தில் இருந்து தன் கையை எடுத்தான்…….
விஹான் சுலோச்சனாவின் கழுத்தில் இருந்து கையை எடுத்து மறுநொடி அஸ்வதி அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்……
ஏன் விஹான் இவ்வளோ கோவம்?என்னாச்சு? என்று அவள் அவனின் முகத்தை துடைத்து விட்டபடியே கேட்டாள்……
அஸ்வதி நீ என்னோட உயிர்டி , எனக்கு என்னோட அப்பா அம்மாவுக்கு பிறகு எல்லாமே நீதான் அப்படிப்பட்ட உன்ன இந்த கேடு கெட்ட பொம்பள என்ன சொன்னா தெரியுமா?
என்ன சொன்னாங்க விஹான்?
உன்ன நா கால் கேர்ளா வச்சிக்கனுமாம்……
விஹான் அவ்வாறு கூறவும் அஸ்வதி விஹானின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டே………
இங்க பாருங்க உங்க ரெண்டு பேருக்கும் இதான் லாஸ்ட் வார்னிங் இனிமே என்ன பத்தி இப்படி தப்பா, அசிங்கமா பேசாதீங்க , இதுக்கு முன்னாடி வேணா எனக்கு யாரும் இல்லாம இருந்துருக்கலாம் ஆனால் இப்போ எனக்காக என்னோட விஹான் இருக்காங்க எனக்காக என்னோட விஹான் என்ன வேணாலும் செய்வாங்க நா சொல்றது புரியுதா என்ன வேணாலும் எனக்காக செய்வாங்க அதனால பார்த்து இருந்துக்கோங்க என்னோட விஹானோட கோவத்துக்கு ஆளாகாதீங்க என்று அஸ்வதி சுலோச்சனா மற்றும் அனந்தியை பார்த்து கோபமாக பேசினாள்……
அஸ்வதியின் இந்த கோபமும் சுலோச்சனா மற்றும் அனந்திக்கு புதிது அவர்கள் இருவரும் அவளை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தார்கள்……..
விஹான் இவங்க மேல கைய வச்சு ஏன் நீங்க உங்க கைய அசிங்கமாக்குறீங்க?இவங்க ரெண்டு பேருக்கும் வாயில எப்பவும் என்ன பாத்து அசிங்கமான வார்த்தைகள் தான் வரும்,இவங்க என்ன பத்தி இனி பேச மாட்டாங்க நீங்க வாங்க என்று அவள் அவனின் கைகளை பிடித்து கொண்டு அவர்களின் அறைக்கு அழைத்து சென்றாள்……..
விஹானுக்கு கோபம் இன்னும் அடங்கவில்லை அது அவனின் சிவந்த விழிகளில் தெரிந்தது……
விஹான்…..
சொல்லு….
என்ன பாருங்க விஹான் என்று அவள் அவனின் முகத்தை திருப்பி தன் முகத்தை பார்க்க வைத்தாள்……
அவனின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தி கொண்டு அவனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தாள் அதில் அவனின் கோபம் சிறிது குறைய தொடங்கியது……
அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்…….
அஸ்வி…..
உன்ன….
அந்த….
என்னால அந்த வார்த்தைய ஏத்துக்க முடியலம்மா…..
நா அந்த சுலோச்சனா கழுத்தை புடிச்சு நெரிச்சத பாத்து நீ என்ன முரடன்னு நினச்சிட்டியோ?
என்று அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு அழும் குரலில் கேட்டான்…….
அவள் அவனின் முகத்தை நிமிர்த்தி அவனின் அழுத கண்களை தன் சட்டையால் துடைத்து விட்டாள்…..
அவனின் முன் தலையில் உள்ள முடிகள் அவனின் கண்களை மறைத்து கொண்டு இருந்தது அதை ஒதுக்கி விட்டு அவனின் தலையை மெதுவாக கோதி விட்டுக் கொண்டே அவனை தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டாள்……
என்னோட செல்ல விஹான் எப்படின்னு எனக்கு ரொம்ப ரொம்ப நல்லாவே தெரியும் அதனால நா உங்கள எப்பவும் தப்பா நினைக்கவே மாட்டேன் என்று அவள் அவனின் தலையை மெதுவாக கோதி விட்டுக் கொண்டே இருந்தாள்……
விஹான் அவளின் இடையை பிடித்தவாறே அவள் மேல் சாய்ந்து கொண்டு இருந்தான்…….
ஆனாலும் என்னோட செல்ல விஹானுக்கு கோவம் கொஞ்சம் அதிகமாதான் வரும் என்று அவள் அவனின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள்……
அவளின் கைகளை பிடித்து அவன் முத்தமிட்டான்…..
நா யாருன்னு எனக்கு காட்டினவ நீ, உன்ன யாராவது தப்பா சொன்னா அவங்கள கொல்ல கூட தயங்க மாட்டேன்……
அவன் அவ்வாறு கூறவும் அஸ்வதி சிரித்து விட்டாள்…….
விஹான் ஒன்னு தெரிஞ்சுக்கோங்க , உங்க கோவத்தால அந்த நேரம் மட்டும் அவங்களை நீங்க எதாவது செய்ய போய் அந்த விஷயமே நம்மள பிரிச்சிட்டா உங்களுக்கு ஓகேவா?
அஸ்வதி அவ்வாறு கேட்கவும் விஹானுக்கு ஒரு நிமிடம் எல்லாம் மறந்து போய் , தன் மனம் கவர்ந்த காதலியை பிரிந்து வாழ்வது போல தோன்ற அவன் அவளை இன்னும் இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டான்……
இல்ல ….
இல்ல….
நா இனி அவங்க ரெண்டு பேரையும் வேற மாதிரி டீல் பண்ணிக்குறேன் என்று அவன் அவளின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்தான்……..
வேற மாதிரின்னா எப்படி??
வெயிட் அண்ட் சீ பேபி , சரி நா இப்படியே உன்மேல சாஞ்சுக்கட்டுமா? ரொம்ப நல்லா இருக்கு……
தாராளமா சாஞ்சுக்கோங்க, என்னோட இதயத்துலயே நீங்க சிம்மாசனம் போட்டு உக்காந்துட்டீங்க , என் நெஞ்சு மேல சாயுறதுக்கா பெர்மிஷன் கேக்குறீங்க என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்……
ஆமா அஸ்வி என்ன நீ , வா , போன்னு கூப்பிடலாமே , ஏன் இன்னும் நீங்க ,வாங்க, போங்கன்னு ரொம்ப ஃபார்மலா பேசிட்டு இருக்க??? என்கிட்ட நார்மலா பேச உனக்கு என்ன தயக்கம்?
நா உங்ககிட்ட மட்டும்தான் ரொம்ப ரொம்ப நார்மலா , நானா இருக்கேன் அதனால உங்க மேல எனக்கு மதிப்பு , மரியாதை நிறைய உண்டு அதனால உங்களை நா இப்படி தான் கூப்பிடுவேன்……..
ஆனா என்ன நீ மரியாதையா கூப்பிட்டா நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல காதல் குறையுமா?
அவனின் அந்த கேள்விகளில் அவள் சிரித்து விட்டாள்……
என்னடி சிரிக்கிற?
நீங்க கேட்ட கேள்விக்கு நா சிரிக்காம வேற என்ன செய்ய? எனக்கு உங்க மேல உள்ள காதல் கூடுமே தவிர ஒரு நாளும் குறையாது , என்ன ஆளுற எஜமான் நீங்க , நீங்க இல்லாம இனி என்னோட வாழ்க்கைய என்னால யோசிச்சு கூட பாக்க முடியாது என்று அவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள்………
அப்பொழுது சரியாக ஹாலில் உள்ள டீவியில் அவர்களின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒலித்தது……
“ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
இணையான இளமானே துணையான இளமானே”…….
அந்த பாடலை கேட்டு இருவரும் சிரித்து விட்டனர்……
அவர்கள் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக இருப்பதை அவர்களின் அறைக்கு வெளியில் இருந்து அனந்தி பார்த்து கொண்டு இருந்தாள்……
அவளுக்கு இருவரையும் பார்க்க பார்க்க கோவம் கோவமாக வந்தது……
அடுத்து நடக்கப் போவது என்ன???
பொறுத்திருந்து பார்ப்போம்……
தொடரும்……
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

