
காதல் – 36
விஹான் அஸ்வதியை திருமணம் செய்து கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று அவன் கண்ட பெரிய பெரிய கனவுகளை தன் மனம் கவர்ந்தவளிடம் கூறி கொண்டு இருந்தான்……
யாருமற்று, கனவுகளற்று , அனாதையாக இருந்தவளை தன்னுடைய பெரிய பெரிய கனவுகளில் சேர்த்த தன் மன்னவனை என்னி அஸ்வதிக்கு தன் காதலனை என்னி சந்தோஷம் தாளவில்லை அவன் அவளின் தோள்களில் கை போட்டவாறு பேசிக்கொண்டே வந்தான் அவளோ அவனின் முகத்தில் மட்டுமே அவளின் பார்வையை பதித்திருந்தாள்……
அவன் கண்களில் தெரிந்த காதலை அவள் பார்த்து பூரித்து போய் விட்டாள்…..
பிறகு ஒரு பெரிய அறைக்குள் அவளை அழைத்து சென்றான்……
அஸ்வி இந்த ரூம் தான் நம்ம ரூம் என்று அவன் அவளை ஒரு அறைக்கு அழைத்து சென்றான் அந்த அறை முன்பு பார்த்த அறை போல் இல்லாமல் மிகவும் பெரிதாக இருந்தது, , அடர் நீல நிற சுவற்றில் வண்ண வண்ண ஓவியங்கள் ,சுவரின் நிறத்திற்கு ஏற்ப அடர் நீல நிற நிறத்தில் ஒளிரும் வண்ண வண்ண விளக்குகளும் , அறைக்கு நடுவில் பெரிய தேக்கு கட்டில் , அடர் நீல நிறத்தில் திரை சீலைகளும் என அந்த அறையே அவளுக்கு பிடித்த அடர் நீல நிறத்தில் ஜொலித்தது…..
இங்க வா என்று அவன் அவளை அந்த அறையில் உள்ள இன்னொரு அறையை திறந்தான் ……
அந்த அறையும் மிகவும் பெரிதாக இருந்தது…….
விஹான் இது என்ன ரூம்?
இது உன்னோட டிரெஸ்ஸிங் ரூம்….
ஏதே டிரெஸ்ஸிங் ரூமா???
என்று அவள் அதிர்ச்சியில் கேட்க…..
ஆமாடா செல்லம், இந்த வார்ட்ரோப்ல நீ நார்மலா வீட்டுக்கு போடுற டிரெஸ்சஸ் இருக்கு , அண்ட் இந்த வார்ட்ரோப்ல நீ காலேஜ்க்கு கட்டிட்டு போற சாரிஸ் இருக்கு அண்ட் இந்த வார்ட்ரோப்ல நீ பங்ஷன்க்கு போடுற டிரஸ் இருக்கு அண்ட் இந்த வார்ட்ரோப்ல நீ பிரகனசி டைம்ல போடுற டிரஸ் எல்லாம் இருக்கு , இந்த வார்ட்ரோப்ல நீ போடுற கோல்ட் ஜுவெல்ஸ் இருக்கு இதுல டைமண்ட் ஜுவெல்ஸ் எல்லாம் இருக்கு , அண்ட் இது நீ டெய்லி போடுற ஸ்லிப்பர்ஸ் இருக்கு என்று அவன் ஒவ்வொன்றாக கூற கூற அஸ்வதிக்கு ஆச்சர்யம் தாளவில்லை எப்படி அவன் ஒருவன் இத்தனையும் தனியாக செய்திருப்பான் என்று……
விஹான் இதெல்லாம் எப்ப ரெடி பண்ணீங்க? என்கூட தானே இருந்தீங்க? இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொன்னீங்க ஆனா இதெல்லாம் எப்படி?
அவளின் கேள்வியில் விஹான் சிரித்துவிட்டான்……
என்ன சிரிக்குறீங்க? பதில் சொல்லுங்க…..
நா நீ வரதுக்கு முன்னால என்னோட தனிமைய போக்கிக்க நெறய பெயின்ட்டிங் பண்ணுவேன் அதுல நா நெறய சாம்பாதிச்சேன் அந்த பணமெல்லாம் அப்போ எனக்கு யூஸ் ஆகல உன்ன பாத்த பிறகு உனக்கு நா நெறய செய்யன்னும்ன்னு கொஞ்சமா இதெல்லாம் வாங்கி வச்சேன் இன்னும் உனக்கு நா நெறய வாங்கனும், அஸ்வி இந்த ரூம் உனக்கு புடிச்சிருக்கா? நா உனக்கு இப்போதைக்கு கொஞ்சமா எல்லாம் வாங்கி வச்சிருக்குறேன் இன்னும் நெறய வாங்கனும்……
விஹான் இது கொஞ்சமா? ஆமா உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா?
ஆமா இது கொஞ்சம் தான் , அதென்ன ஒன்னு? எவ்வளோ வேனாலும் கேளு உனக்கு பதில் சொல்ல தான் நா இருக்கேன்…..
விஹான் நீங்க ஒரு பெயின்ட்டிங்க எவ்வளோ அமௌன்ட்க்கு சேல் பண்ணுவீங்க?
ஒரு பெயின்ட்டிங் குறஞ்சபட்சம் ஒரு என்பது ஆயிரத்துக்கு சேல் ஆகும்…..
ஏதே என்பது ஆயிரத்துகா?
ஆமாடா செல்லம், நா பண்ணுறது அப்ஸ்ட்ரேக்ட் ஆர்ட் (Abstract Art) அண்ட் கன்ட்டம்பொரரி ஆர்ட் (Contemporary Art) அந்த பெயின்ட்டிங் எல்லாம் குறஞ்சபட்சம் ஒரு என்பது ஆயிரத்துல ஸ்டார்ட் ஆகி ரெண்டு மூனு லட்சம் வர சேல் ஆகும் ……
இந்த அப்ஸ்ட்ரேக்ட் ஆர்ட் அண்ட் அதாவது கன்ட்டம்பொரரி ஆர்ட் அப்படின்னா என்ன?
இங்க வா இந்த ஊஞ்சல்ல உக்காரு உனக்கு நா சொல்லுறேன் கன்ட்டம்பொரரி ஆர்ட் அப்படின்னா சித்திரவதை இல்லா ஓவியம், நேரடியாக பொருள் புரியாது ஆனா அதுல கற்பனை, உணர்ச்சி அடிப்படையில வரையப்படுற பெயின்டிங் இந்த பெயின்டிங்க பெரிய பெரிய பணக்காரங்க, ஆர்ட் கலெக்ட்டர்ஸ் அதிகம் வாங்குவாங்க இதோட விலை ஐம்பதாயிரம்ல இருந்து ஐம்பது லட்சம் வர விலை போகும்……
அப்புறம் கன்ட்டம்பொரரி ஆர்ட் அப்படின்னா நவீன கலை ஓவியம் இந்த பெயின்டிங் இந்த காலத்துல உள்ள வாழ்க்கை, சமூக கருத்துகள் அடிப்படையில ஆழமான கருத்து இருக்கும் பெரிய பெரிய கண்காட்சிகளில இந்த பெயின்டிங் முக்கியமா இருக்கும் இந்த பெயின்டிங் விலை ஒரு லட்சத்துல இருந்து கோடிகள் வரை போகும்…..
என்று அவன் அந்த பெயின்ட்டிங் பற்றி அவளிடம் விலக்கி கொண்டு இருந்தான்…….
விஹான் நீங்க எப்படி பெயின்ட்டிங் கத்துக்கிட்டீங்க?
எனக்கு சின்ன வயசுல ரொம்ப ரொம்ப கோவம் வரும், எனக்கு கோவம் வந்துசுன்னா நா என்ன பன்னுவேன்னு எனக்கே தெரியாது அவ்வளோ கோவம் வரும் அந்த கோவத்தை குறைக்க அம்மா என்ன பெயின்ட்டிங் கிளாசுக்கு அனுப்பி வச்சாங்க முதல்ல எனக்கு பெயின்ட்டிங் புடிக்கல அப்புறம் நாள் போக போக எனக்கு பெயின்ட்டிங் ரொம்ப பிடிச்சு போயிடுச்சு அதான் நெறய வரைய ஆரம்பிச்சேன் இப்போ புரொபஷனல் ஆர்டிஸ்ட் ஆகிட்டேன் என்று அவன் அவளை பார்த்து கூறினான்…..
ஆமா உங்க பெயின்ட்டிங்ஸ் எல்லாம் எப்படி ஷோகேஸ் பண்ணுவீங்க?
நா என்னோட பெயின்டிங்ஸ ஆர்ட் கேலரில அதாவது கலைக்கூடம் (Art Gallery ) , சோலோ எக்சிபிஷன் அதாவது தனி கண்காட்சி (Solo Exhibition), இன்டர்நேஷனல் ஆர்ட் ஃபேர் அதாவது சர்வதேச கலை விழா (international Art Fair) அப்புறம் நா ஆன்லைன்ல கூட சேல் பண்ணுவேன்…..
சூப்பர் விஹான் , எனக்கும் பெயின்ட்டிங் பண்ண சொல்லி தருவீங்களா?
இதென்ன கேள்வி நா உனக்கு சொல்லி தரேன்டா செல்லம் என்று அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டே கூறினான்……
விஹான் எனக்குன்னு யாருமே இல்லன்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா இப்போ எனக்கு அம்மாவா அப்பாவா எல்லாமுமா நீங்க என்னோட வாழ்க்கையில வந்தீங்க எனக்கு இத்தன நாள் இருந்த சோகம் எல்லாம் மறஞ்சு போய் சந்தோஷம் மட்டுமே இப்போ என்னோட வாழ்க்கையில நிறஞ்சு இருக்கு இதுக்கு நீங்கதான் காரணம் என்று அவள் அவனின் மார்பினில் சாய்ந்து கொண்டாள்……
இதே நா உன்கிட்ட சொன்னா? என்னோட வாழ்க்கையே இருண்டு போய் இருந்துச்சு , அந்த கேடு கெட்ட மனீஷா செஞ்ச காரியத்துக்கு அப்புறம் என்னோட முகத்தை வெளிய காட்ட கூட அவ்வளோ அசிங்கமா இருக்கும் ஆனா நீதான் எனக்கு அப்படி எல்லாம் ஒன்னும் இல்லன்னு புரிய வச்சி எனக்கு ஒரு புது வாழ்க்கை குடுத்த என்னோட இந்த மாற்றத்துக்கு நீதான் காரணம் என்று அவன் அவளின் உச்சந்தலையில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்…….
அஸ்வதி அவனின் பரந்த மார்பினில் பாந்தமாக பொருந்தி போனாள்……
இருவரும் அந்த பெரிய மர ஊஞ்சலிலே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டே உறங்கி போனார்கள்……..
காலையில் இருவரும் ஒரு சேர கண் விழித்து பார்க்கும்போது இருவரும் ஒன்றாக இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தார்கள் அந்த இறுக்கம் எப்படிபட்ட இறுக்கம் என்றால் அஸ்வதியின் முகத்தில் விழுந்த முடிகளின் தடங்கள் அவனின் மார்பினில் பதிந்திருந்தது , அவனின் கை நரம்புகள் அவளின் கைகளிலும் இடையிலும் பதிந்திருந்தது அதை பார்த்து இருவரும் சிரித்து கொண்டனர் …….
பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து ஃப்ரெஷ் ஆகி விட்டு அவளுக்காக அவன் வாங்கி வைத்த ஆடைகளை அவள் அணிந்து கொண்டு வந்தாள்…..
அவளின் உடை அளவுகள் அனைத்தும் கச்சிதமாக இருந்தது அதை பார்த்து அவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை எப்படி விஹானுக்கு தன்னுடைய உடை அளவுகள் தெரியும் என்று……
விஹான்……
சொல்லுமா…..
என்னோட டிரஸ் சைஸ் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? என்னோட இன்னர்ஸ்ல இருந்து என்னோட டிரஸ் , ஸ்லிப்பர் சைஸ் வரை எல்லாம் ரொம்ப ரொம்ப பர்பெக்டா இருக்கு என்று அவள் அவனை பார்த்து கேட்டாள்……
அவளின் கேள்வியில் விஹான் சிரித்து விட்டான்…….
என்னங்க நா என்ன கேள்வி கேட்டாலும் இப்படி சிரிச்சு சிரிச்சு என்ன மயக்காதீங்க பதில் சொல்லுங்க என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்…….
ஓஹோ நா உன்ன சிரிச்சு சிரிச்சு மயக்குறேனா?
அப்பொழுதுதான் அவள் வாயில் இருந்தே அவள் அவனின் சிரிப்பில் மயங்கி போகிறாள் என்று கூறியதை உணர்ந்தவள் வெக்கத்தில் அவனின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டாள்……..
ஆமா நீங்க சொல்லுங்க எப்படி என்னோட அளவுகள் எல்லாம் உங்களுக்கு தெரியும்?
டெய்லி உன்ன நா என்னோட நெஞ்சுல சாச்சிட்டு தூங்க வைக்குறேன், என்னோட கை வலைவுல தான் எப்பவும் நீ இருக்க உன்னோட அளவு உன்ன விட எனக்கு ரொம்ப நல்லா தெரியும் என்று அவன் அவளை பார்த்து கண் அடித்தான்……..
அவனின் அந்த பதிலில் அஸ்வதிக்கு மீண்டும் மீண்டும் வெக்கம் வர அவள் அவனின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டதை எடுக்கவே இல்லை……
என்னோட செல்ல ரானியே வெக்கப்பட்டது போதும் இப்போ வா உனக்கு நா பிரேக்ஃபாஸ்ட் செஞ்சு தரேன் என்று அவன் அவளை கிச்சனுக்கு அழைத்து சென்றான்……
அந்த கிச்சன் மிகவும் பெரிதாக இருந்தது…..
அந்த கிச்சன் நவீன கால மாடுலர் கிச்சன் போல இருந்தது…..
விஹான் இதுதான் மாடுலர் கிச்சனா ?
ஆமாடா தங்கமே இதுதான் மாடுலர் கிச்சன், என்று அவன் அவளை தூக்கி கிச்சன் மேடையில் அமர வைத்துவிட்டு அவன் காலை உணவாக அவளுக்கு பிடித்த பூரி செய்து கொண்டிருந்தான்…..
விஹான் நீங்க அன்னைக்கு எனக்கு கோதுமை மாவு எப்படி பிசையனும்ன்னு சொல்லி கொடுதீங்கல்ல இப்போ நா மாவு பிசஞ்சு தாரேன் என்று அவள் அவன் கையில் இருந்த கோதுமை மாவு பாக்கெட்டை வாங்கி அவள் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினாள் பிறகு முன்பே காய்ச்சி ஆற வைத்த பாலை மாவில் ஊற்றி பிசையத் தொடங்கினாள், அந்த பால் முழுவதையும் மாவு உறிஞ்சிய பிறகு, மாவு இன்னும் கெட்டியாக இருந்தது அதனால் இன்னும் சிறிது சிறிதாகத் பாலை தெளித்துப் பிசைந்து கொண்டு இருந்தாள் , பிறகு மாவு கைகளில் ஒட்டாதவாறு நன்கு அழுத்தம் கொடுத்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை பிசைந்து கொண்டே இருந்தாள் அவளால் நீண்ட நேரம் மாவு பிசைய முடியவில்லை அவளின் இரு தோள்பட்டைகளும் வலி எடுக்க ஆரம்பித்தது அவள் கஷ்டப்படுவதை பார்த்த விஹான் அவளின் பின்னால் இருந்து அவளின் கை பிடித்து அவளுக்கு மாவு பிசைய உதவி செய்து கொண்டு இருந்தான் ……..
அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் கழுத்தை பட்டு பட்டு போகவும் அவளுக்கு நானம் மேலிட அவளின் முதுகுத்தண்டு கூச அவர்கள் இருவரும் காதலாக இணைந்து ஒன்றாக சமைத்து கொண்டு இருந்தார்கள்……
அவர்களின் காதல் காட்சிகள் தொடருமா???
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
❄️💕💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

