Loading

காதல் – 35

 

அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் சந்தோஷமாக தங்களின் காதல் உலகில் மிதந்து கொண்டிருந்தனர் அப்பொழுது விஹானின் பெற்றோர் மற்றும் தங்கை மருத்துவமனையில் இருந்து வந்துவிட அசதியாக வந்தவர்களுக்கு அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் இணைந்து சாப்பாடு சமைத்துக் கொடுத்தனர் பிறகு அஸ்வதி விஹானாவிடம் தனது தாய் மற்றும் தமக்கையை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது சரியாக விஹான் வந்துவிட அவன் அவளின் அம்மா மற்றும் தங்கையை பற்றி விசாரிப்பதை பார்த்து கோபமாக இருக்கிறான்……..

 

அஸ்வதி இப்போ எதுக்கு அவங்கள பத்தி நீ விசாரிச்சிட்டு இருக்குற?

 

அது ….

வந்து….

அது…..

அது…

நா….

 

அஸ்வதிக்கு விஹானின் கோபமுகத்தை பார்த்து பேச்சு வரவில்லை……

 

விஹான் கோபத்தில் அஸ்வதியின் கைகளை பிடித்துக் வேகமாக வெளியில் இழுத்து கொண்டு சென்றான்…….

 

அஸ்வதியை காரில் அமர வைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு வேகமாக எங்கோ அவளை அழைத்து சென்றான்……

 

விஹானின் முகம் கோபத்தில் செந்தனலாக சிவந்து போய் இருந்தது……

 

அவனின் கோபத்தை காரில் காட்டி கொண்டு இருந்தான், அதன் உபயத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது……

 

அஸ்வதிக்கு அவனின் கோப முகத்தைப் பார்த்து பயம் வந்தது…..

 

அவர்கள் இருவரும் செல்லும் வழியில் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை எப்பொழுதும் அவளிடம் காதலாகவும் , காமெடியாகவும் பேசிக்கொண்டு வரும் விஹானின் கோபமுகத்தையும், அவனின் அதீத அமைதியையும்  அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை……

 

விஹான் நா எதும் தப்பு செஞ்சிருந்தா என்ன கோவத்துல ரெண்டு அடி கூட அடிச்சிடுங்க ஆனா இப்படி என்கிட்ட பேசாம அமைதியா வராதீங்க என்னால தாங்கிக்க முடியல என்று அஸ்வதி விஹானின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள்……

 

தன்னவளின் அழுகையை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,  காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவன் அவளின் அழுத முகத்தை நிமிர்த்தி அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்……

 

அஸ்விம்மா……

 

ம்ம்ம்ம்ம்ம்…….

 

அழாதடா செல்லம்…..

 

நான் விஹானா கிட்ட அவங்கள பத்தி விசாரிச்சது தப்புதான் அதுக்கு நீங்க எனக்கு தண்டனையா என்ன வேணாலும் குடுங்க நா செய்றேன் ஆனா எங்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க என்னால தாங்கிக்க முடியல என்று அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க அவன் அவளின் இதழில்  தன் இதழை பொருத்தி அவளின் அழுகையை நிறுத்தினான்…..

 

அந்த இதழ் முத்தம் நீண்டு கொண்டே இருந்தது……..

 

அவளின் கண்ணீர் காற்றில் காய்ந்து போய் விட்டது , அவளின் ஒப்பனை இல்லா முகத்தில் அவனின் மாயாஜாலத்தால் ரோஜா பூ போல அவளின் முகம் மாறியது…..

 

இந்த முறை அவர்களின் முதல் நீண்ட முத்தம் நீண்ட நேரம் நீண்டு கொண்டே இருந்தது விஹான் அஸ்வதியை அவள் அமர்ந்திருந்த சீட்டிலிருந்து தூக்கி அவனின் மடியில் அமர வைத்து விட்டு அவளின் இதழை இன்னும் வன்மையாக சிறை பிடித்தான் அதில் அஸ்வதியின் இதழ்கள் ரத்த சிவப்பாக மாறியது…….

 

அஸ்வதி இந்த முறை கண்களை மூடாமல் அவனின் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள்……

 

அவனின் கோபத்தை அவளின் இதழில் அவன் போக்கிக் கொண்டிருந்தான்…..

 

அஸ்வதிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க விஹான் அவளை தன்னுடைய இதழ் சிறையில் இருந்து விடுவித்தான்……

 

அஸ்வதி விஹானின் மார்பினில் சாய்ந்து கொண்டாள்……

 

என்ன இப்போ கோவம் போச்சா???    என்று அவள் அவனின் சட்டை பட்டன்களை திருகியவாறே கேட்டாள்…..

 

இல்ல இன்னும் இருக்கு என்று அவன் சிறிது கோப குரலில் கூறவும் அஸ்வதி அவனின் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி கொண்டாள்…..

 

உங்களுக்கு கோபம் போக என்ன பண்ணனும்ன்னு தோனுதோ அதை தாராளமா பண்ணிக்கோங்க என்று அவள் அவனின் முகம் முழுவதும் முத்தங்களால் நிறப்பினாள்……

 

அவளின் இந்த திடீர்  செய்கையை எதிர்பாராத விஹான் ஸ்தம்பித்து போய் இருந்தான்……

 

பிறகு அவள் அவனின் இதழில் தன்னுடைய இதழை பதித்தாள்…..

 

அவனின் வன்மையான முத்தத்திற்கு பதிலாக அவள் அவனுக்கு  மென்மையான இதழ் முத்தத்தை கொடுத்தாள் அதில் அவனின் கோபம் சென்ற இடம் தெரியாமல் போனது…..

 

பிறகு அஸ்வதி முகத்தை விஹான் நிமிர்த்தி பார்த்தான் அந்த முகத்தில் சோகமும் காதலும் ஒன்று சேர இருந்தது…….

 

அஸ்வதி ஏன் சோகமா இருக்குற?            உன் மேல  நா கோபப்பட்டதுனாலவா?

 

எனக்கு நீங்க என் மேல கோபப்பட்டதுனால எனக்கு ஒரு வருத்தமும் இல்லை ஆனால் நீங்க என்கிட்ட பேசாம வந்ததுதான் என்னால தாங்கிக்க முடியல அதனால இனிமே நா என்ன தப்பு செஞ்சாலும்  எனக்கு என்ன தண்டனை வேணாலும் குடுங்க ஆனா தயவு செஞ்சு என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க என்னால தாங்கிக்க முடியல என்று அஸ்வதி அவனின் மார்பினில் சாய்ந்து கொண்டு அழுதாள்…….

 

சரி இனிமே நீ தப்பு செஞ்சா இதுக்கு முன்னால நா உனக்கு  ஒரு தண்டனை கொடுத்தேன்ல்ல அதுதான் இனிமே சரியா???

 

அப்படின்னா நா அடிக்கடி தப்பு செய்வேனே என்று அஸ்வதி அவனைப் பார்த்து கண்ணடித்தாள்……

 

கள்ளி ,   கள்ளி என்று அவன் அவளை இறுக்கமாக அனைத்து கொண்டான்…..

 

“தவறு செய்தால்…

முத்தம் தந்து என்னை திருத்திக்கணும்…

தண்டனை சரியா…

எப்பொழுதெல்லாம்…

தவறு செய்வாய் சொல்லிவிடுடி…

சொல்லுகிறேன்…

இப்பொதொரு முத்தம் குடுடி”….

 

விஹான் அஸ்வதியை இறுக்கமாக கட்டி அணைக்கும் பொழுது தெரியாமல்  காரில் உள்ள ஸ்பீக்கரின் மேல் அஸ்வதி இடித்து  விட்டதால் அவர்களின் மோன நிலைக்கு ஏற்ப பாடலும் ஒலித்தது…..

 

அஸ்வதி நீ ஏன் உன்னோட அம்மா ச்சை…..    அந்த கேடு கெட்ட சுலோச்சனா பத்தியும் அனந்தி பத்தியும் விஹானா கிட்ட விசாரிச்சிட்டு இருந்த? நா தான் அப்பவே சொன்னேன்ல அவங்கள  பத்தி நீ நினைக்காதன்னு ஏன் உனக்கு இன்னும் புரியல?

 

விஹான் அவங்களோட  கால் அவ்ளோ பயங்கரமா வெந்து போய் இருந்துச்சு அதான் விஹானா கிட்ட அவங்க எப்படி இருக்காங்கன்னு விசாரிச்சேன்,  அப்படி நா  விசாரிச்சது உங்களுக்கு பிடிக்கலைன்னா இனிமே நா அவங்கள பத்தி விசாரிக்க மாட்டேன் சரியா…. இப்போ என்னோட செல்ல விஹான் என்ன எங்கையாவது தூரமா கூட்டிட்டு போவாங்களாம் என்று அஸ்வதி அவனின் மடியில் அமர்ந்து கொண்டு அவனை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டாள்…….

 

அவளின் இறுக்கமான அனைப்பில்  விஹானின் மொத்த கோபமும் போய் அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டே காரை ஓட்டி சென்றான்…….

 

விஹானின் கார் ஒரு பெரிய பங்களாவின் முன்பு போய் நின்றது……

 

அஸ்வதி  அந்த பிரம்மாண்டமான பங்களாவை பார்த்து வியந்து போய் நின்றாள்……..

 

விஹான் இது யாரோட பங்களா? இவ்ளோ பெருசா இருக்குது……

 

உள்ள வா சொல்றேன் என்று விஹான்  அஸ்வதியை அந்த பிரம்மாண்டமான பங்களாவிற்குள் அழைத்து சென்றான்….

 

அந்த பங்களா வெளியில் தெரிந்தது போலவே உள்ளேயும் அத்தனை பெரிதாகவும் அழகாகவும் இருந்தது…..

 

விஹான் இது யாரோட பங்களா? நம்ம எதுக்கு இங்க வந்திருக்கிறோம்?

 

பொறுடி செல்லமே என்று அவன் அவளை அந்த பங்களாவில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் அழைத்து சென்றான்…….

 

அந்த அறைகள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது …..

மின்னும் திரைசீலைகளும், ஒளிரும் வண்ண வண்ண விளக்குகளும் , ஐந்து பேர் சேர்ந்து படுத்தாலும் இன்னும் இடம் இருக்கும் பெரிய தேக்கு மெத்தை கட்டிலும் என்று அந்த பங்களாவில் உள்ள அறைகள் மிகவும் அழகாக இருந்தது……

 

அஸ்வதி நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு  என்னோட இந்த பெரிய பங்களாவுல தான் நம்ம ரிடயர்டு ஆன பிறகு வாழ போறோம்…….

 

விஹான் அப்போ பீவி அம்மா, சித்திக் அப்பா , விஹான்னா எல்லாரும் நம்ம கூட  இங்க வருவாங்க தானே?

 

அவளின் அந்த கேள்வியில் விஹான் சிரித்து விட்டான்……

 

ஏன் சிரிக்கிறீங்க விஹான்?

 

அஸ்வதி இந்த பங்களா நம்மளோட “சித்பீ டூரிசமோட” விஐபி ஷூட்ஸ் இந்த பங்களாவுல தான் இந்த உலகத்தில் உள்ள முக்கியமான விஐபி தங்குற இடம் சோ நம்ம ரெண்டு பேரும் ரிடயர்டு ஆன பிறகு இந்த பங்களா போல நாலு பங்களா அண்ட் பத்து ரிசார்ட் நம்ம தான் மேனேஜ் பண்ணனும்…..

 

ஏன் அப்படி?    சித்திக் அப்பா தானே சித்பீ டூரிசமோட ஓனர்?

 

ஆமா தங்கமே அப்பாதான் ஓனர் ஆனா அப்பா நானும் விஹான்னாவும் காலேஜ் படிச்சிட்டு இருக்குற சமயத்துலயே எனக்கும் அவளுக்கும் அவரோட பாதி பாதி ஷேர்ஸ் எல்லாம் பிரிச்சி குடுத்துட்டாரு அப்போ எனக்கு இந்த பொறுப்பெல்லம் புடிக்கல ஆனா இப்போ அப்பாவுக்கு வயசு ஆகுது அப்பாவும் அம்மாவும் கஷ்டபட்டு எழுப்பின சாம்ராஜ்ஜியம் இந்த சித்பீ டூரிசம் அதை நா நல்லா பாத்துக்கனும்ன்னு நினைக்குறேன் எனக்கு நீ ஹெல்ப் பன்னுவியா?

 

கண்டிப்பா நா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்,  நா உங்களுக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாரு  ஹெல்ப் பண்ணுவா? என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்……

 

அஸ்வி இந்த பங்களா எனக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ் டூ ஹார்ட்……

 

ஏன் அப்படி?

 

ஏன்னா நா சோகமா இருந்தா இங்க ஓடி வந்துருவேன், இந்த பங்களா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி இங்க வந்தா என்னோட சோகம் குறஞ்சிடும் ஆனா இப்போ கொஞ்ச நாளா நா இங்க வர்ரது இல்ல……

 

ஏன் வரல?

 

அதான் என்னோட வாழ்க்கையில சந்தோஷ கடலா நீ இருக்கியே அப்புறம் எதுக்கு நா இங்க வரனும் என்று அவன் அவளை கட்டி அணைத்து கொண்டான்…..

 

ஓஹோ அப்படி என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்……

 

அஸ்வி இந்த பேலஸ்ல தான் நமக்கு கல்யாணம் நடக்கும் , இதோ இந்த பெரிய ஹால்ல வச்சிதான் நமக்கு என்கேஜ்மென்ட் நடக்கும் அண்ட் இந்த மணமேடைல வச்சி தான் நா உனக்கு தாலி கட்டுவேன் அப்புறம் இந்த ஹால்ல வச்சி தான் நம்ம ரெண்டு பேரும் நிகாஹ் நாமா (Nikahnama) சைன் பண்ணுவோம் அண்ட் இந்த கார்டன்ல தான் நீ பிரகனன்ட் ஆன பிறகு நா உன்ன வாக்கிங் கூட்டிட்டு போவேன் , நம்ம குழந்தைங்க இந்த பார்க்ல தான் விளையாடுவாங்க அப்புறம் இந்த இடம் எனக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரைட் ஏன்னா இங்க நெறய கலர் பூக்கள் இருக்கும் இங்க உக்காந்தா மனசுக்கு நல்லா இருக்கும் உனக்கும் இந்த இடம் ரொம்ப புடிக்கும் என்று அவன் அவளின் தோள்களில் கை போட்டவாறு அவன் அவளுடன் சேர்ந்து எதிர்காலத்தில் கழிக்க போகும் சந்தோஷமான தருனங்களை ஒவ்வொன்றாக கூறி கொண்டு வந்தான்……..

 

அவன் கண்களில்  தெரிந்த அவளுக்கான  காதலை பார்த்து அவள் சந்தோஷத்தில் மிதந்தாள்…..

 

காதல் காட்சிகள் நன்றாகத்தான் போய் கொண்டு இருக்கிறது ஆனால் இதே நிலை தொடருமா??

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்