Loading

அத்தியாயம் – 2

சுஜிதா, “நிலா எங்க இருக்க?“ என்று குரல் கொடுத்த படி நிலாவின் அறையை நோக்கி விரைந்து ஓடினாள். 

வழியில் ஜெயலட்சுமி சுஜிதாவை நிறுத்தி “ஒரு வயசு பொண்ணு மாதிரி நடந்துக்கோ. இங்க வயசு பசங்க எல்லாம் இருக்கிறாங்க“ என்று சக்தியை கைகாட்டி கூறினார். 

சுஜிதா, ‘ஆமாம், இங்க இருப்பவனுங்க எல்லாரும் ரொம்ப நல்லவனுங்க நான் மெதுவா நடந்தால் மட்டும் என்னை பார்க்காமல் விட்ற போறாங்களா. எந்த பொண்ணுங்க போனாலும் மேலேயும் ,கீழேயும் பார்க்கிறது தான் இவனுங்க வேலையே’ என்று ச்ச்சீசீ…. என்னும் படி அலுத்துக் கொண்டாள்.

ஜெயலட்சுமி, “புரிந்ததா இனிமே மெதுவா போ“ என்று சிடு சிடுப்பாக கூறிவிட்டு சென்று விட்டார். சுஜிதா, ஜெயலட்சுமி கூறிய எதையும் ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல் நிலாவின் அறையை நோக்கி சென்றார்.

நிலா அறை கதவு திறந்து இருப்பதை கண்ட சுஜிதா, “நிலா எவ்வளவு நேரம் நான் கூப்பிட்டுக் கிட்டு இருக்கிறேன் நீ பாட்டுக்கு இப்படி அமைதியா இருக்கிற. ஒரு குரல் கொடுத்தால் என்ன குறைந்தா போயிடுவ” என்று கத்தியபடி வாசலின் நுழைவாயுலில் காலை எடுத்து வைக்க அங்கு நிலாவின் நிலையை கண்டு பதறி விட்டாள். 

சுஜிதா, “ஏய் நிலா என்ன டி ஆச்சு உனக்கு? எழுந்திரு” என்று பக்கத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து நிலாவின் முகத்தில் தெளித்து “நிலா எழுந்திரு நிலா” என்று கன்னத்தில் தட்டிக் கொண்டே இருந்தாள். 

நிலா, மெதுவாக கண்களை சிமிட்டி சிமிட்டி திறக்க அங்கு சுஜியை பார்த்தவுடன் “சுஜி” என்று கட்டியணைத்து அழ ஆரம்பித்து விட்டாள் .

சுஜிதா, “நிலா என்ன டி ஆச்சு உனக்கு? என்ன தான் ஆச்சு சொல்லு? ஏன் அழற? என்ன ஆச்சு? யாரு உன்னை என்ன பண்ணாங்க சொல்லு?” என்றாள்.

நிலா கைகள் எல்லாம் நடுக்கம் கண்டது. ஆனால், வார்த்தைகள் மட்டும் எழ மறுத்தது.

“நிலாக்கு என்ன ஆச்சுன்னு நான் சொல்லவா?” என்று பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்க சுஜிதா சட்டென்று  திரும்பி பார்த்தாள். அங்கு சக்தி கை கட்டியபடி உள்ளே நுழைந்தான்.

சக்தியை கண்டவுடன் நிலாவுக்கு மேலும் பதட்டம் தொற்றிக் கொண்டது. உடல் முழுக்க வியர்க்க துவங்கியது. 

சுஜிதா நிலாவை கட்டி அணைத்து, “ஒன்றும் இல்ல பயப்படாத டி. நான் இருக்கிறேன் உன் கூட பயப்படாத” என்று ஆறுதல் கூறினாள். 

     

சுஜிதா, “டேய் என்ன டா பண்ண இவளை? மரியாதையா சொல்லிடு இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று மிரட்டினார். 

சக்தி, “கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கியா. ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்க. உன் பிரண்டுக்கு என்ன ஆச்சுன்னு தெரியனுமா? வேண்டாமா?” என்று கூலாக கூறிவிட்டு நாற்காலியில் கால் மேல் கால் இட்டபடி அமர்ந்தான்.

சக்தி, “என்ன நிலா குட்டி ரொம்ப பயந்துட்டியா. மாமன் மேல் பயம் இருக்கிறதும் நல்லதுக்கு தான்” என்று நக்கலாக சிரித்து கொண்டே “ரொம்ப பயப்படாத நிலா குட்டி நான் உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்”.

“ஏனென்றால், நீ எனக்கு முழுசா வேணும். நான் சொன்னது எல்லாம் உன் நினைவில் இருக்கட்டும் உன்னை கட்டிக்க போகிறது நான் தான் வேறு யாரும் இல்ல”. 

“புரிந்ததா ஒழுங்கா நா சொல்ற படி இந்த கல்யாணத்தில் எந்த ஒரு தடங்கலும் பண்ணாமல் மண மேடையில் வந்து நீ உட்காரனும் நடுவில் வேறு ஏதாச்சும் பண்ணலாம் இங்கிருந்து தப்பித்து போகலாம்னு நெனைச்ச”. 

“இப்போ நான் வெறும் தண்ணியை தான் ஊற்றினேன் அப்புறம் நிஜமாகவே ஆசிட் ஊத்திடுவேன் முகத்தில் நினைவில் வச்சுக்கோ“ என்று மிரட்டும் தோணியில் “சீக்கிரமா பொண்ணு பாக்குற சடங்குக்கு தயாராகு உன்னை பெண் பார்க்க வந்தவன் என்னமோ இந்த வீட்டு வேலைக்காரனாக இருக்கலாம்”. 

“ஆனால், உன்னை கட்டிக்க போகிறது நான்தான்” என்று காலரை தூக்கிவிட்டு பந்தாவாக எதையோ சாதித்த படி மனதிற்குள் திமிராக அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

சக்தி சென்றதை உறுதி செய்து கொண்ட நிலா சுஜியை பார்த்து மேலும் இறுக்கி அணைத்து அழ ஆரம்பித்தாள். 

சுஜிதா, “என்ன டி நடக்குது இங்க. அவன் என்ன ஊற்றினான்? உன் முகத்தில். நீ பாட்டுக்கு இப்படி அழுதுகிட்டே இருக்க” என்றாள் பதட்டமாக. 

நிலா, “காலையில் நான் கிளம்பி கொண்டு இருந்தேன். அப்போ சக்தி வந்து… என்று ஆரம்பித்தவள் நடந்த அனைத்தையும் சுஜிதாவிடம் ஒப்பித்தாள். 

வாயில் கையை வைத்த படி சுஜிதா, “என்ன டி சொல்ற?. உன் வாழ்க்கை ஏன் டி இப்படி இருக்கு” என்று அவளும் வருந்தினாள். இதை எவ்வாறு கையாள்வது என்று இருவருக்கும் தெரியவில்லை.  

சுஜிதா, “நாம் ஏதாவது செய்து இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம். நீ எதுக்கும் பயப்படாத” என்று உறுதியாக கூறினாள்.

கண்ணம்மா, “நிலா ரெடி ஆகிட்டியா மா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. ஜெயா அம்மா உன்ன காப்பி, தண்ணி எடுத்துட்டு வர சொன்னாங்க“ என்று நிலாவை அழைத்து சென்றார்.

அனைவரின் முன்பும் நிலா மனம் இல்லாமல் கையில் காப்பி கோப்பைகளுடன் வந்து நின்றாள்.

    

ஜெயலட்சுமி, “அவன் தான் நீ கட்டிக்க போறவன் பெயர் விக்ரம் போ போய் காபி கொடு” என்றார். நிலா குனிந்த தலை நிமிராமல் நேராக சென்று அவனிடம் காபி கோப்பையை நீட்டினாள்.

நிமிர்ந்து முகத்தை கூட பார்க்காமல் நின்றிருக்கும் நிலாவை பார்த்த விக்ரம் காஃபி கோப்பையை கையில் எடுக்க மறந்து அவளையே வைத்த கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான். 

பாவாடை தாவணியில் நீண்ட கூந்தலுடன், முட்டை கண்களும், மிதமான ஒப்பனைகளுடன் அவள் அழகை மேலும் அழகூட்டியது”.

அதை கவனித்த சக்தி விக்ரமை முறைத்துக் கொண்டே, “எனக்கு தான் முதல் காப்பி” என்று முன்வந்தவன் காபி கோப்பையை எடுப்பது போல் நைசாக கை நழுவி டம்ளர் தவறியது போல் விக்ரம் மேல் காஃபியை ஊற்றினான். 

சக்தி, “நிலா காது அருகில் சென்று உன்னை யாராவது பார்த்தால் கூட நான் சும்மா விட மாட்டேன்“ என்று நிலாவுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கூறினான். 

அனைவர் முன்பும் சக்தி, “நிலா குட்டி பார்க்க ரொம்ப அழகா இருக்கியே” என்று யாரும் பார்க்காத வண்ணம் அவளைப் பார்த்து கண் அடித்து சிரித்தான். அதில் நிலா பதட்டமாகி கடகடவென சென்று சுஜிதா அருகில் சென்று நின்று கொண்டாள்.

ஜெயலட்சுமி, “என்ன விக்ரம் குடும்பத்தினர் எல்லாரையும் அழைச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு இப்போ ஏதோ ஒரு பையனை மட்டும் கூட்டிட்டு வந்து இருக்கியே?“ என்று கேள்வி எழுப்பினார். 

விக்ரம், “இவன் என்னோட ஒரே தம்பி” என்று அறிமுகம் செய்தவன் “எனக்கு வேறு யாரும் கிடையாதுங்க இவன் தான் என்னுடைய உலகமே” என்று கூறி பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டான் . 

ஜெயலட்சுமி, “சரிப்பா நீ இப்போத்தில் இருந்து வேலையில் சேர்ந்துக்குறியா? இல்ல நாளையில் இருந்து சேர்ந்துக்குறியா?” என்றார். 

விக்ரம், “இப்போ இருந்தே சேர்ந்துக்கிறேன் மேடம்” என்று ஒப்புக்கொண்டு தன் தம்பியிடம் “நீ வீட்டுக்கு போ நான் வேலை முடிச்சுட்டு நைட்டு வந்திடுறேன்” என்று கூறி அனுப்பி வைத்தான். 

சக்தி தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரமை சொடக்கிட்டு அழைத்து, “நீ கொஞ்சம் பாக்குற மாதிரி தான் இருக்கிற அதுக்காக உனக்கு என்னோட நிலா குட்டியை தூக்கி கொடுத்திட முடியாது” என்று முறைத்துக் கொண்டு கோபமாக கூறினான். 

விக்ரம், “ஜெயா மேடம் தான் எனக்கு வேலை கொடுத்து என் கேரக்டர் நல்லா இருக்குன்னு சொல்லி நிலாவை கட்டிக்க சொன்னாங்க”. 

“இங்கேயே முழுசா வேலை பார்த்துக்கிட்டு நிலாவையும் கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. எனக்கு இருக்க குடும்ப கஷ்டத்துக்கு நான் வேலைக்கு ஒத்துக்கிட்டேன் எனக்குன்னு குடும்பம் எதுவும் இல்லை”.

“அதனால் தான் ஜெயா மேடம் சொன்னவுடன் நல்ல குடும்ப பொண்ணா இருக்குன்னு நானும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் இதில் என்ன தப்பு இருக்கு” என்றான்.

சக்தி, “இந்த கதையெல்லாம் எனக்கு தேவை இல்லை. நிலா என்னோட சொத்து நான் அவளை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் . எங்க அக்கா உன்னை நிலாவுக்கு கட்டி வைக்கணும்னு ஆசைப்பட்டது எல்லாம் அவ சொத்துக்காக மட்டும் தான்”.

“எனக்கு தெரியும் நிலா அழகைப் பார்த்து நீயும் கொஞ்சம் ஆசை பட்டு இருக்கலாம். ஆனா, நிலா கழுத்தில் தாலி கட்ட போறது நான் மட்டும் தான்”.

“அதை யாராலும் மாற்ற முடியாத உண்மை. என்னோட அக்காவை பொறுத்த வரைக்கும் உனக்கும் நிலாவுக்கும் கல்யாண ஏற்பாடு எல்லாம் நடக்கும்”. 

“ஆனால், கடைசி நிமிஷத்தில் நான் வந்து மணமேடையில் நின்றவுடன் நீ எழுந்து இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லைன்னு சொல்லன்னும் இல்லன்னா உனக்கு இருக்கும் ஒரே தம்பியை இந்த உலகத்தை விட்டே அனுப்பிடுவேன்”. 

“நான் தான் நிலாவுக்கு தாலி கட்டுவேன் என்னோட செல்வாக்கு உனக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறேன் என்னை மீறி நீ ஏதாச்சும் பண்ணலாம்னு நினைச்ச உன்னை சாவடிக்கவும் தயங்க மாட்டேன்” என்று மிரட்டும் தோணையில் கூறி சென்று விட்டான்.

விக்ரம் ஏதோ இவன் புரியாத பாஷையில் பேசியது போல் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அவனைப் பார்த்து விட்டு அவன் வேலையை மேலும் தொடர்ந்தான்.

சுஜிதா நிலாவை பார்த்து, “நீ எதுக்கும் கவலை படாத நான் என் அப்பா கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு ட்ரை பண்றேன். உன்ன இங்க இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியூருக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று முடிந்தவரை தைரியமும் வாக்கும் கொடுத்து சென்றாள். 

நிலா வேறு வழியின்றி சரி எனும் படி தலை அசைத்தாள். ஜெயலட்சுமி கம்பீரமாக அந்த வீட்டின் சோஃபாவில் கால் மேல் கால் இட்டு அமர்ந்து இருக்க. 

சக்தி மெல்லமாக அவர் எதிரில் வந்து அமர்ந்தான், “அக்கா நான் சொல்லிட்டே இருக்கிறேன். ஆனாலும், நீ என் பேச்சை கேட்காமல் நிலாக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து இருக்க”. 

“ஏன் எனக்கு கட்டிக் கொடுத்தால் என்ன? அந்த சொத்து மொத்தமும் எனக்கு தானே வரப்போகுது.  நாம் எல்லாம் ஒரே குடும்பமாக இருக்கலாம் இல்ல“ என்று நல்லவன் போல் கேட்டுக் கொண்டான். 

ஆனால், ஜெயலக்ஷ்மி இவனுக்கே அக்காவாயிற்றே சிரித்தபடி, “உனக்கு நிலாவை கட்டிக் கொடுத்தால் நீ எனக்கு சொத்து கொடுப்பியா?”. 

“அது எத்தனை சொத்து எங்கே இருக்கு ஏதாச்சும் ஒரு கணக்கு வழக்கு தெரியுமா டா உனக்கு… இல்ல நீ பள்ளிக்கூடம் தான் போய் படிச்சி இருக்கியா நாலு வார்த்தை சேர்த்து கூட்டி படிக்க தெரியாது நீ சொத்துக்கு அதிபதி ஆகலாம்னு கனவு கண்டுகிட்டு இருக்கியா” என்று தன் தம்பியை மட்டம் தட்டி சிரித்தாள். 

சக்தி சிறு வயது முதல் தன் அக்காவை மீரி ஒரு விஷயம் கூட செய்ய மாட்டான். சக்தியை தனக்கு கீழே வைத்து கொள்வதற்காக ஜெயலட்சுமி அவனை பள்ளிக்கூடம், நண்பர்கள் என்று அதிகம் பழகவிடாமல் கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் அடியாள் மூலமாக கற்றுக் கொடுத்திருந்தாள். 

சக்திக்கு சிறுவயது முதல் நிலா மேல் அதிகம் ஈர்ப்பு உள்ளது. ஆனால், தன் அக்காவின் வாக்கே தெய்வ வாக்காக இருப்பவன் முதல் முறையாக நிலாவை கட்டிக் கொள்ள ஆசைப்பட்டு எதிர்த்து நிற்கிறான்.

சக்தி கப்பல் கவிழ்ந்தது போல் சோகமான முகத்தை வைத்துக் கொண்டு தன் அடியாட்கள் தோழனுடன் மொட்டை மாடியில் பீர் குடித்துக் கொண்டு நின்றிருந்தான். 

சக்தி போதையில், “டேய் மச்சான் அக்கா கிட்ட என்ன சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று எனக்கு தெரியல டா” என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.

கீழே நிலா மற்றும் சுஜிதா வாசலில் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த சக்தி, “நிலா இல்லாம என்னால் இருக்கவே முடியாது டா மச்சான்”. 

“எனக்கு இப்பவே நிலாவை கட்டி பிடிக்கனும் போல் இருக்கு” என்று கடகடவென படியில் இறங்கி கீழே சென்றவன் அவள் முதுகு பக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. சக்தி நிலாவா ?? இல்ல விக்ரம் நிலாவா ?? 😳😳😳😳😳

    1. Author

      😵‍💫 அதான் தெரியலை சிஸ்

  2. சகி என்னாச்சு. ஏன் இந்த கதையோட அடுத்தடுத்த அத்தியாயங்களை காணோம். சீரிஸ் லயும் மற்ற அத்தியாயங்களை காணோம்

    1. Author

      சாரி சகோ, கொஞ்சம் ப்ராப்ளம் ஆகிடுச்சு…. அதான் ரிமூவ் பண்ணிட்டு அகைன் போட்டுட்டு இருக்கேன்.