
பாகம் – 13
ராஜலட்சுமி, “என் பக்கத்தில் வந்து உட்காருமா” என்றார் பாசமாக. நிலா சிறு தயக்கத்துடன் பார்த்தாள்.
ராஜலட்சுமி, “ஏன் இப்படி பாக்குற. என்னை உன் அம்மா மாதிரி நினைச்சுக்கோ வந்து இங்க உட்காருமா” என்றார்.
நிலா அம்மா மாதிரி என்ற வார்த்தையில் கண்கள் கலங்க ஆரம்பித்தது. ஆனால் அனைவ அறியும் முன்பே கண்ணீரை உள் இழுத்து தன்னை சமன் செய்து கொண்டாள்.
ஆனால், அதை ராஜேந்திரன் மட்டும் கவனித்து விட்டார், “ஏன் கண்கள் கலங்குது உங்க அம்மா வுக்கு பிடிக்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டியா அதை நினைத்து கவலை படுறியா“ என்றார்.
நிலா இல்லை என்று தலையசைத்து விட்டு, “எனக்கு சின்ன வயசுல இருந்தே அம்மா இல்லை“ என்றாள். ராஜலட்சுமி கவலையாக, “சரி நீ கவலைப்படாதே. இன்னையில் இருந்து நான் தான் உனக்கு அம்மா மாதிரி புரிஞ்சுதா”.
“என்னை நீ அத்தைன்னு கூப்பிட்டாலும் எனக்கு சம்மதம் தான் அம்மான்னு கூப்பிட்டாலும் சம்மதம் தான்“ என்றார் இன் முகமாக.
ராதிகா, “ஆமா ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத அப்படியே நின்னுட்டு போய் உட்கார் போ” என்றாள் சிடு சிடுப்பாக.
நிலா மெதுவாக வந்து ராஜலட்சுமி பக்கத்தில் அமர்ந்தாள். ராஜலட்சுமி, “நீயும் விக்ரமும் எவ்வளவு வருஷமா காதலிக்கிறீங்க?” என்று கேள்வி எழுப்பினார்.
ராதிகா, “ஆமாம் சொல்லு கல்லு மாதிரி இருந்தவனை எப்படி நீ வளச்சு போட்ட எல்லாம் பணத்துக்காக தானே?” என்றார்.
அந்த நேரம் சரியாக விக்ரம் மாடிப்படி இறங்கி கீழே வந்தான். ராஜலட்சுமி கேட்ட கேள்விக்கு அவன் படியில் இருந்தபடியே பதில் கொடுத்தான், “மே பி 2 இயர்ஸ் இருக்கும்” என்றான்.
ராஜலட்சுமி, “ஓஹோ சரி பா. நிலா உன் வீட்டு அட்ரஸ் கொடு. நாங்க போய் அவங்களை எல்லாம் ரிசப்ஷன்கு அழச்சிட்டு வரோம்” என்றார்.
நிலா மனதுக்குள் அச்சச்சோ இவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க மாதிரி இருக்காங்க.
நேரில் போனா நம்ம சித்தி இவங்களை அசிங்க படுத்திவிட்டால் என்ன செய்வது என்று பலமாக சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.
விக்ரம், “எனக்கு வீடு தெரியும் நானே உங்க எல்லாரையும் கூட்டிட்டு போறேன் வாங்க” என்று கூறினான்.
நிலா பதற்றமாக விக்ரமை பார்த்து கண்களால் வேண்டாம் என்று சைகை செய்தாள்.
விக்ரம் அதை சட்டை செய்யாமல் ராஜலட்சுமியை பார்த்து, “நீங்க வாங்க“ என்றான்.
விக்ரம், “அப்புறம் நிலா நீ வீட்டிலேயே இரு. நான் இவங்களை எல்லாம் கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்” என்று விட்டு காரை நோக்கி சென்று விட்டான்.
******************************
ராமலிங்கம் மற்றும் பத்மா இருவரும் ஜெயலட்சுமி வீட்டிற்குள் நுழையும் பொழுதே, “சுஜிதா அம்மாடி சுஜிதா எங்க இருக்க?” என்று குரல் கொடுத்தார்கள்.
அந்த குரல்களை கேட்ட சுஜிதா அழுது கொண்டே அறையில் இருந்து வெளியே ஓடி வந்து ராமலிங்கத்தை கட்டி அணைத்து கொண்டு அழுதால்.
ராமலிங்கம், “என்னம்மா ஊர் காரங்க எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க. நிலாவுக்கு தானே கல்யாணம் என்று நீ சொன்ன”.
“இப்போ என்னடான்னா நீ அந்த பையன் சக்தியை கட்டிக்கிட்டன்னு எல்லாரும் சொல்றாங்க அது உண்மையா?” என்று பயத்துடன் கேட்டார் .
பத்மா, “நானும் உன் அப்பாவும் வெளியூர் போவதனால் உன்னை அப்போவே கல்யாணத்துக்கு போக வேண்டாம் என்று சொன்னோம்”.
“ஆனால், நீ தான் கேட்கவே இல்லை. நிலா நல்ல பொண்ணு தான் நான் இல்லன்னு சொல்லல”.
“ஆனா இந்த குடும்பம் அப்படி இல்லையே இவங்க பெரிய இடத்துக்காரங்க நம்ம எல்லாம் இவங்களுக்கு ஒரு விஷயமே கிடையாது. இப்போ பாரு உன் வாழ்க்கையே போச்சு” என்று அழுதார்.
ஜெயலட்சுமி அங்கு வந்து, “நீங்க எல்லாம் யாரு? எதுக்கு இங்க வந்து கத்திக்கிட்டு இருக்கீங்க“ என்றாள் அதட்டலாக.
பத்மா, “என்னோட பொண்ணு சுஜிதாவை நீங்க எப்படி உங்க தம்பிக்கு கட்டி வைக்கலாம்” என்றாள் கோபமாக.
ஜெயலட்சுமி, “ஆமாம் இந்த அழு மூஞ்சிய பிடிச்சி என் தம்பிக்கு கட்டி வைக்கணும் என்று எனக்கு தான் ஆசை”.
“நானே கடுப்பில் இருக்கிறேன். வந்ததில் இருந்து அழுதுட்டே இருக்கு வேண்டும் என்றால் உங்க பொண்ணை கூட்டிட்டு இப்பவே கெலம்புங்க”.
நான் ஒன்னும் வேண்டாம்னு தடுக்க மாட்டேன். சீக்கிரமா எடத்த காலி பண்ணிட்டு போங்க“ என்ற விட்டு உள்ளே சென்று விட்டாள்.
ராமலிங்கம், “அம்மாடி சுஜிதா நீ எங்க கூடவே வந்திரு மா. இது ஒரு திருமணமே கிடையாது உன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து இருக்காங்க. நீ வந்துரு எங்க கூட” என்று கையைப் பிடித்து இழுத்தார்.
சுஜிதா, “இல்லப்பா இவங்க மனசுல ஒரு பொண்ணோட வாழ்க்கை நா என்ன சும்மான்னு நினைச்சுட்டாங்களா”.
-என் கழுத்துல இவங்க தாலி கட்டினதுக்கு பதில் சொல்லியே ஆகணும்” என்றாள் விடாப்பிடியாக.
அந்த சமயம் வீட்டிற்குள் நுழைந்த சக்தி இவர்கள் யாரையும் சட்டை கூட செய்யாமல் அவன் பாட்டுக்கு உள்ளே சென்று விட்டான்.
அதில் கோபம் கொண்ட ராமலிங்கம், “இவங்க எல்லாம் மனுஷங்களை மதிக்கவே மாட்டாங்க. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது”.
“இவங்களை எல்லாம் நம்பளால் திருத்தவே முடியாது ஏன் அந்த கடவுள் நினைச்சா கூட முடியாது” என்று அவர் பெண்ணிடம் கெஞ்சுதலாக தன்னுடன் வருமாறு கூப்பிட்டார்.
ஆனால் சுஜிதா உண்மையில் சக்தி மேல் காதல் வசப்பட்டதால் எப்படி தன் தந்தையோடு செல்ல முடியும். தன் தந்தை கண் கலங்குவதை பார்க்க முடியாமல்.
சுஜிதா, “எனக்கு ஒரு வருஷம் அவகாசம் கொடுங்க அதுக்குள்ள கண்டிப்பா சக்தியை நான் திருத்தியே தீருவேன். பிறகுதான் நம்ம வீட்டுக்கு நான் வருவேன்”.
“அது வரைக்கும் நீங்களும் எந்த காரணத்துக்காகவும் என்னை பார்க்க வர வேண்டாம்” என்று விட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
சுஜிதா ஒத்த பிள்ளை என்பதால் பாசத்தை கொட்டி வளர்த்தார் ராமலிங்கம்.
எந்த அளவுக்கு அவர் சுதந்திரம் கொடுத்தும், அன்பை கொடுத்தும் வளர்த்தாரோ அதற்கு எதிர் மாறாக அவள் திருமண வாழ்க்கை அமைந்து விட்டது.
ராமலிங்கம் எங்க வீட்டுக்கு வந்த பொக்கிஷம் நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப என்று நினைத்து மிகவும் வருந்தி கொண்டே அங்கு இருந்து சென்று விட்டார் தன் மனைவியுடன்.
ஜெயலட்சுமி சோபாவில் அமர்ந்து எப்படி நிலாவிடம் கையெழுத்து வாங்குவது என்று பலமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
நான் அந்த விக்ரம் வீட்டிற்குள் சென்றால் மட்டுமே அந்த நிலாவை சந்திக்க முடியும். அப்பொழுது அவளிடம் கையேழுத்தும் வாங்கி விடலாம்.
ஆனால் என்ன காரணத்துக்காக நான் அங்கு செல்வது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.
அந்த சமயம் வாசலில் இருந்து கார் ஹாரன் சத்தம் கேட்டது. ஜெயலட்சுமி, “கண்ணம்மா யாருன்னு போய் பாரு நம்ம வீட்டு வாசல்ல சும்மா ஹாரன் அடிச்சிட்டே இருக்காங்க“ என்று கோபமாக கூறினாள்.
கண்ணம்மா வாசல் வரை சென்று விட்டு சிரிப்புடன் வாங்க தம்பி வாங்க என்று விட்டு, “ஜெயா அம்மா விக்ரம் தம்பி வந்து இருக்காங்க குடும்பத்தோட” என்றார்.
ஜெயலட்சுமி இவன் எதற்கு இங்க வந்திருக்கான் என்று அதிர்ச்சியாக அவர்களைப் பார்த்தாள்.
ஒருவேளை நிலா சொத்து பத்திரங்கள் எல்லாம் வாங்கிட்டு போரத்துக்கு வந்து இருப்பாங்கலோ என்றும் யோசித்தாள்.
ராஜலட்சுமி, “வீட்டுக்கு வரவங்கள வாங்க என்று கூப்பிட மாட்டீங்களா?” என்றார். ஜெயலட்சுமி, “இல்ல அப்படி இல்ல வாங்க வாங்க எல்லாரும் வாங்க” என்றார்.
ஜெயலட்சுமி, “கண்ணம்மா போய் எல்லாருக்கும் காப்பி தண்ணி எடுத்துட்டு வா” என்று விட்டு எல்லாரையும் அமருமாறு கூறினார்.
ராஜலட்சுமி, “விக்ரம் கல்யாணத்தை நாங்க பெருசா பண்ணனும்னு ஆசை பட்டோம். ஆனால் அவன் இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிப்பான் என்று நாங்க யாரும் எதிர்பார்க்கல”.
“கல்யாணம் தான் அவன் இஷ்டப்படி நடந்திருச்சு. அதனால் நாளைக்கு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்கோம்”.
“விக்ரம் சார்பில் நாங்கள் எல்லோரும் இருக்கோம். ஆனால் நிலா வுக்கு யாரும் இல்லை என்று தோன்ற கூடாது”.
“ஏற்கனவே அம்மா இல்லாத பொண்ணு அதனால் உங்க எல்லோரையும் ரிசப்ஷன்கு அழைக்கலாம் என்று வந்திருக்கோம்” என்றார்.
ஜெயலட்சுமி அந்த நிலாவுக்கு எல்லாம் ரிசப்ஷன்னா என் தம்பிக்கு கூட நான் ஒன்னுமே பண்ணல. அந்த மூதேவிக்கு சந்தோஷமா ரிசப்ஷன் நடக்க போகுதா என்று யோசித்து.
கோபமாக, “இல்லைங்க எங்களால் வர முடியாது என் தம்பிக்கும் இவங்க கூட தான் கல்யாணம் ஆகி இருக்கு. நாங்களும் நாளைக்கு ரிசப்ஷன் வைக்கலாம் என்று இருக்கோம்” என்றாள்.
விக்ரம், ஜெயலட்சுமியை பார்த்து நக்கலாக “பரவாயில்லையே அதுக்குள்ள உங்க தம்பி மனச மாத்திக்கிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?” என்றான்.
ராஜலட்சுமி, “அப்படியா” என்று அமைதியாக இருக்க.
ராஜேந்திரன், “ஒன்னும் பிரச்சனை இல்ல உங்க தம்பியும், மருமகளையும் கூட்டிட்டு வந்துருங்க ஒரே மண்டபத்திலேயே நம்ம ரிசப்ஷன் வச்சுக்கலாம்” என்றார்.
அப்போது வெளியே வந்த சக்தி, “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல” என்றான்.
ஜெயலட்சுமி, சக்தியை பார்த்து அமைதியாக இருக்கும்படி கண்களைக் காண்பித்தாள்.
பிறகு ராஜலட்சுமி, ராஜேந்திரனை பார்த்து, “நீங்க இவ்வளவு தூரம் கட்டாயப் படுத்துவதால் மட்டும் நான் ஒத்துக்குறேன் என் தம்பிக்கும் நாளைக்கே ரிசப்ஷன் அங்கேயே வச்சுக்கலாம்” என்றாள்.
ராதிகா, “என்னக்கா இது எல்லாம் நல்லாவா இருக்கும். நம்ம வீட்டு விசேஷத்துக்கு பெரிய மனுஷங்க எல்லாம் வருவாங்க”.
“இவங்க குடும்ப ஆளுங்க எல்லாம் வந்தா நமக்கு அவமானமா இருக்காதா?” என்றாள் குத்தலாக. இவர்களுக்கு வசதி கம்மி என்னும்படி கூறினார்.
ஜெயலட்சுமிக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும் தன் மனதில் இருக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைத்து அமைதியாக இருந்தாள்.
ராஜலட்சுமி, “நீ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது” என்று ராதிகா வாயை அடக்கினார்.
விக்ரம் சிரித்துக் கொண்டே, “தெரியும் ஜெயா ஆன்டி இவங்க ரொம்ப போர்ஸ் பண்ணதுனால் மட்டும் தான் நீங்க ஒத்துக்குறீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும்“ என்றான் நக்கலாக.
ராஜலட்சுமி, “அப்படின்னா நாளைக்கு நீங்க கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வந்துடனும் ரெண்டு பொண்ணு மாப்பிள்ளைக்கும் ஒன்னாவே ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணிடலாம்“ என்றார்.
ராதிகா வீட்டை சுற்றி தன் கண்களால் ஸ்கேன் செய்தவள், “அக்கா சீக்கிரம் இங்க இருந்து கிளம்பலாம்”.
“என்னால் இங்க மூச்சை கூட விட முடியல கொஞ்சம் கூட காற்று வசதியே இல்லை ரொம்ப ஸ்வெட் ஆகுது“ என்று வேண்டும் என்றே கூறினாள்.
ஜெயலட்சுமி, ராதிகா வை பார்த்து முறைத்தாள். ராதிகா எழுந்து, “சீக்கிரம் வாங்க கிளம்பலாம். அதான் சொல்லியாச்சு இல்ல வர சொல்லி” என்று விட்டு வெளியே சென்று விட்டார்.
பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
நிலா, கைகளை பிசைந்தபடி தன் அரையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எப்படியோ நிலா நல்ல இடத்தில வந்து சேர்ந்துட்டா … விக்ரம் லவ் ஸ்டோரி தான் தெரியணும் … சுஜியை நினைச்சா தான் பாவமா இருக்கு … சக்தி மனசை மாத்த முடியுமா … சக்தினால மறுபடியும் நிலாவுக்கு எதும் பிரச்சனை வருமோ