
அத்தியாயம் 12
விக்ரம் நான் இவங்களை பொருத்தவரை யாரோ தானே. அதனால் தான் நிலாவை நான் திருமணம் செய்து வந்தும் கூட என்னை கோபமாக திட்டவோ அடிக்கவோ இல்லை.
நான் செய்தது தப்பு என்று கூட இவர்கள் சொல்ல வில்லை என்று மனதுக்குள்ளேயே நினைத்து மௌனமாக வருந்தினான்.
ராஜேந்திரன், “நாளைக்கு நைட்டு ரிசப்ஷன் வச்சுக்கலாம்” என்று விக்ரமை பார்த்து கூறினார்.
விக்ரம் எதுவும் கூறாமல் சரி என்று தலை மட்டும் அசைத்தான். பிறகு விக்ரம் நிலாவை அழைத்துக் கொண்டு மேலே சென்று விட்டான்.
ராஜேந்திரன், ராஜலட்சுமியை அமர வைத்து, “லட்சுமி நீ விக்ரம் கிட்ட சண்டை போடுவ என்று தான் நான் நினைத்தேன். ஆனால், நீ எதுவும் கூறாமல் ரிசப்ஷன் வச்சுக்கலாம் என்று சொல்லிட்டியே”.
“உன் குணம் எனக்கு நல்லா தெரியும். நீ ரொம்ப கோபப்பட்ட ஆனால் ஏன் உன் கோபத்தை விக்ரமிடம் காட்ட வில்லை?“ என்றார்.
ராஜலட்சுமி, “என்னங்க இப்படி கேட்டுட்டீங்க நான் ரொம்ப கோவமா தான் இருந்தேன். அதுவும் அந்த பொண்ணை பார்த்தவுடன் எனக்கு பயங்கர கோவம் வந்ததும் உண்மைதான்”.
“ஆனால், விக்ரம் ரொம்ப காலம் பிறகு இப்போ தான் என்னை அம்மா என்று அழைத்தான் கவனித்தீர்களா” என்றாள் முகம் நிறைய புன்னகையோடு.
ராஜேந்திரன், “ஆமா லட்சுமி நானும் பார்த்தேன். அவன் அம்மா அப்படின்னு அழைத்தான். ஆனால் அவன் ஏன் நம்மிடம் சரியாக பேச மாட்டேங்கிறான் என்று தான் எனக்கு இன்னமும் புரியவில்லை”.
“இருபது வருஷமாகி விட்டது நம்மிடம் சரியாக பேசி. வேண்டா வெருப்பாக தான் பேசுகிறான் எப்போழுதும்“ என்று வருத்தப்பட்டார்.
ராஜலட்சுமி, “அதெல்லாம் பரவாயில்லை விடுங்க இனிமே நம்ம பையன் நமக்கு பிடிச்ச மாதிரி தான் நடந்துப்பான்னு நினைக்கிறேன்” என்றாள்.
ராஜேந்திரன், “நீ சொல்வது போல் நடந்தால் எனக்கும் சந்தோஷம்தான்” என்று விட்டு ராஜேந்திரன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
ராதிகா, ம்ம்ச் என்று உதட்டை சுழித்து கொண்டு அவர்கள் பேசுவதை தெரிந்துக் கொள்வதற்காக அங்கேயே நின்றிருந்தார்.
ராதிகா, “அக்கா அந்த நிலா யாரு? என்ன ஜாதி? என்று கூட நமக்கு தெரியலையே. அவளை போய் இவன் கட்டிக்கிட்டு வந்து இருக்கான். இவனை நீங்க ஒரு நாலு வார்த்தை நல்லா கேட்க வேண்டியது தானே“ என்றாள் கோபமாக.
ராஜலட்சுமி, “அதெல்லாம் உனக்கு ஏன். நீ இந்த வீட்டில் எனக்கு தங்கையாக மட்டும் தான் இருக்க”.
“உன் வேலையை மட்டும் நீ பார். விக்ரம் என் பையன் எனக்கு அவனை எப்படி பார்த்துக்க வேண்டும் என்று தெரியும்” என்றார்.
ராதிகா, “விக்ரம் ஒன்னும் உங்க பையன் இல்லையே. ஆதித்யா தேவ் மட்டும் தான். உங்களுக்கு ஒரே பையன், ஒரு பொண்ணு அவ்ளோ தான்”.
“இவன் ராஜேந்திரன் மாமாவோட அண்ணன் பையன் உங்க நினைவுல வச்சுக்கோங்க. அதனால் தான் இவன் திமிரா இருக்கான்” என்றாள்.
ராஜலட்சுமி, “ஏய் வாய மூடு. நீ ரொம்ப அதிகமா பேசுர. இந்த வீட்ல நீ இருக்கனும்னு ஆசைப்பட்டேனா ஒரு ஓரமா போயிரு தேவையில்லாம என் குடும்ப விஷயத்துல நீ தலையிடாதே” என்று தன் தங்கையை திட்டி முறைத்து சென்றாள்.
ஜெயலட்சுமி சக்தியை அழைத்து வந்து அமருமாறு கூறினாள். ஜெயலட்சுமி, “சக்தி இந்த சொத்து மொத்தத்திலும் நிலா கையெழுத்து மிகவும் தேவை”.
“அப்பொழுது தான் இந்த சொத்தை நாம் கைப்பற்ற முடியும். அதற்கு எப்படியாவது நாம் விக்ரம் தேவ் வீட்டிற்குள் நுழைய வேண்டும்” என்றார்.
சக்தி கோவமாக, “அவன் வீட்டுக்குள்ளேயே நான் கால் எடுத்து வைக்க மாட்டேன்” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
ஜெயலட்சுமி, “இவன் வேற ஒரு லூசு மாதிரி இருக்கான். இவ்ளோ சொத்துகளை நம்ப கையாளப் போகிறோம் அதை நினைவில் வைத்துக் கொள்ளாமல்”.
“அந்த ஒண்ணுத்துக்கும் உதவாத நிலாவ நினைச்சு இன்னும் உருகிக் கிட்டு இருக்கான்” என்று திட்டி முறைத்தாள்.
கோவமாக சென்ற சக்தி அவன் அரை கதவை திறந்து உள்ளே நுழைந்தான். அங்கு சுஜிதா கட்டில் மேல் ஓரமாக அமர்ந்து அழுதுக் கொண்டு இருந்தாள்.
சுஜிதாவை பார்த்தவுடன் சக்திக்கு கட்டுக் அடங்காமல் கோபம் வந்தது. சக்தி, “ஏய் யாரைக் கேட்டு நீ இந்த ரூம்குள்ள வந்த? இது என்னோட ரூம்” என்றான் அதட்டலாக.
சுஜிதா பயந்து எழுந்து ஓரமாக நின்றால். சக்தி, “முதலில் நீ இந்த ரூம்பை விட்டு வெளியே போ” என்றான். சுஜிதா பயந்து கொண்டே வாசல் வரை சென்றாள்.
திரும்பி சக்தியை பார்த்து ஒரு பக்கம் இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு கையில் ஒற்றை விரலை நீட்டியபடி, “என்னை இந்த ரூம்பை விட்டு வெளியே போக சொல்வதற்கு நீங்கள் யார்?“ என்றாள்.
சக்தி பயங்கர கோபத்துடன், “இது என்னோட அறை நான் தான் சொல்லுவேன் இங்க யார் இருக்கனும் இருக்கக் கூடாது என்று“ என்றான்.
சுஜிதா சிரித்துக் கொண்டே, “இதையெல்லாம் நீங்க என்னிடம் சொல்வதற்கு நான் ஒன்னும் மூன்றாவது மனுஷி கிடையாது”.
“நான் உங்க மனைவி உங்க ரூம் இனிமே என்னோட ரூம் புரிஞ்சுதா” என்று விட்டு முந்தானியை தூக்கி தோள்பட்டையில் போட்டபடி திமிராக வந்து கட்டிலில் கால்மேல் கால் இட்டு அமர்ந்தாள்.
சக்தி, “ஏய் என்ன ரொம்ப பேசிக்கிட்டு இருக்க” என்றான். சுஜிதா, “நான் ஒன்னும் நிலா கிடையாது எல்லாத்துக்கும் பயந்துகிட்டு அச்சச்சோ அச்சச்சோ அப்படின்னு சொல்வதற்கு. நான் சுஜிதா என்னை பத்தி உங்களுக்கு சரியா தெரியாது” என்றாள்.
சக்தி, “நான் உன்னை என்னோட மனைவியா ஏத்துக்கவே இல்லை. உன்ன பழி வாங்குவதற்காக மட்டும் தான் உன் கழுத்தில் தாலியை கட்டினேன் புரிந்ததா” என்றான்.
சுஜிதா, “நீங்க எதற்காக வேண்டும் என்றாலும் தாலி கட்டி இருக்கலாம். ஆனால் நீங்க தாலியை கட்டிடீங்க அவ்வளவு தான்”.
“இனி நீங்களே நினைத்தாலும் நான் உங்களையும் இந்த வீட்டையும் இந்த ரூம்பையும் விட்டு வெளியே போக மாட்டேன்” என்றாள் உறுதியாக.
சக்தி, “உன்னை எப்படி இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறேன் என்று பார்” என்று சபதம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
சுஜிதா சிரித்துக் கொண்டே கண்ணாடி முன்பு நின்று கட்டி இருக்கும் புடவையை தடவிக் கொண்டே மனதுக்குள் நினைத்தால்.
அன்று நலுங்கு முடிந்த இரவு நீ என்னை பின்புறம் கட்டி அணைத்ததில் அன்று நான் எவ்ளோ சந்தோஷப் பட்டேன் என்று உனக்கு தெரியுமா?.
என்னை நீ கட்டி அணைத்ததில் ஒரு பக்கம் சந்தோஷமாக உணர்ந்தேன் மறு நிமிஷம் என்னிடம் நிலா என்று நினைத்து தான் நான் உன்னை கட்டிக் கொண்டேன் என்று நீ சொன்ன ஒரு வார்த்தையில் நான் சுக்கு நூறாக உடைந்து விட்டேன்.
ஆனால், விதியைப் பார்த்தியா நீ ஆசை ஆசையாக எடுத்த இந்த புடவை என் காதல் உண்மை என்பதால் தான் என் கையில் வந்து சேர்ந்தது.
ஆனால், நான் ஒரு பயத்துடன் தான் இருந்தேன் என் காதல் நிறைவேறுமா என்று. இந்த கல்யாணம் மூலியமாக என் காதல் உண்மை என்று நிரூபித்து காட்டிவிட்டார் அந்த கடவுள்.
உன் காதலுக்கு நடுவில் நான் வரக்கூடாது என்பதற்காக மட்டும் தான் நான் அமைதியாக இருந்தேன் இத்தனை நாட்களாக.
ஆனால் அந்த கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்பதை இப்பொழுது நான் தெரிந்து கொண்டேன். இனி என்னை விட்டு நீயே பிறந்து போக நினைத்தாலும் உன்னை நான் விடமாட்டேன்.
கடவுளே என் பக்கம் இருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். இனி எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று பயங்கரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
*****************************
விக்ரம் வீட்டில் ரிசெப்ஷன் எவ்வாறு பண்ணலாம் என்று பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருந்தது .
ராஜேந்திரன், ராஜலட்சுமி, ராதிகா மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
அப்போது ராஜலட்சுமி, “நம்ப ரிசப்ஷன் மண்டபத்தில் வைக்கலாம். நேரம் காலம் எல்லாம் ஐயரை வர சொல்லி பாத்துடுங்க”.
“அப்படியே நாளைக்கு நைட்டே சடங்குக்கு ஏற்பாடு பன்னிடுங்க” என்று முடிவு செய்து கொண்டு இருந்தாள்.
ராஜேந்திரன் யோசனையாக, “நிலா வீட்டில் இருப்பவர்களையும் அழைக்கனுமே?” என்றார்.
ராஜேந்திரன், “ஆமாம் லட்சுமி. ஆனால் அவள் வீட்டு ஆட்கள் யார் என்று நமக்கு தெரியாதே. முதலில் நிலாவை வரச்சொல்லுங்கள் அவளிடம் விசாரிக்கலாம்” என்றார்.
பிறகு சித்ராவை அழைத்து நிலாவை அழைத்து வருமாறு கூறினார்கள்.
நிலா சோகமாக இது எல்லாம் கனவா அல்லது நினைவா என்று தெரியாமல் என்ன வாழ்க்கை இது எதுவுமே புரியவில்லை கண்ணை கட்டி காட்டில் விட்டபடி இருக்கு என்று குழம்பிக் கொண்டு அவள் அறையில் இருந்தாள்.
சித்ரா, “விக்ரம் ஐயா” என்று கதவை தட்டினாள். விக்ரம் பாத்ரூமில் இருந்த படி கதவு தட்டும் சத்தத்தை கவனித்து, “நிலா” என்று குரல் கொடுத்தான்.
அதில் நிலா பதறிப் போய் கதவு அருகே நின்று எப்படி அழைப்பது என்று தெரியாமல், “சொல்லுங்க இங்கதான் இருக்கேன்” என்றாள் பதட்டமாக.
விக்ரம் அவள் குரலில் உள்ள பதட்டத்தை உணர்ந்து, “எதுக்கு நீ பதறுற நான் நிலான்னு கூப்பிட்டேன் அவ்வளவு தான் . சரி சித்ரா கூப்பிடுற பாரு என்னன்னு கேளு” என்றான்.
நிலா கதவை திறந்து, “என்ன?” என்றாள். சித்ரா, “கீழே பெரிய ஐயா, அம்மா எல்லாரும் இருக்காங்க உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றாள்.
நிலா பயத்துடன் பாத்ரூம் வாசலில் நின்று கொண்டு, “என்னை கீழே கூப்பிடுறாங்களாம் நான் என்ன செய்வது” என்றாள்.
விக்ரம், “எதுக்கு நீ எல்லாத்துக்கும் பயந்துட்டே இருக்க. நீ விக்ரம் தேவ் ஓட பொண்டாட்டி புரிஞ்சுதா. அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ. கீழ உன்னை தானே கூப்பிட்டாங்க போ” என்றான் கூலாக.
நிலா, “மெதுவாக நான் எப்படி போறது? எதுக்கு கூப்பிடறாங்கன்னு தெரியலையே” என்றாள்.
விக்ரம், “நீ போய் என்னன்னு கேட்டா தானே தெரியும் எதுக்கு கூப்பிடுறாங்க என்று“ என்றான்.
நிலா, “இல்ல எனக்கு ஒரு மாதிரி இருக்கு நா எப்படி தனியா போறது“ என்றாள்.
விக்ரம், “நா குளிச்சிட்டு இருக்கேன் வேண்டும் என்றால் அப்படியே வரவா” என்று கதவை லேசாக திறந்தான்.
அதில் பதறிப்போன நிலா, “இல்ல இல்ல வேண்டாம் நானே போயிக்கிறேன்” என்று மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி விட்டால். சித்ரா நிலாவை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நினைச்சேன் சுஜிதா இந்த சக்தியை லவ் பண்ணியிருக்கும்னு … ஆமா எதுமா மாமன் மேல உனக்கு ஆசை வர வெச்சது … ஒரு பிளாஷ்பேக் இருக்குமோ … விக்ரம் என்னப்பா நிலா மட்டும் இல்ல உன் பிளாஷ்பேக் கேட்க நாங்களும் வெயிட் பண்றோம் … நீ ஜாலியா குளிச்சுட்டு இருக்க …