Loading

ரோமியோ-3

மலையில் உள்ள பள்ளத்தாக்கில் அவள் வாயில் பிஸ்டலை வைத்து அமிர்தாவையே பார்த்தது கொண்டிருந்தான் …..

முகம் வெளிறிப் போனது அவளுக்கு… இப்போதே போட்டு தள்ளினால் கூட நிம்மதியாக போய் சேர்ந்து விடுவாள்… அவளை தேடவோ அவளுக்காக அழுகவோ ஆள் இல்லை..

அவள் எண்ணத்தை தெளிவாக படித்தவன்… அவள் வாயில் இருந்து பிஸ்டலை எடுத்து தன் தலையை சொரிந்து கொண்டு அவளை பார்த்து இளக்காரமாக சிரித்தான்…

ப்ளீஸ் என்ன கொன்னுடுங்க… என்னால முடியலை…என்று அமிர்தா கதற…. அவள் கைகளை கட்டி தன் தோளில் போட்டு நடக்க ஆரம்பித்தான் சாம்பல் விழியன்…

அதிகாலை அவர்களிடம் இருந்து தப்பி மீண்டும் அவர்களிடம் மாட்டிய பிறகு… நேராக அவளை தூக்கி வந்து இவன் முன்னே தான் போட்டனர்… மீண்டும் ஐந்து நாட்களுக்கு பின்னர் அந்த சாம்பல் விழிகளை பார்த்து அதிர்ந்தாலும்…அந்த விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை அவன் பால் ஈர்த்தது என்பது உண்மையே…

அவள் தோளில் தொங்கி கொண்டே…அவனிடம் இருந்து திமிறினாள் அமிர்தா…

அவன் அழைத்து சென்ற இடமோ…. ஷியோக் நதி

 

 

The River of death ( மரண நதி ) என்று அழைக்கப்படும் இந்த ஷியோக் நதி… லடாக்கில் இருந்து தன் பயணத்தை ஆரம்பித்து…பாகிஸ்தான் வழியே சென்று சிந்து நதியில் கலக்கிறது….

எப்போது அதிக அளவு தண்ணீரை கொண்டிருக்கும் இந்த நதி வெயில் காலத்திலும் மழை காலத்திலும் நீரின் ஓட்டம் அதிகமாவே காணப்படும்.. பலர் இந்த நதியை கடக்க முயற்சித்து உயிரை மாய்த்து கொண்டது தான் மிச்சம்… இன்னும் இந்த நதியை யாராலும் கடக்க முடியவில்லை…. இந்த நதியை கடக்க முயற்சிப்போரின் சாவு என்ணிக்கை தான் கூடியதே தவிர யாரும் கடந்த பாடில்லை…

அதனால் தான் இந்த நதிக்கு …. மரண நதி என்று பெயர் வந்தது…

அந்த நதியை பார்க்கவே பயமாக இருந்தது அமிர்தாவுக்கு… ஏற்கனவே குளிர் வாட்டி எடுக்க.. இப்போது அவன் அழைத்து வந்த இடத்தை பார்க்க பார்க்க அவளுக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது …..

அவன் தோளில் இருந்து அவளை இறக்க…. இப்போது இறங்க மறுத்தாள் அமிர்தா… வலு கட்டாயமாக அவளை தன் தோளில் இருந்து இறக்கியவன்…. இறக்கி விட்ட மாத்திரத்தில் சப்பென்று அவள் கன்னத்தில் வைக்க… உதடு கிழிந்து ரத்தம் வந்தது அவளுக்கு…

உதட்டில் வழியும் உதிரத்தை துடைத்து கொண்டு… அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்க…

ஆள்காட்டி விரலை வாயில் வைத்து…. ஸ்ஸ்ஸ்ஸ்….. மூச்சு…. மூச்சு கூட வெளியே வர கூடாது… என்று மிரட்டினான்…

அவ்வளவு தான் தன் கைகள் இரண்டையும் வாயில் வைத்து மூடிக் கொண்டு விம்ம ஆரம்பித்தாள் அமிர்தா…

அங்குள்ள நீரில் கை கால்களை அலம்பியவன்…அங்கேயே அமர்ந்து விட… அவன் பார்த்த பார்வையில் அவளும் அங்கேயே அமர்ந்து விட்டாள்…

பேர் என்ன…?

ஆஹ்ஹ்ஹ… என்று கண்கள் விரிய கேட்டாள் அமிர்தா…

ப்ச்…. பேர் என்ன என்று குரலை உயர்த்த…

அ…அம்…அமிர்தா….என்று திக்கி திணறி கூறியவள்… ஐயோ உண்மையான பெயறை சொல்லிட்டேனே..என்று தன்னை தானே நொந்து கொண்டு… இல்ல அது சும்மா … நா…நான் வச்ச பேரு… என் பேரு … ஐயோ அமிர்தா ஏதாவது அழகான பெயரா வை டி என் மூளை அறிவுறுத்த… அது… என் பேரு…

என்கிட்ட இருந்து எதை மறைக்க பார்க்குற… என்று சலனமே இல்லாமல் வந்தது கேள்வி…

மாட்டிக் கொண்ட சிறு பிள்ளை போல் அவள் முழிக்க… இத பிடி என்று அவள் கையில் சில பல வயர்களை கொடுத்தான்…

அவளும் வாங்கி கொண்டு அவனையே பார்க்க… சிவப்பு வயரையும் பச்சை வயரையும் ஒன்னா பின்னு…

அவனும் அதை தான் செய்து கொண்டிருந்தான்… அவன் செய்வதை பார்த்து அவளும் பின்ன ஆரம்பித்தாள்…

அவளிடம் இருந்து அதை வாங்கியவன்…. அதில் சில வேலைகளை முடித்து விட்டு ….அவள் கையில் கொடுத்து அந்த நதியில் வீச சொல்ல…

ஒரு வித பயத்துடன் அந்த நதியில் தூக்கி எறிய… அவளை சட்டென்று இழுத்து அருகே உள்ள பாறைக்கு பின் தள்ளி செல்ல… அவள் எதை எறிந்தாலோ…. ஒரு நிமிடத்தில் அது தாறு மாறாக வெடித்தது… ஆற்றில் உள்ள தண்ணீரை அள்ளி கொண்டு வெள்ளமாக சென்றது… இதே போல் நீரோட்டம் வேகமாக சென்றால்…இந்த நதி பாயும் இடத்தில் உள்ள மக்கள் கண்டிப்பாக பாதிப்பு அடைவார்கள் என்பது உறுதியே…

பயத்தில் பாறையை பிடித்து கொண்டு அமிர்தா எட்டி பார்க்க….. அந்த ஷியோக் நதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது….. அதனின் ஆக்ரோஷசமான நீரோட்டத்தை கண்டு அமிர்தா பயந்து பின் வாங்க…

இனிமே இங்க இருந்து தப்பிக்க நினைப்பியா…

ம்கூம்…. மாட்டேன் என்று பயத்தில் தலை ஆடியது அவளுக்கு…

*******

என்ன பண்ணிட்டு இருக்க… என்கிட்ட ரொமான்ஸ் பண்ணுறதை விட்டுட்டு வேலைக்கு கிளம்பு..

என் வேலையே இதான் பேபி…

எது…

இதோ உன்னைய இப்படி சீண்டுறது தான்…

போதும் போதும் … இன்னும் முப்பது நாள் இருக்கு…

அந்த அளவுக்கு போக மாட்டேன்… ஜஸ்ட் டெமோ தான் பார்க்குறேன்…

வேணவே வேணாம்…நீ என்ன பண்ணுவனு எனக்கு நல்லாவே தெரியும்…

தெரிஞ்சும் ஏன் டி தடுக்குற….

அவள் உதட்டை கடித்து சிரிக்க.. தன் மனைவியின் மேல் பித்தாக இருந்தவன்… நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளோ நாள் ஆச்சு.. இதுவரைக்கும் உன்ன ஏதாவது பண்ணிருக்கேனா… என்று பாவமாக கேட்க…

ஐயோட சரியான திருடன்… எதுவும் பண்ணலனு சொல்லி சொல்லியே எல்லாம் பண்ணுறது…

அப்படி என்ன டி உன்ன பண்ணேன்…

அத எப்படி நான் சொல்லுவேன்… என்று வெட்க சிரிப்பு சிரித்தாள் மிளிர்மதி….

தன் மனைவியின் வெட்கத்தில் கரைந்து போனான் மதியின் மன்னவன் ஆதர்ஷன்

இவர்கள் இருவரும் வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த தம்பதிகள் தான்… ஆதர்ஷன் மிலிட்டரி துறையில் மேல் அதிகாரியாக இருப்பவன்…

மிலிட்டரி போலீஸ் என்றால் அறவே வெறுக்கும் குணம் கொண்டவள் மிளிர்மதி….. அவளுடைய தந்தையின் பிடிவாதத்தால் இவனை மணந்து கொண்டாள்…

திருமணம் செய்து வந்த முதல் நாளே.. எனக்கு மிலிட்டரி ஆபீசர் என்றால் சுத்தமாக பிடிக்காது என்று அவர்கள் முதல் இரவு அறையில் பட்டென்று அவன் முகத்திற்கு நேராக கூறி விட…

ஏனோ தன்னை பார்த்தாலே பத்தடி தள்ளி நிற்போர் மத்தியில் சிறு பெண் தைரியமாக அவளுடைய பிடித்தத்தை உரைத்தது அவனுக்கு மிகவும் பிடித்து போனது…

அப்போ வேலையை விடனுமா மேடம்..

எனக்கு பிடிச்சது பிடிக்காதது சொல்ல எவ்வளோ உரிமை இருக்கோ…அதே உரிமை உங்களுக்கும் இருக்கு… எவ்வளவு கனவோட இந்த வேலையில ஜாயின் பண்ணி இருப்பீங்க… மிலிட்டரி ஆபீசர் தான் பிடிக்காது.. ஆனால் என் புருஷனை பிடிக்கும்.. என்று பட்டென்று கூறினாள் மிளிர்மதி..

தன்னுடைய ஆசைக்கும் அவள் மதிப்பளித்து தன்னுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு பேசுபவளை கட்டி அணைத்து கொள்ளலாம் போல் இருந்தது  ஆதர்ஷனுக்கு.

ஆனால் எனக்கு டயம் வேன்டும்…

எவ்வளோ நாள்….

உங்களுக்கும் நான் புதுசு தானே…. உங்களுக்கு வேணாமா…?

மிலிட்டரி பிடிக்காதுன்னு நீ எப்போ சொன்னியோ…அப்போவே உன்ன எனக்கு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு…

ஹான்…என்று வாயை பிளந்து பார்த்தாள் மிளிர்மதி..

ஆனால் சீக்கிரம் ஓகே சொல்லிடு…இல்லேன்னா கடத்திட்டு போயி தப்பு பண்ணிடுவேன்…என்று கன்னதித்தில் தட்டி விட்டு தூங்க.. அவள் தான் அவனை வாயை பிளந்து பார்த்தாள்…

அப்போதில் இருந்து இப்போது வரைக்கும் அவளுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறான்… திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் முடிவடைந்து விட்டது… இன்னும் முப்பது நாளில் முதலிரவை வைத்து கொள்ளலாம் என்று அவள் பச்சை கொடி காட்ட.. அவன் தான் நாட்களை எண்ண ஆரம்பித்தான்..

ஆனால் மனைவி அருகில் இருக்கையில் சில நேரம் அவளை  கொஞ்சி கெஞ்சி எல்லையை மீறுவதும் உண்டு… இன்றும் அதே தான் நடந்து கொண்டிருக்கிறது…

என்னங்க அந்த பாம் ப்ளாஸ்ட் பண்ணது யாருன்னு கண்டு பிடிச்சுட்டிங்களா….

சட்டென்று முகம் மாறியது ஆதர்ஷனுக்கு… கை முஷ்டிகள் புடைக்க…  அல்மோஸ்ட் நெருங்கிட்டோம் மதி.. என்று கூறியவனின் கண் முன் வந்து போனது அந்த முகம்…

********

இனிமேல் இங்கிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை பறி போக… உணர்வற்று  எங்கேயோ வெறுத்தப்டி நிற்க…

தண்ணீர் அலம்பும் சத்தம் கேட்டு… திரும்பி பார்த்தவள் விழிகள் இரண்டும் தெரித்து விடும் அளவிற்கு விரிந்தது…

தன் முகத்தில் உள்ள சிவப்பு துணியை அகற்றியவன்.. அங்குள்ள நீரில் முகத்தை அலம்பி விட்டு நிமிர…. அவனையே கண்கள் தெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா…

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்