Loading

ரோமியோ-2

 

கட்டி அணைத்து விட்டாள் சாம்பல் விழியனை……… 

 

தவான் அதிர… சுற்றி உள்ள அனைவரும் கூட்டத்திற்காக அவளை விட்டு வைத்தனர் …. 

 

பாய்…என்று குரல் நடுங்க அழைத்தான் தவான்… அனல் கக்கும் பார்வையுடன் அவளை பார்த்தவன்… உதட்டை வளைத்து   ஒரு குறும் புன்னகை சிந்தியவன்… நொடியும் தாமதிக்காமல் அணைத்திருந்த அவளை அப்படியே தூக்கி தோளில் போட்டு கொண்டு நடையை கட்டினான் சாம்பல் விழியன்….

 

அதிர்ந்து போய் பார்த்தனர் தவான் மற்றும் அவனது ஆட்கள்… கூட்டத்தில் இருந்து அலாக்காக கழன்றனர்…

 

அவன் தூக்குவான் என்று எதிர்பார்க்காதவள் …அவனிடன் இருந்து துள்ள… அவள் துள்ளுவதை கூட பொருட்படுத்தாமல் அவளை தன் கைச் சிறையில் அடக்கி கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினான் அவன்..

 

அவளை தூக்கி கொண்டு வெகு தூரம் நடந்தவன்…. அவர்களது வேனில் அவளை கிடத்தி…அவள் அனுமதி இன்றியே அவள் மேலே அணிந்திருக்கும்  சட்டையை தூக்கி.. அந்த பாமில் சில பல பொத்தான்களை அமுக்கினான்… 

 

அமிர்தாவுக்கோ அவனது செயல் நடுங்க செய்தது… எங்கே தன்னை மட்டும் வெடித்து சிதற விடுவானோ என்று அவன் சட்டையை இறுக்கி பிடித்து கொள்ள…. அதை உணர்ந்தாலும் அவன் வேலையை சரியாக செய்து முடித்தான்… 

 

கூட்டம் இங்க இருந்து அரை கிலோமீட்டர் தூரத்துல நடக்குது… இந்த வேன்ல இவளை வச்சு பூட்டிட்டு … கிளம்புங்க… சரியா 10 நிமிஷத்துல பாம் வெடிக்கும் என்று சாதாரணமாக கூறி விட்டு அவன் காரில் ஏறி செல்ல… அவன் சொன்னதை போல் அவளை அந்த வேனில் கட்டி விட்டு காரில் ஏறி சென்று விட்டனர் அந்த கயவர்கள்… 

 

முகம் எல்லாம் வேர்த்து பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள் அமிர்தா…. இன்னும் பத்தே நிமிடத்தில் அவள் உடல் வெடித்து சிதற போகிறது என்று அறிந்தவளாள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்…. கண்கள் சொருக…வெடிப்பதற்கு முன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றியது… ஆனால் கட்டப்பட்ட கை கால்களினால் அவளால் ஒரு இன்ச் கூட நகற்ற முடியவில்லை… 

 

மரணம் பயம் என்பார்களே அதை நன்றாக உணர்ந்து கொண்டாள் அமிர்தா… 

 

மனதில் என்னென்னவோ சிந்தனைகள் ஆட்டி படைக்க… இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது… தூரத்தில் பார்வையை பதித்தாள்…. விநாயகர் ஊர்வளம் செல்லும் மேள சத்தம் காதை கிழித்தது… 

 

விநாயகா… உன்னைய நம்பி தான் இங்க வந்தேன்… என்னைய காப்பாத்து…என்று அவள் பிராதிக்க…… 

 

“டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என்று காதை கிழிக்கும் சத்தம் ……. ஊரெங்கும் புகை மண்டலம்….. 

 

விநாயகர் ஊர்வலத்தில்…. வெடி குண்டு வெடித்து இருந்தது… 

 

சில மணி துளிகளில் கண் விழித்து பார்த்தாள் அமிர்தா….இன்னும் தான் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற உணர்த்த பின்பே மூச்சு சீராக வந்தது… 

 

இருந்தும் சத்தம் கேட்டதே ..அப்படி என்றால் ஊர்வலத்தில் தான் வெடித்ததா என்று நினைக்கையிலேயே கண்களில் நீர் நிற்காமல் வந்தது… விநாயகர் அவள் வைத்த வேண்டுகோளை நிறைவேற்றி விட்டார் போலும்… அவளோ தான் மட்டும் உயிர் தாப்பினால் இங்குள்ள அனைவரும் தப்பி விடுவார்கள் என்ற எண்ணத்தில் வேண்ட… விநாயகரோ வேறு கோணத்தில் அதை நிறைவேற்றினார்… ஒரு செயல் இந்த அண்டத்தில் நடைபெறுகிறது என்றால் காரணம் இல்லாமல் ஒரு போதும் நடைபெறாது.. அதே போல் நடக்க இருப்பத்தையும் யாராலும் தடுக்க இயலாது என்பது மறுக்க முடியாத உண்மையே…

 

சயரன் சத்தம் காதை கிழித்தது… போலிஸ் வாகனம்…தீயணைப்பு துறை என்று வரிசையாக வந்து கொண்டிருந்தது… அப்போது தான் உணர்த்தாள் அவள் இருக்கும் வேன் நகர்ந்து சென்று கொண்டிருப்பதை….

 

அப்போ எல்லாம் பிளான் பண்ணி தான் நடக்குதா… ஆனால் அவன் அப்படி சொல்லையே…பத்து நிமிஷத்துல வெடிக்கும்னு தானே சொன்னான் என்று தனக்குள் ஒரு யோசனையோடு அமர்ந்திருக்க….அவள் இருக்கும் வாகனம் நின்றது…

 

ஏன் வண்டி நிற்கிறது என்று தெரியாமல்….. பதட்டத்தில் அவள் அமர்ந்திருக்க… படு ஸ்டைலாக அந்த வண்டியில் ஏறினான் சாம்பல் விழியன்…. 

 

இவனா…என்று மறுபடியும் அவன் கண்களில் கட்டுண்டு போனாள் அமிர்தா… 

 

முகத்தை சிவப்பு வண்ண கர்சீப்பால் மூடி கொண்டு கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் அவன் வைத்திருக்க… அவனது கட்டுக் கடங்காத கேசம் அவனது சாம்பல் விழிகளை அங்கும் இங்குமாய் மறைத்த வண்ணம் அவனது நெற்றியை ஆக்கிரமிக்க…. ஒய்யாரமாக நடந்து வந்து அவள் முன் அமர்ந்தான்…..

 

பயத்தில் வாய் தானாக மூடிக் கொண்டது அமிர்தாவுக்கு…. 

 

வந்து ஐந்து நிமிடம் கடந்த பிறகும்…அவளை பார்க்கும் பார்வையில் இருந்து இம்மியும் நகரவில்லை அவனது சாம்பல் விழிகள்… 

 

அவளுக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல இருந்தது….. தன்னை இப்போது கொலை செய்து விடுவானோ என்று பயத்தில் அவள் இருக்க… அவனோ படு கூலாக கால் மேல் கால் போட்டு கொண்டு….

 

இப்போ தெரிஞ்சதா….. ? இதுதான் அவளிடம் அவன் பேசிய முதல் வார்த்தை…. 

 

எது என்று புரியாமல் அவள் பயத்தில் முழிக்க…..

 

பயம்…. என்று நக்கலாக சிரித்தான்…

 

உண்மையும் அதுதானே மரண பயம் என்ன என்பதை அவன் அப்பட்டமாக காட்டி விட்டான்… இப்போதே கொன்று விட்டால் கூட நிம்மதியாக இறந்து விடுவாள்… இல்லையெனில் ஒவ்வொரு நிமிடமும் அவள் பயத்தில் அல்லவா செத்துக் கொண்டிருக்கிறாள்…

 

அவள் மனதில் ஓடியதை துல்லியமாக படித்தான் சாம்பல் விழியன்…..

 

அப்படியெல்லாம் உன்ன ஈஸியா சாக விட்டுடுவேனா… என்ன..?

 

தன்னை காப்பாற்றிய விநாயகரின் செயலை இப்போது புரிந்து கொண்டாள்… இன்னும் தன் வாழ்க்கையில் பயங்கரமான சவால்கள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள்… வாழ ஆசையும் இல்லாமல் போய் விட்டது… இதில் இருந்து தப்பித்து வருவோம் என்ற எண்ணமே அவளுக்கு துளியும் இல்லை…. வாழ்க்கை போற போக்கில் தானும் போக வேண்டும் என்ற முடிவோடு அவனை பார்த்தாள்… 

 

ரைட் இப்போ நீ எடுத்துருக்க டிசிசன்(decision) தான் சரி… என்று மீண்டும் அவன் சரியாக கணிக்க…ஆடி போனாள் அமிர்தா… 

 

இனிமேல் மனதில் எதையும் நினைக்க கூடாது என்று தனக்குள் கூறிக் கொண்டாள்….

 

அவ்வளவு தான் உரையாடல் என்பதை போல அவன் அங்கிருந்து சென்று விட…வேனும் கிளம்பியது…. இதற்கிடையில் வழியில் அவளுக்கு சாப்பாடு வாங்கி வந்து சிலர் கொடுத்தனர்… கைக் கட்டை மட்டும் விடுவிக்க அவன் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்கவும்… அந்த வேனில் இருக்கும் கழிவறையில் கால் கட்டை விடுவித்த பின்னர் சென்று வருவாள்… அவள் வரும் வரை ஒருவன் அவளுக்கு காவல் காக்கும் பணியில் நின்று கொண்டிருக்க… வெளியே வந்தவளை மீண்டும் கட்டி அமரவைத்து விட்டு… செல்வான்.

 

முன்பை நகர தொலைகாட்சிகளில் அதிர்ந்து கொண்டிருந்தது அந்த தகவல்… 

 

மும்பையில் பயங்கரம்… 

 

தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு….

 

மும்பை மாநகரத்தில் அந்தேறி அருகே உள்ள வீர தேசி சாலையில் விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு…. ஐநூறுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்…. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்…. 

 

சம்பவம் நடத்த இடத்தில் போலீஸார்களால் விசாரணை…. இந்த குண்டு வெடிப்புக்கு பின்னே உள்ள திட்டத்தை கூடிய விரைவில் கண்டு பிடிப்பதாக தகவல்…. என்று அங்கு நடக்கும் காட்சிகள் படமாக ஓடிக் கொண்டிருந்தது… 

 

காரில் அமர்ந்து அலை பேசியில் அந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தான் சாம்பல் விழியன்… அருகே தவான் பயத்துடன் அமர்ந்திருந்தான்… 

 

இந்த வருடம் விநாயகர் ஊர்வலத்தில் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தால் குண்டு வைத்தால் இறப்பு கணக்கு கூடுதலாக வராது என்பதை மனதில் வைத்து தான் அமிர்தாவை அங்கிருந்து தூக்கி கொண்டு வந்தான் … 

 

ஆனால் தவானோ… அமிர்தா போய்விட்டால்… எப்படி குண்டு வெடிப்பது சாத்தியமாகும் என்று அந்த கூட்டத்தில் அவனது திட்டத்தை நிறைவேற்றி வைத்து  விட்டு …. சாம்பல் விழியானிடம்…நற்பெயர் எடுக்கும் பொருட்டு இந்த வேலையை செய்து விட்டு வர…அவனது கடுங்கோபத்திற்கு ஆளானான் தவான்… 

 

அமிர்தா உடலில் பொத்தான்களை அமுக்கி பாம்மை செயலிழக்க வைத்து விட்டு…அவளுக்கு மரண பயத்தை காட்ட வேண்டும் என்பது தான் அவன் திட்டம்… இதில் பாம் வெடித்தது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் … செய்தது யார் என்று அவனுக்கு தெளிவாக தெரிந்தது… 

 

தன் ஆத்திரத்தை அடக்கி கொண்டு…கடைசியாக எச்சரிக்கை செய்து விட்டு விடுவித்தான் தவானை … பாகிஸ்தானை நோக்கி அமிர்தாவுடன் பயணம் ஆனது அந்த கும்பல்…. 

 

ஐந்து நாட்கள் ஓடி இருந்தது… இந்த ஐந்து நாட்களும் சாம்பல் விழியன் அமிர்தாவின் கண்களில் படவில்லை… ஒவ்வொரு முறையும் கதவை திறந்து யாரேனும் உள்ளே வரும் பொழுது அவள் கண்கள் அவனை எதிர்பார்த்தே ஆர்வமாக காத்திருக்கும்… அப்படி காத்திருக்கும் விழிகள் வேறு ஒருவனை கண்ட பிறகு சட்டென்று வாடிவிடும்… இதுவே வழக்கமாகி போனது….

 

பாகிஸ்தானில் உள்ள கரகோரம் மலை பகுதிக்கு சென்று அங்குள்ள அவர்களது இருப்பிடத்தை அடைந்தனர்… 

 

அன்று இரவு அவளை ஒரு குடிலில் தங்க வைக்க… விடிந்து பார்க்கையில் அங்கிருந்து தப்பி இருந்தாள் அமிர்தா .. இதையெல்லாம் நினைத்து பார்த்தவன் தான்… அவளை போடும் படி கூறி விட்டு அங்கிருந்து பிஸ்டலுடன் குடிலுக்குள் சென்று விட்டான்……

 

அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவர்கள் கையில் வசமாக சிக்கினாள் அமிர்தா… 

 

சனா💕

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ekkaaaa 🙈🙈🙈🙈🙈😍 intha rocky bai 😂😂 avanoda antha ash eye 🙈🙈🙈 enna romba attract pannuthu ka 😂😂😂😂 romba kastama iruku ka antha cat eye karana sight adikama Iruka 😂😂😂😂😂😂 pesamale kanna vachie kavuthutan ka 😁😂😂🙈🙈🙈🙈 venam enakaga en yathu baby irukan 😂😂😂 ivan enna romba attract pannitan ka… analum deiii crushuuu😂 marana bethiya ippadiya kattuva 😂 pakki payale athe mari enaku intha thavan Mela santhegama iruku ka 🙄 bcoz ippadi avanuku bayanthu seiravan than climax la main villan thurogi ya varuvan 😂😂😂 inimel intha ash eye ku villan nu peru vachiten 😂😂😁 emma ami avolo sekiram unnala en villan kitta irunthu thappikka mudiyathu😂😂 nee irukurathu pakistan la paramakudi la illa😂😂😂 easy ya varathuku 😂😂superrrr ud ka ❤️❤️❤️😍 ama ivanunga ethuku gundu vaikuranunga 😂😂 analum unga kathaila than ka theeviravathi kuda alaga irukanunga 😂😂😂