Loading

#garland wala

#வெண்மேகமாய் வந்து தாலாட்டவா

“அவன் இப்படியே வச்சுட்டு இருந்தா எதுவுமே சரிவராது மதனி… எத்தன நாளைக்கி தான் இப்புடி அவன இந்த ஊருக்குள்ளாரவே சுத்திக்கிட்டு இருக்க விடுவிய? படிச்ச படிப்புக்காண்டியாச்சும் அவனுக்கு புடிச்ச வேலய பாக்க விடலாமுல்ல…” என்ற கணவரின் சோதரனை பார்த்தவர் கொஞ்சமே கொஞ்சம் கடுமை கூட்டிய அவருடைய இயல்பான இனிமைக்குரலில்,

“இந்த விசயத்துல யாருமே தலையிடாதிங்க தம்பி… கோச்சுக்கிடாதிங்க திரும்பவும் அவன அங்கனயே அனுப்பிவிட்டு அவனுக்கு ஏதுனாச்சும் ஆயிப்போயிடுச்சுன்னா? நாமளே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒத்தப்புள்ளய வெச்சிக்கிட்டு இருக்கோம்…” என்று கூற இவரோ உதட்டைப் பிதுக்கியபடி திரும்பி தூண் மறைவில் நின்றிருந்தவனை ஒரு பார்வை பார்த்து வைத்தார்…

**********************************************

“தங்கப்புள்ள தனியா விட்டுப்புட்டு போறேனே பார்த்து இருந்துக்குவியா? அப்பாவுக்கு நீ இல்லாம எதுவுமே ஓடாதுடா செல்லம்…” என்ற தனது தந்தையை பார்த்தவள் புன்னகை மாறாமலேயே,

“ப்பா… மிஸ் யூ லாட்ப்பா…” என்று கட்டிக்கொள்ள, தனது செல்ல மகளின் தலையை ஆதரவாய் வருடியவர்,

“மீ டூ டா கண்ணம்மா…” என்று நெற்றியில் இதழ் பதித்தபடி, “பார்த்து இருந்துக்கோ… எது வேணும்னாலும் உடனே கால் பண்ணு… அப்பா ஒடனே பணம் அனுப்பி விடுறேன்…” என்க, புன்னகைப் பூத்த இதழ்களுடனே,

“லவ் யூப்பா…” என்று அணைத்துக்கொண்டாள்…

**********************************************

“ஏலே ஏலே மேகாப்புள்ள எங்கன இருக்கவ?…” என்ற கீச்சிட்ட குரலோடு காற்றைக்கிழித்தபடி அறைக்குள் நுழைந்தாள் அவள்… அறையானது எவரும் இன்றி வெறுமனேயென்று காட்சியளிக்க பாத்ரூமிற்குள் தண்ணீர் ஓடும் சப்தம் கேட்டது… படபடவென்று பாத்ரூம் கதவை தட்டியவள்,

“இந்தாப்ள குளிச்சுக்குட்டா இருக்க நீயி? ஒரு நாளைக்கு எத்தனவாட்டிதேன் குளிப்பியோ…” என்று வாயிலில் நின்றபடியே கத்த, தண்ணீர் ஓடும் சப்தம் நின்ற அடுத்த நொடி இவளது மூக்கை நங்கென்று இடித்தபடி கதவானது சமத்தாய் சுவரில் போய் மோதி நின்றது…

“அடியாத்தேய்…” என்று மூக்கை பிடித்தபடியே கால்களை மடக்கிச்சரிய நாசித்தூவாரங்களில் கொஞ்சமே கொஞ்சம் ரத்தமானது வழியவா வேண்டாமா என்று மெல்ல இறங்கி வந்து பொத்தென்று தரையை நனைத்தது…

“எரும மாடு… வெலகி நிக்க மாட்டியாலே…” என்று தோழியின் கையைப் பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்தவள், தனது டவலைக் கொண்டே,
“ரொம்ப வலிக்கிதாலே…” என்று துடைக்க,

“ஒருவாட்டி நீ வாங்கிப்பாரு வலிக்கிதா இனிக்கிதான்னு தெரியும்…” என்று சிறிதும் யோசியாமல் கையை மடக்கி மூக்கிலேயே நங்கென்று குத்த இம்முறை ரத்தமானது அவளது மூக்கிலும் வந்து கீழே விழவா வேண்டாமா என்று கேட்டுக்கொண்டிருந்தது….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. அடியாத்தி வைலன்ஸா முடிச்சுட்டீங்களே டீசரே😶😶😶😶 போட்டியில்லே வெற்றி பெற வாழ்த்துகள்.

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    3. பழிக்கு பழி… ரத்தத்துக்கு ரத்தம்.. செம்ம .. வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

    4. வாவ் எவ்வளவு அழகா எனக்கு வர்றது இரத்தமா இல்ல தக்காளி சட்னியா னு நீயே ப்ராக்டிகலா தெரிஞ்சுக்க னு செய்முறை விளக்கம் குடுத்துட்டா என் தங்கக்கட்டி … உயிர்த்தோழி னா உயிரை எடுக்கணும் க்கு நீ தான் செல்லம் பெஸ்ட் எக்ஸாம்பிள் 🤭😂😂🤣🤣