Loading

இன்று நண்பகல் 12 மணி….

 

“ஏன் பெண்ணென்று பிறந்தாய்” குறும்படம் லைவ் ஆக யூ டியூபில் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது….

 

ஆரம்பித்தவுடனேயே ஆயிரம் நேயர்கள் பார்வையிட தொடங்கியிருந்தனர்…

 

ஆரம்ப காட்சியில்…

ஒரு அதிதியுடைய நேர்காணலிற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. 

 

அதிதியின் வருகை அறிவிக்கப்பட்டதும் அவரைப் பற்றிய ஒரு சிறு ஆவணப்படம் திரையில் போடப்பட்டது.

 

“If I fall

I’ll rise back up!

 

If I fail

I’ll try again!

 

But I don’t quite from it!”

 

என்று அவர் ‘சிறந்த வணிகருக்கான’ விருதை வாங்கிய  அன்று மேடையில் சொன்ன  நிகழ்வை தொடர்ந்து, அவரது சாதனைப் பயணம் பற்றிய புகைப்படங்கள் அடுத்தடுத்து காட்சிப்படுத்தப்பட்டன. அதில் ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்து வீட்டிலே சிறு உணவகத்தை ஆரம்பித்து இப்போது பல உணவகங்களுக்கு தலைவியாக இருந்து வருவதை  ஆவணப்படம் சொல்லியது.

 

இறுதியாக அவர் விருதை கையில் எடுத்த போது “இந்த விருது என்னுடைய பயணத்தின் ஆரம்பம் மட்டுமே” என்று சொன்னதோடு ஒலித்த பலமான கரகோஷத்தோடு அவரது “பிரித்விகா மதுபாலன்” என்று தோன்றிய பெயரோடு ஆவணப்படம் நிறைவுற்றது.

 

பின் தொகுப்பாளினி ,” லெட்ஸ் வெல்கம் த ஹெட் ஒஃப் பி&எம் ரெஸ்டூரன்ட்ஸ் மிஸிஸ் பிரித்விகா மதுபாலன்” என்க கெமராவின் கண்கள்,மிக நேர்த்தியாய் சேலை உடுத்தி மிதமான ஒப்பனையில் புன்னகை முகத்துடன் கம்பீரமாக அமர்ந்திருந்த பெண்மணியை தன் வட்டத்துக்குள் இழுத்தது. அவரும் தன் வணக்கத்தை தெரிவிக்க நேர்காணல் ஆரம்பமானது.

 

“உங்களை இன்னைக்கு இன்டர்வியூ பண்ண சான்ஸ் கிடைச்சது ஒரு பெரிய லக் தான் மேம்” 

 

“சோ….சொல்லுங்க மேம், இந்த ஜேர்னி உங்களுக்கு எப்படி இருக்கு?” என்றவுடன்

 

அவர் ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்து விட்டு புன்னகைத்தார். அந்த ஒற்றைப் புன்னகை ஓராயிரம் அர்த்தங்களை புதைத்திருந்தது.

 

“நான் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஸ்டோரி சொல்லவா?” 

 

“ஷுவர் மேம்”

 

“தேங்க்யூ!”

 

“ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பொண்ணு.  அவகிட்ட பெருசா காசு இல்லைனாலும் நிறைய கனவுகள் இருந்தது…”

என்று சொல்லிக்கொண்டு போக திரை முழுதும் அவர் நடித்ததை போன்ற கற்பனை காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. கூடவே அவரது குரலும் மெல்லிய இசையும் பிண்ணனியில்.

 

“அம்மா, அப்பாவ ஒரு சொந்த வீட்ல வாழ வைக்கனும், தம்பிய ஒரு நல்ல  நிலைமைக்கு கொண்டு வரனும், தனக்கு னு ஒரு பிஸினஸ். இப்பிடி ஒரு ஸ்கூல் படிக்கிற பொண்ணோட தலைக்குள்ள ஓடிட்டு இருந்த கனவுகள் நிறைய….”

 

“ஆனா அத்தனை கனவும் ஒரே ஒரு பொய்யால தரமட்டமாச்சு. யாரோ ஒருத்தர் அந்த பொண்ணு ஒரு பையன் கிட்ட சாதாரணமா பேசினதை தப்பா சொன்னதை வச்சு நடந்த சிறு வயது கல்யாணம் அவ வாழ்க்கையை மொத்தமா மாத்திடுச்சு….”

 

“அவளோட சிறகுகளை உடைச்சு முடக்கி ஒரு அறைல தள்ளப்பட்டவ விருப்பமில்லாமலே கணவனால கற்பழிக்கப்பட்டாள்”

(இந்த காட்சி ஒரு கறுப்பு திரையின் பின்னால் ஒலித்த சவுண்ட் எஃபெக்ட்ஸ் மூலம் காட்டப்பட்டது)

 

அத்தோட அந்த நரக வாழ்க்கை நிற்காம அவ ஒரு வேலைக்காரி போல நடத்தப்பட்டா…

தனக்கு நடக்கிற கொடுமையை வீட்டுத் தலைவி கிட்ட சொன்னா அவகிட்ட இருந்து கிடைச்சது, காதிலையே கேட்க முடியாத வார்த்தைகள் தான்.

 

அதுக்கு பிறகும் எதிர்த்தவளோட நிலைமை இன்னும் ரொம்ப மோசமாச்சு….

 

தனியா ஒரு அறைல அடைக்கப்பட்டவ திடீர்னு நாலு காம பேய்களோட கண்கள சந்திச்சா. உடனே வெளியேற பார்த்தவளை விடாம பிடிச்சது அந்த கொடூர கைகள்.

 

‘என்னங்க யாரிவங்க. பிளீஸ் என்னை காப்பாத்துங்க’ னு கதறினவளுக்கு கிடைச்ச பதில், அவனோட ஆங்கார சிரிப்பு சத்தம் தான்.

 

திகைச்சு போனவ விடாம அந்த கதவை தட்டி தட்டி அவளோட அத்தையை கூப்பிட எந்த பதிலும் இல்லை. அந்த பேய்கள் கிட்ட போராடி ஜன்னல் பக்கம் போக…

 

(சிறு இடைவெளி விட்டு)

 

தெரிஞ்சது, காசை எண்ணிட்டு இருக்க அவ அத்தை தான்.”

எனும் போது பிரித்விகாவின் குரல் கம்மியிருந்தது.

 

“அந்த முயற்சியும் வீணா போக, 

இறுதியா ,ரொம்பவும் போராட முடியாம அந்த கொடூரன்கள் கிட்ட கால் ல விழுந்து கெஞ்சி கூட பாத்துட்டா. அவளோட “ஐயோ!!!!! யாராவது காப்பாத்துங்களேன்!!!!” னு வந்த அழுகையோடான அலறல் அந்த அறையை தாண்டி கேட்க கேட்க….” என்ற பிரித்திகாவின் தொண்டை கரகரத்த குரல் ஒலிக்க திரை இருண்டு நேர்காணல் திரை வந்தது.

 

கவலையும் குழப்பமும் ஆக இருந்த தொகுப்பாளினி பிரித்விகாவையே பார்க்க, அவரின் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கன்னத்தில் உருண்டு வந்தது.

 

பின் அவரே தொடர்ந்தார்,” குத்துயிரும் கொல உயிருமா ரோட்டில இருந்தவளை ஒரு புண்ணியவான் ஹாஸ்பிட்டல் ல சேர்த்ததும், அவளால இனிமே ஒரு குழந்தை பெத்துக்க முடியாது னு அவளோட கற்பபையை நீக்கிக்கிட்டாங்க. 

இதுக்கு மேலேயும் தனக்கு வாழ்க்கை தேவையா னு தற்கொலை பண்ணிக்க போனவள ஒரு பெண்ணோட கை தடுத்துச்சு. 

 

‘நீ எதுக்காக சாகனும்? நீ எந்த தப்புமே பண்ணலை. இன்னும் உனக்கு வாழ்க்கை இருக்கு. இங்க தப்பு பண்ணவங்க தான் சாகனும். அவனுங்களுக்கு சரியான தண்டனையும் கிடைக்கனும்’ னு சொல்லி வெளிய கூட்டிட்டு வந்தது, 

அந்த பொண்ணோட உயிரை காப்பாத்த ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தவங்க தான்.

 

அவங்க உதவியோட போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்க போனா, அவங்க அ…அது..அதுக்கான வீடியோ ஆதாரம் இருக்கா னு  கேட்டாங்க. 

 

ஓய்ந்து போய் வந்த பொண்ணோட மனச மாத்தி ‘ நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு. நான் இதை பாத்துக்கிறேன் னு’ அவளை மேல படிக்க வச்சாங்க. அந்த பொண்ணுக்காக அவங்க போராடி அந்த கொடூர கூட்டத்துக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க போராடுனாங்க. 

ஆனா அவங்களால போராட மட்டும்

தான் முடிஞ்சுது. 

 

அவங்க அத்தனை போராட்டத்தையும் பணம் னு ஒரு விஷயம் அதை இல்லாம ஆக்கிடுச்சு.” என்று கதையை முடித்தவர் கண்கள் முழுதாக கலங்கி கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

 

பின் நிமிர்ந்து அவர் தொகுப்பாளினியை பார்க்க அவளும் கலங்கி போய் தான் அமர்ந்திருந்தாள். 

 

“என்னாச்சு ? கதைல ஹேபி என்டிங் இல்ல னு வருத்தமா?”

 

அமைதியே அவள் பதிலாகியது.

 

“இந்த கதைல நான் சொல்ல போற கடைசி லைன் ஒரு வகைல ஹேபி என்டிங் தான்.”

 

“சொ…சொல்லுங்க மேம்.”

 

“இன்னைக்கொரு நல்ல பிஸினஸ் வுமனா உங்க முன்னாடி இருக்க இந்த பொண்ணு தான் கதைல வந்த அந்த பொண்ணும்” என்று தன்னை அவர் கை காட்ட 

 

அந்த தொகுப்பாளினி “மேம்!!!!?” என்று எழுந்தே விட்டாள். யாரோ ஒருவரின் கதையை வைத்து ஒரு கருத்து  சொல்ல வருகிறார் என்று நினைத்திருந்தவள் தன் முன்னே அமர்ந்து இருப்பது அந்த கதையே தான் என்று அறிந்தவள் அதிர்ந்து போனாள். சுற்றியிருந்த நிகழ்ச்சி குழுவினருக்கும் அதே நிலை தான்.

 

இதற்கு காரணமானவரோ ஒரு புன்னகையை உதிர்த்து எழும்பி வந்து அவளை அமர வைத்து தானும் அமர்ந்து 

தொடர்ந்தார்.

 

“நான் இன்னைக்கு இந்த நிலைமைல சாதிக்க, என் கூட இருந்தவங்க ஒன்னு என்னை காப்பாத்தினவங்க. ரெண்டாவது என்னை பத்தி முழுசா தெரிஞ்சும் காதலிச்சு கல்யாணம் பண்ண என் கணவர் மதுபாலா”

 

“மேம் எ..எனக்கு என்ன சொல்றது னு தெரியல” என்று உணர்ச்சி வசப்பட

 

“இட்ஸ் ஓகே”என்றார்

 

“நான் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு”

 

“சொல்லுங்க மேம்”

 

“அதுக்கு காரணம் எனக்குள்ள ஓடிட்டு இருந்த நாலு கேள்விகள்…”

 

(சிறு அமைதிக்கு பின்…)

 

“ஒன்னு- இந்த சமூகத்தில ஒரு பொண்ணா பிறந்தது தான் என் தப்பா?”

 

“இரண்டு- என் வாழ்க்கைய வீணாக்க வந்ததும் ஒரு பொண்ணு தான். என்னை மீட்டதும் ஒரு பொண்ணு தான். அப்போ இந்த சமூகம் எது நடந்தாலும் முழு தப்பும் ஒரு பொண்ணு மேல தான் னு பழி சொல்றது தான் உண்மையா?”

 

“மூணாவது- இப்பிடி பாதிக்கப்பட்ட பெண்கள் ‘ஏன் பொண்ணா பிறந்தோம்?’ னு நினைச்சு நினைச்சு வேதனைப் பட்டு சமூகத்தில வாழாம தற்கொலை தான் பண்ணிக்கனுமா?

 

“நாலாவது- இதை ஒரு பாதிக்கப்பட்ட சாதாரண பொண்ணா இருந்து மக்கள் கிட்ட கேட்க முடியுமா?

 

“ இப்போ இந்த அத்தனை கேள்விக்கும் பதிலா தான் உங்க முன்னாடி இருக்கேன். இந்த மாற்றம் எனக்கு மட்டும் இல்ல இன்னும் எத்தனையோ பெண்களுக்கும் நடக்கனும். அதுக்காக தான் இந்த இன்டர்வியூ கும் நான் சம்மதித்தேன்.”

 

“இன்னும் ஒரு கேள்வி மிச்சம் இருக்கு. ஆனா இந்த கேள்விக்கான பதில் நீங்க தான் சொல்லனும். அதாவது மக்கள் நீங்க தான் சொல்லனும்.” என்று நன்றாக கெமிரா திரும்பினார்.

 

“இந்த கொடுமைகள் சமூகத்தில தொடர்ந்து நடந்துட்டு தான் இருக்கு. 

ஒரு பெண்ணுக்கு மட்டும் இல்ல 

ஆணாய் பிறந்த குழந்தைகளுக்கும் தான். 

 

அநியாயம் , வயசு வித்தியாசம் பார்க்காம நடந்துட்டே தான் இருக்கு.

இதை பத்தி படங்களும் விவாதங்களும் பத்திரிகைகளும் தொடர்ந்து பேசிட்டே தான் இருக்கு. ஆனா எந்த மாற்றமும் இல்லை. 

 

ஏன் னா, இங்க மாற வேண்டியது தனி ஒரு ஆணோ இல்லைனா ஒரு பெண்ணோ கிடையாது. மொத்த சமூகமும் தான். அதோட 

இனியும் பயந்து நடுங்காம எழ வேண்டியது பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் தான்.

இப்போ சொல்லுங்க, இந்த மாற்றம் இனியாவது நிகழுமா? 

 

என்று அவர் கேட்டதோடு முப்பது நிமிட குறும்படம் “ஏன் பெண்ணென்று பிறந்தாய்? என்ற தலைப்போடு முடிந்து காஸ்ட் என்ட் க்ரூ வின் பெயர்கள் திரையில் வந்து கொண்டிருந்தது.

 

இங்கு யூ டியூப்பை பார்த்தால் எத்தனையோ மில்லியன் விவ்ஸ், லைக்ஸ், மற்றும் சாதகமான கமெண்ட் ஸ் என்று அதிகரித்தவாறு இருக்க

 

மாஸ்டர் மைண்ட்ஸ் குழுவினரும் குறும்படத்தின் நடிகர்களும் இந்த ஆரம்ப வெற்றியை ஸ்டூடியோவிலிருந்து கத்தி கூச்சலிட்டு மகிழ்ந்தனர். 

 

ஒருவருக்கொருவர் அணைத்து தட்டிக்கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

 

அதிலும் மகிழின் நட்பு வட்டத்தின் சேட்டைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். 

 

இறுதியாக மகிழ் மொழியிடம் வாழ்த்தைக் கூற திரும்பி அவளைப் பார்க்க அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

இப்போது அவளைப் பார்த்து சிரிப்பதா  வேண்டாமா என்று தனக்குள்ளே ஒரு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க 

அவளோ இயல்பாக அவனை நெருங்கி அணைத்து வாழ்த்தி விடைப்பெற்றாள்.

 

இப்போது அதிர்ந்து 

சற்று சிவந்த காதுகளோடு நின்றவன் மனதில் நேற்றைய நினைவுகள்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்