Loading

காலையில் கிளம்பின பொழுது அம்மா தடுத்தாள்
இராகு காலம் முடிந்த பிறகு
கிளம்பு இந்த நூற்றாண்டிலும்
ராகு காலத்தை நம்புகிற விசித்திர மனிதர்கள்,, போம்மா
உனக்கு வேறே வேலையில்லை”
ஆட்டோவில் அமர்ந்தேன்,
கை,முகம், தலை கால் எல்லாத்துக்கும் சானிடைசரால்
அபிஷேகம், வாங்கற ஆட்டொ
காசு பூரா சானிடைசருக்கு போய்விடும்” வண்டி வேகமாக
போக தொடங்கியது” வழியில்
ஒரு சைக்கிள், ஆட்டோகாரன்
போட்ட சடன் ப்ரேக்கில் நான்
மீட்டர் பாக்ஸில் தலை இடித்துக
கொண்டேன்” நெற்றியில் ரத்தம்,
ஆட்டோகாரனும் சைக்கிள் காரனும் சண்டை போட
ஆரம்பித்து விட்டார்கள், வணடியில் இருக்கும் மனிதரை
பற்றி கவலையில்லை, சரியான
சாவுகிராக்கி என்று ஆட்டோ
காரன் கத்திக் கொண்டு
இருந்தான்,, தப்பு சைக்கிள் காரன் மேல் இருந்தாலும்
டாமேஜ் ஆன ஆட்டோவுக்கு பணம் கொடுக்காமல் தப்பிக்க
இது ஒரு நாடகம், தப்பு
பணணினாலும் ஒத்துக்காத
மனிதர்கள், தன் தப்பை மற்றவர்
மேல் திணிப்பர்கள், எனக்கு டைம் ஆனதால் நான் இறங்கினேன், அதறகுள் ச்ண்டை
முடிந்து விட்டது, திருமப பயணம்
வழியில் தலைக்கு கட்டு
இரத்தம் வழிய நிற்கும் என்னை பார்க்காமல் போனில்
யாரிடமோ பேசிக் கொண்டு
இருந்தார் டாக்டர், நான் இரண்டு
தடவை கூப்பிட்டும் பயனில்லை,
ஆட்டோகாரனுக்கு வந்ததே
கோபம், “இங்கே வலியோடு
ஒரு மனிதன் நிற்கிறான், அவனை பார்க்காமல் போனில்
என்ன பேச்சு”?போனை பிடிங்கி
ஒரே எறி,? நீ அரசு டாக்டர்
தானே? நாங்க கொடுக்கிற வரி
பணத்தில் தானே பிழைக்கிறாய்?

பின்னே என்ன இவ்வளவு
ட்ராமா போடறே? அனியாயத்தை
கண்டு பொங்கும் ஒரு யுக
புருஷனாக நான் அவனை
கண்டேன், ஒரு மனிதனுக்குள்
எவ்வளவு பரிமாணங்கள் ஒழிந்து இருக்கு? சில இடங்களில் சாத்வீகமாக
இருந்தால் காரியம் நடக்காது,
தடி எடு்த்தால் தான் காரியம்
நடக்கும், சட்டை எல்லாம்
ரத்தமா்க இருந்ததால் மீட்டிங்
கான்ஸல் பண்ணி விட்டு
அதே ஆட்டோவில் வீட்டுக்கு.
போய் விட்டேன், .ராகுகாலத்தை
நம்பும் அம்மா, தன் மேல் தப்பு
இருந்தாலும் பணம் தராமலிருக்க
பார்க்கும் சைக்கி்காரன், தன்
கடமையை ,சரியாக செய்யாமல்
இருக்கும் ,டாக்டர், அவரை சரியாக வழிக்கு ,கொண்டு
வரும் ஆட்டோ ட்ரைவர்,
எந்த இடத்தில் பலம் ,ப்ரயோகித்தால் ,காரியம் நட்க்கும்னு தெரிந்த ,ஒரு
நல்லவன் வீட்டுக்கு வந்தவுடன்
அம்மா ,ஒரு நமட்டுச் ,சிரிப்புடன்
வறவேற்றாள் எவ்வளவு
விதமான குண நலன்களை
கொண்ட விசித்திர மினிதர்கள்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

 1. deiyamma

  சைக்கிள் மீது ஆட்டோ மோதியதா?

  அவ்வளவு அடி படுமா என்ன? எனக்கு கொஞ்சம் கொஞ்சம் லாஜிக் முறைக்கிறது.

  சொல்ல வந்த கரு அழகு. வார்த்தை அமைப்புகளை இன்னும் மெருகேற்றி இருக்கலாமோ.. இது என் எண்ணம்.

  … ” ” ! இந்த குறிகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

  வாழ்த்துக்கள் தோழி. உண்மை தான். எல்லோரும் ஒன்று போல இருப்பது இல்லை. குணங்கள் மாறுபடும்.. விசித்திர மனிதர்கள் வாழும் உலகம் இது.

 2. ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு குணம்..சிலரை பார்க்கும்போது நல்லவங்கனு பீல் வரும் ஆட்டோக்காரரைப் போல..என்னடா இப்படி விசித்திரமா இருக்காங்கனு சிலரை பார்த்து தோணும் சைக்கிள்காரன்,டாக்டர் போல..நைஸ் சிஸ்