Loading

“என்ன கிரிஜா! ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கேட்டாள் ஜானகி, எதிர் வீட்டில் இருப்பவள். கோயிலில் சாமி கும்பிடலாம்னு வந்தா, இங்கேயும் இதே கேள்வி தானா?
கிரிஜாவுக்கு ஒரே வருத்தம். திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள் எத்தனை எத்தனை கேள்விக் கணைகள் ! அப்பப்பா! இவளாவது தேவலை, இதோட விட்டாள்.

அன்று கடைத் தெருவில் பார்த்து விட்டுப் பக்கத்து வீட்டு பாமா கேட்டாளே ஒரு கேள்வி! எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க? அவள் கேட்டது இது தான்: ” என்ன கிரிஜா! ஏதாவது பிளான் ல இருக்கீங்களா? அதான் இந்தக் காலத்துப் பிள்ளைங்க பிள்ளை பெத்தா, தங்களோட அழகு குறைஞ்சு போயிடும்னு நினைக்கறாங்களே! நீயும் அப்படித் தானா?” என்று கேட்டவுடன் அப்படியே துடி துடித்துப் போய் விட்டாள்.

வீட்டிற்கு வந்தவள் தங்களது அறையில் போய் கதவைச் சாத்திக் கொண்டு விட்டாள். கணவன் கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

சில நிமிடங்கள் கழித்துக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

” இங்கே பாரு கிரிஜா! என்ன ஆச்சு? ஏன் இப்படிச் சோர்ந்து போய் இருக்கேன்னு கேட்டவுடன் நடந்ததைச் சொன்னாள்.

” நீ இதை எல்லாம் கண்டு கொள்ளவே கூடாது; இப்படியும் விசித்திர மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்; உன் வேலையைப் பாரு!” என்றவுடன் இவளுக்கு மனத்தெளிவு ஏற்பட்டது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. எப்போதும் எங்கேயும் நடக்கும் நிகழ்வு தான் இது. உங்கள் பாணியில் அழகாய் கதையை எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    எதையும் கண்டு கொள்ளாமல் நாம் தான் வாழ பழகி கொள்ள வேண்டும்..

  2. ஏன் மா பாமா அதை போய் அழகு குறைஞ்சிடும்னு நினைக்கறவங்ககிட்ட கேளு..கிரிஜா போன்ற ஆட்களை கஷ்டப்படுத்துவதை பாமா போல் நிறைய பெண்கள் செய்து கொண்டிருக்கின்றனர்..நைஸ் சிஸ்