Loading

“நான் எங்கிருக்கிறேன்??? ஒருவேலை தேவலோகமோ??? இவர்களின் முகத்தில் தான் எத்தனை தெய்வீகம்..கல்லங்கபடமற்ற இவர்கள் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலும்.

ஆஹா!!!! எவ்வளவு இயற்கை வளமான இடம்!! எங்கும் மரங்களும் மலைகளும் கடலும் ஆறுமாக இயற்கை அன்னை படைத்திருக்கிறார்!!!

அதோ!! அது என்ன ??..குருவிக்கூட்டை போல அற்புதமான சிறிய வீடுகள். விலங்குகளும் இவர்களும் பாகுபாடின்றி சந்தோஷமாக வாழ்கிறார்களே……இதல்லவோ சொர்க்கம்!!!

ஐயோ!!! இதென்ன அபத்தம்!!! சற்றுமுன் தான் ரசித்தவைகள் ஒரு நொடியில் அழிந்துவிட்டனவே!!!..

இந்த பாழாய்ப் போன மனிதர்கள் இங்கெதற்கு வந்தார்கள்!!! அத்தனையும் சுடுகாடைப் போல் சிதைத்து விட்டார்களே!!

அதோ!!! இயற்கை அன்னை கதறுகிறாள்…தான் ஈன்று பேணி வளர்த்த செல்வங்களை பறிகொடுத்துவிட்டு கண்ணீரில் கரைகிறாள்!!!

ஆஆஆஆ!!!! அவளையும் கொன்றுவிட்டனரே இந்த பாவிகள் !!!”, திடுகிட்டு கண் விழித்தான் வளவன்.

“அத்தனையும் கனவா?!?!…

இல்லை இல்லை….தற்போது நாம் வாழும் உலகமும் அவ்வாறு தானே அழிந்து வருகிறது. பொய்யும் புனைசுருட்டும் கொண்டு என்னவெல்லாம் செய்கின்றனர்.

எவ்வளவு விசித்திரமானவர்கள் இந்த மனிதர்கள் . இயற்கை அன்னை  நாம் வாழ வழி செய்து கொடுத்தால், அவளையே கொஞ்சங் கொஞ்சமாக கொல்கிறார்களே!!! பெற்ற அன்னையை கொல்லும் இவர்கள் எல்லாம் என்ன பிறவியோ?!?! அப்படி எல்லா உயிர்களையும் வளங்களையும் அழித்து இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள்??

இவ்வுலகம் அனைத்து ஜீவராசிகளுக்கும் தானே!! அவற்றை இவர்கள் மட்டும் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்!!  “என்று மனதில் வெதும்பினான் அந்த வனத்துறை அதிகாரி, வளவன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. இயற்கை அழிவை தடுக்க ஒரு விழிப்புணர்வாய் இந்த படைப்பை எடுத்துக் கொள்ளலாம்.. இயற்கைக்கு எதிரான செயல்பாடுகள் அழிவின் ஆரம்பம்..அருமை சிஸ்