Loading

மனைவியின் படத்தை காட்டி “இதை தவிர வேறு எதுவுமில்லை”  என்று வாதாடிய சிவாவை சந்தேகத்தோடு பார்த்தான் போலீஸ் அதிகாரி அரிமா.

‘ஏன் அவள் பொருட்கள் ஒன்று கூட இந்த வீட்டில் இல்லை. அப்போ இவன் எதையோ மறைக்க தானே பார்க்கிறான்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவன் “சரி. இதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று கிடைத்த புகைப்படத்தை கொண்டு போய் தோண்டி துலாவ தொடங்கினான்.

நாட்கள் நகர்ந்தது தான் மிச்சம். சிறு துப்பும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அரிமா மனம் தளராமல் அந்த படத்தை பெரிது பெரிதாக என்லார்ஜ் செய்து முகத்தை உற்று கவனித்தான். அந்த சிரிப்பில், அந்த பல் வரிசையில் கொஞ்சமே கொஞ்சம் மஞ்சள் நிறம் படிந்து இருந்தது. “இது வழக்கமாக பல்லில் படியும் மஞ்சள் அல்ல. வேறு ஏதோ ஒன்று”

தனக்கு தெரிந்த சில நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்தவன் பின், இறந்து போன அந்த பெண்ணின் கணவனை அழைத்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்ததில் மாட்டி கொண்டான். ஆம் அவன் தான் குற்றவாளி.

சிவா அவன் மனைவி சாப்பாட்டில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து இயற்கையாக ஹார்ட் அட்டாக் வந்து இறந்தது போல மாற்றியிருக்கிறான். ஸ்லோ பாய்சனின் சைடு எபெக்ட் தான் பல்லில் படிந்திருந்த மஞ்சள் நிறத்திற்கான காரணம்.

அவள் புன்னகை சிவாவின் விசித்திரமான திட்டத்தை தவிடு பொடியாக்கி விட்டது. இப்போது அரிமா முகத்தில் புன்னகை தாண்டவமாடியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

9 Comments

  1. Wow😯 ithu ellam photo la thiriuma eppadi🧐🧐🧐enna oru villathanam 🤨🤨 hero super arivu very nice story sis 👍👍

    1. Author

      முதலில் உங்கள் கருத்துக்கு நன்றிமா.. அரிமா அந்த போட்டோவிலே மூழ்கிட்டான். அதாவது ஜூம் பண்ணி வேற வேற கோணத்துல பார்த்ததுல அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம். So வேற நிபுணர்களிடம் கலந்து அலோசித்து.. திரும்ப அந்த கணவனை விசாரித்து உண்மையை கண்டு கொண்டான். அவ்ளோ தான்..

    2. அருமையான பதிவு . வாழ்த்துகள் சகி❤

  2. கதை செம .அரிமா சூப்பர்.கொலை கண்டுபிடிப்பு செம.❤️❤️❤️

  3. Oru pakkathulaye
    Oru kolai
    Oru investigation
    Ellam panni kuttaravaliya kandu pidichchchu
    Very nice

  4. ஒரு பக்கத்தில் சிறப்பான கதை…
    சில இடங்களில் எனக்கு புரியவில்லை… ஆனால் கதை அருமை மா 👌👌👌👏👏👏

  5. வாவ்!!… சிறு துரும்பும் பல் குத்த உதவும்!!!.. சூப்பர் கதை!!!.. வாழ்த்துகள் சிஸ்💖

  6. அரிமா ஒரு போட்டோவை வைச்சு குற்றவாளியை கண்டுபிடிச்சிட்டான்.. சிறப்பான குட்டி ஸ்டோரி சிஸ்