283 views
ஆயிரக் கணக்கானோர் மத்தியில் ஒளிவாங்கியில் முழங்கி கொண்டிருந்தார் தவப்புதல்வன்…
தோழர்களே நாம் அனைவரும் ஓர் தாய் மக்கள் நம்மிடையே ஜாதி மத பேதம் என்பதில்லை ஒருபோதும்.. நம்மிடையே ஏற்றத் தாழ்வென்பதில்லை.. நாம் ஒரே இனம்.. நம் ரத்தத்தின் ரத்தங்களே சொந்தங்களே என்று அரசியல் வாதிகளுக்கே உரிய தொனியில் பேசி முடித்து வீட்டிற்கு வந்தார்..
வந்தவர், வரவேற்பறையைப் பார்த்ததும்
சற்றே முகம் சுழித்து நொடியில் தன் பாவத்தை மாற்றி மலர்ந்த முகத்துடனே
காத்திருந்தவரிடம் நலம் விசாரித்து அவர் வந்த நோக்கம் விசாரித்து வழியனுப்பிவிட்டு உள்ளிருந்த மனைவியிடம் கத்தினார்.. ஏன்டி உனக்கு அறிவிருக்கா அவன் ஜாதியென்ன கோத்திரமென்ன அவனை வெளிய நிற்க வைக்காமல் நடுவீட்டுக்குள்ள விட்டுருக்க.. இனி இப்படி நடந்துக்காத என்று சொல்லிவிட்டு தனதறை புகுந்த தன் கணவனை விழிவிரித்து பார்த்திருந்தார் தவப்புதல்வனின் தர்மபத்தினி..
விசித்திர மனிதன் இவனென்று..
மிகவும் அருமை. வாழ்த்துகள்
எல்லாம் போலித்தனம்…மேடையில் அப்படி முழங்கிட்டு வீட்டுக்கு வந்தவங்ககிட்டவும் நல்லா பேசிட்டு மனைவியை மட்டும் திட்டறது🙂🙂🙂..நைஸ் சிஸ்