Loading

 

ஹோமியோபதி கிளினிக் அது.. அறுந்த போன செருப்பை முன்னால் விட்டுவிட்டு உள்ளே சென்ற கருப்பி கீழே அமர்ந்து, “நேத்து போன் அடிச்சீங்கனு என்ற சின்ன புள்ள சொன்னான்மா..” என்றார் வெகுளியாக..

“ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன்.. எதுக்குனு மறுபடியும் போன் பண்ணி கேட்க‌ மாட்டீயா?” என்று சுள்ளென்று மருத்துவர் வந்தனா கேட்க, அவரும் என்னதான் சொல்லுவார்.. குடிக்கார கணவன், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட பெரிய மகனை வைத்து கொண்டு..?

“இல்லமா நேத்து அவரு சொந்தத்துல இருந்து ஆளுக வந்ததுல மறந்துட்டேன்..‌” என்று திக்கி திணறி கூறிட, “போனதுக்கு அப்பறம் கூப்பிட்டுருக்கனும்.. நீ பண்றப்ப எல்லாம் நான் எடுக்கறேனல்ல?” என்றார் பட்டென்று..

“இல்லமா..” என்று அவர் தயங்க, “பேசாத கடுப்பா இருக்கு.. இனி உனக்கு தேவைனா இங்க வந்து மருந்து வாங்கிட்டு போ..” என்றதும், கருப்பிக்கு விழிநீர் எட்டி பார்த்தது..

இதற்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக அவ்விடத்தை விட்டு வெளியில் வந்தவருக்கு மனமெல்லாம் கனத்தது..பெரிய மகனுக்கு இங்கு தானே மருந்துகளை வாங்கி கொண்டிருக்கிறார்..

அதற்காக தான் அவர் அழைக்கும் போதெல்லாம் ஓடி வருவது மட்டுமில்லாமல் அவர் கூறுவதை வாங்கி வந்தும் தருகிறார்! ஒருநாள் வராமல் போனதற்கு அவரின் குணத்தை காட்டி விட்டாரே?

விரக்தி தளும்ப நடைகள் தளர்க்க இருப்பிடத்தை நோக்கி கருப்பி நடக்க, தேவைக்காக பேசுபவர்களும் ஒருவித விசித்திர மனிதர்களே!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. அது என்னமோ உண்மை தான் அக்கா . தேவைக்காக பயன்படுத்தி குப்பை போல தூக்கி எறியுறாங்க இது எப்ப தான் மாறுமோ 😤😤😐. ஆனா இந்த விசித்திர குணம் படைத்த மனிதர்கள் மாறினால் தான் ஆச்சரியமே 😔😔🤧🤧

  2. ஆம்.. உண்மை தான்.. வித்தியாசமான கதை. வாழ்த்துக்கள்..

  3. தேவைக்காக பழகுறவங்களை அன்றாடம் நம்ம வாழ்க்கையில நிறைய பார்க்கிறோம்..எப்படி இப்படி இருக்க முடியுமோ..அதனாலதான் அவங்க விசித்திரமனிதர்கள்..நைஸ் சிஸ்.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐