Loading

கடற்கரையில் அமர்ந்தபடி வாழ்க்கையை மனதிற்குள் வருணிக்கிறான் அந்த பொறியாளன், “என்னடா இது! என்ன படிச்சோம் என்ன வேலை பார்க்கிறோம், காலைல எந்திரிச்சு குளிச்சு கெளம்பி ஒருநாள் முழுக்க வேலை பார்த்து வெறும் 140 ரூபாய் அல்லோவன்ஸ் குடுக்குறாங்க. இதுக்காடா டிகிரி முடிச்சேன்? வாழ்க்கையாடா இதெல்லாம்?” என்று மனம் புழுங்கிய வேளையில் அவனுடன் வந்த சீனியரின் சத்தம், “டேய் இங்க வாடா ஒரு படகு வந்திருக்கு” என்று. கரை ஏறிய படகின் மீனவ முதியவர் வலையைப் பிரித்து மீன்களை எடுக்க ஆரம்பித்தார். அந்த சீனியர் நூற்றைம்பது ரூபாய் கொடுத்துவிட்டு பிளாஸ்டிக் பையில் இடமில்லாமல் திணித்து மீனால் நிரப்பினார். டேய் தம்பி வீட்டுக்கு போயி மீன ஃப்ரிட்ஜ்ல வச்சு இந்த வாரத்தை ஓட்ட வேண்டியதான் என்று சாதித்த சந்தோஷம் அவருக்கு. அன்றைய மீன்வரத்தும் சிறிதென்பதால் முதியவர் சளைக்காமல் அதைப் பெற்றுக்கொண்டு, எஞ்சிய சில மீன்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு வீடு திரும்பினார்.

கடும் காற்றின் நடுவே தனி ஒருவராய் கட்டுமரத்தை செலுத்தி, அன்றைய நாளின் மீன்வரத்து சிறிதெனினும் கிடைத்த தொகையைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாய் வீடு திரும்பும் அந்த பெரியவரின் விசித்திரமான மனநிலையை நாம் சிந்தித்துப் பார்த்தால். ஐயோ! அப்போ நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன் தான் என்று நினைத்துக் கொண்டான் பொறியாளன்.

வாழ்க்கை ஒவ்வொரு கணமும் ஒருபாடத்தைக் கற்றுக்கொடுக்க தான் முயல்கிறது. ஆனால் நாம் அதை முழுமையாக ஏற்கிறோமா என்பதிலே தான் நம் வாழ்க்கை பயணப்படுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. மிக சிறப்பான கதை .வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு கணமும் பாடம் கற்று கொடுத்து கொண்டு தான் இருக்கு அதை நாம கற்று கொள்கிறோமா என்பது அருமையான வரிகள்

  2. deiyamma

    ம்ம்ம்.. வாழ்க்கை பாடம் அருமை. நம் மகிழ்ச்சி நம் கையில் தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்..

  3. அருமையான படைப்பு..மீன்வரத்து குறைவா இருந்தாலும் அந்தப் பணத்தை வாங்கிட்டு மகிழ்ச்சியாய் போறாங்களே..செம்ம..கருத்துள்ள பதிவு.. வாழ்த்துக்கள் 💐💐💐