Loading

நேர்மை.

“அண்ணா மூன்று பேனா பத்து ரூபாய் ணா..வாங்கிக்கோங்க ணா” பரபரப்பான சாலை அது.. கையில் பிளாஸ்டிக் டிரேயில்..பல வண்ண கலர்களில் பேனாவை வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி..

வயது ஒன்பது இருக்குமா…
காரின் இருந்த இவனிடமும் அந்தப் பெண் கெஞ்சிக்கேட்டாள்.

“ஒரே ஒரு செட் பேனா வாங்கிக்கோங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா “என்று ..

“ஷிட்..பிச்சைக்காரர்கள் தொந்தரவு ஒரு பக்கம்னா.. இவங்களை போல ஆளுங்களோட தொந்தரவு இன்னொரு பக்கம்.. எனக்கு எதுவும் தேவையில்லை நகர்ந்து போ” என்று கோபமாகக் கூறியவன்.பத்தடி தூரத்தில் ஓரமாக வண்டியை நிறுத்தினான்.

அவன் செல்ல வேண்டிய ஹோட்டல் எதிரில் இருந்தது..இறங்கியவன் வேகமாக ஹோட்டலின் வாசலுக்கு செல்ல… பேனா வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்ட சிறுமியும் பின்னாலேயே ஓடி வந்து கொண்டிருந்தாள்.

“அண்ணா கொஞ்சம் நில்லுங்க” என்றபடி…அவனுக்கு அருகில் வந்தவள் அவனை தொட்டிருந்தாள்.

சட்டென அவனுக்கு கோபம் வந்தது. “யார் மேல கையை வைக்கற.. அதுதான் வேண்டாம்னு சொன்னேன் இல்லையா” என்றபடி வேகமாக டிரேயை தட்டிவிட்டு இருந்தான்.

டிரேயிலிருந்த பேனா அனைத்துமே கீழே சிதறி விழுந்து இருந்தது.”இல்லணா கார் பக்கத்துலயே உங்க பர்ஸ் கீழே விழுந்துடுச்சு அதைத்தான் கொடுக்க வந்தேன்” என்று சொன்னபடி கையிலிருந்த பர்ஸை இவனிடம் நீட்டினாள் சிறுமி.

ஒரு நிமிடம் தன்னுடைய தவறு புரிய, பார்த்துக்கொண்டிருக்கும்போதே கீழே விழுந்த பேனாக்களை பொறுக்கியபடி விலகி நடந்தாள் சிறுமி.

முற்றும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. படிச்சிட்டு சொல்லுங்க..

  2. மன்னிக்கவும் நான் இதை குறிப்பிட.. நான் எப்பவோ ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் வரும் நிகழ்வுகளும் உங்கள் கதையில் வருவதும் ஒன்று போல எனக்கு தோன்றியது.

    என்ன இருந்தாலும் வார்த்தை பிரயோகம் உங்களது. அதற்காக வாழ்த்துக்கள் மா.. அருமை.

  3. இப்படிப்பட்டவர்களை ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் அவர்களிடம் கோப முகத்தை காட்டாமல் இருக்கலாம்…சூப்பர் சிஸ்.. வாழ்த்துக்கள் 💐💐💐