மணி 12 பேருந்திற்காக காத்திருந்தாள்.. அப்பொழுது அவள் அருகில் யாரோ இருப்பது போன்று உணர, திரும்பிப் பார்த்தாரள் அங்கே ஒருவன் தோல் வரை சுருள் முடியும் பெரிய தாடியும் வைத்து பார்க்கவே ரவுடி மாதிரி இருந்தான்… கொஞ்சம் தள்ளி நின்றாள்.. அவனும் அருகில் வர, ஓட்டத்தை எடுத்தாள் அவனும் தொடர ஓடிக்கொண்டே கொண்டே இருக்கையில் எதிரே ஒருவன் வருவதைப் பார்த்து உதவி கேட்டாள்.. அந்தோ பரிதாபம் அவன் மன்னித்துவிடு என்னால் உனக்கு உதவ முடியாது என்று கூறினான். எவ்வளவு கேட்டும் உதவி செய்ய மறுத்தான் மீண்டும் ஓட்டதை எடுத்தாள் அந்த ரவுடி விடுவதாய் தெரியவில்லை விடாமல் துரத்தினான். அங்கே ஒருவன் செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தான் அவனருகில் சென்று உதவி கேட்டாள் அவனும் அந்த ரவுடியை அடித்து துவைத்து ஓடவிட்டான்.. பிறகு இவள் நன்றி கூறி ,மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தாள் அப்பொழுது முன்னாள் பார்த்த ஒருவன் சாலையில் கீழே கார் இடிக்க இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தான் அவனருகில் சென்று இப்படித்தான் அடுத்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றால் யாரும் நமக்கு உதவ மாட்டார்கள் என்றாள் அதற்கு அவன் நான் பலவீனமானவன் அவன் எளிதாக என்னை அடித்து வீழ்த்தி விடுவான் அதனால்தான் நான் உனக்கு உதவ மாட்டேன் என்றேன் என்றான் அவள் மனமோ விசித்திர மனிதன் என்றது.
யாரும் உதவ மறுத்தால் தவறாக எண்ணிவிட வேண்டாம் அவர்களின் இயலாமையும் “காரணமாக இருக்கலாம்..
Nice
கரெக்ட்தான்.. எதிர்ல இருக்கவங்க சூழ்நிலையாவும் புரிஞ்சிக்கணும்ல
மிகவும் அருமை. வாழ்த்துகள்
இக்கட்டான சூழ்நிலையில் உதவ முடியாததற்கு அவர்களின் பலவீனமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற இந்த கோணமும் அருமை சிஸ்