Loading

அண்ணா பல்கலைக்கழகம்
கிண்டி, 2011ஆம் ஆண்டு.

ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் அறிவியல் கலை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னையில் இருக்கும் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் தங்கள் ஆசிரியர்களோடு பதினோரு மணியில் இருந்தே கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர்.

கல்லூரி வாசலில் நின்றிருந்த சில கல்லூரி மாணவர்களில் எப்போதும் ஒரு வாடாத சின்ன புன்னகையுடன் வியர்வை வடிய அங்குமிங்கும் ஓடி திரிந்து வேலை செய்தபடி இருந்தார் ‘ஆகாய நீல’ நிறத்தில் சட்டை அணிந்திருந்த ஒருவர். பள்ளி மாணவர்களை அரங்கத்திற்கு அழைத்துச் செல்வது அவர்களுக்கு தேவையான மதிய உணவுகள் வழங்கியது என்று அவர் மொத்த குழுவையும் சிறப்பாக வழி நடத்தினார்.

இதற்கு இடையில் மற்ற மாணவர்களுடன் சிரித்துப் பேசியபடி அத்தனை வேலை பளுவிலும் அவர் மகிழ்ச்சியாக இருந்தது பார்ப்பவர்கள் முகங்களிலும் புன்னகையை தவழ செய்தது. மதியம் ஒரு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்ததும் எங்கிருந்தோ ஓடி வந்த நீல நிற சட்டை அணிந்திருந்தவர் அதற்கு மேலாக கருப்பு நிற கோட்டை மாட்டிக்கொண்டு மேடையில் அமர்ந்திருந்த விருந்தினர்களுக்கு அருகில் அமர்ந்தவுடன் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி!

கலைநிகழ்ச்சிகளின் முடிவில் தான் தெரிந்தது அவர் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவ தலைவர் என்பது. தலைவன் என்பவனுக்கு தலைசிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த அச்சிறப்பானவரை நாம் கடல் மற்றும் வானின் நிறமான ‘ப்ளூ’ என்றழைப்பது தானே தகும்!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    17 Comments

    1. சூப்பர் மஹி அக்கா … இப்ப எல்லாம் தலைவர்கள் என்ற பட்டத்திற்கு வேலையே செய்ய கூடாது என்றே எழுதப்படாத சட்ட விதிமுறைகள் வந்ததோ என்னவோ 😐😐
      தலைவன் னா மற்றவங்களை வேலை வாங்கணும் னு திரியுறாங்க . அதிலிருந்து வேறுபடுவோர் இந்த உலகினில் விசித்திரமான மனிதர்களாகவே கருதப்படுகின்றனர் . 😌😌

      சூப்பர் அக்கா 😘 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

      1. Author

        மிக்க நன்றி மா❤️❤️உண்மை தான் சிறந்த தலைவர்களை உருவாக்குவது தான் நமக்கு நலன் பாய்க்கும். இப்போதைய நம்முடைய தேவையும் அது தான்..!!

        மிக்க நன்றி பேபி❤️❤️

    2. மஹி நீங்க எழுதுர எல்லாமே ரொம்ப அருமையான கருத்து தான். உங்கள் படைப்பை படிக்கும் பேதெல்லாம் இதழ்கடையில் ஒரு சின்ன சிரிப்பு எத்தனை முறை படித்தாலும் அது மறைவதில்லை. ப்ளூ மனிதனை எங்களுக்கும் அறிமுக படுத்தியதுக்கு நன்றி.

      1. Author

        மிக்க நன்றி டா பேபி❤️❤️😍😍உங்க சப்போர்ட் தான் என்னை எழுத வைக்குது… ரொம்பவும் நன்றி பேபி❤️❤️🌷🌷 ப்ளூவை உங்களுக்கு அறிமுகம் செய்ததில் எனக்கும் சந்தோஷம்😊😊🔥🔥

          1. Author

            மிக்க நன்றி டா பேபி❤️😍🔥

    3. வாவ்!! செம செம கலக்கிட்ட போ. இந்த குட்டியிலும் ஒரு சஸ்பென்ஸா…

      அழகான எழுந்து நடை, ஏதோ பெருசா வரும்னு எதிர் பார்த்தா ஏமாற்றி முடித்து விட்ட குட்டி கதை🤣🤣🤣

      வாழ்த்துகள் மா💐💐💐

      1. Author

        Thankyou so much Akka❤️❤️💯💯Ena pandrathu kutty ah mudikanume akkav😂😂😉😉😝😝Athan romba surikiyaachu❤️❤️😊😊🔥🔥

    4. இப்படியும் இருகாங்களா மனிதர்கள்… நிஜமா அவர் விசித்திரமான மனுஷன் தான் 👌👌👍🏻👍🏻👍🏻

      1. Author

        மிக்க நன்றி அக்கா😍😍❤️❤️அவரிடம் இருந்து நாமும் கற்று சிறப்பினரான திகழ்வோம் அக்கா❤️❤️💯💯

      1. Author

        மிக்க நன்றி அக்கா❤️❤️🌷🌷

    5. சூப்பர் சிஸ்..ஒரு தலைவன் எவ்வாறு தலைமை பண்பை செயல்படுத்த வேண்டும் என்பதை சிறப்பாக படைத்தது அற்புதம்..நைஸ் சிஸ்