தனக்கு பிடித்த வேலையில் கிடைத்த முதல் மாத சம்பளத்தை மகிழ்ச்சியோடு வாங்கினாள் பிரியா.
அவள் தினந்தோறும் கடந்து செல்லும் வழியில் உணவில்லாமல் ரோட்டோரம் கஷ்டப்படும் மனிதர்களுக்கு சாப்பாடு பொட்டலம் தர சென்றவளின் ஒரு கையில் பொட்டலம் இருக்க, மறு கையில் ஃபோன் இருந்தது.
அவர்களிடம் பொட்டலம் தர .
அதை தயங்கியபடி வாங்கிய வயதான பாட்டி, ” ஃபோட்டோ எடுக்கணுமா பாப்பா?” என்றவர் கூனிகுறுகி கிழிந்த ஜாக்கெட்டை முந்தானை கொண்டு மூடினார் .
” இல்ல பாட்டி . ஃபோன் பேசிட்டு வந்ததால்தான் ஃபோன் கையில இருக்கு . நாலு பேருக்கு சாப்பாடு கொடுக்க தான் ஆசைப்பட்டேன். அத ஃபோட்டோ எடுத்து நான் நல்லவ , பெரிய மனசு உள்ளவனு யாருக்கும் நிரூபிக்க தேவை இல்லை. வரேன் பாட்டி.” என்றவள் வீட்டை நோக்கி நடக்க.
அவளின் மனமோ, ‘இப்படியெல்லாம் ஒருத்தவங்க மனசை கஷ்டப்படுத்தி ஃபோட்டோ எடுத்து . அதை சோஷியல் மீடியாவில் போட்டு நிறைய ஃபாலோவர்ஸ் வரவைக்குறாங்க . இங்கு யார் கையேந்துவது? சூழ்நிலையாலும், வயதானதாலும் ஆதரவற்ற நிலையில் பிறரிடம் கையேந்துகிறார்கள் அவர்களை வைத்து தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொண்டு பணம் சம்பாதிக்குறாங்க .’
‘உதவி பெறுபவர்களின் நிலையிலிருந்து அவர்களது சங்கடத்தையும் கஷ்டத்தையும் இந்த விசித்திர மனிதர்கள் உணர்வார்களா??? இல்லையென்றால் கை ஏந்தியவர்களின் வலியை உணரும் தருணம் தான் எப்போதோ?’
மீதி சம்பள பணத்தை தன் பெற்றோரிடம் தர சந்தோஷமாக வீட்டின் உள்ளே சென்றாள் பிரியா.
மிகவும் அருமை. வாழ்த்துகள்
100% crct munna valathu kaiyala kudukurathu idathu kaiku kuda theriya kudathunu solluvanga
But
Ippo ellam photo eduthu vilambaram thedurathu than athigamanavargal seiyurathu
Thanks sis
எதார்த்தமான உண்மை. இப்போ உள்ள இயந்திர வாழ்க்கையில் எல்லாமே வியாபாரம், விளம்பரம். அப்படிப்பட்ட மனிதர்களில் ப்ரியா வித்தியாசமானவள்
மிகவும் அருமை. வாழ்த்துகள்
100% unmai… Arumai
Thanks sis
Yadhartham.
Thanks sis
ஆழமாக மனதை வருடிய கதை. குறுகிய வார்த்தைகளை பயன்படுத்தி நிறைவான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்
மிகவும் அருமை. வாழ்த்துகள்
Thanks sis
தற்போதைய சூழலுக்கு ஏற்ற பதிவு..தங்களை விளம்பரப்படுத்துவதற்கு அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டியது..அதை பெருமையா போடறது.குட்டி கதைல பெரிய விஷயத்தை சொல்லியது அருமை..
ஆழமாக மனதை வருடிய கதை. குறுகிய வார்த்தைகளை பயன்படுத்தி நிறைவான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்