Loading

வலுசாறு இடையினில் … 

 

டீஸர்  – 1 

 

“இப்போ உனக்கு என்ன டி பிரச்சனை ? ஏன் இந்த கல்யாணம் வேணாம்ன்னு  சொல்ற ?”, தாய் காமாட்சி அவளை பிடித்து கேட்டார் . 

 

“ நான் வேலைக்கு போகணும் மா .. நல்ல வேலை கிடச்சி இருக்கு .. எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் மா .. ரெண்டு வருஷத்துக்கு எனக்கு கல்யாணம் வேணாம் மா .. “, என அம்மாவிடம் கெஞ்சினாள் முத்தமிழ்நங்கை. 

 

“காமாட்சி .. உன் பொண்ண கல்யாண மேடைல வந்து ஒக்காரா  சொல்லு .. இல்லயா எனக்கு எள்ளு என்னை வச்சிட்டு எங்க வேணா போய் அவ இஷ்டத்துக்கு இருக்க சொல்லு “, தந்தை ஏகாம்பரம் கூறிவிட்டு மகளை பார்த்தார். 

 

“அப்பா .. பிளீஸ் பா .. ஒரு வருஷத்துல அந்த கடன அடைச்சிடலாம் பா.. நான் சம்பாதிச்சி தரேன் .. நானே வேணா அவங்க கிட்ட பேசறேன் பா”, கண்ணில் பெருகும் நீரை உள்ளே இழுத்துக்  கொண்டு பேசினாள் . 

 

“ஒரு பொட்ட கழுதை சம்பாதிச்சி நான் உயிர் வாழறத்துக்கு இப்போவே நான் செத்துடறேன் .. “

 

“ஏங்க இப்படி பேசறிங்க ? இருங்க இவளை நான் சம்மதிக்க வைக்கறேன் “, என காமாட்சி தோளுக்கு மேல் வளர்ந்த மகள் என்றும் பாராமல் அடிக்க ஆரம்பித்தார் . 

அந்த நிறைந்த சபையில் கெட்டி மேளம் முழங்க முத்தமிழ்நங்கையின் கழுத்தில் அவன் தாலி கட்டி விட்டு வெற்றி புன்னகையுடன் அவளை கண்டான் . 

 

“ரொம்ப சிலுப்புன .. இப்ப பாத்தியா சொன்ன மாதிரி உன் கழுத்துல தாலி கட்டிட்டேன் .. சிம்ம வர்மன் டி .. நினைச்சத முடிக்கமா விடமாட்டேன் .. “, என தன் அடர்ந்த மீசையை நீவி விட்ட படி அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினான் . 

 

“தாலி கட்டிட்டா மட்டும் நீ எனக்கு புருஷன் ஆகிடுவியா ? உன்ன மனுஷனா கூட நான் இனி மதிக்க மாட்டேன் வர்மா .. இனிமே நீ அடிக்கடி தோப்ப .. “, என அவளும் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினாள். 

 

“பாக்கறேன் டி அதையும் .. யார்கிட்ட யார் தோக்கராங்கன்னு பாப்போம் “, என மீண்டும் சவால் விட்டு மணவாழ்க்கையில் இருவரும் காலடி எடுத்து வைத்தனர் . 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    40 Comments

    1. வாழ்த்துகள் சகி 😊

    2. வேற மாறி… வேற மாறி… நீ கலக்கு…

    3. Super teaser. சிம்ம வர்மன் மற்றும் முத்தமிழ்நங்கை பெயர்கள் ரொம்ப நல்லா இருக்கு. வர்மன் ஜெயிக்குறானா இல்லை தமிழ் ஜெயிப்பாளா இல்லை விதி ஜெய்க்குமா பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    4. Interesting teaser 👏👏👏👏👏👏👏👏 but I want to know the meaning of the title

        1. Thank you. Eagerly waiting to read the story

      1. பெண்ணின் உணர்வு மறுக்கப்பட்டு
        தமிழோடு வாழ்வும் வளர்ந்தது கோபாக்கிணியாய்‌…😤😤😤

    5. 💞ஆரம்பமே அதிரடியாக இருக்கே 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐

    6. பெண்ணை மதிக்கா தந்தையும் கணவனும்
      வெற்றி பெறுவாளா வாழ்க்கை போரினிலே

      #shailu_with_pattasu

    7. ஆண்களின் வரட்டு கவுரவத்தினாலும், சதியாலும் அவளது ஆசைகள் மடிந்த போதிலும், தன்னம்பிக்கையோடு போராடும் அவளின் கதை!!.. படிக்க ஆவலுடன்!!!.. வாழ்த்துகள் எழுத்தாளரே💖

    8. Congrats
      Ninachchathai mudipavan nee na
      Nee koduththa thiruppi kuduppava naan….
      Sariyana potti…
      Nice t….

    9. நங்கை வர்மன்.. யாரோட சவால்ல யார் ஜெயிச்சாலும் போட்டியில் நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

    10. முத்தமிழ் நங்கை அழகான பெயர் …
      டீஸர் நல்லாருக்கு வாழ்த்துக்கள்😍😍😍

    11. ஆரம்பமே சண்டையா இருக்கு நமக்கு நல்ல பொழுது போகும் போல சூப்பர் வெற்றி பெற வாழ்த்துகள்! 💐💐💐

    12. வாவ் சூப்பர் ஸ்டார்ட் 👏👏👏
      எவன்யா எப்பா … எப்பப்பாரு இந்த தகப்பன் மாருக்கு இதே பொழப்பா போகுதுய்யா ..‌‌. கடன் நான் தீக்குறேன்… வரதட்சணை வேண்டாம் னு சொன்னா போதும் … வாயா ராசா என் பொண்ண கூட்டி போ னு வழியனுப்பிடுங்க ச்சை … இது கதை ல மட்டும் இல்ல ரியல் லைஃப் ல கூட நிறைய நடக்குது …. இதுபோல் நடக்கும் போது தான் பெண்சிசுக்கொலை எவ்வளவோ மேல் னு தோணாது … பொண்ணுங்களுக்கு மட்டும் 21-25 க்கு முன்ன இன்னொரு வீட்ல தள்ளி விடுறாங்க அவங்க விருப்பப்பட்டாலும் விருப்பபடாம போனாலும் 🤷🤦🤦🤦…

      அடுத்து அவனுக்கு பிள்ளைய பெத்து குடுக்கணும். அப்புறம் அவனுக்கே சேவ செஞ்சு அதோட முடியணாம்… காலம் எவ்வளவு மாறுனாலும் சில விஷயங்கள் எண்ணைக்குமே மாற மாட்டுது 😤😤😤 ….

      அடிங்கொய்யால டேய் வர்மா … நீ ஹீரோ னா பெரிய புடலங்காயா ..‌‌ த சீ பே 😏😏😏😏 … உனக்கு அவ்வளவு சீன் லாம் இல்ல பாத்துக்க 😎😎. தமிழ் மா இவனைய ஜெயிக்குற 🤩🤩…

      ****

      திருமணமாம் அது – ஆனால்
      வெற்றிச்சின்னமாய் அவனும்
      அவமான இழிவுரல் சின்னமாய் அவளும் நினைத்திட
      காலம் வைத்திருக்கும்
      முடிவுறாத பலக்கணக்குகளை
      அறிந்தவன்(ள்) எவரோ ?…
      இறைவன் ஒருவரே…

      நீங்க நம்பிக்கையாய் எழுதுங்க . நாங்க இருக்குறோம் ,💃🏻💃🏻💃🏻💝💝
      வெற்றி பெற அன்பின் வாழ்த்துக்கள் 💐💐💐

      1. Author

        Such a wonderful lines of second half comment…. Thank u so much…. With a ur wishes n blessings i ll try to narrate better