வலுசாறு இடையினில் ..
டீஸர் – 2
“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க ?”, முத்தமிழ் தன்னை பெற்றவர்களை பார்த்து கேட்டாள் .
“நங்கை .. உன் தம்பிய போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாங்க டி .. மாப்ள கிட்ட சொல்லி அவன காப்பாத்த சொல்லு டி “, என அவள் தாய் காமாட்சி அழுகையுடன் கேட்டார் .
“என்ன சொன்னீங்க ? திருப்பி சொல்லுங்க ?”, மெல்லிய சிரிப்புடன் கேட்டாள் .
“உன் தம்பிய போலீஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்க டி .. நீ என்ன சிரிக்கற ?”, அவளின் அம்மா கோபத்துடன் கேட்டார் .
“அவன பிடிச்சிட்டு போனதுக்கு நான் என்ன பண்ண முடியும் ? இதுக்கும் அவன் பண்ண தப்புக்கு எனக்கு தண்டனை குடுங்க .. ஏன்னா நான் அவன் அக்கா .. நான் பெரியவ அவன் சின்ன பையன் விற்றுங்க ன்னு போலீஸ் ஸ்டேஷன் போய் சொன்னா அவன விற்றுவாங்களா ?”, என கேட்டுவிட்டு அவர்களை பார்த்தாள் .
“நங்கை “, அவள் தந்தை ஏகாம்பரம் கோபமாக கத்தவும் , அவரை கை காட்டி அமைதியாக சொல்லி விட்டு , “ ஒரு பொட்ட கழுதை கிட்ட உதவி கேட்டு இப்ப மட்டும் எப்படி வந்தீங்க ?” , என அவரிடமும் எதிர் கேள்வி கேட்டாள் .
“முத்து .. எந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்க நீ ?”, என வர்மன் உள்ளே வந்தபடி அவர்களை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றான்.
“இந்தாடி .. நீ இப்படி சிலுப்பிக்கிட்டு திரிஞ்சா உன் உடமை பட்டவன் அடுத்தவளுக்கு உடமை ஆகிடுவான் .. அவன எங்க போறான் வாரான்னு கவனி .. “, வர்மனின் பாட்டி நீலாயதாட்சி அவளிடம் கூறினார் .
“உங்க பேரன் தானே .. நீங்களே கவனிங்க.. என்னை ஏன் சொல்றீங்க ?”, முகத்தை திருப்பியபடி பதில் கூறினாள் .
“நானா அவன் கட்டுன தாலிய தொங்க விட்டுட்டு சுத்தறேன் ? அவன் தாத்தான் ரத்தம் தான் அவனுக்கும் ஓடுது.. உன் இடத்த தக்க வச்சிக்க .. இல்லனா உனை ஓரம் கட்ட பெரிய கூட்டமே காத்து இருக்கு டி .. சூதானமா இருந்துக்க ..”
“இப்டி பேசினா உங்க பேரன கிட்ட சேத்திப்பேன்னு பேசறிங்களா பாட்டி ? யாரு இந்த ஐடியா குடுத்தது ? உங்க பேரனா ?”, கண்களை சுருக்கி கொக்கியாக கேள்வியை கேட்டாள் .
“யாரு டி இவ ? என் அனுபவத்துல சொல்றேன் .. அந்த கீழ வீட்டு குமரி தினம் இங்க வாரா தானே ? அவ அப்பன் அவள இந்த வீட்டு மருமகளாக்கணும் ன்னு ரொம்ப வருஷமா திட்டம் போடறான் .. பாத்து உன் இடத்த காப்பாத்திக்க”, என கூறிவிட்டு எழுந்து சென்றார் நீலாயதாட்சி பாட்டி.
நங்கை யோசனையுடன் நின்றாள் , அப்போது பாட்டி சொன்ன அந்த வீட்டு பெண் , “ மாமா .. மாமா .. என் சிங்க மாமா எங்க இருக்கீங்க ?”, என அழைத்தபடி உள்ளே வந்தாள் .
Ethe singaha maama va…
Nangai a..singah makkida pora
ஹாஹாஹா .. நன்றி சிஸ்
வர்மா மாம்ஸூ நல்லவரா இல்ல கெட்டவரா🤔🤔🤔🤔 ஒன்னும் புரியலையே🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️.
எனக்கும் அதே சந்தேகம் தான் 🤣🤣🤣🤣🤣
💞 ஹேய் கிழவி நீ நல்லது பண்றேன்னு நாரதர் வேலை நல்லா பண்றீயே
💞டீசரலவே செம ரகளையா இருக்கே
💞 கதையும் இதே அளவு எதிர்பார்க்கலாமா செவன் ஷாட்
தெர்லயே… அது நீங்க தான் சொல்லணும்…. 😅😅😅😅
அடடா என் தங்கக்கட்டி செல்லப்பட்டு 😘😘😘 … இப்படி தான் இப்படி தான் கொஸ்டின் கேக்கணும் ... பொம்பள புள்ள அ கவனிக்கும் பெற்றோர் ஆண் பிள்ளையை கண்டுக்க மாட்டாங்க …
அது எப்படி நம்ம தமிழ் வேலைக்குப் போய் சம்பாதிச்சு வாழ பதில் சாதுவாராமாம். ஆனா இப்ப வந்து கேள்வி கேப்பாராமாம் … கேக்க வேடிக்கையான இல்ல 😤😤😤
என்ன பாட்டி … வர்மன் தாத்தா போதனு சொல்றீங்க..
தாத்தா பேட் அ போனாரோ 🙄😳… அனுபவம் பேசுவதா… அப்ப சிம்மன் தாத்தா போல மாறுவான் னு சொல்றீங்களா 😝😝😝
எவ அவ … சிம்மா மாமா அ … வாடி சக்காளத்தி தங்கமே … உன்னால தான் அடுத்த கட்ட கதையே விறுவிறுப்பாக மாறப்போகுது 😂😂🤣🤣🤣🤣…
வா சக்காளத்தியம்மா
உன்னௌத்தானே நானும் தேடாறேன்…
வா சக்காளத்தியம்மா
உன்ன வச்சு தான் கதை
ஜோராக போகுது … 😝😝🤭🤭🤣🤣
Ha ha ha….. En teaser alavuku neenga comment type panreenga sister… Thank u so much for such energetic motivation