Loading

 

டீசர் 1

இன்பப்பா….. இன்பப்பா…. கதவ திறங்க… நான் என்ன சொல்லிடேனு இப்போ கதவ சாத்திட்டு இருக்கீங்க…என்றவள் கதவை சற்று வேகமாக தட்ட, உள்ளே இருந்து வந்த பதில் என்னவோ 

“உனக்கு இப்போ என்னதான் வேனும்” என்றுதான்….. அதில் சற்று நிம்மதி அடைந்தவள்… 

 

“நீங்க கதவ திறங்க சொல்லுறேன்” என்றதும் சட்டென கதவை திறந்து 

“என்ன தான் வேனும் உனக்கு…

எதுக்கு உயிரை வாங்குற..”என்று கத்தியவனை பார்த்து “என் இவ்வளவு கோவம் வருது உங்களுக்கு..”என கேட்டு கொண்டே அந்த அறைகுள் நுழைந்தாள் 

 

 “எதுக்கு இப்போ நீ உள்ள வர, வெளிய போ. என்னோட விஷயத்துல யாரு தலையிட்டாலும் எனக்கு கோவம் வரும் புரியுதா..”

 

“நான் ஏன் வெளிய போகனும்…! நான் யாரோவா  இன்பப்பா? சரி, நான் யாரோவாவே கூட இருக்கட்டும். எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க நீங்க ஏன் குடிக்கிறிங்க? என்றவளை பார்த்தவன் 

 

“நான் ஏன் குடிக்கிறேன்னு உனக்கு தெரியாதா?” என சற்று நிறுத்தி “அதுவும் இல்லாம நான் குடிக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை” என்றவனை முறைத்தவள் 

 

“ஏது…   எனக்கு என்ன பிரச்சனையா? புருசன் குடிகாரன இருந்தா எந்த பொண்ணுக்கு தான் பிரச்சனையா இருக்காது?”

 

ஓ…. அது தான் உன் பிரச்சனையா…. என்னோட பிரச்சனைக்கு  நான் குடிக்கிறேன்ல… அது போல உன் பிரச்சனைக்கு நீயும் குடிச்சிக்கோ…. எனக்கு ஒன்னும்  பிரச்சனை இல்ல”  என்றபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

 

“அட கடவுளே…இவரு என்ன  பிரச்சனை என்கிற வார்த்தைக்கே பிரச்சனை வரும் அளவிற்கு பேசிட்டு போராரு……” என்றபடி தன் வாய் மேல் கை வைத்தவாறு நின்றாள்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அந்த பொண்ணு ஏன் டா பேசினோம்ன்னு நினைச்சிருக்கோம்🤣🤣🤣🤣படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் 🥳🥳🥳🥳🥳

    2. ஏன் குடிக்கிற னு கேட்டா குடிக்காத னு சொன்னா நீயும் குடிங்குறான்… 😲😲😲😲

      ஏன்டா இவன்கிட்ட பேசினோம்… பேசின அவன் லூசா இல்ல பேசப்போன நாம லூசா னு அந்த புள்ளைய யோசிக்க வைக்குறானே… 😂😂😂

      கதை முன்னோட்டம் சூப்பர் மியூசிக்கல் 😜😜
      வெற்றி பெற வாழ்த்துக்கள் 😉😉