மோதும் மேகங்கள்-15
படப்பிடிப்பு தளத்திற்கு இசையை நன்றாக திட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வந்த ஆதி, இசையை தேட அவளோ அபினாஷிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தாள்.
அபியின் அலைபேசியை வாங்கி இசை ஆதிக்கு அழைத்து கத்தி முடித்தவுடன், அபி “நீ இங்க என்ன பண்ற இசை? ஏன் உன்னோட சிவிய எனக்கு அனுப்பல? ஆதி சாருக்கு மறுபடியும் அசிஸ்டன்ட்டா ஜாயின் பண்ணிட்டியா? நேத்து அவரப் பத்தி அப்படி பேசிட்டு போன இன்னிக்கு இங்க வந்து நிக்கிற? என்ன ஆச்சு? ஒரே நாளுல மனசு மாறிட்ட? இப்ப யாருக்கு கால் பண்ண? ஆதி சார் கிட்டே இப்படியா பேசுவ? ஐயோ அவரு உன்னை பற்றி என்ன நினைச்சி இருப்பாரு இசை?இருந்தாலும் நீ உன் வாயை வச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம் இசை” என கேள்விகள்வுடனும் புலம்பல்கள்வுடனும் அறிவுரைகள்வுடனும் அபி பேசிக்கொண்டே போக “அபிஇஇஇ..” என தன் மேல் அக்கறைப்படும் ஜீவனை பார்த்து மனம் நெகிழ்ந்து சிரித்துக் கொண்டே இசை “நான் அவன் கிட்ட இன்னும் மூணு மாசத்துக்கு தான் வேலை செய்வேன். அப்புறம் ஸ்வேதா வந்துட்டா எனக்கு விடுதலை கெடச்சிடும்” எனக் கூறினாள்.
அபி இசையை ஒரு மாதிரி பார்த்தவறே, “இசை ஆர் யூ ஆல்ரைட்? மண்டையில ஏதாச்சும் அடிபட்டுறீச்சா? நேத்து ஆதி சாரைப் பத்தி குறை சொன்ன, இன்னிக்கும் காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு கத்து கத்துனு கத்துனா.இப்போ பைத்தியம் மாதிரி சிரிக்குற” என சீரியசான தொனியில் கூற, இசை அவனை “என்ன பாத்த பைத்தியம் மாதிரியாடா இருக்கு?” என கேட்டுக் கொண்டே அவனை அடிக்க, “பாத்தா தெரியல.பட் உன்கிட்ட கொஞ்சம் நேரம் பேசுனாலே கண்டுப் பிடிச்சிடலாம்” என அவனும் சிரித்துக் கொண்டே கூற, அவர்கள் பேச்சுவார்த்தை நீண்டுக் கொண்டே போனது.
இதைக்கண்ட ஆதி கோபமாகி அவர்கள் அருகினில் வர, இசை “அபி உன் கூட இருந்தா நேரம் போறதே தெரியல.சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது” என சிரித்துக் கொண்டே கூறவும் ஆதிக்கு என்ன கடுப்பாகி ‘என்ன கடுப்பாக்கிட்டு நீ மட்டும் சிரிச்சிட்டு இருக்கியா’ என இன்னும் கோபம் ஆகினான்.
இசை அபியை பார்த்தவாறு அமர்ந்திருக்க, இசைக்கு பின்னால் ஆதி நின்று கொண்டு தொண்டையை செருமினான். “அபி யாருக்கோ கோல்டுனு நினைக்கிறேன். பாவம் தொண்ட அடச்சிட்டு பேச முடியாம கஷ்டப்படுறாரு. நான் போய் அவருக்கு இந்த டேப்லெட் கொடுத்துட்டு வர்றேன். நேத்து உன்ன பார்த்துட்டு போறப்போ மெடிக்கல் ஷாப்பில வாங்கினது.ஹேண்ட் பேக்ல இருந்து எடுத்து வைக்க மறந்துட்டேன் இப்போ உதவியா இருக்குல்ல” என தாராள வள்ளல் அவள் எனக் கூறி எழ,அபியும் ஆதியும் ஒரே நேரத்தில் “இசை” என அவளை இருவரும் வெவ்வேறு வித்தியாசமான தொணியில் அழைத்தனர். அபி பரிதாபமாக அழைக்க ஆதி கோபமாக அழைத்தான்.
ஆதியின் குரலைக் கேட்டு திரும்பியவள், “ஆதி..” என அழைக்க “கால் மீ சார்” என கடுமையாக கூறிவிட்டு கேரவனுக்கு செல்ல, இசை நின்ற இடத்திலேயே சிலைபோல் நின்று கொண்டிருந்தாள்.
அவள் வராததை உணர்ந்து திரும்பிய ஆதி, “உனக்கு என்ன தனியா சொல்லனுமா? வா” என முகத்தை சுளித்து கூற, இசையும் நாய்க்குட்டி போல் அவன் பின்னாலே சென்றாள்.
ஆதி இசையிடம் வேணுமென்றே உதவி இயக்குனரிடம் சென்று இன்று தான் என்ன சீன் நடிக்க வேண்டும் என கேட்டுவிட்டு ஐந்து நிமிடத்தில் வருமாறு கூறினான்.
இசையும் தலையாட்டிவிட்டு உதவி இயக்குனர் ராஜாவை காணச் சென்றாள். அவரிடம் ஆதி இன்று என்ன சீன் நடிக்க வேண்டுமென கேட்க அவர் கூறியவுடனே ஆதியிடம் விரைந்தாள்.
இசை வந்து ஆதிக்கு இன்று படத்தில் அவனது தாயிடம் பேசுவது போல காட்சி இருப்பதாக கூற, “சரி என்னோட ஸ்கிரிப்டை நான் வீட்டிலேயே வெச்சுட்டேன். நீ போய் வேற வாங்கிட்டு, சீக்கிரமா வா” என மறுபடியும் அவளை அனுப்பினான்.
இசை சென்று ஸ்கிரிப்டை வாங்கிக் கொண்டு வர, “இத வாங்கிட்டு வரத்துக்கு உனக்கு இவ்ளோ நேரமா? அபிய பார்த்ததும் உட்கார்ந்து கதை பேசிட்டு வந்தியா?” எனக் கேட்க, இசை “நீ என்கிட்ட பத்தே முக்காலுக்கு போக சொன்ன.நா 10.50கே அவ்ளோ தூரம் போயிட்ட வந்துட்டேன்.இதுல நான் எங்க அபி கிட்ட உட்கார்ந்து பேச ?” என இசையும் விடாமல் தன் நியாயத்தைக் கேட்டாள்.
“ஹே, என்கிட்ட வா போனுலாம் மரியாதை இல்லாம பேசாத. வாங்க போங்கன்னு மரியாதை கொடுத்து சார்னு சொல்லி பேசு” என ஆதி கூற, “சரிங்க சார்” என பல்லை கடித்துக் கொண்டே பொறுமை இழுத்துப் பிடித்து கூறினாள் இசை.
“ம்ம்ம்,குட். இப்ப போய் நா மேக்கப் போடனுமா இல்ல வேண்டாமான்னு கேட்டுட்டு வா” என கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஆதி கூற இசையும் சரி என்றவாறே தலையாட்டிவிட்டு, கேட்க சென்றாள்.
இசை சென்று ராஜாவிடம் ஆதி கேட்டதையே கேட்க “மேக்கப் போடாம எப்படிமா நடிக்க முடியும்?” என இசையை ஒரு மேலும் கீழுமாக பார்த்தவாறு கேட்டார் ராஜா.
“ஆதி சார் தான் கேட்க சொன்னாரு அண்ணா” என இசை பாவமான முக பாவத்துடன் கூற, “சரி சரி மா லைட்டா மேக்கப் போட சொல்லு” எனக் கூறி இசையை அனுப்பி வைத்தார் ராஜா.
இதே போல் ஆதி வேண்டும் என்றே இசையை வெறுப்பேற்றி பழிவாங்க நான்கைந்து முறை அனுப்ப, அவளும் சென்று வந்தாள். படப்பிடிப்பு நடத்தும் இடம் என்பதால் அச்செட் பரந்து விரிந்ததாக இருந்தது. உதவி இயக்குனர் ராஜா நடிகர்கள் நடிக்கவிருக்கும் செட்டை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, ஆதி ஓரமாக இருக்கும் அவனது கேரவேனில் அமர்ந்தவாறே இசையை அவரிடம் கேட்டு வருமாறு கூறிக் கொண்டிருந்தான். இசையும் அவன் கூறியதைப் போலவே பொறுமையாக அனைத்தையும் செய்து முடிக்க, அப்போதும் துரைக்கு கோபம் அடங்கவில்லை.
மீண்டும் ஒரு முறை, “எனக்கு அம்மா கேரக்டர்ல நடிக்குற ஷீலா அம்மா வந்துட்டாங்களானு போய் கேட்டுட்டு வா” என மொக்கை காரணங்களுக்கு அவளை அனுப்ப இசை மனதினுள் ‘அவங்க வரலனா இந்த சீன்னுக்கு உன்ன ரெடியாக சொல்லுவாங்களா? வேணும்னே கேக்குது பாரு மனசாட்சி இல்லாத மனித குரங்கு’ என நினைத்துக் கொண்டே அவளுடைய அலைபேசியை எடுத்து ராஜாவிற்கு அழைத்து கேட்டாள்.
பின் இசை “அவங்க வந்துட்டாங்களாம் வேற ஏதாச்சு கேட்கனுமா?” என நக்கலாக வினவ , ஆதி தான் அங்கே வெடிக்காத புஸ்வானம் ஆக மாறினான். “ஒன்னும் இல்ல” என ஆதி எங்கோ பார்த்தவாறு கடுப்புடன் கூற “சரிங்க சார்” எனக் கூறிவிட்டு அமர்ந்து கொண்டாள்.
ஆதி நடிக்க வேண்டிய காட்சிகளை பிரமாதமாக, அசத்தலாக நடித்து முடிக்க அதற்குள் உணவு இடைவேளையே வந்துவிட்டது. அபி, இசை,ராஜா மற்றும் இன்னும் படத்தில் வேலை செய்பவர்கள் சிலர், ஒன்றாக அமர்ந்து கொண்டு பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க, ராஜா அபியை சார் என அழைப்பது கண்டு இசை, “ராஜா அண்ணா நீங்க ஏன் அபிய சாருன்னு கூப்பிடறீங்க? ஏன் அபி உனக்கு அண்ணா பெயர் சொல்லி கூப்புடறதுல ஏதாச்சும் ப்ராப்ளம் இருக்கா” என ராஜாவிடம் ஆரம்பித்து அபியிடம் முடித்தாள்.
“எனக்கு ஒன்னும் இல்லை இசை. அண்ணா என்ன சார்னு சொல்றத விட அபின்னு கூப்பிட்ட தான் நல்லா இருக்கும்” என இசையிடம் கூறிவிட்டு “நீங்க இனிமேல் என்ன அபினை கூப்பிடுங்க அண்ணா” என ராஜாவிடம் கூற அவர் தயங்கிக் கொண்டே “அது எப்படி சார்..” இழுக்க இசை நடுவில் புகுந்து “ஐய்யய்ய. நம்ப அபிய பாத்தா அவ்வளவு வயசானவர் மாதிரியா தெரியுது? அண்ட் சார்னு கூப்பிட்டு நீங்களே உங்களை ஏன்னா தூரமாக்கிறீங்க ? அபி உங்கள அண்ணான்னு கூப்பிடறான். நீங்க மட்டும் ஏன் அவன தம்பிய பாக்க மாட்டுக்கிறீங்க?” என இசை பாயிண்டை பிடித்த வக்கீலை போல் வாதாட, “சரி சரி இசை நான் இனி அபினை கூப்பிடுறேன்” என ராஜா கூறவும் அபியும் இசையும் ஹை-பை அடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டனர்.
அதன் பின் ஒரு காட்சியில் ஆதி சிங்கிள் டேக்கிலியே நடித்துவிட்டு, படத்தின் இயக்குனர், உதவி இயக்குனர் ராஜா ,மேக்கப் ஆர்டிஸ்ட் என இன்று அனைவரிடமும் கூறிவிட்டு இசையிடம் மட்டும் கூறாமல் அவளை தவிர்த்து விட்டு தனது மகிழுந்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.