Loading

மோதும் மேகங்கள்-13

         
                ஆதி இசை இருவரும் வெளியே வந்ததும் முகிலன் இசையிடம் “ஆதி சாருக்கு வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லிட்டு போனா என்ன? டீ போட்டு எடுத்துட்டு வந்துட்டு, இங்கு யாருமே இல்லாததல ஒருவேள ஆதி சார் போயிட்டு இருப்பாரோன்னு நெனச்சி வெளிய போய் பார்த்துட்டு வரேன்” என தன் தமக்கையிடம் கூறிக்கொண்டு இருந்தான்.

              “

அவன்ல்லாம் என்ன தொல்லை பண்ணாம போகவே மாட்டான்.சரியான தொல்ல” என சோபாவில் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருக்கும் ஆதியை பார்த்தவாறே வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள் இசை.

            “

என்ன இசை வாய்க்குள்ளே முணுகிற?சத்தமா தான் சொல்லேன். பக்கத்துல நிக்கிற எனக்கே கேட்கல” என முகிலன் அவர்கள் இருவரும் எங்கே சென்றார்கள் என ஆர்வம் தாங்க முடியாமல் கேட்டான்.

      “

எங்கேயும் போகல டா அவனு..” என கூறி விட்டு நாக்கை கடித்தவள் “சாருக்கு வீட்டை சுத்தி காமிக்க போனேன்” என கூறினாள் இசை.

         

அலைபேசியின் நோண்டுவது போல் பால்வா செய்து கொண்டிருந்தாலும் ஆதியின்  கண்கள் என்னவோ இசையை தான் பார்த்து கொண்டே இருந்தது. அவள் அவனை தொல்லை எனக் கூறியது, அவன் என கூறிவிட்டு நாக்கை கடித்தது என அனைத்தையும் கண்டு அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே,  “உன்கிட்ட சொல்லாம எப்படி போவேன்? பை த வே உன்னோட பேரு என்ன”  என முகிலனை பார்த்து வினவினான்.

           “

முகிலன் சார்” என அவன் கூற “முகிலன் நல்ல தமிழ் பெயருல” என ஆதி கூறினான்.

           “

ஆமா இவனோடது பேரு மட்டும் தமிழ் பேரு. எங்களோடது  ஃப்ரண்ட்ச் பெயரு பாரு.அன்னிக்கு எப்படி கலாய்ச்சான்” என இசை வாய்க்குள்ளே முணுமுணுக்க ஆதி அவன் குடித்த காலி கோப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

                “

அதான் டீ குடிச்சிட்டுகளே சார்ர்ர்.. இன்னும் கிளம்பலையா? உங்களுக்கு வேற வேலை இல்லயா?” என அவன் கிளம்பாமல் இருப்பதை நேரடியாகவே கேட்டாள் இசை.

           “ஹே இசை வீட்டுக்கு வந்தவங்கிட்ட இப்படியா பேசுவ? கொஞ்சம் மரியாதையா பேசு” என இசையை கடிந்து விட்டு  “அத இங்க குடுங்க சார்” என ஆதியிடம் முகிலன் கூறி விட்டு காலி கோப்பையை எடுத்துக் கொண்டு சமயலறைக்கு சென்றான். அவன் செல்ல வேண்டும் என்பதற்காகவே ஆதி கோப்பையை கையில் எடுத்தான்.

              

அவன் சென்றதுமே ஆதி இசை அருகில் வந்து  “பேரு வச்சவங்களுக்கு அந்தப் பேரு பொருத்தமா இருக்கனும். உனக்கு அது பொருந்தவே இல்லை. இசை மாதிரியா பேசுற நீ? நல்லா சண்டைகாரி மாதிரி சண்டை தான் போடுற”  என கூறினான்.

               ‘

நாம இங்க பேசறது, அங்க உட்கார்ந்து இருந்த அவன் எப்படி கண்டுபிடிச்சான்?” என இசை புரியாமல் அவனை கண்டு முழிக்க, “இல்லாத மூளைய வச்சி என்ன யோசிக்கிற?”  என நக்கலாக இசையின் மனதைப் படித்தாற்போல் கேட்டான் ஆதி.

           “

டேய் உனக்கு..” என இசை ஆள்காட்டி விரலை நீட்டி ஏதோ பேசப் போக அதற்குள் அங்கு வந்த முகிலன்  “ஆதி சார் உங்க கூட ஒரே ஒரு போட்டோ எடுக்கனும்னு எனக்கு ஆசை..”  என தயங்கி கொண்டே கூறினான்.

          “

வா முகிலன். எனக்காக சூப்பரா கிரீன் டீ எல்லாம் போட்டு தந்திருக்க உன் கூட எடுக்க மாட்டேனு சொல்வேனா? இதக் கேட்க உனக்கு ஏன் இவ்வளோ தயக்கம்”  என நார்மலாக நண்பனைப் போல் பேசினான் ஆதி.

            “

சார் நீங்க எல்லார் கூடவும் பிரண்ட்லியா இருப்பீங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்.இப்ப தான் நேருல பார்க்கிறேன்” என சந்தோஷமாக கூறி விட்டு ஆதியுடன் தாமி(செல்பீ ) எடுத்துக் கொண்டான் முகிலன்.

                

முகிலனும் ஆதியும் கேலரியே நிரம்பும் அளவிற்கு வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்து அடுக்கி கொண்டிருக்க கடுப்பான இசை   “சார் டைம் ஆயிடுச்சு.நீங்க இன்னும் கிளம்பலையா?” என மறுபடியும் அவன் கிளம்புவதை வற்புறுத்தினாள்.

             

“இசை வீட்டுக்கு வந்த விருந்தாளி கிட்ட இப்படியா பேசுவ ? இத தான் நான் உனக்கு கத்துதந்தனா?” என வாசல் புறமிருந்து குரல் ஒன்று வந்தது. முகிலனுக்கு ஆதிக்கும் இசை திட்டு வாங்கியதில் மகிழ்ச்சியே .அவர்கள் இருவரும் மனதிற்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். ‘உன்ன அடக்கறத்துக்கும் ஒருத்தர் இருக்காங்களா?’  எனஆதி சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்க முகிலன்  ‘இப்பதான் அம்மா உருப்படியான ஒரு வேலை செய்து இருக்காங்க.நல்லா வாங்கினியா இசை?’ என அவனும் மனதினுள் மகிழ்ந்து கொண்டிருந்தான்.

 

           

ஆதியின் முகத்தையும் முகிலனது முகத்தையும் கண்ட இசை  ‘மனசாட்சி இல்லாத மனித குரங்குகளே.ஒன்னு இருந்தாலே சமாளிக்க முடியாது இதுல ரெண்டும் கூட்டணி வேற அமைச்சு இருக்காங்க போல இருக்கே’  என அவர்கள் இருவரையும் முறைத்துவிட்டு கவிதாவை பாவமாக கண்டாள்.

         கவிதா இசையை போலல்லாமல் ஆதியை கண்ட மாத்திரத்திலேயே அறிந்து கொண்டார். “அடடா வாப்பா ஆதி தம்பி”  என ஆதியை வரவேற்று விட்டு இசையிடம்  “தம்பிக்கு ஏதாவது சாப்பிடு குடுத்தியா இல்லையா இசை?”  என இசையிடம் வினவினார்.

            “

அவ எங்க அம்மா கொடுத்தா?சார் வந்ததிலிருந்து அவர தூரத்தில  தான் குறியா இருக்கா.ஆனா நா சாருக்கு கிரீன் டீ போட்டு தந்தேன்”  என முகிலன் அவன் பங்கிற்கு கவிதாவிடம் இசையைப் பற்றி ஏற்றிவிட்டான்.

 

         

கவிதா இசையை முறைத்துவிட்டு “நீங்க மூணு பேரும் உட்கார்ந்து பேசிட்டு இருங்க.நான் போய் உங்க எல்லாருக்கும் அடை செஞ்சு எடுத்துட்டு வரேன்”  எனக் கூறி சமையலறையும் நுழைந்துவிட்டார்.

           “

அதெல்லாம் வேணாம்மா”  என ஆதி கூற  “அதுல எங்க அம்மா காதுல விழாது சார். நீங்க சாப்பிட்டு போய் தான் ஆகனும். எங்க அம்மா சூப்பரா அட செய்வாங்க தெரியுமா?”  என முகிலன் அவனது தாயின் சமையலின் அருமை பெருமைகளை அடுக்கிக்கொண்டே போக  “அதுக்கு இல்ல நான் டயட்ல இருக்கேன் அதான்..”  என ஆதி தயங்கினான்.

          “சார் இது கம்பு அடை தான் வெயிட்  எல்லாம் அவ்வளவா போடாது” என முகிலன் கூறியவுடன் “அப்போ ஒக்கே இருந்து சாப்பிட்டே போறேன்”  என ஆதியும் சிறிது நேரம் இசையை வெறுப்பெற்றலாம் என நினைத்து அங்கே இருக்க ஒப்புக் கொண்டான்.

              

முகிலனும் ஆதியும் நன்றாக பேசிக்கொண்டு தாமிகளை எடுத்து அடுக்கிக் கொண்டு போக இசை அவ்விடத்தில் கடமையே என அமர்ந்திருந்தாள்.எழுந்து சென்றால் அவள் அம்மா கவிதா திட்டுவாரே, இருக்கவே இருக்கான் முகிலன் அவன் அவன் பங்கிற்கு கொளுத்திப் போட்டு விட்டு வேடிக்கை வேறு பார்ப்பான்.யார் அவரின் பஜனைகளை கேட்பது எனக் கருதி அடை எப்போது வரும் இவன் எப்போது கிளம்புவான் என கன்னத்தில் கை வைத்து கடிகாரத்தைப் பார்த்துக் நிமிடங்களை எண்ணி கொண்டிருந்தாள். நடு நடுவே முகிலன்  “இசை ஒரு போட்டோ எடுத்து தாயேன்”  என கேட்டு அவளை தொந்தரவு செய்து கொண்டிருந்தான். இசையும் கவிதாவும் இருக்கிறாரே என நொந்து கொண்டு மனதில் இருவருக்கும் அர்ச்சித்துக் கொண்டே ஏனோதானோ என்று எடுத்துக் கொடுத்தாள்.

              

இசை ஆசைப்பட்டது போல் அடையும் வந்து சேர ஆதியும் முகிலனும் நன்றாக உண்டனர்.ஆதி புது இடம் என்றெல்லாம் பார்க்கவில்லை.இசையை வெறுப்பேற்றுவதற்காவே  நன்றாக தான் உண்டான்.இசை கடமையே என அடையைப் பிய்த்து உண்ணாமல் ஆராய்ந்து கொண்டிருக்க, அவளது தாயார் கவிதா வழக்கம்போல் அவளது தட்டை பிடுங்கி அவளுக்கு ஊட்டி விட்டார். ஆனால் இம்முறை திட்டிக்கொண்டே. சிறு குழந்தை ஒன்று ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்க அதனிடம் வந்து மற்றொரு டப்பா ஐஸ்கிரீமை தந்து உண்ணுமாறு கூறினால்,அக்குழந்தை எவ்வளவு சந்தோஷப்படுமோ அதேபோல் ஆதியும் முகிலனும் ஒரு சிறு விஷயத்திற்கு பேரானந்தம் பட்டனர்.

            

ஒருவழியாக ஆதி கிளம்ப கவிதா அனைவரை போலவும் வழக்கமான டயலாக்கான  “அடிக்கடி வந்துட்டுப் போங்க தம்பி” என கூறினார்.

      ஆதியும் “கண்டிப்பா வரேன் மா” என இசையை பார்த்தவறே நக்கலாக கூற இசை “ஒருமுறை வந்ததுக்கே,உன்னால என்ன என்ன செய்ய முடியுமோ,அத்தனையும்  சிறப்பா செய்திட்ட மறுபடியுமா?” என வாய்க்குள்ளே முனுமுனுத்தாள்.

        அவள் என்ன முணுமுணுக்கிறாள் என அறிந்து சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக சென்றான்.

                     ஆதியை கண்ட சந்தோஷத்தில் அவன் எதற்கு வந்துள்ளான் என கேட்க மறந்தான் முகிலன் அதைப்பற்றி கவிதாவும் ஆராயவில்லை.இவ்விஷயத்தில் சிறு நிம்மதி அடைந்தாள் இசை.
   
              ஆதி சென்ற பிறகும் முகிலன் கவிதாவிடம் ஆதியை பற்றியே பேசிக் கொண்டிருக்க,கவிதாவும் ஆர்வமாக அதை கேட்டுக் கொண்டும் அவரும் பேசுவதுமாக இருக்க,இசைக்கு தான் கடுப்பாக இருந்தது. ஆதியுடன் எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்த முகிலன் இசை எடுத்த படங்களைப் பார்க்கும்போது  ஒரு  படம் கூட நன்றாக அவள் எடுக்கவில்லை என அறிந்ததும்  “இசை இருதஞ்சி வயசு ஆயிடுச்சே தவிர, ஒரு போட்டோ கூட உனக்கு எடுக்க தெரில”  அவளைக் குறை கூறிக் கொண்டிருந்தான். முகிலன் ஆதியுடன் எடுத்த தாமிகளை அவனது ஸ்டேட்டஸ் அப்லோட் செய்து அதற்கு வந்த ரிப்ளைகளை  வேற படித்துக் காட்டிக் கொண்டிருக்க இசை அங்கிருக்க பிடிக்காமல் தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்