Loading

முடிவில்லா காதல் நீயே! – டீஸர்

மாலை மயங்கிய நேரம். பறவைகள் அனைத்தும் தன் கூட்டிற்கு திரும்பி கொண்டிருந்தது. அந்த பார்க்கில் கண்களில் கண்ணீருடன் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அவள் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தாள். அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே சென்றனர். ஆனால் அவளிடம் கேட்பதற்கும் ஆறுதல் சொல்வதற்கும் தான் யாருக்கும் மனதும் இல்லை நேரமும் இல்லை. அவளின் கண்ணீர் தெரிந்த கண்களுக்கு அதற்கு பின்னாடி இருந்த வலிகள் கடைசி வரை தெரியாமலே போய்விட்டன. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் சில மனிதர்களின் மனங்கள் தான் மாற்றம் இல்லாமலே கடந்து விடுகிறது.

ஒரு ஓரமாக கல் பெஞ்சில் அமர்ந்து இருந்த அவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது. எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத ஒரு அவமானம் அவளுக்கு கல்லூரியில் நடந்துவிட்டது. அதை மட்டும் அவளால் சிறிதும் ஏற்று கொள்ள முடியவில்லை. அவள் கொஞ்சமேனும் நிம்மதியாக இருப்பது அந்த கல்லூரியில் தான். ஆனால் அங்கும், காலையில் நடந்த நிகழ்வால் யாரையும் பார்க்கும் திராணி அற்று கூனி குறுகி நின்றது, மற்றவர் கண்களுக்கு கேவலமாக தெரிந்தது இதெல்லாம் யாரோ அவளின் இதயத்தில் ஈட்டியை இறக்கிய ஒரு வலி. இதற்கு இறந்து போயிருக்கலாம் என்ற எண்ணம் நூறாவது முறையாக தோன்றாமல் இல்லை. அதிலும் இது அவளின் சித்திக்கு தெரிந்தால் நினைக்க நினைக்க அவளின் கால்கள் வீட்டிற்கு செல்ல மறுத்தது. மனதின் ஓரத்தில் சிறிது நம்பிக்கை இது சித்திக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என. ஆனாலும் அவளால் முழுமையாக பயத்தை விட்டு வெளியில் வர முடியவில்லை. பயம், பதட்டம், அழுகை, என எல்லாம் அவளை கொல்லாமல் கொன்றது.

நேரம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் சென்று கொண்டே இருந்தது. அந்த பார்க்கின் காவலாளி பெரியவர் வந்து சொல்லும் வரை சுற்றம் மறந்து அமர்ந்து இருந்தாள். அதன் பிறகு தளர்ந்த நடையுடன் கிளம்பி பார்க்கை விட்டு வெளியில் வந்து பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள். எவ்வளவு நேரம் தான் வீட்டிற்கு போகாமல் தவிர்க்க முடியும். எப்படியும் போய் தான் ஆக வேண்டும். இவ்வளவு தாமதம் ஆனதற்கே என்ன விடை கூற வேண்டும் என்று தெரியவில்லை அந்த பேதைக்கு. இவள் கூறும் விடைகள் ஏற்று கொள்ள படுமா? என்பது வேறு விஷயம். தனக்கான பேருந்து வந்ததும் கிளம்பி வீட்டுக்கு சென்றாள். இனிமேல் தான் தன் வாழ்க்கையை கேள்வி குறியாக போகிறது தெரியாமல் சென்று கொண்டிருந்தாள் அவள். அவள் பெயர் தான் கயல்விழி.

**********************************************

உயர்தர மக்கள் அதிகமாக வந்து போகும் ஒரு இரவு நேர கேளிக்கை விடுதி அது. பாடல்கள் காதை கிழிக்கும் அளவுக்கு ஒலித்து கொண்டிருந்தது. ஆண், பெண் பேதமின்றி எல்லாரும் மது கோப்பையுடனும், அரைகுறை ஆடையுடனும் நிற்க கூட முடியாமல் ஆடி கொண்டிருந்தார்கள். திடீர் என்று எங்கும் அமைதி. ஒரு பெண் கையை கன்னத்தில் வைத்து கண்களில் திமிருடனும் பலபேர் மத்தியில் தான் அவமான பட்டுவிட்டோம் என்ற கோவத்துடனும், எதிரில் இருப்பவனை பார்வையில் சுட்டு எரித்து கொண்டிருந்தாள். எதிரில் இருப்பவனோ அவளை முறைத்து கொண்டிருந்தான். அதற்குள் அவன் நண்பன் அவனை இழுத்து கொண்டு சென்றுவிட்டான். போகும் அவனை கண்களில் கொலைவெறி மின்ன பார்த்து கொண்டு இருந்தாள் அடி வாங்கிய பெண்.

இங்கேயோ இவன் தன் நண்பனை முறைத்து கொண்டிருந்தான். “டேய், ஏன்டா என்னைய இழுத்துட்டு வந்த, அவளுக்கு ரொம்பதா திமிரு, என்ன கொழுப்பு இருந்தா என்கிட்டே அப்படி நடந்துருப்பா. இன்னும் ரெண்டு அரை குடுக்கணும்னு நெனச்சா அதுக்குள்ள நீ இழுத்துட்டு வந்துட்ட ” என்று தன் நண்பனை கழுவி ஊற்றி கொண்டிருந்தான் அவன். அதற்கு இவனோ, “நீ விட்ட ஒரு அரைகே அவ ரெண்டு நாள் எந்திரிக்க மாட்ட, இதுல இன்னும் நீ அடிச்சுருந்த, அவ்வளவுதான் நீயும் நானும் கொலை கேஸ்-ல உள்ளதா போகணும். அதுவும் இல்லாம எல்லோரும் நம்மள வேற ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கடா அதா உன்னைய கூட்டிட்டு வந்த” என்று தன் பக்க நியாத்தை சொல்லி தன் நண்பனை சமாதான படுத்திக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் கோவம் மட்டும் குறையவே இல்லை. அதை கண்டு கொண்ட நண்பனுக்கு ‘இதுக்கு மேல இவன உள்ள கூட்டிட்டு போனோம் அவ்ளோதான்… நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன்லதா இருக்கனும் பேசாம கிளம்பிறலாம் என நினைத்துவிட்டு, “மச்சான் கிளம்பலாம்டா எனக்கு வேற ரொம்ப பசிக்குது போலாம்…” என எப்படியோ பேசி அவனை கிளப்பி கொண்டு போனான். இவனும் நண்பனுக்கு பசி என்றதும் ஏதுவும் பேசாமல் இருவரும் கிளம்பிவிட்டனர். அவன் தான் ஆதித்யா அவன் ஆருயிர் நண்பன் கார்த்திக்.

டீஸர் தொடரும்.
மீயாழ் நிலா

படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க பிரண்ட்ஸ்…..
முதல் தடவை எழுதுறேன் நிறை குறை இருந்தா சொல்லுங்க நட்பே…
தங்களது கருத்துக்கள் அனைத்தும் வரவேற்கப்படுகிறது..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. Excellent story Need to improve your delivery dialogues….

      Neenga nandri sollanumna unga frd bharathi ku sollunga…..avanga tha ungala promote pannittu erukkanga

      1. Author

        Thanks 👍🙏🏿avaluku thana kandipa sollira 😁😁

    2. நல்லா இருக்கு… மானத்தை பெரிதாக நினைக்கும்‌ இருவர்.. வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️