Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 9

அவர்கள் தூரத்தில் இருந்ததால் அவர்கள் பேசுவது இவளுக்கு கேட்கவில்லை. இருந்தாலும் அங்கே நடப்பதை ஒரு வித பயத்துடன் தான் பார்த்து கொண்டு இருந்தாள். அவளின் இதய துடிப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகம் ஆகி கொண்டே சென்றது.

அந்த பெண் ஏதோ பேசுவதும் அதற்கு சிவா பதில் அளிப்பதும், அந்த பெண் அழுவதும் அதற்கு இவன் சமாதானபடுத்துவதும் என இப்படியே நடந்து கொண்டு இருந்தது. இவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. அதன் பிறகு அந்த பெண் அழுது கொண்டே சென்று விட்டது.

சிவா திவ்யாவின் அருகில் வந்தான். இவளும் ஆர்வமாக அவன் என்ன சொல்ல போகிறான் என நினைத்து கொண்டு இருக்க, அவன் சிரித்து கொண்டே ‘இந்த பொண்ணு என்ன லூசா டி’ என கேட்டு சிரிக்க இவள் “ஏன்டா..?? என்னாச்சு??” என ஒரு பரிதவிப்புடன் கேட்க, அவனும் சொல்ல தொடங்கினான்.

ஒரு நாள் கல்லூரி விழா ஒன்று முடிந்து அனைவரும் இரவு தான் சென்றனர். பெண்களின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. அதனால் பெண்கள் அனைவரும் அவர் அவர் வழியில் செல்லும் பேருந்தில் ஏற சென்று விட்டனர்.

ப்ரியாவும் அவளின் தோழியும் பேசி கொண்டே வர அவளின் தோழி இவளிடம் சொல்லிவிட்டு சென்று விட்டாள் அவளின் பேருந்திற்கு. இவளுக்கு அது மாதவிலக்கு நாட்கள் என்பதால் கழிவறை சென்று விட்டு வந்தாள். அவள் வருவதற்குள் பேருந்தும் சென்று விட்டது. எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இவளுக்கு அழுகையே வந்துவிட்டது. என்ன செய்வது, எப்படி இங்கே இருந்து செல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள். அப்போது தான் சிவா திவ்யா கயலை அனுப்பி விட்டு கிளம்ப போக இவளை பார்த்தான்.

பக்கத்து வகுப்பு பெண் என்பதால் அடிக்கடி பார்த்து இருக்கிறான். அதனால் சென்று பேச அவளும் இவனை எப்போவாது பார்ப்பது உண்டு. அதனால் அவளும் தன் நிலையை எடுத்து கூற அவனும் யோசித்து விட்டு, சரி வா நான் கூட்டிட்டு போறேன். இங்க ரொம்ப நேரம் நிற்க வேண்டாம். ஏற்கனவே எல்லோரும் கிளம்பிட்டாங்க என்று சொல்ல அங்கு இவன் சொன்னது போல ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லை.

பிரியாவிற்கு தயக்கம் இருந்தாலும் இப்போது இதை விட்டால் வேறு வழியும் இல்லை. அதனால் அவனுடன் செல்ல ஒத்து கொண்டாள். அவளின் வீடு இருக்கும் திசை இவனின் வீடு இருக்கும் திசைக்கு நேரெதிர் திசை தான். இருந்தாலும் இந்த நேரத்தில் அவளை தனியாக அனுப்ப மனம் இல்லை. அதனால் தான் நேரம் கடந்தாலும் பரவாயில்ல என்று கிளம்பி விட்டான்.

முதலில் பிரியா பேச தயங்கினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டாள். சிவா “இனிமேல் இப்படி எல்லாம் பயப்படாம தைரியம்மா இருங்க. எப்போவும் யாரும் கூட இருக்க மாட்டாங்க. நம்ம தான் நம்மள பாத்துக்கணும் சரியா…” என சிறு குழந்தைக்கு சொல்வது போல சொல்லி கொண்டு இருந்தான். பிரியாக்கு தான் அவனின் ஸ்பரிசம், அவனுடனான பயணம், மனதிற்கு ஏதோ செய்தது. இந்த பயணம் இன்னும் நீளாதா என்ற ஏக்கமும் வராமல் இல்லை.

இப்படியே அவன் பேச, அவள் கனவில் மிதக்க இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது. அவளுக்கு அவனை விட்டு செல்ல மனமில்லை. ஏனோ மனதில் ஒருவித தடுமாற்றம். அவளுக்கும் அது பிடித்து இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று தான் தெரியவில்லை. இருந்தாலும் அவனை ரசிக்கும் மனதை தடுக்க வழி தான் தெரியவில்லை. அவனும் அவளிடம் சொல்லி கொண்டு கிளம்பி விட்டான். இவள் தான் மந்திரித்து விட்டது போல சென்றாள்.

அதன் பிறகு கல்லூரியில் எப்போவது பார்த்தால் ஒரு புன்சிரிப்பு முடிந்தால் நலம் விசாரிப்பு இத்துடன் கடந்து விடுவார்கள். ப்ரியாவிற்கு போக போக இவனை இன்னும் பிடித்து விட, வேண்டும் என்றே அவன் வரும் வழியில் வருவது, பின்பு எதார்த்தமாக பார்ப்பது போல பேசுவது… என இப்படியே தொடர காதல் எப்போது வந்தது என்று தான் தெரியவில்லை. பல நாள் காத்திருந்து இன்று வந்து சொல்லி விட்டாள்.

இது வரை கேட்டதுக்கே திவ்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதில் இப்போது என்ன நடந்ததோ…. நினைக்க நினைக்க தலை சுற்றியது. இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டுமே அதனால் கேட்டாள்.

“இதெல்லாம் நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்லை..” என திவ்யா கேட்க.. “இதெல்லாம் ஒரு விஷயமா… நார்மல் தான… அதும் இல்லாம அந்த தடவை உனக்கும் எனக்கும் சண்டை… அதான் சொல்லல.. அதுக்கு அப்புறம் நானும் இத மறந்துட்டா…” என சொல்ல சரி இப்போ என்ன நடந்தது என்று சாதாரணமாக தான் கேட்டால், ஆனால் உள்ளுக்குள் துடிக்கும் இதயத்தை அடக்க தான் வழி தெரியவில்லை.

சற்று நேரத்திற்கு முன்பு…

“சொல்லுங்க பிரியா.. என்ன பேசணும்” என கேட்க, முதலில் தயங்கினாலும் பிறகு தைரியத்தை வரவழைத்து சொல்லி விட்டாள். “நான் உங்கள லவ் பண்றேன்…” என சொல்ல முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு நிதானமாக “அதுக்கு நான் என்ன பண்ணனும்…” என கேட்டு வைக்க அவளும், “நீங்க என் லவ்வ ஏத்துக்கிட்டு என்னைய கல்யாணம் பண்ணிக்கிறிங்களா…” என ஒரு வித எதிர்பார்ப்புடனும், பயத்துடனும் அவன் என்ன சொல்ல போகிறானோ என்ற ஆர்வத்துடனும் கேட்டுவைக்க அவனும் சிரித்து விட்டு… “இங்க பாருங்க… நீங்க லவ் பண்றிங்க அது உங்க விருப்பம்… ஆனா எனக்கு அதுல இண்டெர்ஸ்ட் இல்லை. தப்ப எடுத்துக்காதீங்க…” என்று முடித்து விட்டான்.

அவளும் எவ்வளவோ சொல்லி புரிய வைக்க முயல இவனும் சொன்னதையே திருப்பி சொல்ல ஒரு கட்டத்தில் அவளுக்கு அழுகை வந்து விட்டது. அதை பார்த்து பதறியவன் “இந்த மாதிரி அழுகாதீங்க யாரவது பாத்தா தப்ப நினைப்பாங்க… நீங்க நினைக்குறது எப்பவும் நடக்காது… கடைசியா ஆசை பட்டு ஏமாந்து போகாதீங்க… இத இப்படியே மறந்துருங்க…” என பொறுமையாக சொல்ல அவளும் பிடிவாதமாக “நான் இப்படி யாருகிட்டயும் சொன்னது இல்லை. என் மனசுல வந்த முதல் ஆளும் கடைசி ஆளும் நீங்க தான். நீங்க இல்லாம என்னால வாழ முடியாது…” என அழுக ‘போச்சுடா இது வேறையா…!!’ என்று தான் இருந்தது அவனுக்கு.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து “நான் வேற ஒரு பொண்ண விரும்புறேன்… அவ தான் எனக்கு எல்லாமே… புரிஞ்சிக்கமா… கட்டாயத்துனால காதலை வர வைக்க முடியாது. அது உனக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம்…” என்க, “நீங்க பொய் சொல்றிங்க… என்னைய உங்களுக்கு பிடிக்கலை, அதான் இப்படி எல்லாம் சொல்லி என்னைய தவிர்க்க பாக்குறீங்க…” என சொல்ல… “நான் நிஜமா தான் சொல்றேன்…” என அவனும் விடாமல் பேசினான்.

“அப்படினா உங்க லவர்-அ காட்டுங்க நான் பாக்கணும்…” என்க… “அது… அது என் அத்தை பொண்ணு… ஊருல இருக்காங்க.. வீட்ல பேசி முடிவு பண்ணிட்டாங்க… எனக்கும் அவளை பிடிக்கும்… வேலைக்கு போனதும் கல்யாணம்… ஒரு நாள் கண்டிப்பு அறிமுக படுத்தி வைக்குறேன்…” என சொல்ல அந்த பொண்ணு இன்னும் அவனை நம்பாத பார்வை பார்க்க… “நான் உண்மையா தான் சொல்றேன்… இதுக்குமேல நம்புறதும் நம்பாம போறதும் உன் விருப்பம்…” என சொல்லிட்டு வந்துவிட்டான்.

திவ்யாவிற்கு தான் இதயத்தின் வலியை தாங்க முடியவில்லை. எந்த அளவுக்கு காதலித்தாள் என்று இந்த நிமிடம் ஏற்பட்ட வலியில் தான் முழுமையாக உணர்ந்து கொண்டாள். எப்போது வேணாலும் விழுகலாம் என கண்ணீர் கண்களில் அணைகட்டி காத்திருந்தது. அதை கஷ்டபட்டு கட்டுப்படுத்தி கொண்டு கேட்டால் அது உண்மையா? என.

அவனும் எதை கேட்குற என கேட்க, “உ… உன் அத்தை பொண்ணு… லவ்… எல்லாமே…” என தயங்கி தயங்கி கேட்க “ஏய் லூசு… அவளை சமாளிக்க சொன்னேன் டி… உனக்கு தெரியாதா.. என்னைய பத்தி…” என கேட்டு சிரிக்க போன உயிரும் தன்னவனும் திரும்பி வந்த சந்தோசம் அவளுக்கு. அதை வார்த்தையால் சொல்ல முடியாது… கண்ணீருடன் அவனை பார்க்க அவன் தான் பதறி விட்டான். “என்னாச்சு டி… நீ ஏன் அழகுற…” என கேட்க இதற்கு மேல் தாங்க முடியாமல் அவனை தாவி அணைத்து கொண்டாள்.

அவன் தான் ஒரு நிமிடம் உலகம் மறந்து உறைந்து விட்டான். இவன் சுயநினைவு வரும் போதே அவளும் பேச ஆரம்பித்து விட்டாள். “எங்க நீ என்னைய விட்டு போயிருவனு நான் ரொம்ப பயந்துட்டேன்…. நீ இல்லாம என்னால இருக்க முடியாது டா… நான் உன்னைய ரொம்ப நேசிக்கிறேன்… என்னைய விட்டு எப்பவும் போயிடாத… என்னால தாங்க முடியாது… நான் உன்கூட தான் சொல்ல போன வாழ்ந்துட்டு இருக்கேன்… அதெல்லாம் பொய் ஆனா என்னால தாங்க முடியாது… உன்னைய ரொம்ப மிஸ் பண்ணேன் டா… இதெல்லாம் சரியா தப்பானு தெரியல… எதுவா இருந்தாலும் நீ இல்லாம என்னால இருக்க முடியாது… அது மட்டும் எனக்கு தெரியும் தெரியும்… I love u…. love u forever…” என கடைசியாக சொல்லியும் விட்டு, அப்படியே அவனின் கன்னத்தில் முதல் முத்தத்தை பதித்தாள்.

அவளின் பேச்சிலே ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவன்… அவளின் கடைசி செயலால் மூச்சுவிட மறந்தான்… அவள் பிரிந்து அவனின் கண்களை பார்த்து எப்போதும் எனக்கு நீ வேணும்… எப்பவுமே… இப்போ பிடிச்ச கையை சாகுற வரைக்கும் விட மாட்டேன்… என கண்ணீருடன் அவனின் கையை பிடித்து பேசி கொண்டு இருக்க, இது வரை உறைந்து நின்றவன் இப்போது அவளின் கைகளை தட்டி விட்டு எழுந்து நின்று தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு இருந்தான். இவளுக்கு பயம் இருந்தாலும் அவனின் முகத்தை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

அவன் திரும்பி அவளை பார்த்தான். அதில் வெறுமை மட்டும் தான் இருந்தது… எதையும் இவளால் கண்டு பிடிக்க முடியவில்லை… அவனும் அவளை பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் கிளம்பி சென்று விட்டான். அவளுக்கு தான் மனம் நிலை இல்லாமல் தவித்து கொண்டு இருந்தது. அவன் சென்ற திசையை பார்த்து மௌனமாய் கண்ணீர் வடித்தாள். அப்போது தான் கயல் வந்தாள்.. என்ன என்று கேட்க ஏதும் பேசாமல் இருந்து விட்டாள்..

நடந்ததை திவ்யா சொன்னதும் தான் கயலுக்கு புரிந்தது… கொஞ்ச நாளாக திவ்யாவின் நடவடிக்கை காண காரணம்… இப்போது கயலுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை… இருந்தாலும் ஆறுதல் சொல்லி அவளை அனுப்பி விட்டாள்…. கயலும் இதை யோசித்து கொண்டே வீட்டிற்கு சென்றாள்.

ஆனால் அங்கு நடந்தது எல்லாம் ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டு இருந்ததை இவர்கள் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை…

விடியல் யாருக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ… பொறுத்திருந்து பாப்போம்….!!!!

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Sangusakkara vedi

   Antha Kannu yarodatha irukum …… U don’t worry dhivi Namma siva unna love pannama Vera yara love panna poren…cool … Ud ya knjm perusa kudunga sis

  2. priyakutty.sw6

   சிவா நல்ல பையனா தான் இருக்கார்… 😊

   லவ் அஹ் ஏத்துப்பாரா….