Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 7

திவ்யா, “நான் சிவாவை லவ் பண்றேன்” என்று சொன்னதை கேட்ட கயலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இமைக்காமல் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். “என்னடி சொல்ற, எப்போ இருந்து…” என கேட்க திவ்யா நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு…

கயல் திவ்யா சிவா மூவரும் கல்லூரி முடிந்து எப்போதும் பேசும் இடத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அது அவர்களின் விருப்பமான இடம். கல்லூரி மைதானத்தை பார்த்தவாறு இருக்கும். எப்போதும் அங்கு வந்து கொஞ்சம் நேரம் பேசி விட்டு தான் செல்வார்கள். கயலின் வாழ்க்கையை பற்றி நன்கு அறிந்தவர்கள். அதனால் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு சந்தோசத்தை மட்டும் தர வேண்டும் என்று தான் பேச ஆரம்பித்தவர்கள் ஒரு கட்டத்தில் அது பிடித்தும் விட அது இன்று வரை தொடர்கிறது.

அப்படி தான் ஒரு நாள் அனைவரும் பேசி கொண்டு இருக்கும் போது சிவா எப்போதும் போல திவ்யா-வை ஓட்டி கொண்டு இருந்தான். என்னதான் கயல் தோழி என்றாலும் கயலை ஒரு தங்கை ஸ்தானத்தில் தான் பார்ப்பதால் அவனுடைய குறும்புகள் எல்லாம் திவ்யா உடன் மட்டுமே. கயலுக்கும் அது தெரியும். பலமுறை அவனின் செயலும் சொல்லும் அதை நிரூபித்து இருக்கிறது. அதையும் தாண்டி அவன் மேல் ஒரு மரியாதை எப்போதும் உண்டு.

எப்போதும் போல பேசி விட்டு அனைவரும் கிளம்பலாம் எனும் போது திவ்யாவிற்கு ஏதோ புது எண்ணில் இருந்து போன் வந்தது. அவளும் நண்பர்களிடம் சொல்லிவிட்டு ஒரு பதட்டத்துடன் அட்டென்ட் பண்ண எதிர்முனையில் என்ன சொல்ல பட்டதோ மயங்கி சரிந்தவளை சிவா தான் தாங்கி கொண்டான்.

கயலுக்கும் பதட்டம் குறையாமல் அவளை எழுப்ப முயற்சித்து கொண்டு இருந்தாள். அதற்குள் சிவா அங்கு தண்ணீருடன் வர அதை அவளின் முகத்தில் தெளித்து ஒரு வழியாக அவளை எழுப்பினர். எழுந்தவளுக்கு அப்போது தான் நினைவு வர அழுது கொண்டு இருந்தவளை சமாதானபடுத்தி பொறுமையாக கேட்க, “அ… அ… அப்பாவுக்கு அச்சிடேன்ட்… நிறைய பிளட் லாஸ்… ரொம்ப கிரிட்டிகள்… ஏபிசி ஹாஸ்பிடல்-ல சேர்த்துருக்காங்களா… எ… எனக்கு பயமா இருக்கு…” என்று திக்கி திணறி ஒரு வழியாக சொல்லியும் விட்டாள்.

கயலுக்கு தெரியும் அவளுக்கு அவள் அப்பா என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று. அவள் பிறக்கும் போதே பிரசவத்தில் அவள் தாய் இறந்து விட அன்றில் இருந்து அவர் அப்பா தான் எல்லாமே. அவரும் தன் மகளுக்காகவே வாழ்ந்தவர். அவரின் தாய் எவ்வளவோ சொல்லியும் இன்னொரு கல்யாணத்திற்கு அவர் மறுத்து விட்டார். அதனால் அவரும் இதற்கு மேல் அவரை வற்புறுத்தவில்லை. தன் மகன் பேத்தி உடன் இங்கே வந்து இவர்களுடன் இருந்து திவ்யாவையும் பார்த்து கொண்டார். திவ்யா பாட்டி உடன் வளர்ந்தாலும் அவருக்கு மேலே தான் தன் அப்பாவை பிடிக்கும். அவரும் இவளுக்கு தாய் பற்றின ஏக்கம் வராமல் பார்த்து கொண்டார். இருவரும் நண்பர்கள் போல தான். அப்படி இருக்கும் போது இவளால் எப்படி இதை தாங்க முடியம்.

அழுது கரைந்தவளை எப்படியோ தேற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஐ.சி.யு வில் அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது. அதை பார்க்க பார்க்க இவளுக்கு உயிர் போய் உயிர் வந்தது. மனதிற்கும் தன் செல்ல தகப்பனிடம் பேசி கொண்டு இருந்தாள். ‘அப்பா என்னைய விட்டு போயிராதிங்க பா… எனக்குனு இருக்கறது நீங்க மட்டும் தானா… நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்… ப்ளீஸ் பா… உங்க குட்டிமா பாவம் பா.. வந்துருங்க….’ என்று மனதிற்குள் மன்றாடி கொண்டு இருந்தாள்.

கயலும் சிவாவும் அவளை தேற்றும் வழி அறியாது தவித்து கொண்டு இருந்தனர். அப்போது தான் அவளின் பாட்டி அங்கு வந்தார். சிவா தான் அவருக்கு தகவல் சொல்லிருந்தான். அவரும் கண்ணீருடன் வந்து தன் மகனை பார்த்து அழுது கொண்டு இருந்தார். கயல் அவரை சமாதான படுத்தி கொண்டு இருந்தாள். சிவா திவ்யாவின் கையை விடவே இல்லை… நான் உன்கூட இருக்கிறேன்… என்று அவன் செயலால் நிரூபித்து கொண்டு இருந்தான். அவன் கையின் வெட்பம் அவளுக்கு ஒரு புது உணர்வை தந்தது. அவன் அருகில் இருக்கும் போது அவளை அறியாமல் ஒரு தைரியம் அவளை ஆட்கொண்டது. எப்போதும் அவன் கையை பிடிப்பவள் தான். ஆனால் இந்த பிடிப்பு ஒரு புது விதமாக இருந்தது.

அவன் தோளில் சாய்ந்து அழுகும் போது அவளின் மனபாரம் சற்று இறங்கி போனது என்னவோ உண்மை தான். ஆனால் இதை உணரும் நிலையில் தான் அவள் இல்லை. நேரம் ஆனதால் சிவா கயலை கிளம்ப சொல்லி விட்டான். அதனால் அவளும் தோழிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மனதே இல்லாமல் கிளம்பி சென்றாள். அனைவரும் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து ஒவ்வெரு நிமிடத்தையும் வேதனையுடன் கடந்து கொண்டு இருந்தனர்.

டாக்டர் வெளியே வர அவரிடம் சென்று, “டாக்டர் அப்பா-க்கு ஒன்னும் இல்ல தானே” என ஒரு பரிதவிப்புடன் கேட்க அவரும் “ரொம்ப பிளட் லாஸ் மா… ரொம்ப நேரமா பிளட் கிடைக்காம இருந்து ரொம்ப ட்ரை பண்ணி இப்போ தான் ஒருத்தர் வந்தாரு… அவரு கரெக்ட் டைம்ல வந்து பிளட் குடுத்ததால இப்போ பரவாயில்லை… இரண்டு நாள் இருக்கட்டும் அப்புறம் செக் பண்ணிட்டு எப்போ டிஸ்சார்ஜ் பண்றதுனு பாத்துக்கலாம் கவலை படாதீங்க அவருக்கு ஒன்னும் இல்லை… இப்போ மயக்கத்துல இருக்காரு கண் முழுச்சதும் ஒரு ஒருத்தரா போய் பாருங்க…” என்று சொல்லி விட்டு டாக்டர் செல்ல அப்போது தான் திவ்யாவிற்கு மூச்சே சீராக வந்தது.

சிறிது நேரம் கழித்து தன் அப்பாவை பார்க்க சென்றாள். அப்போது தான் கண் விழித்து இருந்தார். மிகவும் சோர்வாக இருந்தவருக்கு மகளை பார்த்ததும் உடல் காயங்களை விட மகளின் கண்ணீர் தான் அவருக்கு பெரும் வழியை கொடுத்தது. வேதனையுடன் இருந்த மகளை சமாதான படுத்துவதற்குள் அவர் ஒரு வழி ஆகிவிட்டார். எப்படியோ தேற்றி அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது தான் சிவாவும் பின்னால் பாட்டியும் வந்தார்கள்.

அடுத்து அவரின் அம்மாவை சமாதானபடுத்தும் படலம், ஒரே பாச போராட்டம் என அனைத்தும் நடந்து கொண்டு இருந்தது. அதன் பிறகு தான் சிவா-வை பார்த்தவர் அவனிடம் பேசினார். “உன்னைய பத்தி என் குட்டிமா நிறைய சொல்லிருக்க பா… நானும் வீட்டுக்கு கூட்டிட்டு வா-னு சொன்னா ஏமாத்திட்டே இருந்தா. கடைசியில ஒரு வழியா பாத்தாச்சு பா… வா சிவா உட்காரு…” என சொல்ல அவனும் அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டான். சிறிது நேரத்திலே அனைவரும் நண்பர்கள் போல பழக ஆரம்பித்து விட்டனர்.

அந்த இரண்டு நாட்களும் திவ்யாவை விட சிவா தான் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டான். அவரை சாப்பிட வைப்பது, முதல் குளிக்க வைப்பது டைம்ற்கு மருந்து மாத்திரை என சகலமும் பார்த்து கொண்டான். அவரை தன் அப்பா போலவே நினைத்து கொண்டான். அவருக்கும் அவனை மிகவும் பிடித்து விட்டது. திவ்யாவிற்கு தான் அவனின் இந்த தோற்றம் புதிது. அவளுக்கு தெரிந்து சிவா மிகவும் ஜாலியாக இருப்பவன். எப்போதும் அவன் முகத்தில் சிரிப்பு தான் இருக்கும். ஆனால் இந்த சிவா-வை இப்போது தான் பார்க்கிறாள்.

இப்படியே இரண்டு நாட்கள் சென்றது. கல்லூரியில், கயலுக்கு தான் இருவரும் இல்லாமல் ஒரு தனி தீவில் மாட்டி கொண்ட உணர்வு. கல்லூரி செல்லவும் பிடிக்கவில்லை, வீட்டிலும் இருக்க முடியாது… அங்கே இருப்பதற்கு இது எவ்வளவோ மேல்.. என்று தான் வந்து விட்டாள். கல்லூரி முடித்து தினமும் திவ்யாவையும் அவள் அப்பாவையும் போய் பார்த்து விட்டு தான் வீட்டிற்கு சொல்லுவாள். இதனால் இவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். இப்படியே அவரும் குணமாகி வீட்டிற்கும் சென்றார். சிறிது நாட்கள் ஓய்வு எடுத்தால் சரி ஆகி விடும் என்பதால் வீட்டில தான் இருக்க வேண்டும் வெளியில் செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சிவா சொல்லிவிட்டு கிளம்பினான். திவ்யாவும் பாட்டியும் அவரை நன்றாக தான் பார்த்து கொண்டார்கள். அதனால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது.

அனைவரும் இரவு உணவு முடித்து விட்டு தூங்க சென்றனர். நாளை கல்லூரி செல்ல வேண்டும் என்பதை விட சிவாவை பார்க்க போகிறோம் என்ற உணர்வு தான் அவளுக்கு தேனாய் இனித்தது. ஒரு வாரத்தில் அவளிடம் ஏகப்பட்ட மாற்றம். அவனும் அடிக்கடி வீட்டிற்கு வந்து பார்த்து கொண்டு தான் இருந்தான். அப்போது எல்லாம் ஏற்படும் ஒரு எதிர்பார்ப்பு, ஒர கண்ணால் ரசிக்கும் திருட்டு பார்வை, அவனின் அங்க அசைவுகளை எல்லாம் இதய பெட்டகத்தில் பொக்கிஷமாக சேர்த்து கொள்வது, அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டே அவனின் இதய துடிப்பின் சத்தத்தை கேட்க வேண்டும் என்ற ஏக்கம், அவனின் உள்ளங்கை வெப்பம், அவனின் ஒற்றை பார்வையில் அவளின் உதட்டின் ஓரத்தில் ஒளிந்து கொள்ளும் வெட்கம்.. நாணம்… இது போக அவனின் அருகாமையில் ஏற்படும் படபடப்பு என எல்லாவற்றையும் வார்த்தையில் சொல்லிவிட முடியாது. எல்லாமே இந்த ஒரு வாரத்தில் அவளிடம் ஓடி வந்து ஒட்டி கொண்டது.

இப்படி ஒரு வாரமாக அவளின் நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருந்தான் சிவா… அவனறியாமலே.
விடிய விடிய கனவில் அவனுடன் வாழும் வாழ்வை கற்பனையிலே வாழ்ந்து விட்டு, ஒன்றும் தெரியாதவள் போல கிளம்பி விட்டாள் நேரமாக கல்லூரிக்கு. தகப்பனின், “எங்க சீக்கிரமா போற என்னாச்சு” என்ற கேள்விக்கு பதில் சொல்ல கூட நேரம் இல்லை. இதோ வந்து விட்டால் எப்போதும் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு. நேரத்தை பார்த்தால் இப்போது தான் 8 மணி. 10 மணி கல்லூரிக்கு இப்போதே வந்து விட்ட அவளை பார்த்து நக்கலாக சிரித்தது அவளின் மனசாட்சி. அதை தட்டி ஓரமாக தூக்கி போட்டு விட்டு காத்திருக்க ஆரம்பித்தாள் தன்னவனுக்காக.

நேரம் இன்று தான் மெதுவாக நகர்ந்தது. இவளுக்கும் பொறுமை பறந்து கொண்டு இருந்தது. அவளின் மனசாட்சி வேறு கலாய்த்து தள்ளியது. “இது எல்லாம் ஓவரா இல்ல.. 10 மணி காலேஜ்-க்கு இப்போவே வந்துட்ட.. இந்த காதல் வந்தா எல்லோரும் பைத்தியம் ஆயிடுவாங்கனு கேள்விபட்ருக்கேன். இப்போ தான் பாக்குறேன்… என்னமா ஒரு வாரம் தான் ஆச்சு ஏதோ பல யூகங்கள் அவனை பார்க்காத மாதிரி இவ்ளோ ஆர்வமா காத்துட்டு இருக்க… இதெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து…” என்று சலித்து கொள்ள “உன்னைய யாரு வெயிட் பண்ண சொன்னா முதல்ல கிளம்பு.. நான் என் புஜ்ஜு குட்டிய பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ வேற டிஸ்டர்ப் பண்ணிட்டு..” என்று அதை விரட்டி கொண்டு இருந்தாள். “என்னது புஜ்ஜுக்குட்டியா…” என்று வாயை பிளந்து கேட்டு கொண்டு இருந்தது. “அதுக்குள்ள செல்ல பெயரா… இதெல்லாம் ஓவரா இல்ல…” என்று அவளை கேட்க, “அதெல்லாம் இல்ல… இது என் இஷ்டம் நான் என் புருஷன எப்படிவேனா கூப்புடுவேன் உனக்கு என்ன… முதல்ல கிளம்பு” என விரட்டி விட்டு அவனுக்காக காத்து கொண்டு இருந்தாள்….

அடுத்து தனக்கு வரும் ஆபத்தை அறியாமல் தன் காதலனுக்காக காத்து கொண்டு இருந்தாள் பேதை… அப்போது….????

காதல் தொடரும்.
மீயாழ் நிலா

தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  8 Comments

  1. இன்பத்தில் திளைக்கும் ஆதியும், துன்பத்தில் துடிக்கும் கயலும் சந்திக்கும் தருணம் காதலா மோதலா எதிர்பார்ப்புடன்…

  2. ஆதியும், கார்த்தியும் ஃப்ரெண்டு, உங்க பாசத்துக்கு இல்லவே இல்லடா ஒரு எண்டு…

   1. Author

    Thanks sis 😀 rhyming Vera level 😍🥰

  3. திவ்யா சிவாவை பண்றா லவ்வு, அதைக் கேட்ட கயலுக்கு ஹார்டு ஆச்சு பக்கு பக்கு…

  4. Ennathu aavatha apdi enna abatha irukum … Nic ud sis….

   1. Author

    Thanks sis ☺️😁☺️😍🥰