Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 30

பூவரசி அறைக்குள் நுழைய அங்கே வெற்றியை அந்த பக்கம் திரும்பி அமர்ந்து இருந்தான். அவள் அருகே சென்று மாமா… என மெல்லமாக அழைக்க இத்தனை நேரம் அடக்கி வைத்து இருந்த கோவத்தை கொட்டிவிட்டான். “என்னடி மாமா… என்ன ரொம்ப சந்தோசமா இருக்க போல… நீ நினைத்தது தான் நடந்துருச்சே… அப்போ அப்படி தான இருப்ப… நான் எந்த நிலமைல இருக்கேனு உனக்கு தெரியும்ல… அப்புறம் எதுக்குடி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட… வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே… அதெப்படி நீ சொல்லுவ… நீ தான் மாமா மாமானு பின்னாடியே சுத்திட்டு இருந்த… இப்போ இது தான் வாய்ப்புனு கல்யாணம் வேற… என் பேச்சுக்கு எங்க மதிப்பு இருக்கு…” என அவன்பாட்டுக்கு பேசிக்கொண்டே போக அவனை பேசட்டும் என பொறுமையாக இருந்த பூவு இப்போது பேச தொடங்கினாள்.

“மாமா… எனக்கு உங்களை எவ்ளோ புடிக்கும்… நீங்க என் மனசுல எங்க இருக்கீங்கனு எனக்கு தெரியும்… அது உங்களுக்கும் ஒரு நாள் புரியும்… அதுவரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன்… அப்புறம் இந்த கல்யாணம் என்கிட்டே அவங்க விருப்பத்தை கேக்கல… தகவல் மாதிரி தான் சொன்னாங்க… நான் உங்கள எந்த அளவுக்கு விரும்புறேன்னு இங்க எல்லோருக்கும் தெரியும் உங்கள தவிர… பரவாயில்ல மாமா… கட்டாயத்தால ஒரு உறவை எப்பவும் இழுத்து பிடித்து நிக்க வைக்க முடியாது… உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனா பரவாயில்ல… நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் ஒத்துக்குறேன்… ஆனா என் முடிவு ஒன்னு தான்… இந்த ஜென்மத்துல நானும் என் காதலும் உங்களுக்கு மட்டும் தான்… சாகுற வரைக்கும் நீங்க தான் என் புருஷன்… இத நீங்க என் கழுத்துல தாலி கட்டுனாதால மட்டும் இல்லை… எப்போ உங்கள காதலிக்க ஆரம்பிச்சு என் புருஷனா நினைக்க ஆரம்பிச்சானோ அப்போ இருந்து… இது வெறும் கயிறு தான் மாமா… ஆனா நீங்க என் உசுரு… உங்க கையாலே ஏறுனதால இனிமேல் இந்த தாலியும் எனக்கு உசத்தி தான்… உங்க மனசு மாறுற வரைக்கும் காத்துட்டு இருப்பேன்… இல்லைனா உங்கள பாத்துட்டே என் வாழ்க்கையை ஓட்டிருவேன்… ஏன்னா என் சுவாசமே நீங்க தான் மாமா…” என கண்களில் ஒட்டு மொத்த காதலையும் தேக்கி கண்ணீருடன் அவள் பேசியதை பார்த்தவனுக்கு வார்தைகள் எதுவும் வரவில்லை… அவளின் காதலில் உறைந்துவிட்டான். மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறான் இவளின் காதலை.. முதல் முறையாக அவளிடமே இருந்து கேட்கும்போது ஒரு கணம் அவனிற்கு அவளை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

பூவு அவனை ஒரு பார்வை பாத்துட்டு எதுவும் பேசாமல் ஒரு தலையணை எடுத்து கீழே படுத்துகொண்டாள். அவன் இன்னும் அதே இடத்தில் வேரூன்றி இருக்க, “எத பத்தியும் யோசிக்காம தூங்குங்க மாமா… எல்லாம் சீக்கிரமா சரி ஆகிவிடும்… குட் நைட் மாமா…” என அவனை பார்க்காமல் பேசியவளின் கண்ணீர் துளிகள் அவளின் தலையணையை நனைத்து கொண்டு இருப்பது அவனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதற்கு மேல் அவனும் சென்று படுத்துவிட அந்த இரவு இருவருக்கும் தூங்கா இரவாகி போனது.

திகட்ட திகட்ட காதல், அன்பு, பாசம், அரவணைப்பு என கொட்டித்தீர்த்து விட்டான் கார்த்திக். ஆருவிற்கு இழந்த சொந்தங்கள் எல்லாமே தன்னவன் மூலம் கிடைத்த மகிழ்வு… அவளும் பாசத்தை வாரி வழங்க ஆடவனுக்கு பெற்று கொண்டான். இவளின் காதல் விவகாரம் மீடியா, மக்கள் உயர் அதிகாரிகள் என அனைவர்க்கும் தெரியவர அதை ஆமாம் என உறுதியும் செய்தனர்.

கார்த்திக், ஆரு இருவரும் கடற்கரையில் ஒன்றாக கைகோர்த்து நடக்கும்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் அவளை நிற்க வைத்து எதிரில் மண்டியிட்டுஅமர்ந்து, “ஜிலேபி… கனவுல காதல் பண்ண நான்… நிஜத்துல உன்னைய பாப்பேன்னு நினைக்கவே இல்லை… அப்படி இருந்தும் உன்னைய நான் பாத்தேன்… கடவுள் உனக்கு நான்… எனக்கு நீ தானு முடிவு பண்ணிட்டாரு… என் உயிருக்கும் மேல உன்னைய நேசிக்குறேன்…. ஐ லவ் யூ ஜிலேபி… கடைசிவரைக்கும் என்கூட இருப்பியா… எப்போதும்… எப்பவும் உன்னைய விடமாட்டேன்… கடைசிவரைக்கும் இதே காதலோடு பாசத்தோட பாத்துக்குவேன்…” என கேட்க கண்களில் கண்ணீருடன் மகிழ்ச்சியாக தலை ஆட்ட, “அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…” என ஒருவித தயக்கத்துடன் கேட்க அவளும் ஆமாம் என்று தலை ஆட்டி அணைத்துக்கொள்ள கார்த்திக்கு மகிழ்ச்சி தாளவில்லை… அவளை இறுக்கமாக தன்னுள் புதைத்து கொள்ள அவன் செய்த சமாதானம் எல்லாம் அவளுக்கு ஏறாமல் அழுது கொண்டே அவனுள் புதைந்து போனாள்.

கார்த்திக் ஆதிக்கு கால் செய்தவன், “மச்சான்… நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்டா…” என சொல்ல ஆதிக்கு ஒரே சந்தோசம்… “சூப்பர் மச்சான்… சீக்கிரமா ரெடி பண்ணிரலாம்… க்ராண்டா பண்ணி அசத்திரலாம்…” என சொல்ல கார்த்திக் மறுத்துவிட்டான்… “வேண்டாம் மச்சான்… ரெண்டு பேருக்கும் சிம்பிள்-அ பண்ணனும்னு தான் ஆசை… அதனால ரெஜிஸ்டர் மேரெஜ் போதும்… இந்த விசயத்துல கம்பெல் பண்ணாத மச்சான்… ப்ளீஸ்…” என சொல்லிவிட ஆதி எவ்வளவு பேசி பார்த்தும் ஒன்றும் முடியவில்லை… அதனால் விட்டுவிட்டான் நண்பனின் முடிவுக்கு.

சிறிது நாட்கள் செல்ல கார்த்திக், ஆருக்கு எளிமையாக கோவிலில் திருமண முடிந்து ரெஜிஸ்டர் பண்ணிக்கொண்டனர். அங்கே இருந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு அனைவரும் கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். சீதா, வெங்கட் இருவரும் அப்பா அம்மா ஸ்நானத்தில் இருந்து எல்லாம் செய்தனர். கார்த்திக், ஆருவும் மிகுந்த மகிச்சியாக இருந்தனர். ஒருவழியாக அனைவரும் உண்டு ஓய்வு எடுக்க இரவு சடங்கிற்கு தயாராக சொல்ல கார்த்திக் பயத்தில் வேர்த்துக்கொட்ட காத்திருந்தான்.

மஞ்சள் நிற காட்டன் புடவை, காதில் ஜிமிக்கி, கழுதை மெல்லிய செயின், முகத்தில் வெட்கம் என அவள் நடந்து வந்த அழகை பார்த்து மெய் மறந்து நின்றான் ஆடவன். அவனின் கனவு காதலியை அப்படியே உரித்து வைத்து அவள் இருந்த அழகை பார்க்க கார்த்திக்கு சுற்றம் மறந்து அவனுக்குள் இருந்த பயம் போய் ஒரு ரோமியோ வந்துவிட்டான். அவ்வளவுதான்… வெட்கத்தில் இவள் சிவக்க, இன்னும் மேலும் மேலும் அவளை சிவக்க வைத்து கொண்டு இருந்தான் ஆருவின் காதல் கணவன். மௌனங்கள் அங்கே ஆட்சி செய்ய, வெட்கம் என்னும் அன்பு கொண்டு ஆடவனை குத்திக்கிழித்து கொண்டு இருந்தால் காக்கி ஜிலேபி. அவளின் உள்ளங்கை தொடங்கி அவளின் அனைத்தையும் தனக்குள் வாங்கிக்கொண்டு இருந்தான் ஆடவன். பென்னவளும் அவனுள் சிக்கிக்கொண்டு மீள முயலாமல் அந்த சிறைவாசத்தை சுகமாக ஏற்று கொள்ள தொடங்க… குளிர் காற்று கூட அனலாக மாறி வீசியது.

இதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் சிலருக்கு சந்தோசமாகவும், பலருக்கு சோகமாகவும் கடந்தது. ஒருநாள் விடுமுறை தினம் அது. வெண்பா தன் தோழிகளுடன் வெளியில் ஊர் சுற்றிக்கொண்டு இருக்க, திடீரென காரில் அங்கே வந்த ரோஹன் அவளை வெளியில் அழைக்க வரமாட்டேன் என அடம்பிடித்தவளை அவனின் கண்களில் உள்ள வேதனை புரிய ஒருகட்டத்திற்கு மேல் வேறு வழி இல்லாமல் அவனுடன் சென்றாள்.

சுற்றியும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருக்க, அங்கு அங்கே பலூன்களை பறக்கவிட்டு நடுவில் இதய வடிவில் ஒரு அலங்காரம் அங்கே ஒரு மேடை அமைக்கபட்டு இருக்க சுற்றியும் யாரும் இல்லை. இதை எல்லாம் பிரமிம்மப்பாக பார்த்து கொண்டே வந்தால் வெண்பா. ரோஹன் அவளை அழைத்து சென்று அங்கு இருந்த மேடையில் நிற்க வைத்தான். அவளின் கீழே மண்டியிட்டு அமர்ந்து அவளின் கண்களை பார்த்து பேச ஆரம்பித்தான்.

“வெண்பா… நான் பேசுனது எல்லாம் தப்பு தான்… எனக்கு பொண்ணுங்கள பிடிக்காது… சின்ன வயசுல என்கூட இருந்த எங்க அம்மா… பணத்துக்காக எங்க அப்பாவை விட்டுட்டு வேறு ஒருத்தர் கூட ஓடி போய்ட்டாங்க… அதுல இருந்து எனக்கு பொண்ணுங்கன்னா இப்படி தான் இருப்பாங்க… அப்படினு நானே நினைச்சுட்டு வெறுத்துட்டேன்… யாரையும் புடிக்கலை… ஆனா முதல் தடவை உன்னைய பாக்கும்போது நீ பேசுறத எல்லாம் கேட்கும்போது அவ்வளவு கோவம்… இந்த பொண்ணுங்க எல்லோரும் இப்படி தானு… அது தான் நான் வாய் தவறி நிறைய பேசிட்டேன்… அதுவும் நீ என்னைய பிடிக்கலை… உலகத்துல உன்னைய தவிர யாரவேணாலும் கல்யாணம் பண்ணிக்குவேன்… உன்னைய பாக்கவே பிடிக்கல… இப்படி எல்லாம் சொல்லும்போது என்னையும் மீறி ஒரு கோவம்… அதான் நான் பண்றது சரியா தப்பான்னு யோசிக்காம உன்னைய கல்யாணம் பண்ணி அடிமைபடுத்தி வெறுப்பேத்த நினைச்சேன்… ஆனா எனக்குள்ள ஏதோ ஒரு தடுமாற்றம்… எப்போ உன்மேல காதல் வந்துச்சுனு தெரியலை… ஆனா நீ இல்லாம என்னால இருக்க முடியாதுனு மட்டும் தெரியும்… நான் செஞ்சது எல்லாம் மறந்து மன்னித்து உன் ஹிட்லர ஏத்துக்குவியா…?” என கண்களில் கண்ணீருடன், ஏக்கத்துடன் கேட்க, அவனின் பார்வையிலே புரிந்து கொண்டால் பாவை அவனின் காதலை. அவன் மனமுவர்ந்து கேட்கும் மன்னிப்பும் அவளுக்கு புரிய அவனை மன்னித்து ஏற்று கொண்டாள்.
ரோஹனின் சந்தோசத்தை வார்த்தையால் அடக்க முடியாது. அவளை ஆனந்தத்துடன் அணைத்து கொள்ள பென்னவளும் அவனை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள இருவரும் வேறு ஒரு உலகில் சஞ்சரித்தனர்.

“சூப்பர்… அருமையான நாடகம்….” என திடிரென அங்கே கேட்ட குரலில் பதறி இருவரும் விலக, கண்களில் கோவத்துடனும், வெறுப்புடனும் ஆதி நின்று இருக்க அவனின் பின்னே கார்த்திக் இருவரையும் கூர் பார்வையுடன் பார்த்து கொண்டு இருந்தான். வெண்பா பதறி போய் என்ன செய்வது என்று தெரியாமல் தன் அண்ணனிடம் மன்னிப்பு வேண்ட அறைந்தான் ஒரு அரை. வெண்பாவிற்கு தலையே சுற்றியது.

“நீ என்ன பண்ண… இதுவரைக்கும் என்ன நடந்தது எல்லாமே எனக்கு தெரியும்… ஆனா நான் இதுவரைக்கும் உன்கிட்ட எதுவும் கேக்கலை… என் தங்கச்சி எதுவா இருந்தாலும் அண்ணன் கிட்ட மறைக்காம சொல்லுவானு தான்… ஆனா நீ எவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட மறைச்சுட்டாளே…” என வேதனையுடன் கேட்க வெண்பாவிற்கு குற்றஉணர்ச்சியாக இருந்தது. ஆதியின் கண்களை பார்க்கமுடியாமல் அழுது கொண்டே இருக்க ரோஹன் தன்னவளுக்காக ஆதியிடம் பேச வர அவனை கை நீட்டி தடுத்துவிட்டான்.

“கூட பிறந்தவளே என்கிட்ட எதுவும் சொல்லலை… இதுல நீ என்ன சொல்ல போற… பரவாயில்ல இது உங்க வாழ்க்கை… இதுல தலையிடுற உரிமை எனக்கு இல்லை… எல்லாத்துக்கும் சேர்த்து ரொம்ப தேங்க்ஸ்…” என ரோஹனிடம் ஆரம்பித்து வெண்பாவை பார்த்து சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் அங்கே இருந்து சென்றுவிட்டான் ஆதி கூட கார்த்திக்கும். வெண்பா அதே இடத்தில் மடிந்து அமர்ந்து அழ ஆரம்பிக்க ரோஹனுக்கு அவளை எப்படி சமாதான படுத்துவது என தெரியாமல் வேதனையுடன் அமர்ந்து இருந்தான்.
ஒருவழியாக சமாதான படுத்தி அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு கவலையுடன் ரோஹன் சென்றுவிட வெண்பா திக் பிரம்மை பிடித்தவள் போல அவள் அறைக்கு சென்று அடைந்து கொண்டு கண்ணீரில் கரைந்தாள்.

ஆதி கடும்கோவத்தில் காரை செலுத்தி ஒரு இடத்தில் நிறுத்தி அழ துவங்க, கார்த்திக் அவனை முயன்ற அளவு தேற்றினான். “ஏன் மச்சான்… அவ இப்படி பண்ணா… நான் அவளுக்கு நல்ல அண்ணனா நடந்துக்கலையா….” என வேதனையுடன் கேட்க கார்த்திக், “மச்சான்… அவ சின்ன பொண்ணுடா… எங்க நீ இத சொன்னா தப்பா எடுத்துக்குவியோன்னு நினைச்சு சொல்லாம இருந்துருப்பா… விடுடா… நம்ம பாப்பா தான போ… போய் அவகிட்ட பேசு…” என ஒருவழியாக ஆறுதல் படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

வெண்பா கடத்தப்பட்டு திரும்பி வந்ததுமே அவளின் பதிலில் ஆதிக்கு சந்தேகமே… இருந்தாலும் எதுவும் கேட்கவில்லை… அதன்பிறகு தன் ஆட்களின் மூலம் இவர்களின் சந்திப்பு, திருமணம் இப்போது இருவருக்கும் நடக்கும் பனிப்போர்.. என எல்லாமே தெரிந்துவிட ஆதிக்கு அதிர்ச்சியாக இருந்தது… இத்தனை நடந்தும் தன் தங்கை தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே என வேதனையாக இருந்தது… ரோஹனன் மேல் நம்பிக்கை இல்லததால் அவனின் நடவடிக்கையும் கவனிக்க ஆட்கள் நியமித்து இருந்தனர். அதன் மூலமாக அவனின் காதல் உண்மை என்று புரியவர கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

அன்றில் இருந்து இன்றுவரை இருவரும் கண்காணித்து அவனின் ஆட்கள் சொல்லிவிட ரோஹன் இன்று வெண்பாவை அழைத்து சென்றது முதல். ஆதனால் ஆதி உடனே கார்த்திகை அழைத்து அவனிடம் நடந்ததை சொல்லிஇங்கேயும் அழைத்து வந்து இருந்தான். அவனின் கோவம் எல்லாம் வெண்பாவிடம் மட்டுமே… இருந்தாலும் ஒரு அண்ணனாக அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
அதே போல வீட்டிற்கு போனதும் அவளிடம் பேச தோன்றினாலும் இருந்த கோவத்தில் எதுவும் பேசாமல் அவனின் அறைக்கு சென்றுவிட அங்கே கயல் தன்னவனின் கண்ணீர் தடங்களை பார்த்து பதறி விசாரிக்க அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான். கயலுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஒரு பெண்ணாக அவளின் மனநிலை புரிய அதை ஆதிக்கும் புரியவைக்க முயல அவனிற்கு ஓரளவு கோவம் தணிந்து இருந்தது.அவளின் மடியில் ஆறுதல் தேடியே தூங்கிபோனான்.

அதிகாலை நேரம் அதே இல்லம் பரபரப்பாக இருக்க, என்னவென்று புரியாமல் ஆதி கீழே இறங்கிவர அங்கே ரோஹன் அவனின் தகப்பன் மற்றும் சில சொந்தங்களுடன் அமர்ந்து இருக்க ஆதிக்கு புரிந்துவிட்டது. இருந்தாலும் எதுவும் பேசாமல் அமர்ந்து வேடிக்கை பார்க்க ரோஹன் தந்தையும் வெங்கட்டும் பேசிக்கொண்டு இருக்க சீதா, கயல் இருவரும் வெண்பாவை அலங்கரித்து அழைத்துவர பொம்மை போல நின்றாள் வெண்பா. அவளின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு இல்லை. முகம் அழுது அழுது சிவந்து போய் இருந்தது. ஆதிக்கு அவளை பார்த்ததும் இருந்த கோவம் மறைந்து அவளின் நிலை வேதனையை கொடுத்தது.

அதன்பிறகு சம்மதம் சொல்ல, வெங்கட் ஆதியிடம் முடிவை கேட்க… இதுவரை குனிந்து இருந்த வெண்பா அண்ணன் என்ன சொல்ல போகிறான் என அவனை ஏக்கத்துடன் பார்க்க, அதை பார்க்கும் சக்தி அற்று திரும்பி கொண்ட ஆதி.. எனக்கு முழு சம்மதம் என சொல்லவிட வெண்பாவிற்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் அண்ணனின் பாரா முகம் அவளை சிதைக்காமல் இல்லை.

எல்லாம் நல்லபடியாக முடிய படிப்பு முடிந்தது கல்யாணம் என பெரியவர்களால் முடிவு எடுக்கபட்டு தட்டு மாற்றப்பட்டது. அன்றில் இருந்து ரோஹன் பொறுப்பாக அலுவலகம் செல்ல ஆரம்பித்தான். சொந்த காலில் நிற்க முயன்று, முடியாமல் தடுமாறியவனை, அவனின் தகப்பன் தாங்கி வழிநடத்த கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டான். வெண்பா படிப்பில் கவனம் செலுத்தினாலும் அந்த பழைய குறும்பு, பேச்சு எதுவும் இல்லாமல் ஏதோ ஒன்றை இழந்தது போல சுற்ற ஆதிக்கும் பாவமாக போய்விட்டது. தங்கை தானே என இறங்கி போய் பேச அவளும் சந்தோசத்துடன் அண்ணனை அணைத்து மன்னிப்பு வேண்ட அவனும் அவளை மன்னிக்க இருவரும் எப்போதும்போல சந்தோசமாக இருந்தனர்.

நாட்கள் மிகவும் மகிச்சியாக கடக்க, ஒரு நாள் காலை அனைவரும் உணவு அருந்தி கொண்டு இருக்கும்போது வெண்பா ஆதியிடம் ஏதோ வம்பு வளர்த்தவள் அவன் அடித்ததில் கோவம் ஆகி, ‘என்னைய அடிக்குற… இருடா உனக்கு இருக்கு…’ என கயலை அழைத்து… “டியர்… இவனை நம்பாதீங்க… நீங்க முதல் தடவை வீட்டுக்கு வந்திங்கள்ல… அந்த அன்னைக்கு நைட்… நீங்க கிளம்பினதும்… இவன் என்கிட்டே வந்து அந்த பொண்ணு கிளம்பிடுச்சான்னு கேட்டான்… நானும் அதை ஏன் நீ கேக்குறானு கேட்டேன்… அதுக்கு இவன்…” என நிறுத்த ஆதிக்கு புரை ஏறவே ஆரம்பித்துவிட்டது… அடுத்து என்ன நடக்க போகும் என அறிந்தவன் தங்கையை பாவமாக பார்க்க… அவளோ மனதில்… ‘இருடா என்னையவா அடிக்குற… இருடி மகனே…’ என உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்.

சீதா, வெங்கட், கயல் அனைவரும் ஆர்வமாக கேட்க… ஆதி தங்கையை அடக்கும் வழி தெரியாமல் பேந்த பேந்த விழித்தான். கயலுக்கு அவனின் பார்வை ஏதோ இருக்கு என உணர்த்த… “வெண்பா என்னனு முழுசா சொல்லு…” என கையை கட்டிக்கொண்டு கேட்க… ஆதிக்கு வேர்த்துக்கொட்ட ஆரம்பித்தது… தங்கையை இறைஞ்சும் பார்வை பார்த்து வைக்க… அனைவரும் வெண்பாவை ஆர்வத்துடன் பார்க்க… ஆதிக்கு என்ன செய்வது என தெரியாமல் திருதிருவென முழித்தான்.

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. priyakutty.sw6

      அப்பாடா… ரோஹன் வெண்பா லவ் க்கு எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க… ❤