Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 26

இரவு 10 மணி. கயல் கண் விழித்து பார்க்க எங்கும் இருள் சுற்றியும் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. கை, கால் எல்லாம் பயங்கரமாக வலித்தது அசைக்க கூட முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் கண்கள் இருளுக்கு பழக்கமாக, பார்த்தால் ஒரு பாழடைந்த அறை. எங்கும் தூசி குப்பையாக இருக்க கயலுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம எங்க இருக்கோம்… இங்க யாரு நம்மள தூக்கிட்டு வந்துருப்பாங்க… என்ன நடக்குது இங்க… ஐயோ ஒன்னும் புரியலையே… என யோசித்து கொண்டு இருக்க திடீரென ஒரு சத்தம். மூடிய அறையை திறந்து கொண்டு வந்தான் கதிரவன். கைகளில் கத்தியுடன் கண்களில் கொலைவெறி மின்ன அவன் வந்து நிற்க கயல் பயத்துடன் அவனை மிரண்டு போய் பார்த்தாள்.

கதிரவன் ஐம்பதுகளின் தொடக்கம்… லேசாக நரைத்த முடி… வெள்ளை வேஷ்டி சட்டையில் அரசியவாதியின் தோற்றத்தை அப்படியே உரித்து வைத்து கம்பிரமாக நடந்து வந்தான்… அவனை பார்த்தால் வயதானவன் போல தோன்றாது… என்றும் இளமையாக இருக்கவே இன்னும் உடற்பயிற்சி செய்து அவனின் தேகத்தை மெருகேற்றி வைத்து இருக்கிறான். பல்வேறு தொழிலில் கால் பதித்தவன் கடந்த 5 வருடமாக அரசியலிலும் தனது முத்திரையை பதித்து உள்ளான். எதிரிகளை அழித்து விட்டு தான் இவனுக்கு அடுத்த வேலை… இவனுக்கு எதிரில் இருந்து யாரு பேசுவதும் பிடிக்காது… அரசியலுக்காக வெளியில் நல்லவன் போல காட்டிக்கொண்டாலும் இவன் ஒரு நடமாடும் மிருகம்… ஈவு இரக்கம் இதெல்லாம் எங்கு விற்கிறது என்று கேட்பவன். ஆசைபட்டால் அதை அடைந்து முடியும் வரை இவனின் வெறி அடங்காது. இவனால் சீரழிக்கபட்ட பெண்கள் ஏராளம்… ஆனால் அதை எல்லாம் வெளியில் தெரியாமல் பார்த்து கொள்வதில் கைதேர்ந்தவன். அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஏராளமான இல்லீகல் தொழிலையும் செய்து வருபவன். இவனுக்கு குடும்பம் என்று யாரும் இல்லை… ஆனால் ஏகப்பட்ட சொத்துக்களை வளைத்து போட்டு சுகபோகமாக வாழ்பவன். பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசம்…. பல்வேறு இரவுகளை பல பெண்களுடன் கழித்து உள்ளான். இதில் பல பெண்கள் விருப்பதோடும், பல பெண்கள் கட்டாயத்தோடும் வருவது உண்டு. சிலர் இறந்தும் இருக்கிறார்கள்… இத்தனையும் செய்துவிட்டு ஊருக்கு உன்னதமாக இருக்கும் கலியுக மாமனிதன்.

ஆதிக்கு இவனின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் தெரியும்… இவனை இன்று வரை எதிர்த்து நிற்பவன் இவன் ஒருவனே. கதிரவன் எத்தனை முயன்றும் ஆதியை ஒன்றும் செய்யமுடியவில்லை… அதனால் இருக்க இருக்க இன்னும் கோவம் அதிகம் ஆக ஆட்களை வைத்து குடும்பத்தை கடத்த திட்டம் தீட்டி அதுவும் சொதப்பியது தான் மிச்சம். இப்போது மற்றவர்களை நம்பாமல் இவனே களத்தில் இறங்கி பல நாட்கள் அனைவரையும் பின்தொடர்ந்து சமையம் கிடைத்ததும் கயலை கடத்தி விட்டான். கயலை கடத்தியதும் அவர்கள் ஆட்கள் இவளை புகைப்படம் எடுத்து அனுப்ப அவனின் கண்கள் இவளை அளந்து, அவளின் அழகு இவனை பித்தம் கொள்ள செய்ய அடைந்தே ஆக வேண்டும் என்ற ஆசையோடு இதோ வந்துவிட்டான் தன் வாழ்நாளின் இறுதி கட்டத்தை நோக்கி.

“என்னடி நீ தான் அந்த ஆதி பொண்டாட்டி யா… சும்மா சொல்ல கூடாது நல்லா தான் இருக்க… பசங்க சரியான ஆள தான் கடத்திட்டு வந்துருக்காங்க… உன்னைய கொல்லலாம்னு தான் வந்தேன்… பட் உன்னைய பாத்ததும் வேற ஒரு முடிவு பண்ணிட்டேன்…” என சொல்லிக்கொண்டே அவளை மேல் இருந்து கீழ் வரை அங்குலம் அங்குலமாக ரசிக்க தொடங்க கயலுக்கு அவனின் பார்வை ஏதோ தன் மேல் புழுக்கள் ஊறுவது போல அருவருப்பாக இருந்தது. அவனின் பார்வை தன் உடலில் மேய்வதை அவளால் பொறுத்து கொள்ள முடியவில்லை. கண்கள் முழுக்க கண்ணீர்… அவனின் பார்வைக்கான அர்த்தம் புரிய அவளுக்கு இந்த நிமிடம் இறந்தே போனாலும் கவலை இல்லை என்ற எண்ணம் தோன்ற, என்ன செய்வது என்று தெரியாமல் அழுது தீர்த்தாள்.

“பசங்க சொன்னாங்க… நீயும் அவனும் ஏதோ ரகசியமா கல்யாணம் பண்ணிட்டிங்கனு…. இத்தனை நாள் ரெண்டு பேரும் ஒண்ணா இருந்திங்க… என்ன நடந்தது…. எல்லாம் முடுஞ்சதா…. அதெப்படி இல்லாம இருக்கும்… இவ்ளோ அழகான பொண்டாட்டி… எவன் தான் விட்டு வைப்பான்…. ஆனா பரவாயில்ல… இந்த ஆதி யூஸ் பண்ணி தூக்கி போட்டதை எல்லாம் நான் தொடணுமான்னு யோசிச்ச… ஆனா பாரு உன்னைய பாத்ததும் எனக்கு அதெல்லாம் தப்பவே தெரியலை… அந்த அளவுக்கு நீ என்னைய பைத்தியம் புடிக்க வெச்சுட்ட… அவன் எல்லாம் ஒரு ஆளு என்னைய தொழில்ல எதிர்த்து நிக்குறானா… பொடி பையன்… ரொம்ப ஆட்டம் காட்டிட்டான் எனக்கு… உன்னைய கசக்கி குப்பை மாதிரி அவன் முன்னாடி போடுறேன்… அதை பார்த்து அவன் அணு அணுவா துடிக்கணும்… அதை நான் ரசிக்கணும்” என கண்களில் கொலைவெறி மின்ன பேசிக்கொண்டு இருந்தான்.

“நீ பயப்படாத நான் ரொம்ப நல்லவன்… அதுவும் பெண்களுக்கு மட்டும்… அதுவும் உன்னைய மாதிரி அழகா இருக்க பொண்ணுக்கு இந்த கதிரவன் என்றும் அடிமை… என்ன செல்லம்…” என பேசிக்கொண்டே அருகில் வந்து அவளின் கன்னத்தை தொட… “ச்சி பொறுக்கி நாயே… யாருமேல கை வைக்குற… என்னோட நிழலை கூட உன்னால ஒன்னும் பண்ண முடியாதுடா…. என் ஆதிகிட்ட அடிவாங்கி சாகுறதுக்குள்ள ஓடிரு அதான் உனக்கு நல்லது…. அவரு வந்தா ஒருத்தன் கூட இங்க இருந்து உயிரோட போக முடியாது… அப்புறம் உனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட வேண்டி இருக்கும்… ” என தைரியமாக பேச கதிரவனுக்கு கோவம் வந்து கன்னத்தில் விட்டான் ஒரு அரை… “என்னடி திமிறா… வருவானா அவன் வரட்டும் அவனுக்கு சேர்த்து பால் ஊத்துறேன்… என்ன சொன்ன உன் நிழலை கூட தொட முடியாதா… ஹா ஹா… அதையும் பாப்போம்… உன்னைய சாப்ட்-அ ஹாண்டில் பண்ணலாம்னு நினச்சேன்… இனி அதெல்லாம் கிடையாது… நரகத்தை காட்டறேண்டி… தயரா இரு பேபி…” என எச்சரித்து விட்டு சென்று விட்டான்.

இத்தனை நேரம் இருந்த தைரியம் இப்போது ஆட்டம் காண ஆரம்பித்தது… ‘ஆதி எங்க இருக்கீங்க… எனக்கு பயமா இருக்கு… சீக்கிரமா வாங்க…’ என மனதிற்குள் தன்னவனுடன் மன்றாடி கொண்டு இருந்தாள். ‘மானத்தை விட வேறு எதுவும் பெரியது இல்லை… இங்கே இருந்து உயிரோட அல்லது பிணமாக கூட போயிரணும்…. அவன் என் நிழலை கூட தொட கூடாது…’ என யோசித்து தப்பிக்க வழி கிடைக்குமா என உயிரை கையில் பிடித்து கொண்டு கண்களால் அந்த அறையை அலசினாள். எங்கும் வழி இல்லை. கண்கள் இருட்டி கொண்டு வந்தது… மனசோர்வு உடல்சோர்வு என எல்லாம் சேர்ந்து கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் அழுது தீர்த்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்து சக்திகளையும் இழந்து மயக்கம் ஆனாள்.

சிறிது நேரம் கழித்து தன் ஆட்களுடன் வந்த கதிரவன் கயல் மயக்கம் ஆனதை பார்த்து தன் ஆட்களிடம் கண்ணை காட்ட அவர்கள் ஒரு ஊசியை கயலுக்கு செலுத்தினர். அதன்பிறகு அவளை தூக்கி கொண்டு போய் அருகில் இருக்கும் அறையில் கட்டிலில் படுக்க வைத்து இருபுறமும் கைகளை கயிறு கொண்டு கட்டிவைத்து விட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்றதும் அங்கே வந்து பார்த்த கதிரவன் கயலை மேல் இருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்துவிட்டு, “என்னடி.. உன் நிழலை கூட தொட முடியாதுனு சொன்ன… பாத்தியா இப்போ நீ எப்படி இருக்கேனு… இன்னும் கொஞ்ச நேரத்தில உன்னைய முழுசா எடுத்துக்க போறேன்… ஹா ஹா… உன்னால என்ன பண்ண முடியம்….” என சிரித்துவிட்டு, “கொஞ்சம் வெயிட் பண்ணு பேபி… நான் போய் குளிச்சுட்டு வரேன்… அப்போ தான் நல்லா இருக்கும்… சீக்கிரமா வந்திறேன்…” என குழைவாக பேசிவிட்டு சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் மயக்கத்தில் இருந்த கயல் கண்களை திறக்க அவளுக்கு எல்லாம் மங்கலாக தெரிந்தது. சுயநினைவு இல்லை… ஒருவித கிறக்கத்தில் சுற்றியும் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாமல் இருந்தவள் மறுபடியும் மயங்கி போனாள். நன்றாக தயாராகி வந்த கதிரவன் கயலை ஒரு மார்கமாக பார்த்து கொண்டே அவளின் காலில் கைகளை வைத்து தடவி கொண்டே இடுப்பு வரை வந்தவன் அவளின் துப்பட்டாவை உருவி எடுத்தான். அதை ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு அவளை நெருங்கி தொட போகும்போது தலையில் பயங்கரமான வழி… கைகளை வைத்து பார்த்தால் ரத்தம்… திரும்பி பார்க்க கையில் இரும்பை வைத்து கொண்டு கண்களில் கொலைவெறி மின்ன ஆதி நின்று கொண்டு இருந்தான். அவனை பார்த்துக்கொண்டே கதிரவன் மயக்கம் ஆக அவனை விட்டுவிட்டு கயலை எழுப்ப முயற்சி செய்ய அந்தோ பரிதாபம் அவளிடம் எந்த அசைவும் இல்லை.

பயத்தில் ஆதியின் கண்கள் கலங்கிவிட்டது… தன்னவளை இந்த நிலைமையில் பார்க்க அவனின் இதயத்தை யாரோ ஈட்டியை வைத்து பலமுறை குத்திய உணர்வு. கைகள் நடுங்க பயத்துடன் அவளின் கை கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவளை பூப்போல கைகளில் ஏந்தி கொண்டு வெளியேறினான் ஆதி. கார்த்திகை பார்க்க அவன், “மச்சான் நீ சிஸ்டர பாரு… இங்க நான் பாத்துக்குறேன்…” என சொல்ல உடனே அவளை காரில் கிடத்தி பறந்தான் மருத்துவமனைக்கு. கயலிடம் எந்த அசைவும் இல்லை. ஆதிக்கு அவளை இப்படி பார்க்க பார்க்க இயலாமை கண்ணீர் எல்லாமே சேர்ந்து கொண்டது. புயல் வேகத்தில் காரை செலுத்தி அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க தீவிர சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது.

வெளியில் உள்ள இருக்கையில் அமர்ந்தவனிடம் எந்த சலனமும் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டும் வலிந்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் கார்த்திக் அங்கே வந்து அவனின் தோளை தொட வெடித்து கதற ஆரம்பித்தான் ஆதி. “மச்சான் எல்லாம் என் தப்பு தான்… அவளை நான் தனியா விட்ருக்க கூடாது… பாரு எப்படி இருக்கா… எனக்கு பயமா இருக்கு மச்சான் அவளுக்கு ஒன்னும் ஆகாதுல… என் உயிரே அவ தான்டா… என்னால அவள் இல்லாம வாழ முடியாது…” என கதறி துடித்த நண்பனை எப்படி சமாதான படுத்துவது என்று தெரியாமல் கார்த்திக் தடுமாறினான்.

சற்று நேரத்தில் மருத்துவர்கள் வர, ஆதி அவரிடம் சென்று விசாரிக்க… “அவங்களுக்கு போதை ஊசி போட்ருக்காங்க… ரொம்ப வீரியம் மிக்கது… அதனால அவங்க சுயநினைவை இழந்துட்டாங்க… டிரீட்மென்ட் பண்ணிருக்கோம்… அவங்க கண்முழுச்சா தான் எதுவும் சொல்ல முடியும்… இல்லைனா அவங்க கோமா-க்கு போகவும் வாய்ப்பு இருக்கு… நீங்க போய் பேசுங்க… அதை கேட்டு அவங்க நினைவு திரும்புதா பார்க்கலாம்….” என சொல்லிவிட்டு அவர் சென்று விட ஆதிக்கு இந்த உலகமே இருண்டு போன உணர்வு.. தவிக்கும் இதயத்தை அடக்க வழிதெரியாமல் கால்கள் பின்ன உள்ளே நுழைந்தான்.

வாடி வதங்கிய சிறு மொட்டு ஒன்று அங்கே அமைதியாக படுத்து இருந்தது… எந்த சிந்தனையும் இல்லாமல்… ஆதிக்கு தன்னவளை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை. அருகில் அவளின் இதயத்துடிப்பின் அளவை சொல்லும் இயந்திரம் எந்த முன்னற்றமும் இல்லாமல் இருக்க ஆதி அங்கே இருந்த நாற்காலியை எடுத்து போட்டு அருகில் அமர்ந்து அவளின் கையை எடுத்து தனக்குள் பொத்தி வைத்து கொண்டான். என்ன பேசுவது என்று தெரியவில்லை… அவளின் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டு அமர்ந்துவிட்டான்.

கைகளில் தன் இதழை இதமாக ஓட்டி எடுத்து கண்ணீர் மல்க பேச தொடங்கினான். “கயல்… உன்னைய முதல் முறை பார்க்கும்போதே எனக்குள்ள ஒரு தடுமாற்றம்… அது என்னனு எனக்கு புரியலை… உன்னைய பிடிக்கும்… அதனால தான் நீ அழுகும்போது என்னால பாக்க முடியலை… நமக்குள்ள எதிர்பாராத விதமா கல்யாணம் நடந்துச்சு…. இவ்ளோ நாள் உன்கூட வாழ்ந்த வாழ்க்கையை என்னால மறக்க முடியாது… இன்னைக்கு உன்னைய காணோம்னு தெருவுல நாய் மாதிரி சுத்துன பாரு… அப்போ புருஞ்சுதுடி உன்னைய நான் எந்த அளவுக்கு காதலிக்குறேனு… நீ எனக்குள்ள எங்க இருக்க… எல்லாமே நான் இன்னைக்கு உணர்ந்துட்டேன்டி… நீ இல்லாம என்னால வாழ முடியாது என்கிட்டே வந்துருடி… இனிமேல் எப்பவும் உன்னையைவிட்டு போக மாட்டேன்… எனக்குள்ள பொத்தி வெச்சு பாதுகாத்துப்பேன்… ப்ளீஸ் டி கண்ணம்மா… மாமா கிட்ட வந்துரு டி…” என கண்ணீர் மல்க கெஞ்சியும் அவளிடம் எந்த அசைவும் இல்லை.

இந்த கலவரத்தில் விடிந்தே விட சீதா, வெங்கட் வெண்பா, செல்வா, அருண், சிவா, திவ்யா என அனைவரும் பதறி அடித்து மருத்துவமனை வந்து சேர கயலின் நிலைமை அவர்களுக்கு இன்னும் வருத்தத்தை அளிக்க யாருக்கு யாரு ஆறுதல் சொல்வது என்று கூட தெரியாமல் அமர்ந்து இருந்தனர். சீதா கயலை பார்த்து கதறி துடித்த துடிப்பு கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஆதி அவளை விட்டு இம்மியும் நகராது அவளுடனே இருந்தான். அவள் கண் திறக்கும் நொடிக்காக அனைவரும் காத்திருக்க மதியம் வரைக்குமே அவளிடம் எந்த அசைவும் இல்லை. மருத்துவர் பரிசோதித்துவிட்டு எந்தவித முன்னேற்றமும் இல்லை… என சொல்லிவிட ஆதியின் நிலை இருக்க இருக்க இன்னும் மோசமாக இருந்தது.

பலரின் கண்ணீரும் தன்னவனின் காதலும் அவளுக்கு புரிந்ததோ என்னவோ… மதியத்திற்கு மேல் சிறு அசைவு இருக்க அதை பார்த்த ஆதிக்கு தன்னவள் தன்னிடம் வந்துவிடுவாள் என தோன்ற மருத்துவரை அழைத்து பார்க்க கொஞ்சம் கொஞ்சமாக கண்களை கஷ்டப்பட்டு திறக்க முயற்சி செய்து ஒருவழியாக கண் திறக்க ஆதி கண்களில் கண்ணீருடன் தாவி அணைத்து கொண்டான்… “கண்ணம்மா நீ வந்துட்ட… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடி… நீ என்கிட்டையே வந்துட்ட… அது போதும்” என முகம் முழுக்க முத்தம் இட கயலிடம் எந்த ரியாக்ஷன்யும் இல்லை… ஆதி அவளை பார்க்க…. “ஆதி நான் சுத்தமானவ இல்லை… நான் உங்களுக்கு ஏத்தவ இல்லை… என்னைய தொடாதீங்க… நான் சாகனும்… எனக்கு வாழ புடிக்கலை… என்னைய விடுங்க…” என கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய சத்தம் கேட்டு அனைவரும் வர எல்லோரும் பார்த்து மிகவும் பயந்து கத்த தொடங்க ஆதி எல்லோரும் வெளியில் அனுப்பிவிட்டு, அவளை சமாதான படுத்தி நடந்ததை எடுத்து சொல்லி புரியவைக்க கயல் அவனிடம், “நிஜமா எனக்கு ஒன்னும் ஆகல தானே…” என ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்க, “என்னைய நம்ப மாட்டியா… நிஜமாதான் சொல்றேன்… அவன் விரல் கூட உன்மேல படலை…” என சொல்ல கயலுக்கு அப்போது தான் போன உயிர் திரும்பி வந்த சந்தோசம்…. ஆதியை அணைத்துக்கொண்டு கதறிவிட்டாள்.

“நான் பயந்துட்டேன் ஆதி… அதுவும் அவன் என்னைய பாத்த பார்வையிலே எனக்கு பாதி உசுரு போய்டுச்சு… எங்க உங்கள எல்லாம் பாக்காம போயிருவானோனு பயந்துட்டேன்…” என அவனிடம் கதற அவன் சமாதானப்படுத்தினான். அந்த கதிரவன் மேல் இருக்க இருக்க இன்னும் கொலைவெறி அதிகம் ஆனது. ஆனால் கயல் முன்னாள் எதுவும் காட்டாமல் அவளுக்கு ஆறுதலாக மாறி போனான். அதன் பிறகு அனைவரும் வந்து பார்க்க ஒரே கண்ணீர், பாச போராட்டம் அரங்கு ஏற, மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு கயலை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

கொஞ்சம் பயம் இருந்தாலும் அனைவரின் கவனிப்பில் நன்றாக தேறி இருந்தால் கயல். ஆதி அவளின் கூடவே இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள கயல் அவனை ரசித்து கொண்டு இருந்தாள். எதேர்ச்சியாக திரும்பிய ஆதி அவளின் பார்வையின் வீச்சில் வெட்கம் பட்டு, ‘என்னடி எதுக்கு இப்படி பாக்குற…?” என கேட்க, “ஹாஸ்பிடல்-ல நீங்க சொன்னது எல்லாம் உண்மையா ஆதி…??” என பரிதவிப்புடன் அவனின் கண்ணை பார்த்து கேட்க, ஆதி அவளின் அருகில் அமர்ந்து, “எல்லாமே உண்மை தான்… நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே கிடையாது… என் உயிரே நீ தாண்டி ஐ லவ் யு கண்ணம்மா” என சொல்ல கயல் அழுது கொண்டே அவனை அணைத்து கொள்ள, “மேடம் இன்னும் எனக்கு பதில் சொல்லலையே…?” என குறும்புடன் கேட்க கயல் சிரித்து கொண்டே “என்னைய இம்ப்ரெஸ் பண்ணுங்க… பாப்போம்…” என சொல்லி கண் அடித்துவிட்டு ஓடிவிட ஆதி சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான்.

சிவா திவ்யா ஒரே வகுப்பில் இருந்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் விடாமல் பார்க்கும் திவ்யா இப்போது அவன் புறம் திரும்பவது கூட இல்லை. படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்த சிவாவே குழம்பி போனான். ‘என்ன இந்த போடலங்கா பாக்க கூட மாட்டேங்குறா… திங்குற மாதிரி பாத்துட்டு இருப்பா… இப்போ என்னனா கண்டுக்க கூட மாட்டேங்குறா…’ என யோசிக்க அவனின் மனசாட்சி கழுவி ஊற்றியது. அதை தட்டி ஓரம் கட்டிவிட்டு இன்னும் ஆராய்ச்சி நடத்தி கொண்டு இருந்தான்.

ஆதி மற்றும் கார்த்திக் இருவரும் கதிரவனை அடைத்து வைத்து இருக்கும் இடத்திற்கு சென்றனர். முகம் முழுக்க ரத்தத்துடன் கை கால் எல்லாம் கட்டிவைக்க பட்டு அரை மயக்கத்தில் இருந்தவனை ஆதி அவனின் முறைப்படி சிறப்பாக கவனித்தான். தன் குடும்பத்தை பார்த்தாலே அவர்களை அடியோடு அழிப்பவன், இவனின் செயலால் தன்னவள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் அவனை துடிக்க துடிக்க கதற வைத்தான். அவன் முன்னாலே உயிரோடு இருக்கும் ஒவ்வொரு விரலாக வெட்டி, அவனின் கை கால் என அனைத்தும் தனியாக வெட்டி அந்த காட்டு மிருகங்களுக்கு இரையாக போட்டுவிட்டான். அவனின் எலும்புகள் கூட யாருக்கும் கிடைக்காது.

அதன்பிறகு வந்த நாட்கள் அனைவர்க்கும் ஆனந்தமாக கழிய ஆதியின் காதல் புரிந்தாலும் கயல் அவனை அலைய வைத்து கொண்டு இருந்தாள். ஆதிக்கு அது புரிந்தாலும் அவளை இன்னும் அதிகமாக காதலிக்க தொடங்கினான். கயல் கல்லூரிக்கும் செல்ல தொடங்க, ஆதி அவனின் வேலையில் கவனத்தை செலுத்தினாலும் கயலுடன் நேரத்தை செலவழித்தான். கயலுக்கும் ஆதியின் மேல் ஒரு ஓரத்தில் இருந்த காதல் மரமாக மாற தொடங்கியது.

அதை அவள் புரிந்து கொள்ளும் நாளும் வெகு தூரம் இல்லை….!!! அந்தநாள்…!!!

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்