Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 24

ஆதி ஆபீஸ்-ல் ஏதோ மீட்டிங் என அதற்கு தேவையான பைலை எடுக்க வீட்டிற்கு வந்தவன், அவனது அறையில் அதை தேடிக்கொண்டு இருக்கும்போது ஒரு கடிதம் அவன் கையில் சிக்கியது. முதலில் அதை தூக்கி போட நினைத்தவன் எதற்கும் பாப்போம் என நினைத்து அதை பிரித்து படிக்கையில் அவனுக்கு தூக்கி வாரி போட்டது. கயலின் மேல் கட்டுக்கடங்காத கோவம் நெஞ்சில் கனன்று அவனை உயிருடன் எரித்து கொண்டு இருந்தது. கைகளை முறுக்கி கோவத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். அப்போது போன் அடிக்க அதை எடுத்து பார்க்க கார்த்திக் அழைத்து இருந்தான். இது மிகவும் முக்கியமான மீட்டிங் என்பதால் அந்த கடிதத்தை பத்திரமாக வைத்து விட்டு கிளம்பிவிட்டான் அலுவலகத்திற்கு.

இது எதுவும் தெரியாமல் கயலும் வெண்பாவும் வீட்டிற்கு வர, இருவரும் போய் சீதாவை ஒருவழி ஆக்கி கொண்டு இருந்தனர். கயல் தன்னுடைய தாயிடம் கிடைக்காத அன்பு, ஏக்கம் எல்லாம் சீதாவிடம் காட்டினாள். சீதாவிற்கு அது புரிந்தும் முழுமனதாக மகளாகவே அன்பு காட்ட தொடங்கிவிட்டார். வெண்பா அவளின் அறைக்கு சென்று விட கயல் சீதாவிடம் இன்று கல்லூரியில் நடந்ததை எல்லாம் பள்ளி மாணவி தாயிடம் ஒப்புவிப்பதை போல அனைத்தையும் சொல்ல, சீதாவும் தன் வளர்ந்த குழந்தை சொல்வதை எல்லாம் ஆர்வமாக கேட்டு கொண்டு இருந்தார். சீதாவை கொஞ்சிவிட்டு அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு திரும்பவும் சீதாவிடமே தஞ்சம் அடைந்து இருந்தாள்.

ஆதிக்கு எந்த வேலையிலும் கவனம் செல்லவில்லை. மீட்டிங் கூட கார்த்தி தான் பார்த்து கொண்டான். சில நாட்களாக அலுவலகம் செல்லாததால் பார்க்க வேண்டிய வேலை நெறைய இருக்க அதை முடித்து வீடு திரும்பவே இரவு ஆகிவிட்டது. வீட்டில் நுழைந்ததும் நேரே தன் அறைக்கு செல்ல அங்கே கயல் பொருட்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் ஆதியை பார்க்க ஏதோவொரு இனம் புரியாத சந்தோசம் வெட்கம் அவளறியாமல் வந்து ஓட்டி கொண்டது. மெதுவாக அவளை நெருங்கியவன் முகம் இன்னும் கோவத்தில் சிவந்து இருக்க அதை புரியாமல் பார்த்து கொண்டு இருந்த கயலை விட்டான் ஒரு அரை. ஒரு அடிக்கே கீழே விழுந்தவள் வலி தாங்க முடியாமல் கண்ணீருடன், கன்னத்தை கையில் தாங்கி அவனை இயலாமையுடன் பார்க்க அதை பார்க்கும் திராணி அற்று முகத்தை திருப்பி கொண்டான்.

அந்த கடிதத்தை எடுத்து அவள் முகத்தில் ஏறிய அதை பார்த்தவளுக்கு எல்லாம் விளங்கியது. தயக்கத்துடன்… அது வந்து… என பேச ஆரம்பிக்க ஆதியின் முறைப்பில் வாயை விட்டு வார்த்தைகள் வெளியில் வரவில்லை. “என்னடி இது… நான் நீ ரொம்ப தெளிவான பொண்ணுன்னு நெனச்சேன்… ஆனா நீயும் ஒரு சாதாரண பொண்ணுன்னு நிரூபிச்சுட்ட… கொஞ்சம் ஆச்சும் உன் அப்பா தம்பியை நினைச்சு பாத்தியா… எப்படி டி உனக்கு மனசு வந்துச்சு… உன்னைய எல்லாம்…” என பேச முடியாமல் நிறுத்தியவன் அங்கே அழுது சிவந்து கண்களில் கண்ணீருடன் நின்றவளை பார்க்க முடியாமல் வெளியே சென்றுவிட்டான். செல்லும் அவனை அழைக்க கூட தோன்றாது அங்கையே மடங்கி அமர்ந்து அழ தொடங்கினாள்.

காரில் ஏறியவன் எங்கு செல்வது என்று தெரியாமல் சென்று கொண்டு இருந்தான். அவனின் கோவம், இயலாமை எல்லாம் காரின் வேகத்தில் காட்டி கொண்டு இருந்தான். ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு கண்ணை மூடி தன்னை தானே சமன்படுத்தி கொண்டு இருந்தான். வெகு நேரம் கழித்து கோவம் கொஞ்சம் தணிந்தவுடன் திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தான். இங்கே கயல் கதறி துடித்தாள்… ‘தான் எத்தனை பெரிய காரியத்தை துணிகரமாக செய்ய இருந்தேன்… அப்படி செய்து இருந்தாள் தன் குடும்பத்தின் நிலைமை…’ என யோசிக்க யோசிக்க அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஆதி வீட்டிற்கு வர சீதா சாப்பிட அழைக்க, “கயல் எங்கம்மா சாப்பிடாலா…” என ஒரு பரிதவிப்புடன் கேட்க, “இல்லைப்பா… மேலயே தா இருக்க… நான் போய் கூப்டதுக்கு அப்புறம் சாப்பிடறானு சொல்லிட்டா… சரி உன்கூட சப்படட்டும்னு நானும் விட்டுட்ட… நீ போய் கூட்டிட்டு வா… எவ்ளோ நேரம் புள்ளை பசில இருக்கும்…” என சீதா சொல்ல, “நீங்க போய் தூங்குங்கமா… நான் பார்த்துக்குறேன்… ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு…” என சொல்ல சீதாவும், “மறக்காம சாப்பிட்டு தூங்குங்க….” என சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அறையில் நுழைந்த ஆதியை காரிருள் மட்டுமே வரவேற்றது… எங்கும் இருள்… தேடி கண்டுபிடித்து ஸ்விட்சை போட அப்போது தான் அறை எங்கும் வெளிச்சம் பரவ ஒரு ஓரத்தில் அழுது சோர்ந்து போய் தூங்கி இருந்தால் கயல். பதறி அடித்து ஆதி அவளை எழுப்ப எந்த அசைவும் இல்லை. பயந்தவன் அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து தெளிக்க, சோர்வினால் திறக்க முடியாத கண்களை மெல்லமாக திறந்தவள் தன் எதிரே இருந்த ஆதியை பார்த்து தாவி அணைத்து கொண்டாள். ஆதி இதை சற்றும் எதிர்பார்க்காததால் உறைந்து விட்டான்.

“என்னைய மன்னுச்சுருங்க… நான் வேணும்னே எதுவும் பண்ணல… அந்த சூழ்நிலை நான் அப்படி யோசிக்க வேண்டியதா போச்சு… எனக்குன்னு யாரும் இல்லை… இருந்த ஒரு உறவும் இப்போ இல்லை அப்படினு யோசிக்கும் போது முட்டாள் தனமா பண்ணிட்டேன்… இனிமேல் எப்பவும் இப்படி யோசிக்க மாட்டேன்… ப்ளீஸ் நீங்களும் என்னையைவிட்டு போயிராதிங்க… என்னால தாங்க முடியாது…” என அதற்குமேல் பேச முடியாமல் கதறி அழுதவளை இன்னும் இறுக்கி தன்னுடன் அணைத்து கொண்டான் ஆதி. அந்த அணைப்பு அவளுக்கும் தேவை பட்டதோ என்னவோ அவனுள் ஒன்றிவிட்டாள். அவளின் கண்ணீர் அவனின் நெஞ்சில் இறங்க இவனுக்கு தன் மேலையே கோவம் வந்துவிட்டது. என்ன இருந்தாலும் அடித்து இருக்க கூடாது என யோசித்து அவளின் முகத்தி நிமிர்த்தி பார்க்க கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது.

அவளின் கண்ணீர் இவனின் இதயத்தை குத்தி கிழிக்க அதற்கு அவனே மருந்து ஆகி போனான். கன்னத்தை கைகளால் தாங்கி கண்ணீரை துடைத்து விட்டு அந்த கண்களில் தன் இதழ் கொண்டு முத்திரையை பதிக்க, அவளின் மனம் சற்று ஆறுதல் அடைந்தது என்னவோ உண்மை தான். நெற்றியிலும் தன் முத்திரையை பதித்தவன் அவளின் கண்களை பார்த்து மனதார மன்னிப்பு கேட்டான். அவளும் அவனை இறுக அணைத்து மன்னிப்பு வழங்க, அவனும் அவளை தனக்குள் புதைத்து கொண்டான். நேரம் கடந்தே இருவரும் நிகழ்காலத்திற்கு வர கயலுக்கு வெட்கம் வந்து ஓட்டி கொண்டது. அவனை பார்க்கும் திராணி அற்று திரும்பி நின்றவளை பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. இருந்தும் அவளை தொந்தரவு செய்யாமல் கீழே சென்று இருவருக்கும் உணவை எடுத்து வந்து அவனே அவளுக்கு ஊட்ட கண்களில் கண்ணீருடன் முகத்தில் சந்தோசத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இரவு உணவை முடித்தனர்.

கயலுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அதுவும் வெற்றியை திருமணம் செய்ய வேண்டும் என அவள் என்றும் யோசித்தது இல்லை. தன்னால் கடைசி வரை திருமணத்தை நிறுத்த முடியவில்லை எனில் இந்த பிடிக்காத வாழ்க்கையை வாழ்வதற்கு இறந்து விடலாம் என நினைத்து அந்த தற்கொலை கடிதத்தை எழுதி அவளின் உடைமையில் வைத்தாள். கடைசியில் ஏதோ நடந்து ஆதியை திருமணம் செய்ததால் மேலும் குழப்பத்தில் இருந்தவளை ஆதியின் நடவடிக்கை மாற்றிவிட்டது. தன் தந்தை, தம்பிக்காக யோசித்தது, மகள் போல பார்த்து கொண்ட சீதா, தந்தையின் பாசம் என எல்லாம் அவளை மாற்ற அதை பற்றி யோசிக்கவில்லை. அந்த கடிதத்தையும் மறந்தே விட்டாள். இன்று எதிர்ச்சியாக அதை பார்த்த ஆதிக்கு கட்டுக்கடங்கா கோவம். அதெப்படி அவள் இப்படி ஒரு முடிவை எடுக்கலாம் என. அந்த கோவம் தான் சண்டையாக மாறி இப்போது இப்படி முடிந்துவிட்டது.

தேவாவிற்கு அவனின் தந்தை சொல்லிவிட்டார் தனது அலுவலகத்தில் நடந்தது முதல் கயலின் திருமணம் மற்றும் ஆதியை பற்றியும். சிறிது நாட்களே ஆனாலும் அவனுள் ஆழமாக வேரூன்றி போன காதல் அல்லவா. இத்தனை சீக்கிரம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என அவன் எதிர்பார்க்கவில்லை. சிறிது நாட்களே ஆனாலும் அவனின் காதல் உண்மை. அதுவும் முதல் காதல் என்றால் சொல்லவா வேண்டும். இதனால் மேலும் விரக்தி அடைந்தவன் பறந்து விட்டான் வெளிநாட்டிற்கு. இங்கே இருந்தால் தன்னால் கயலின் வாழ்வில் குழப்பம் வரலாம் என நினைத்து சென்று விட்டான். அது எல்லாவற்றையும் தாண்டி தனக்கு ஒரு மாறுதல் வேண்டும், சொல்லப்போனால் அவளை மறக்க வேண்டும் என நினைத்தே சென்று விட்டான்.

நாட்கள் யாருக்கும் நிற்காமல் கடந்து கொண்டே இருந்தது. ஆதி, கயல் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசுவது, சந்தோசம் சோகம், என எல்லாத்தையும் பகிர்ந்து கொள்வது என. அனைவர்க்கும் இவர்களை பார்க்க சந்தோசமாக இருந்தது. செல்வத்திற்கு அளவில்லா மகிழ்ச்சி. இனிமேல் ஆவது தன் மகளின் வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் இருக்கட்டும் என. கயல் கல்லூரி செல்வது, சீதாவுடன் கொஞ்சி அவரின் முந்தானையை பிடித்து கொண்டே சுற்றுவது, செல்வத்தை கவனித்து கொள்வது, தம்பியுடன் விளையாடுவது என. கல்லூரியிலும் கயலின் வாழ்க்கை சீராக சென்று கொண்டு தான் இருந்தது. வெண்பாவும் கயலும் சிறந்த தோழிகளாக மாறி இருந்தனர். வெண்பா தன்னுடைய கடந்த காலம் அவனின் அண்ணனை பற்றி குடும்பத்தை பற்றி என எல்லாமே சொல்லி இருந்தால், ரோஹனை தவிர. பிறகு சொல்லிக்கொள்ளலாம் என நினைத்து விட்டுவிட்டாள். அப்போதே சொல்லிருக்கலாம்.. இதனால் தான் பெரிய பிரச்னையை சந்திக்கபோவது பற்றி அப்போது வெண்பா அறிந்து இருக்கவில்லை.

ரோஹன் நிலைமை தான் அந்தோ பரிதாபம்… பழிவாங்குவேன்… பின்னால் அவளை சுற்ற வைக்குறேன் என சபதம் இட்டவன்… இப்போது இவன் தான் அவள் பின்னால் குட்டி போட்ட பூனையாக சுற்றி கொண்டு இருந்தான். ஐயோ பாவம்!!.. கார்த்திக் குறுஞ்செய்தில் காதலை வளர்த்து கொண்டு இருந்தான். முதலில் இவனை பற்றி தெரிந்து வாய்க்குவந்த படி திட்டியும் கேட்காமல் தனது காதல் அம்புகளை அவளை நோக்கி வீசி கொண்டே இருந்தான் கள்வன். அவளை பின்தொடர்வது… மணிக்கணக்காக காத்திருப்பது… அவள் எங்கே இருந்தாலும் அவளுக்கு தெரியாமல் தூரத்தில் இருந்தே காதல் பார்வையை வீசுவது என இவனின் அட்டூழியங்கள் எல்லை தாண்டி சென்று கொண்டு இருந்தது.

அவனின் அனைத்து நடவடிக்கையும் இவளும் அறிவாள். இருந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொண்டாள். முதலில் தொல்லையாக இருந்தாலும் பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கும் அது பிடிக்க ஆரம்பித்துவிட்டது. சொல்லப்போனால் எதிர்பார்க்கவும் ஆரம்பித்துவிட்டாள். அதிகாலை எழுந்ததும் அவன் அனுப்பும் குட் மார்னிங் ஜிலேபி என்பதில் ஆரம்பித்து, இரவு தூங்கும் முன்பு வரும் குட் நைட் ஸ்வீட் ஹார்ட்… வரை. ஒரு நாளின் தொடக்கமும் முடிவும் அவளுக்கு அவன் தான் என ஆகிவிட்டது. நேரில் பார்த்தால் மட்டும் பேசும் தைரியம் இருக்காது நம் கார்த்திக்கு. இவனுக்கும் நேரில் பார்த்து காதல் சொல்ல வேண்டும் என ஆசை இருந்தாலும் ஏனோ ஒருவித பயம் தடுமாற்றம்… அவனும் என்னதான் செய்வான் பாவம்…

சிவா இன்னும் திவ்யாவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் தான் சுற்றி கொண்டு இருந்தான். திவ்யாவிற்கு அது பெரும் வலியை கொடுத்தாலும், அவனை பார்த்து கொண்டே இருக்கும் இந்த நிமிடம் போதும்… என நினைத்து அவனை தொந்தரவு செய்யவில்லை. சிவாவிற்கு இது ஒரு ஆறுதலாக இருக்க அப்படியே விட்டுவிட்டான். என்னதான் பழைய படி அவளிடம் பேசினாலும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. அதை நினைத்து அவள் அழுகாத நாட்களே இல்லை… இருந்தாலும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை… கயலுக்கும் கூட… தன் கஷ்டம் தன்னோடு போகட்டும் என நினைத்து விட்டுவிட்டாள். இப்போது தான் கயலின் வாழ்வில் சந்தோசம் இருக்கிறது… அது தன்னால் கெட வேண்டாம் என நினைத்தும் அவளிடம் எதுவும் சொல்லாமல் இயல்பாக இருக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டாள்.

வெற்றிமாறன் இந்த சம்பவங்களுக்கு பிறகு அமைதியாக சுற்றி கொண்டு இருந்தான் ஊரில். பூவரசிக்கு அவனை பார்க்க கஷ்ட்டமாக இருந்தாலும் தொந்தரவு செய்யாமல் அவனுக்காக காதலுடன் காத்திருந்தாள்.
கதிர் சென்னையில் நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தான். அவளுக்கு சுமதியை நினைத்து கோவமாக வந்தது. அதையும் தாண்டி தன்னவனின் கண்ணீர் அவளுக்கு இன்னும் வேதனையை அளித்தது. ஆனால் அவளின் காதல் தொல்லைகள் குறையவில்லை. இன்னும் அவனுக்கு தொல்லைகள் கொடுத்து கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவனோ முன்பு போல அவளை திட்டவில்லை அமைதியாக விலகிவிட்டான். அது இன்னமும் அவளுக்கு கஷ்டத்தை தான் கொடுத்தது. தன் மாமன் மனது என்றாவது மாறும் என நம்பிக்கையுடன் காத்திருந்தாள் பூவரசி.

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்