Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 14

வெண்பாவிற்கு எதுவுமே தோன்றவில்லை. எப்படி இங்கே இருந்து தப்பித்து செல்வது… என எதுவும் தெரியாமல் இயலாமையுடன் அமர்ந்து இருந்தாள். கை, கால் வேறு கட்டப்பட்டு விட்டது மறுபடியும். இது வேறையா என்று தான் இருந்தது. ‘என்னடி வெண்பா, சிவாஜியை ஓவர் டேக் பண்ற அளவுக்கு நடிச்சாச்சு… இல்லாத மூளையை கசக்கி ஒரு கதை சொல்லி கடைசில ஒரு பிரியாணி தான் கிடைச்சது… அதுவும் இப்போ காலி ஆயிடுச்சு… மறுபடியும் பசிக்குது வேற… இந்த கஞ்ச பையன் பாஸ், சரியான ஹிட்லர், ஒரு வாய் சோறு கூட போட மாற்றான்… கை கால் எல்லாமே வலிக்குது வேற… எல்லாம் என் நேரம்… டேய் ஹிட்லர் மாட்டாமையா போக போற இருடா உனக்கு இருக்கு…’ என தனக்குள் புலம்பி கொண்டு இருந்தாள்.

வெண்பா-வின் கல்லூரி நேரம் இன்னும் முடியவில்லை. அதனால் அவள் காணாமல் போனது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அவளின் தோழிகளும் எப்போதும் போல மட்டம் போட்டுவிட்டாள் என்று தான் நினைத்து கொண்டனர். அதனால் இதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

வெண்பா, ‘சீக்கிரமா இங்க இருந்து தப்பிக்கணும், இன்னும் நேரம் ஆக ஆக எல்லோருக்கும் தெரிந்து விடும்’ என தன் கடிகாரத்தில் மணியை பார்த்து கொண்டே புலம்பி கொண்டிருந்தாள் மனதில். அப்போது ரோஹன் அங்கே வர கூட அவனின் ஆட்கள் சிலர் வந்தனர். அவளிடம் வந்து, “என்ன மேடம்… ரொம்ப நிம்மதியா, ஜாலியா இருக்கீங்க போல… இடம் எல்லாம் நல்லா வசதியா இருக்கா… வசதி இல்லைனா சொல்லுங்க, உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு இடம் இருக்கு பக்கத்துல… அங்க போறிங்களா மேடம்…” என ஏகத்திற்கும் நக்கலாக கேட்க, அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. உடனே சிரித்து கொண்டே “என்ன ஹிட்லர் இப்படி கேட்டுட்டே… நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்… எனக்கு என்ன கொறச்சல்…” என சிரிப்புடன் சொல்ல இவனுக்கு கோவத்தின் அளவு இன்னும் அதிகரித்தது.

அவளை கோவப்படுத்தி வெறுப்பேத்த இவன் வந்தால் அதை அவள் செய்து கொண்டு இருக்கிறாள். “நான் உனக்கு ஹிட்லரா?… என்னடி கொழுப்பா?… வாங்குன அடி பத்தலை போல…” என மீண்டும் கிட்டே வர இவள், “என்னடா சும்மா சும்மா அடிக்க வர… இதுக்கு எல்லாம் சேர்த்து வெச்சு நான் உனக்கு திருப்பி செய்யலை… அப்புறம் நான் வெண்பா இல்ல…” என அவனை பார்த்து கோவமாக சொல்ல அவன், “அதுக்கு முதல்ல இங்க இருந்து போக முடியுமானு பாருடி… இந்த வாய் சவடால் விட்ற வேலை எல்லாம் என்கிட்டே வெச்சுகாத…” என இவனும் பதிலுக்கு சாவல் விட்டு கொண்டு இருந்தான்.

வெண்பாவிற்கு உள்ளுக்குள் பயபந்து உருண்டாலும் அதை வெளியில் காட்டாமல், “ஆனா உனக்கு நான் தேங்க்ஸ் சொல்லியே ஆகணும் தெரியுமா…!!” என்க அவன் ஏன் என்று கேள்வியை கண்களில் தாங்கி அவளை பார்க்க.. இவள் தான் ஏன் அதை இந்த ஹிட்லர் வாய திறந்து கேட்க மாட்டானா… சரியான திமிரு புடுச்சவன்… என நினைத்து கொண்டு, “சொல்ல போனா… எனக்கு நீ நல்லது தான் பண்ணிருக்க… இன்னைக்கு எங்க H.O.D சொட்ட தலையன் டெஸ்ட் வெச்சுருந்தான்… நானே படிக்காம என்ன பண்றதுனு யோசிச்சு.. கடைசில சீக்கிரமா காலேஜ் போயி… பிட் பேப்பர் ரெடி பண்ணலாம்னு நினைச்சேன்… அதுக்குள்ள இங்க தூக்கிட்டு வந்துட்டீங்க… நானும் அந்த டெஸ்ட் கிட்ட இருந்தும் சொட்டை கிட்ட இருந்தும் தப்புச்சுட்டேன்… ஈஈ” என இளித்து விட்டு “பரவாயில்ல இதுவும் நல்ல தான் இருக்கு… நான் கூட இந்த மாதிரி கடத்தல் எல்லாம் படத்துல தான் பாத்துருக்கேன்… இப்போ தான் நேர்ல பாக்குறேன் இதுவும் நல்லா தான் இருக்கு… என்ன ஒரே ஒரு குறை தான்…!!” என வருத்த பட்டு சொல்ல ஏற்கனவே கொலை காண்டில் இருந்தவன் இவளை பார்த்து முறைத்து கொண்டே பற்களை கடித்தான்.

“என்ன குறை மேடம்-க்கு.. சொல்லுங்க செஞ்சுடலாம்…” என நக்கலாக அதே சமயம் இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க, “கடத்துறதா கடத்துற… ஒரு பையனையும் சேர்த்து கடத்திருந்தா பரவாயில்ல… நானும் எவ்ளோ நாள் தான் முரட்டு சிங்களா சுத்துறது… சீக்கிரமா ஒரு அழகான பையனா பார்த்து லவ் பண்ணி லைப்ல செட்டில் ஆகணும்ல… நீ என்ன பண்ற எனக்கு பிடித்த மாதிரி ஒரு பையனா பாத்து கடத்துற… நானும் அவனை லவ் பண்றேன்… ரொமான்ஸ் பண்றேன்… எப்படி செமையா இருக்கா… சீக்கிரமா ரெடி பண்ணு போ…” என சொல்ல இவன் தான் பொங்கி விட்டான். “அடியே என்னைய பாத்தா உனக்கு மாமா மாதிரி இருக்கா?…” என கடுப்புடன் கேட்க அவளும் அவனை மேல் இருந்து கீழாக பார்த்து விட்டு மாதிரி எல்லாம் இல்லை… நிஜமா அப்படி தா இருக்க ஹிட்லர்… என சிரிக்க அவள் மேல் பாய போனவனை இவனின் ஆட்கள் தான் தடுத்து நிறுத்தினர்.

வெண்பா இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை… என அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் நக்கலாக. அவன், “என்னடி, நீ அந்த மாதிரி பொண்ணா… வந்ததும் என்னைய பாத்து வழிஞ்ச, நான் அதுக்கு மசியலைனு இப்போ வேற பையனை கேக்குறே… இது தான்… இது தான் பொண்ணுங்க கேரக்டர்… எனக்கு தெரியும்… எப்போடா எந்த பையன் கிடைப்பான்.. அவனை வளைச்சு போடலாம்னு தானே திரியுறீங்க… காசுனா எவன் பின்னாடி வேணும்னாலும் போவ போல… உன்னைய போய் கடத்திட்டு வந்த பாரு என்னைய சொல்லணும்… உன்னைய தொட்டா கூட பாவம் டி…” என அருவருப்பாக பார்க்க வெண்பாவிற்கு தான் இதுவரை இருந்த விளையாட்டு தனம் போய் அவனை கொலைவெறியுடன் பார்த்தாள்.

“உனக்கு அவ்ளோதான் மரியாதை… என்ன பத்தியும் என் கேரக்டர் பத்தியும் பேச உனக்கு தகுதி இல்லை… என்னடா தெரியும் என்னைய பத்தி உனக்கு… விட்டா ஓவரா பேசிட்டே போற… இவரு பெரிய ஆணழகன்… பேசி அப்படியே நாங்க கரெக்ட் பன்றோம்… உன் மூஞ்சியை நீ கண்ணாடில பாத்துருக்கியா… பாத்திரதா… செத்துருவே… டேய் உன்னைய யாருடா பாத்தா… காலேஜ்ல உன் மூஞ்சி கூட எனக்கு நியாபகம் இல்லை… என் பிரிஎண்ட்ஸ் தான் ஏதோ உன்னையே பாத்துட்டு சைட் அடுச்சுட்டு என்கிட்டே வேற உன்னைய காட்டிட்டு இருந்தாங்க… அத வெச்சு சும்மா உன்னைய கலாய்ச்சா… ஏதோ உன்னைய மயக்க தான் பேசுறேன்னு நீயே நினைப்பியா… வெண்பா சைட் அடிக்க கூட நீ எல்லாம் தகுதி இல்லைடா டொமறு… இந்த உலகத்துல உன்னைய தவிர நான் யாரை வேணும்னாலும் லவ் பண்ணுவேன்… ஏன் கல்யாணம் கூட பண்ணிப்பேன்… ஆனா இந்த உலகத்துல நான் வெறுக்குற முதல் ஆளும் கடைசி ஆளும் நீ தாண்டா… இன்னொரு தடவை என்னை பத்தியும், மத்த எந்த பொண்ண பத்தியும் எதாவது தப்பா பேசுன… பல்லை உடைச்சு கைல குடுத்துருவேன்… புரியுதா… பேசாம போய்டு அது தான் உனக்கு நல்லது…” என பற்களுக்கு இடையில் வார்த்தையை கடித்து துப்பி கொண்டு இருந்தாள்.

ரோஹன் உடனே, “என்னடி… நான் உண்மையை சொல்லிட்டேன்னு உத்தமி மாதிரி நடிக்கிறயா… இதெல்லாம் நான் நம்பிருவேனா…” என கலகல வென சிரிக்க இவள் “டேய் அறிவு கெட்டவனே… நான் உத்தமியா இல்லையானு எனக்கு தெரியும்… அத உனக்கு நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை… புரியுதா… போடா டேய் போடா…!!! நான் இங்க இருந்து உயிரோட போனாலும் சரி போகலைனாலும் சரி… ஆனா என் வாழ்க்கை முழுக்க உன்னைய மட்டும் நான் பாக்கவே விரும்பல… உன்னைய பாக்கும்போது கூட எங்க அண்ணன் மேல இருக்க கோவத்துல தான் இப்படி பண்ற… மத்தபடி நீ நல்லவன் போலனு தான் நெனச்சேன்… ஆனா நீ பேசுனா விதத்துலையே தெரிஞ்சது நீ எப்படி பட்டவனு… என் அண்ணா உன்னைய அடுச்சதுல தப்பே இல்லை… உனக்கு எல்லாம் இன்னும் விழுகணும்… பொண்ணுங்கள குத்தம் சொல்றியே உன்னையும் ஒரு பொண்ணு தான் பெத்தாங்க… அத மறந்துராத… பெருசா பேச வந்துட்டான்… திரும்பி பாக்காம போய்டு…” என்று திட்டி விட்டு அவன் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி கொண்டாள். அவன் பேசிய வார்த்தைகள் உள்ளே அனலாய் கொதித்து கொண்டு இருந்தது. அதை தடுக்க தான் வழி தெரியவில்லை பேதைக்கு.

ரோஹன் இவள் பேச பேச இன்னும் கோவம் கொண்டு அவளிடம் வந்து அவள் முகத்தை தொட்டு திருப்பி தன்னை வலுக்கட்டாயமாக பார்க்க செய்தான். அவள் கண்களில் தெரிந்த வெறுப்பு, ஏளனமும் என்னை உன்னால் என்ன செய்ய முடியும் என்ற திமிரும் அவனை எதுவும் யோசிக்க விடவில்லை. அவளை விட்டு விலகி தலையை கோதி கொண்டு கோவத்தை கட்டு படுத்தி கொண்டு இருந்தான். “என்னடி… என்னைய உனக்கு புடிக்கலை… நீ வெறுக்குற முதல் ஆளும் கடைசி ஆளும் நான் தானா… நைஸ்… இன்டெரெஸ்ட்டிங்…!!! வாழ்க்கையில ஒரு தடவ கூட என்னைய பாக்க நீ விரும்பல… கரெக்ட்…” என கேட்டு அவள் முகம் பார்க்க அவள் தான் நீ எல்லாம் ஒரு ஆளா என்று பார்த்து கொண்டு இருந்தாள். அது இன்னும் அவனுக்கு கோவத்தை அதிகபடுத்த… திமிருடி… உடம்பு முழுக்க திமிரு… இருடி… வந்து கவனிச்சுக்கிறேன்… என பேசி விட்டு வெளியில் சென்று விட்டான்.

இவள் உடனே, “இவன் எல்லாம் ஒரு ஆளா வெண்பா… அதுவே ஒரு டம்மி பீஸ்… விடு டி…” என தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டு தப்பிக்க வழி ஏதும் இருக்குமா என சுத்தி சுத்தி பார்த்து கொண்டு இருந்தாள்.அவன் சென்று ரொம்ப நேரம் ஆகியும் திரும்பி வராததால் சற்று நிம்மதியாக மனதை திட படுத்தி கொண்டு பார்த்தாள். அருகில் அவர்கள் குடித்து விட்டு போட்ட பாட்டில் இருந்ததால் அதை எப்படியாவது எடுத்து உடைத்து கை கட்டை முதலில் அவிழ்க்க திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவள் அமர்ந்து இருந்த நாற்காலியை தள்ளி கொண்டு இருந்தாள்.

நேரம் கடந்தும் இன்னும் வராமல் இருக்கும் மகளை நினைத்து சீதா அழுக, வெங்கட் தன் மனைவியை சமாதான படுத்தி கொண்டே ஆதிக்கு போன் செய்தார். ஆதி கால் கட் ஆகும் சமயத்தில் எடுத்தான். “ஆதி பாப்பா இன்னும் வீட்டுக்கு வரலை டா… எனக்கு என்னவோ பயமா இருக்கு… உன் அம்மா வேற அழுதுட்டே இருக்கா… எனக்கு என்ன பண்றதுனு தெரியலை… நீ சீக்கிரமா வா டா…” என அழுகாத குறையாக மனதில் இருப்பதை மகனிடம் கொட்டிருந்தார். ஆதி, “அப்பா அவள் எங்கையாவது பிரிஎண்ட்ஸ் வீட்டுக்கு போயிருப்பா… நான் பாத்து கூட்டிட்டு வறேன்… நீங்க பயப்படாம அம்மாவை பாத்துக்கோங்க…” என ஆறுதல் சொல்லிவிட்டு உடனே கார்த்திக் அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு தனது கார்ட்ஸ்க்கு போன் பண்ணினான்.

அதில் ஒருவன் போன் எடுத்ததும் ஆதி அவர்களை காய்ச்சி எடுக்க, அவன் உடனே “சார்… மேடம் இன்னைக்கு சீக்கிரமா கிளம்பிட்டாங்க… நாங்களும் அவங்க பின்னாடி போனோம்… டிராபிக்ல மாட்டிகிட்டோம்… திரும்பி போய் பாக்கும் போது கார் மட்டும் தான் இருந்தது. டிரைவர் கிட்ட கேட்டதுக்கு கார் ப்ரொப்லம் சோ அவங்க ஆட்டோல போய்ட்டாங்கனு சொன்னாங்க… நாங்களும் செக் பண்ணி பாத்தோம்… அங்க எந்த ஆட்டோவும் இல்லை.. சரி மேடம் காலேஜ் போய்ட்டாங்கனு நெனச்சுட்டு உங்களுக்கு இன்போர்ம் பண்ண கால் பண்ணோம். ரீச் ஆகல… அதான் சார் எல்லாமே உங்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டோம் என சொல்ல போன்-யை பார்க்க அதில் மெசேஜ் வந்து இருந்தது வேலை நேரத்தில் அவன் தான் சரியாக பார்க்க வில்லை. “இனிமேல் இப்படி எதாவது நடந்தது அவ்ளோதான்” என மிரட்டி விட்டு, “வெண்பா காலேஜ்ல விசாரிங்க…என்னனு பாத்துட்டு எனக்கு சொல்லுங்க…” என வைத்தான்.

மிகவும் தாமதிக்காமல் கார்த்தியை தொடர்பு கொண்டு அனைத்தையும் சொன்னவன் அவள் சென்ற வழியில் இருக்கும் சி சி டிவி யை சோதனை இட சொல்லிவிட்டு அவளின் செயின் இல் இருக்கும் ஜி.பி.ஸ். யை பார்க்க அந்தோ பரிதாபம் அது வீட்டை காட்டியது.அவள் தான் போகும் அவசரத்தில் அதை மறந்து விட்டாளே. ஆதி, “இந்த குட்டி சாத்தன் கிட்ட அத்தனை தடவை சொன்னேன். அத போடு னு கேட்டாளா… வரட்டும் இருக்கு அவளுக்கு…” என நினைத்தாலும் தங்கையை எண்ணி அவன் கவலை தான் அதிகரித்தது… “எங்கடி இருக்க.. எல்லோரும் பாவம் குட்டி சாத்தன் சீக்கிரமா வந்துரு…” என நினைத்து விட்டு கார்த்தியை தொடர்பு கொள்ள அவனுக்கும் பெரிதாய் எதுவும் கிடைக்க வில்லை.. அவனையும் அழைத்து கொண்டு தேட ஆரம்பித்தனர்… கார்ட்ஸ் ஒரு பக்கம் ஆதியும் கார்த்தியும் ஒரு பக்கம் என தேட அவளை தான் கண்டு பிடிக்க முடியவில்லை… எங்கு சென்று தேடுவது என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தனர்.

ஆதி ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு நண்பனின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டு கொண்டு இருந்தான். கார்த்திக்கும் அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.. ஆதி பல நபர்களை கண் அசைவில் வேலை வாங்குபவன், பல பெரும் தலைகளே அவனை பார்த்து நடுங்கும் அளவிற்கு தொழிலில் கொடி கட்டி பறப்பவன், இப்போது சின்ன பிள்ளை போல அழுகிறான். பாவம் அவனும் என்னதான் செய்வான் உடன் பிறந்த உயிர் தங்கை ஆயிற்றே… அவனுக்கும் அவளை எங்கு சென்று தேடுவது என்று தெரியவில்லை. வெண்பா கடத்தபட்ட இடத்தில் எந்த சி சி டிவியும் இல்லாததால், அடுத்து என்ன செய்ய எங்கே சென்று தேட ஒன்றும் தெரியவில்லை. கார்த்திக் ஏதோ யோசித்து விட்டு, “மச்சான் அந்த கதிரவன்… அவன் எதாவது ஆள் வெச்சு கடத்திருப்பானோ…” என சொல்ல உடனே ஆதியும், “ஆமா மச்சான், இத எப்படி யோசிக்க மறந்தேன்… அவன் எங்க இருக்கான்… அவன் ஆளுங்க என்ன பன்றாங்க… இது எல்லா டீடைலும் எனக்கு உடனே வேணும்… என் குடும்பத்து மேலையே கை வெச்சுட்டான்ல அது யாரா இருந்தாலும் அவனுக்கு என் கையால தான் சாவு…” என்று கண்களில் கொலை வெறி மின்ன பேசி கொண்டு இருந்தான். அப்போது அவனின் தொலைபேசி அழைப்பில் தன்னை சமன் படுத்தி கொண்டு அதை பார்க்க வெங்கட் அழைத்திருந்தார். தந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் போன்-யை எடுக்க அங்கு என்ன சொல்லபட்டதோ… உடனே நண்பனை கட்டிபிடித்து கொண்டு வெண்பா வீட்டுக்கு வந்துடலாமா… என மகிழ்ச்சியுடன் சொல்ல கார்த்திக்கும் இப்போது தான் நிம்மதி. உடனே இருவரும் காரில் ஏறி பறந்தனர்.

வெண்பா சுவரை வெறித்து இருந்தாள். வந்ததில் இருந்து ஒரு வார்த்தை பேசவில்லை. சீதாவும் வெங்கட்டும் மாறி மாறி கேட்டதற்கு மௌனம் மட்டுமே பதிலாக வந்தது. அவள் கண்களில் ஒரு வெறுமை, அவர்களால் எதையும் யோசிக்க முடியவில்லை. சீதா மகளின் நிலை எண்ணி கண்ணீர் வடிக்க வெங்கட்க்கு தான் மகளை பார்ப்பதா…? மனைவியை பார்ப்பதா…? என்று தெரியவில்லை.

அதே நேரம் அங்கே ஆதியும் கார்த்தியும் வந்து விட்டனர். ஆதியின் பாப்பா என்ற அழைப்பில் தான் வெண்பா என்ற சிலைக்கு உயிர் வந்தது. அவனை பார்த்ததும், அண்ணா என்ற கதறலோடு கட்டி அணைத்து கொண்டாள். அவனை இறுக பிடித்து கொண்டாள். அவளின் உடல் இன்னும் நடுங்கி கொண்டு தான் இருந்தது. ஆதி தங்கையை பார்த்து பதறினாலும் அவளை சமாதான படுத்தினான். “ஒன்னும் இல்ல பாப்பா… நான் தான் வந்திட்டேன்ல… பயப்படாத நீ நல்ல தான் இருக்க… பாரு உன்னைய சுத்தி எல்லோரும் இருக்கோம்… பயப்படாத…” என ஆறுதல் படுத்த… அவள் தான் இன்னும் அவனுடன் ஒன்றி போனாள். தாய் தந்தையை விட அவளுக்கு அண்ணன் ஒரு படி மேலே தான். என்னதான் அடித்து கொண்டாலும் அவளுக்கு அவன் மட்டுமே… அவனும் அவளின் முதுகை வருட கொஞ்சம் கொஞ்சமாக அழுகை மட்டு பட்டது… அவளை அப்படியே அமர வைத்து சிறிது தண்ணீரை கொடுத்து ஆசுவாசபடுத்தினான்.

வெண்பா தன்னிலைக்கு வர சிறிது நேரம் எடுத்தது. ஆதி அவளை கட்டாய படுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்தான். அவள் அவனை விட்டு பிரியவே இல்லை. அவனும் அவளை ஒரு தகப்பன் இடத்தில் இருந்து தங்கினான். யாரும் அவளை எதுவும் கேட்கவில்லை. ஆதி அதெல்லாம் பொறுமையா கேட்டுக்கலாம்… இப்போ யாரும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என அவளை அழைத்து சென்று படுக்க வைத்தான். கார்த்தி சீதாவையும் வெங்கட்டையும் சமாதான படுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்து படுக்க வைத்தான்.

ஆதி அவளிடம் எதுவும் கேட்காமல் “தூங்கு டா… அண்ணன் உன்கூட தான் இருக்கேன்.. பயப்படாத… தூங்கு” என சொல்ல அவளும் அவனின் கையை இறுக பிடித்து கொண்டே தூங்கினாள்.. சிறிது நேரத்தில் அவள் தூங்கியதும் கீழே இறங்கி வந்தவன் கார்த்தியிடம் மச்சான் நீயும் இங்கையே தூங்கு… இந்த நேரத்தில அவ்ளோ தூரம் வேண்டாம் வா என அழைத்து சென்று சாப்பிட வைத்தான். இருவரும் பேருக்கு சாப்பிட்டுவிட்டு படுத்தனர்.

வெண்பா ஆதி சென்றதும் எழுந்து கண்களில் கண்ணீருடன் தன் கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்து கொண்டு இருந்தாள். கண்களில் நிற்காமல் கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது. அழுவதை தவிர அவளுக்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. குளிக்க பாத்ரூமில் சென்றவளுக்கு அவளின் கண்ணீர் தான் தண்ணீரோடு சென்றது. அவன் தொட்ட இடம் எல்லாம் அவளுக்கு இன்னும் எறிந்தது. அவள் அழுத்தி அழுத்தி தேய்க்க அந்த அருவருப்பு மட்டும் போகவே இல்லை.வேதனையோடு வெளியில் வந்து ஏதோ ஒரு உடையை எடுத்து போட்டுவிட்டு படுத்து விட்டாள். அவளின் கண்ணீர் எல்லாம் தலையணை தான் தாங்கி கொண்டது. அந்த இரவு அனைவர்க்கும் தூங்கா இரவாகி போனது.

எல்லாவற்றையும் செய்து விட்டு, அனைவரின் தூக்கத்தையும் கெடுத்துவிட்டு, எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், முகம் முழுக்க சந்தோஷத்துடனும், உதட்டில் ஒரு கர்வ சிரிப்புடன் அவன் மட்டும் உறங்கி கொண்டு இருந்தான்.

இனிமேல் தான் தன் தூக்கம் முழுவதும் பறிபோக போகிறது என்று இவன் அறியாமல் போனது தான் விதியோ……!!!

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  5 Comments

  1. priyakutty.sw6

   ரோஹன்… 😡

   தெரியும்… அவரு இப்படி தான் னு …

   ஆதிக்கு தெரிஞ்சுது… 😤

   ச்சே… ஏன் பொண்ணுங்கள வெறுக்குறராம்…

   அவருக்கு பெரிய பனிஷ்மென்ட் அஹ் கொடுங்க dr… 😤