Loading

மீட்டாத வீணை

டீசர் 2

புகழ்… டேய் புகழ் என உறங்கி கொண்டிருந்தவனின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினார் சுதா. அதற்கெல்லாம் அசராமல் போர்வையால் தன் உடலை மறைத்து நித்திரையை  தொடர…

 

மணி என்ன ஆச்சுனு பாத்தியா, நேத்து நைட்டே படிச்சி படிச்சி சொன்னேன் இல்ல. இன்னைக்கு உனக்கு பொண்ணு பாக்க போறோம் சீக்ரம் கிளம்பனும்னு. இப்பவே மணி பத்தாச்சி இதுக்கு அப்றம் நீ ரெடியாகி வரதுகுள்ள நல்ல நேரமே முடிஞ்சிடும் போல. அத விட்டா சாய்ந்தரம் தான் நல்ல நேரம் இருக்கு எந்திரிடா என புலம்பலுடன் அவன் வெற்று தோலை தட்டி எழுப்ப, அம்மா… கொஞ்ச நேரம் காதுகிட்ட கத்தாம இருக்கியா எப்ப பாரு நை.. நைனு. ‘ சே இந்த வீட்ல நிம்மதியா தூங்க கூட முடியல இதுக்கு நான் தெருவிலே படுத்திருக்கலாம் போல. இப்ப நான் பொண்ணு பாக்க சொல்லி கேட்டேனா.. இப்ப எனக்கு கல்யாணம் தான் குறைச்சலா என தன் மீது இருந்த போர்வையை உதறி போட்டவன் அதே கோவத்தோடு அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.

எப்ப பாரு கல்யாணம்… கல்யாணம்னு.. என தலைமுடியை கோதிய படி வாசலில் இருந்த பூந்தொட்டியை எட்டி உதைக்க சிறதி போனது.

அவன் பின்னாலே ஒடி வந்த சுதாவிற்கு அவன் கோவத்தின் வீரியத்தை பார்க்க மனம் மேலும் கலங்கியது.

கண்களில் இருந்து வெளிப்பட்ட சில துளி கண்ணீரையும் முந்தானை கொண்டு தடுத்தவர், அவன் தோலை தோட தன்னை ஆசுவாசப்படுத்தியவன்
” இன்னொரு முறை கல்யாணம் கருமாதினு எந்த பேச்சையும் எடுக்காதீங்க. இப்ப எனக்கு என்ன குறை சந்தோஷமா இல்லயா. நீங்க கல்யாண பேச்ச எடுத்தாதான் எனக்கு தேவையில்லாத பிரச்சனை என் நிம்மதியே போகுது. எப்ப வீட்டுக்கு வந்தாலும் கல்யாணம்.. கல்யாணம்.. இங்க அந்த பொண்ணு இருக்கு… இங்க இந்த பொண்ணு இருக்கு…. நல்லா இருக்கா.. படிச்சி இருக்கா… தேவதை மாதிரி இருக்கா…. வேலைக்கு போறானு எப்ப பாரு இதே பேச்சி தான். கேட்டு கேட்டு காதே புளிச்சிப்போச்சி. அதோட நின்னா பரவா இல்லையே ஏதோ சந்தை கடையில மாட்ட பாக்குற மாதிரி எல்லாரு கிளம்பி போய் பொண்ணு பாக்குறோம். இங்க சொல்லும் போது தெரியாத குறை நேர்ல போய் பார்க்கும் போது மட்டும் குருடனுக்கு கண் தெரியுற மாதிரி தெளிவா தெரியும். இன்னும் எத்தன இடத்துல இப்டி போய் பாப்பீங்க அசிங்கமா இருக்கு மா என அவர் முகம் பார்க்க.

அவரது வாடிய முகத்தை கண்டவன் பொறுமையை குத்தகைக்கு எடுத்து கொண்டான். சாரி மா கோவத்துல உங்கள கத்திட்டேன், என்ன சங்கடபடுத்தி உங்க மேல வெறுப்பு வர வச்சிடாதீங்க என தோளில் இருந்த கையை எடுத்து விட,

இந்த ஒரு முறை மட்டும்… என சுதா முழுவதும் வெளிவர மறுத்த வார்த்தையை சிரமப்பட்டு சொல்ல
” பிளீஸ் மா, என்னால முடியல…. ” என கையெடுத்து கும்பிட்டவன் அவருக்கு பேச கூட வாய்ப்பளிக்காமல் தன் புல்லட்டில் சீறி பறந்திருந்தான்.

……………………………………………………….

 

” முன்னால் அமைச்சர் நேற்றிரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. “

அமைச்சரை கொல்ல வழக்கில் யார் யார் சம்பந்தபட்டுள்ளனர் ? அவர் கொலைக்கான காரணமும் பின்னனியும் என்ன ?… என்று அமைச்சரின் உறவினர்களும் பொது மக்களும் கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்க. இதை கண்டு கொள்ள வேண்டிய காவல் துறையினம் இன்னும் சம்பவ இடத்திற்கு வராதது பெரும் அதிதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறையினரின் அலட்சியமும் மெத்தன போக்கும் அவர்கள் மீதான நம்பிக்கை அற்ற தன்மையை பலப்படுத்துகிறது.

” தொடரும் கொலைகள்.. தொங்கலில் நிற்கு வழக்குகள்..

கண்டுகொள்ளாத காவல்துறை

கவனம் ஏற்குமா அரசு”… 

 என கேமிராவின் முன் பேசி கொண்டிருந்தவளின் மைக்கை வலிய கலம் ஒன்று பிடிங்கி எறிய கோபத்துடன் எதிரில் நின்றவனை முறைத்தாள் மாயா.

 

நேரலையில் சென்று கொண்டிருந்த செய்தியை முடக்கி கேமிராவை ஆப் செய்தவன் மாயா நிற்கும் இடத்திற்கு விரைந்தான்.

ஏய் மிஸ்டர், என்ன தைரியம் இருந்தா என் மைக்க பிடிங்கி எறிவீங்க. என்ன நினச்சிட்டு இருக்கீங்க போலீஸா இருந்துட்டு இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்றீங்க. இது லைவ் செடிகாஸ்ட் இப்டி கேவலமா பிஹேவ் பண்ணி தேவை இல்லாம இருக்க கொங்க நஞ்ச இமேஜயும்  நீங்கலே கெடுத்துக்காதீங்க. மரியாதையா என்கிட்ட மன்னிப்பு கேட்டு, மைக்க எடுத்து குடுத்துட்டு போங்க என போலீஸ்காரனிடம் சண்டைக்கு நிற்க, மாயா கொஞ்சும் பொறுமையா பேசு என அவள் காதருகே கிசுகிசுக்க.

மன்னிப்பா… நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனுமா. நீ தான் டி என்கிட்ட மன்னிப்பு கேட்கனும். என்ன பத்தி தேவை இல்லாத பேக் நியூஸ் போட்டதுக்கும் இப்ப டிப்பாட்மன்ட பத்தி நீயே கிரியேட் பண்ற பேக்பிரேமுக்கும் நீ தான் டி என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும். கைல பெண் இருந்தா என்ன வேணாலும் எழுதுவியாடி… மைக்க புடிச்சா என்ன வேணா பேசுவியாடி….. என கோபத்தில் பல்லை கடிக்க.

சார் பாத்து பேசுங்க இந்த டீ, கீ எல்லாம் நல்லா இல்ல என அவன் முடிக்கும் முன், ஓ… வேற எப்டி சார் கூப்டனும் இவ பண்ண வேலைக்கு வாயால பேசிட்டு இருக்குறதே தப்பு செவுளயே நாலு குடுக்கனும் என கை ஓங்க.

இதற்கெல்லாம் பயந்து விடுபவளா அவள்.                 ‘ உன்னால முடிஞ்சா அடிடா பாப்போம் ‘ என சிறிதும் அசராமல் அவன் விழிகளுக்கு சவால் விட, பாவை அவளின் பார்வை வீச்சில் தோற்று இருந்தான் காவல்காரன். 

கீழே இருந்த மைக்கை எடுத்தவன் நீ வா மாயா…. போட்டோ கவரேவ் இருக்கு அது முடிஞ்சதும் சேனல்க்கு கிளம்பலாம். இவன எங்க பாக்கனும் அங்க பாத்துக்குறேன் என போலீலை முறைத்து விட்டு மாயாவை அழைத்து சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்