-
மீட்டாத வீணை
டீசர் 1
” டிக்டாக் மோகம்
சீழ் அழிந்த குடும்பம் “திருப்பூரை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில், டிக்டாக் செயலி மூலம் சென்னையை சேர்ந்த அபிராமி என்பவருக்கு அறிமுகமாகி உள்ளார். நாள் அடைவில் அபிராமியின் மீது ஏற்பட்ட காதலால் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்த வண்ண இருந்தது. எப்போதும் போல் நேற்றும் தகராறு ஆரம்பிக்க செல்வராஜ் தனது மனைவியையும் சண்டையை தடுக்க வந்த பிள்ளைகளையும் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூவரும் பலியாகினார்.
தன் மனைவி, பிள்ளைகளை கொலை செய்த செல்வராஜை போலிசார் கைதி செய்துள்ளனர். பொழுது போக்கு செயலிகளால் ஏற்படும் பாதிப்பு நாளுக்கு நாளால் அதிகரித்து கொண்டே வருது குறிப்பிட தக்கது.
“மார்பிங் மிரட்டலால் கல்லூரி மாணவி பலி.
பூனே ப்ளேக்மெய்லர் கைது….!“முகநூலில் காதலால்
கருவை சுமக்கும் சிறுமி…..!“ஆன்லைன் விளையாட்டா…!
ஆளை கொல்லும் விளையாட்டா..! ““ஆன்லைன் சூதாட்டத்தில்
பணம் இழந்ததால் ஐடி இளைஞர் தற்கொலை…..! “ஓகே.. என கேமிராவின் பின் நின்றவன் கட்டை விரலை உயர்த்தி காட்ட தன் முன்னால் இருந்த காகிதங்களை அள்ளி கொண்டு அவன் முன் வெறுப்புடன் வைத்தாள்.
என்னடா நியூஸ் இதெல்லாம் ஒரு விஷயமாவது நல்லதா இருக்கா. இந்த நாட்ல என்ன தான்டா நடக்கு அத்திப்பட்டில தொடங்கி அமெரிக்கா வரை ஒரே கொலை, கள்ளகாதல், பலி, சண்டைனு நியூஸ் படிக்குற எனக்கே கடுப்பாகுது கேட்குறவங்களுக்கு எப்டி இருக்கும். பாரு எல்லா நியூஸ்லையும் பாதிக்கட்டு இருக்குறது இளைய சமூதாயம் தான். இந்த ஆன்லைன் சோஷியல் மீடியா எல்லாம் அத்தியாவசியத்து பயன்படுத்த சொன்னா அனாவசியத்துக்கு பயன்படுத்துறானுங்க. இவங்க எல்லாம் எப்போதான் திருந்துவாங்களோ.. என அவனை பேசவிடாமல் ஆதங்கம் பொங்க பேசி கொண்டிருந்தாள்.
அவன் ஆதங்க பேச்சை ரசனையுடன் பார்த்திருந்தவன் உனக்கு என்ன நல்ல நியூஸ் தான நம்ப கல்யாண நியூஸ படி செமயா இருக்கும் என மெல்லிய புன்னகையுடன் கூற,
அவனை பார்வையால் சுட்டெரித்தவள் இந்த நியூஸ்க்கு நான் இதையே படிச்சிடலாம் என அவன் கையில் இருந்த காகிதத்தை பிடுங்கி சென்றவள் தனது இருக்கையில் அமர்ந்து இடைவேளைக்கு பிறகான செய்திகளை வாசிக்க தயாரானாள்.
……………………………………………………….
மாலை வீட்டில் நுழைந்தவளை புன்னகையுன் வரவேற்ற மழலைகள் அவளுக்கான பணிகளையும் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். அறையில் சிதறிகிடந்த ஆடைகளும் பொம்மையும், கலைத்திருந்த அலமாரியையும் பெருமூச்சுடன் பார்த்தவள், இந்த வாண்டுங்களோட அட்டகாசம் இருக்கே என கழுத்தில் போட்டிருந்த துப்பட்டாவை இடுப்பில் கட்டி அறையை சுத்தப்படுத்த தொடங்கினாள்.
அன்றைய நாளை நினைக்க ஏனோ வேதனையாக இருந்தது. வேதனையை காட்டிலும் சோர்வு என்று தான் சொல்ல வேண்டும். காலை எழுந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை ஓய்விற்கு நேரம் கிடைக்க வில்லை. இரண்டு நிமிடம் கிடைத்தால் போதும் என்றிருந்தது. வேலைகளை முடித்து படுக்கையில் அமர்ந்தவளுக்கு அடுத்த வேலை வந்து விட்டது ” அம்மா ” என்ற அழைப்புடன்……..
நடுமுதுகில் அப்படி ஒரு வலி, கழுத்து நரம்பெல்லாம் வீங்க தொடங்கி விட்டது. அலமாரியில் இருந்த வலி நிவாரணியை தேய்த்து கொண்டவள் தன் மகளின் தேவையை நிறைவேற்ற சென்றுவிட்டாள்.
இதோ இரவு உணவிற்கான வேலையும் வந்துவிட்டது அடுக்கைகுள் நுழைந்தவளுக்கு பெரிய தலைவலி என்ன செய்வது என்று தான். இரவில் சாதம் என்றால் கணவருக்கு ஆகாது, சப்பாத்தி செய்தால் மகனுக்கு பிடிக்காது, தோசை தான் வேண்டும் என்பான் அதுவும் சூடாக, பூரி செய்தால் எண்ணெய் ஆகாது என மகள் அழுது சாதிப்பாள். இட்லி என்றால் ஏதோ வேற்றுகிர உணவு போல் அதை எடுத்து பாக்றது, ஆரி போச்சினா கல்மாதிரி இருக்குனு குறை சொல்றது. உப்புமா ரொம்ப தப்பமா….! இதை எல்லாம் யோசித்தவளுக்கு இறுதியில் வந்தது என்னவோ புன்னகை மட்டும் தான். இதில் மறைந்திருக்கும் விஷயத்தை அவளே அறிவாள்.
அதோ இதோவென்று ஒரு முடிவிற்கு வந்தவள் இரவு உணவையும் செய்து முடிக்கவும் அவளது கணவர் வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.
வண்டி நிறுத்தும் சத்தம் கேட்கவும் வாயிலிற்கு செல்ல ‘ வெளிய வர இவ்ளோ நேரமா அப்படி உள்ள என்னதான் பண்றியோ… என கையில் இருந்த பைகளை அவள் கையில் திணித்தவன் வீட்டினுள் நுழைய ஹாலில் ஓடி கொண்டிருந்த டீவியையும் அவளையும் முறைத்து விட்டு சென்றான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவளுக்கு இதழ்கள் விரிந்து புன்னகை தான் வந்தது.
நான் உங்கள் தூரிகை ஜாட்டி மத்தாப்பு சின்ன டீசர் தான் செல்லம். அடுத்த டீல லவ் அன்ட் கலாட்டாவா கொடுக்குறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை அள்ளி வழங்குங்க மக்களே. மீம்ஸ் போட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி 😘😘😘😘😘😘😘
மாஸா ஒரு டீசரே ஏறகிட்டீங்க ஜாட்டி வெடி🤧🤧🤧 தரமான ஷோஷியல் கன்டென்ட் இருக்கும் போலையே😎😎😎 படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் 🥳🥳🥳🥳🥳.
Uppuma ithu romba thappuma …yen da oru manushi venthu nothu pona kalyana kadhayava vasika solluva…yen kuruketa cookeruuuuu….rightuu teaser super…
Jaat …. Ada Ada trailer ey ipadi vedikuthey… 💥💥💥💥 Superu pongaaa