நேத்ரா நிமலிடம் தன் காதலை சொல்ல முடிவெடுத்த அந்த சமயம் தான் சித்து வந்து சேர்ந்தாள். சரணின் தங்கை என்ற முறையில் நிமலிற்க்கு சித்துவை தெரியும் தான், ஆனால் சித்துவோ நிமலின் மேல் ஆசையை தான் கொண்டிருந்தாள். பெண்ணவள் கொண்ட ஆசையோ சிறிது சிறிதாக அவள் மனதில் விபரீதமாக மாறத் தொடங்கியது. அவன் தனக்கு தான்.. தனக்கு மட்டும் தான் என்று எண்ணத் தொடங்கிவிட்டாள். அதன் காரணமாகவே….
சித்து அடிக்கடி அலுவலகம் வர, அவள் வருவதை நேத்ரா தவறாக புரிந்து கொள்ள அதன் பின் நிமலுடனான சந்திப்பை குறைத்துக் கொண்டாள் நேத்ரா. ஒரு முறை நேத்ரா நிமலின் அறையில் வேலை விஷயமாக பேசிக் கொண்டிருக்க அன்றும் சித்து வந்தாள். சித்துவை யார் என்று பார்க்கும் நேத்ராவின் எண்ணம் புறிந்தவனாய், இவள் சித்து, சரணின் தங்கை என்று அறிமுகம் செய்து வைத்தான் நிமல். அவன் அவ்வாறு கூறியதும்… ஏன் இவளை பற்றி சரண் என்னிடம் ஏதும் கூறவில்லை என அவன் மேல் கோபம் கொண்டாள் நேத்ரா. நிமலின் மனதை புரிந்து கொண்டு, தாம் தான் இவர்களின் நட்பை தவறாக எண்ணி விட்டோம் என்று வருத்தமும் கொண்டாள். சித்துவும் அவளிடம் பேசிக் கொண்டிருக்க நிமலின் பார்வையோ நேத்ராவை மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தது. பேச்சு ஒருபுறம் இருந்தாலும் நிமலின் நடவடிக்கையை பார்த்த சித்துவிற்கு நேத்ராவின் மேல் அளவுக்கு அதிகமாக வெறுப்பும் கோபமும் தான் வந்தது.
இவ்வளவு நாள் தனக்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்த நிமல் வேறு ஒருத்தியை பார்க்கவும் அவளுக்கு சொல்ல முடியா உணர்வு ஏற்பட அவசர வேலை என கிளம்பி விட்டாள் இருவரிடமும் கூறிவிட்டு. நன்றாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென கிளம்பவும் நேத்ரா குழப்பம் அடைந்து பின் சரி ஏதோ அவசரமாக இருக்கும் என்றுவிட்டு….
அவனின் புறம் திரும்ப அவனோ இன்னும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் கண்களும் மோதிக் கொள்ள மோதல் நிமிடங்களை கடக்க…… அவள் அருகில் வந்த நிமலன் அவளின் விழிகள் வழியே அவளுக்கான தன் காதலை அறிந்து கொண்டான். அவளின் விழிகளில் தன் மீதான காதலை அறிந்த அடுத்த நொடி சிறிதும் தாமதிக்காமல் கூறி விட்டான் அவன் காதலை…..
உன் விழியசைவினில்
நித்தம் நான் தொலைந்திட…..
உயிரினில் இணைந்த
என் வாழ்க்கைத் துணையாய்….
என் உயிராய்….
என்னுள் நிறைந்தவளாய்….
நித்தம் உன் மடி நான் சாய…..
என் மடி நீ சாய….
காதலியாய்….
மனைவியாய்…
துணைவியாய்…
உன் காதலை
என்னிடம்
எனக்காக தருவாயா…….
என்று அவள் கரம் பற்றி…. ஐ லவ் யூ நேத்ரா என்றவன் அவளை பார்க்க மையிட்ட இரு விழிகளில் கண்ணீருடன் நின்றிருந்தாள் நேத்ரா.
காதலை கூறிவிட்டவன் அவளை பார்த்து அதிர்ந்து சில நிமிடம் அவள் முன் அமைதியாய் நின்றான். பிறகு என்ன நினைத்தானோ அதற்கு மேலும் ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான். ஆனால் நேத்ராவோ நிமலின் காதலில் திகைத்தே போய் அங்கேயே நின்று விட்டாள். என் விழிகளை மட்டும் கண்டு இவ்வளவு அதிகமாய் காதல் கொள்ள முடியுமா…. இவனால்….
இவ்வளவு ஆழமான காதலுக்கு நான் ஈடாகிடுவேனா….என்று பலவாறு யோசித்து இன்னும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் நேத்ரா. நிமல் வேகமாக வெளியேறியதை கூட அவள் அறியவில்லை. நிமிடங்கள் கடக்க உள்ளே சரண் வந்து அவளை அழைக்க அப்போது தான் தன்னிலை அடைந்தாள்.
சரண் என்னவென்று கேட்க நடந்தவைகளை கூற தன் நண்பனின் காதலில் மகிழ்ந்தவன்…. நேரா…இப்போ நான் நிமலோட ப்ரெண்டா கேக்குறேன் பிளீஸ் அவனோட காதல அக்ஸெப்ட் பண்ணுமா…. என்க சிறிது யோசித்தவள் அவனின் தலையில் கொட்டி சரிடா சரண் என்று விட்டு ஓடியே விட்டாள்.. ஏற்கனவே அவனை விரும்பியவள் அவன் காதலை கூறியும் ஏற்றுக் கொள்ளாமலா இருப்பாள்.
இவர்களின் காதலால் மிகவும் மகிழ்ந்தது சரண் தான். ஆனால் அந்த மகிழ்ச்சி இன்னும் இரு நாட்களில் மொத்தமாய் போய் விடும் என்று அவன் கனவிலும் நினைக்க வில்லை.
அலுவலகம் முடிந்து ஆசிரமம் சென்ற நேத்ரா இரவு முழுதும் யோசித்து நல்லதொரு முடிவையும் எடுத்தாள். நிமலின் காதலில் அன்று முழுதும் உறக்கம் இன்றி வாட, காலை எழுந்ததும் பத்மாவதி அம்மாவிடமும் விஷயத்தை கூறிவிட்டாள். அவருக்கும் இதில் சம்மதம் என்றவுடன் கல்லூரி கூட செல்லாமல் பட்டாம்பூச்சியாய் நிமலின் வரவிற்கு முன்பே அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
ஆனால் காதலை சொன்ன நிமலோ எந்த வித பதட்டமும் இல்லாமல் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனை கண்ட சரண் தான்….
நேத்து முழுதும் டயலாக் பேசி டூயட் பாடி காதலை சொல்லிட்டு….இப்போ என்னன்னா எதும் தெரியா பச்சை புள்ள மாதிரி ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கான். இவனுக்காக நாம ரெகமண்ட் வேற பண்ணிட்டு வந்திருக்கோம் அதுக்கெல்லாம் இவன் செட்டா ஆவானா….ஐய்யோ காலைல இப்பிடி என்ன புலம்ப விட்டுடானே…. அந்த நேரா வேற என்ன செய்ய காத்திருக்காலோ… தெரியலையே… இதுங்க கூட சேர்ந்ததுக்கு நான் தான் புலம்பிட்டு இருக்கேன். முதல்ல இவங்க சங்காத்ததை கட் பண்ணனும் என தன் போக்கில் புலம்பிக்கொண்டிருக்க,
அதே நேரம் அவனருகில் வந்த நிமல்…..ஏண்டா இப்படி தனியா நிண்டு புலம்பிட்டு இருக்க….. ஏதும் பிரச்சனையா…இல்ல தலைல ஏதும் அடி பட்டுடுச்சா….சொல்லுடா….என்று அவன் தலையை திருப்பி திருப்பி உத்து பார்த்துக் கொண்டிருந்தான்…
நிமலை மேலிருந்து கீழ் வரை பார்த்த சரண்…..நியாயமா நீ தான் என்ன மாதிரி புலம்பணும்…. ஆனா நீ என்னன்னா இப்படி கூல்லா இருக்க…..
நான் ஏண்டா புலம்பனும்…. கண்டிப்பா அவ என்ன புடிச்சிருக்குனு உன் முன்னாடியே சொல்லுவா…. அதும் இல்லாம என்ன கட்டி புடிச்சு லவ் சொல்லுவா… நீயே பாரு..அசந்துடுவ…
எப்பிடிடா இவ்லோ நம்பிக்கையா சொல்லுற…… ஜோசியம் இல்ல மை ஏதும் தடவி பார்த்தியா…… சொல்லுடா…சொல்லு.
சரணின் அருகில் அவனின் சட்டை பட்டனை திருகிக் கொண்டே நெளிந்த நிமல்…..அது..அது…வந்து… நேத்து நான் அவளை பார்க்க ஆசிரமம் போனேனா….. அப்போ….அப்போ…. அவள் தூங்காம நான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி லவ் யூ நிமல் சொன்னாலே…..
சிறு குழந்தை போல அவன் சொல்வதை கேட்டு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்ட சரண்….. அடச்சீ….முதல்ல என் சட்ட பட்டன விடுடா….திருகி திருகி பட்டனயே பிச்சுட்ட…… தயவு செஞ்சு உன்னோட ரியாக்ஷன்ன மாத்து…. எனக்கே நீ நிமல் தானானு சந்தேகமா இருக்கு.
அவன் சொன்னதில் தள்ளி நின்ற நிமல் சரணின் கன்னத்தை கிள்ள…..
ஐய்யோ கருமம் கருமம்….நான் என்ன உன் பொண்டாட்டியா டா…. கன்னத்தை கிள்ளுற…. இதுக்கு தான் இந்த லவ் பன்ற பக்கிங்க கூடலாம் சேரக் கூடாதுங்கிறது…
சரண் சொன்னதில் சிரித்த நிமல் போடா….உனக்கு லவ் இல்லைனு பொறாமை என்றிட…..
கொதித்தெழுந்த சரணோ……டேய்… யாருக்குடா பொறாமை…. நான்லாம் மொரட்டு சிங்குலாக்கும்…… போடா போடா….போய் லவ்வ டெவலப் பன்ற வழிய பாரு என்றிட…..பார்வதி தான் இவர்களின் விளையாட்டில் சிரித்து ஆபீஸ் அனுப்பி வைத்தார்.
நேத்ராவிடம் காதலை சொன்னதும் அடுத்து அவன் அம்மாவிடமும் தன் காதல் விவகாரத்தை கூறிவிட்டான். அவரும் சம்மதம் தெரிவித்து விட….இருப்பு கொள்ளாமல் ஆசிரமம் சென்றான். அங்கு நேத்ரா அறைக்கு பைப் வழியே ஏறிச் சென்றவன் கண்டது…… மெத்தையில் குப்புற படுத்து நிமல் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி லவ் யூ நிமு சொன்ன நேத்ராவைத் தான். இரவு விளக்கில் அவள் முகம் தெரியவில்லை….ஆனால் அவள் கூறிய வார்த்தைகளோ அவனுக்கு சில்லென்று குல்பி ஐஸ் சாப்பிட்டது போல இருந்தது.
சரி சென்று விடலாம் என்று கீழிறங்க…ஆர்வக் கோளாறில் பைப் தட்டி கீழே தொப்பென விழுந்து விட……தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியே வந்து விட்டான்.
சரணும் நிமலும் காரில் செல்லும் போது இக்கதையையே கூற சரண் தான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான். பிசனஸ் ல பெரிய கம்பீர பருப்பு இப்போ என்னன்னா கீழ விழுந்து புதயல் எடுத்துட்டு வந்துருக்க….ஐய்யோ என்னால சிரிப்பு அடக்க முடியலடா…..
நிமலும் தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டவன் ஒரு வழியாய் சரணுடன் அலுவலகம் வந்து சேர்ந்தான்.
நேத்ராவின் காதல் கவிதையோடு அடுத்த பதிவில் சந்திப்போம்….டாட்டா….. பை… பை..
தொடரும்……….prabhaas