Loading

மிகப்பெரிய மருத்துவமனை என்று அதன் தோற்றத்திலே தெரிந்தது.
அதிவேகத்தில் வந்த கார் மருத்துவமனை முன்பு நிற்க அதிலிருந்து இரத்தம்
சொட்ட சொட்ட கிடந்தவளை கண்ணிரண்டில் கண்ணீருடன் தூக்கிக்
கொண்டு ஓடினான் அவன்.
அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து விட்டு அங்கிருக்கும் இருக்கையில்
அமர்ந்து அழுதவனை பார்க்க அங்கிருந்த எல்லோருக்குமே கஷ்டமாக தான்
இருந்தது. ஆடவனாக இருந்தாலும் மனம்.. இருக்கும் இடம், சுற்றி
இருப்பவர்கள் யாரையும் கண்டு கொள்ளவில்லை. உள்ளே கொண்டு
சென்றவளின் நிலையை எண்ணித்தான் துடித்தது.
யார் அவள்????? அழுது கரையும் இவன் யார்????
………………………………………………………….
ஒரு மணி நேரத்திற்கு முன்பு….
மாலை தொடங்கும் நேரம் சூரியன் தன் வர்ண ஜாலத்தை காட்டிக்
கொண்டிருக்க அந்த பார்க் முழுதும் குழந்தைகளுடன் ஓடித் திரிந்த அவளை
பார்க்க குழந்தையாகத் தான் தெரிந்தாள். வெள்ளை நிற உடையில்
தேவதையாக விளையாடிக் கொண்டிருந்தவளின் அருகில் வந்த ஒரு
சிறுவன், அக்கா அக்கா….இந்த விளையாட்டு போதும் எனக்கு ரொம்ப
பசிக்குது வாங்க வீட்டுக்கு போகலாம் என்றான். அவளின் நேரமோ
என்னவோ அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தவளின்
கையை சிறுவன் விட்டு விட்டு ஓட அவனை பிடிக்கச் செல்லும் வேளையில்
தான் எதிரே வந்த கார் அவளை மோதி தூக்கி எறிந்தது.

மோதிய வேகத்தில் சில அடி தூரம் சென்று விழுந்தவளை அந்த
காரிலிருந்தவனே ஓடிச் சென்று பார்க்க, அணிந்திருந்த வெள்ளை உடை
முழுதும் குருதி சிந்தியதில் செந்நிறத்தில் இருந்தது. அங்கிருந்தவர்கள்
அவனை திட்டினாலும் யாரும் அவளுக்கு உதவாமல் இருப்பதை கண்டு
அவனே அவளை கைகளில் ஏந்திய பொழுது தான் கண்டான், அவள்
விழிகளை.
மையிட்ட இரு விழிகளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
விழியிரண்டையும் கண்ட நொடியே அறிந்து விட்டான் அவள் தான்
இவ்வளவு நாள் தான் தேடிய தன்னவள் என்று. அம்மு என்ற அழைப்பில்
அவளின் வலியையும் மீறிய புன்னகையில் அந்த நொடியே அவன் உயிர்
அவனிடமில்லை. வழி நெடுகும் மயங்கிய அவளிடம் அம்மு அம்மு என்று
அழுதுகொண்டே வந்தவன் தான், இன்னும் அழுது கொண்டு தான்
இருக்கிறான்.
காலங்கள் கழித்து நான் உன்னை இந்நிலையிலா காண வேண்டும். உன்
முகம் பார்க்கும் இந்நாள் இப்படியா இருக்க வேண்டும். முதல் முறை உன்
முகம் பார்க்க பல நாட்களாக ஏங்கி கொண்டிருக்க இன்றோ மலர்முகத்தை
இரத்த வெள்ளத்தில் அல்லவா கண்டேன். இனி நீ இல்லா ஒரு நொடியும்
நான் வாழ போவதில்லை…என்று மனதினுள் கதறிக் கொண்டிருந்தான் அவன்.
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி
உடல் காற்றில் போகுதே
அன்பே என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே……
மீண்டும் எண்ணில் சேர்ந்து விடு……

விழியிரண்டில் ஏக்கங்களும் கண்ணீரும் நிறைந்திருந்தது அவனுக்கு. இன்று
தான் முதன் முதலில் அவள் முகத்தையே பார்த்தான். ஆனால் இப்படியொரு
நிலையில் பார்ப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
அவளின் விளையாட்டுத் தனமான செயல் தான் இவ்வளவு நாட்கள்
அவர்களை பிரித்து வைத்தது. இரு ஆண்டுகள் அவள் பெயர், அவளின் காதல்
மொழி பேசும் மை விழிகள் அவற்றை மட்டுமே நினைத்துக் கொண்டு
அறியா முகத்தைத் தேடி அலைந்தவன் இன்று தான் கண்டு கொண்டான்
அவளை…… அவனின் முன் காயங்களுடன் கிடக்கும் அவனின் அம்முவை.
அவனுக்கு ஆறுதல் கூற கூட அங்கு யாருமில்லை. அவளுக்கு உள்ளே
சிகிச்சை நடந்து கொண்டுதான் இருந்தது.
அவன் கண்ணீர் விடுவதை பார்த்த ஒரு பெரியவர் தான் தாங்க முடியாமல்
அவனை சமன் செய்ய முயன்றார். தம்பி அழாதிங்க….. முதல்ல இதைக்
குடிங்க என்று தண்ணீரை நீட்டினார். அவன் அப்போதும் வாங்காமல் அழுது
கொண்டே இருக்க, அந்த பொண்ணுக்கு எதும் ஆகாது தம்பி…நம்பிக்கையா
இருங்க….என்று ஆறுதல் அளிக்க…சற்று ஆறுதல் அடைந்தவன் நீரை வாங்கி
பருகினான். அந்த பொண்ணு யாரு தம்பி என்று கேட்டவரிடம் சற்றும்
குறையாத காதலுடன் கூறினான் என் மனைவி என்று.
தாலி கட்டினால் தான் மனைவி என்றில்லை. முழு மனதோடு மனம்
முழுதும் அவள் மேல் காதல் கொண்ட மறுகணமே அவள் என் மனைவி
தான். அவள் மட்டும் அன்றே சம்மதம் கூறியிருந்தால் இந்நிலை எதற்க்கு.
அவன் மனம் குமுறினாலும் பெரியவரின் முன் அமைதியாக இருந்தான்.
கவலைப் படாதீங்க தம்பி….உங்களோட காதலே அந்த பொண்ணுக்கு ஏதும்
நடக்க விடாது. உங்களுக்கு கண்டிப்பா இப்போ ஒரு துணை தேவை. வீட்டுல
இருந்து யாரையாவது வரச் சொல்லுங்க தம்பி என்றார். அழுது வடிந்த
முகத்துடன் மீண்டும் அவளறையை பார்த்து விட்டு தன் நண்பனுக்கு
அழைத்தான் அவன்.

அங்கு………. தன்னை காண வருவதாய் சொன்ன நண்பன் இன்னும் வராமல்
இருக்க அவனுக்காக அவன் வீட்டில் காத்துக் கொண்டிருந்தான் சரண்.
மருத்துவமனையிலிருந்து அலைபேசியில் நண்பனை அழைத்தவனுக்கு
அழைக்க மட்டுமே முடிந்தது, அவனால் ஏதும் பேச முடியவில்லை. தன்
நண்பனின் அழைப்பை ஏற்ற சரண் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவும்
டேய்…..நிமல்…நிமல் என்று அழைத்துக் கொண்டு இருக்க…….உடனே ஏகே
ஹாஸ்பிடலுக்கு வா… என்று மட்டும் தான் சொன்னான் நிமல்….. நிமலன்
நிமலனின் ஆருயிர் நண்பன் சரண்.
சிறு வயதிலேயே இருவரும் நண்பர்கள். நிமலனின் காதல் மற்றும்
காத்திருப்பு விஷயம் எல்லாம் அவனுக்கு மட்டுமே தெரியும். இரு
வருடங்களாக நிமலனுடன் சேர்ந்து அவனும் தான் அவளை தேடிக்
கொண்டிருந்தான். இருவரும் ஒன்றாகத் தான் தொழில் செய்து வருகின்றனர்.
இன்று முக்கியமான வேலை விசயமாக நிமலனிடம் பேச வேண்டும் என்று
சொல்ல, சரணை தன் வீட்டில் காத்திருக்க சொன்னவன் காரில் வந்து
கொண்டிருக்கும் போது தான் ஆக்சிடென்ட் நடந்தது.
அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடி வந்த சரண் விசாரித்து விட்டு
உள்ளே வர…. அவன் பார்த்தது… சட்டை முழுதும் இரத்தத்துடனும் முகத்தில்
எந்த உணர்ச்சியும் காட்டாமல் கண்களில் கண்ணீர் வடிய அமர்ந்திருக்கும்
நண்பனை தான். எப்போதும் கம்பீரமாய்….. நடையிலேயே அவனின் நிமிர்வும்
திமிரும் தெரியும் நிமலன் இன்று இவ்வாறு அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு
மனமே தாங்கவில்லை.
நிமல்….என்னடா…என்னாச்சு….என்று சரண் கேட்டவுடன் ஆறுதல் தேடிய
குழந்தையாய் அவனை தாவி அணைத்த நிமல்……அவனிடம் அவளிருந்த
அறையை காட்டினான்.
அந்த அறையின் கண்ணாடி வழியே கண்டவனின் கண்களும் கலங்கிட…….
நேரா……. நேராவ எப்போடா பார்த்த….அவளுக்கு என்னாச்சு….
சொல்லுடா…நிமல்…… என்று சரண் கத்தினான்.

நான் தான் காரணம்….எல்லாத்துக்கும் காரணம் நான் தான். என் அம்முவோட
நிலைக்கு நான் தான் காரணம் என்று சொல்லி அவனும் அழ அவ்விடமே
சோகமானது.
தன் நண்பனை சமன் செய்து அமர்ந்திருக்க சிகிச்சை முடிந்ததாக அங்கிருந்த
நர்ஸ் கூறிச் சென்றார். டாக்டர்….. நிமலனிடம் அவங்களுக்கு இப்போதைக்கு
எந்த பிரச்சனையும் இல்லை. பட் அவங்க பழையபடி மாறுறது ரொம்ப
கஷ்டம். என்று சொல்ல ஏற்கனவே ஜடமாய் நின்றிருந்தவன் அதற்கு மேலும்
ஏதும் பேசாமல் வெளியேறினான். ஆனால் நம்பிக்கை வந்தது,
என் காதல் எளிதில் அவளை சரி செய்து விடும் என்று.
அவனின் இத்தனை அழகிய காதலுக்கு சொந்தமானவள் தான்….சரணின்
தோழி நேரா…… நேத்ரா….. அழுது கொண்டிருந்த நிமலனின் அம்மு.

 

தொடரும்……… PRABHAAS

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்