188 views

மனதில் விழுந்த விண்மீனே-டீசர்

“சுமதி பூ பழம் வெத்தலை பாக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டு இல்ல” என தன் இல்லாள் சுமதியிடம் இதோடு பத்தாவது முறையாக கேட்டுவிட்டார் ஆனந்த்.

“எடுத்து வச்சுட்டேன்ங்க” என சுமதி பதில் கூற “ஸ்வீட் காரம்லாம்..” என ஆனந்த் கூறிக் கொண்டிருக்கும் போதே “எல்லாமே தயாரா இருக்குடா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரது தான் பாக்கி”  என தன் தம்பிக்கு பதில் அளித்தார் கமலா.

“பொண்ணு ரெடி ஆகிட்டாளா அக்கா ?” எனக் கேட்டவருக்கு  “அதெல்லாம் நம்ம ஐசுவும், மதுவும் பாத்துப்பாங்க.நீ டென்ஷன் ஆகாம இரு” என ஆனந்திடம் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து நீட்டினார் கமலா.

“அப்படி சொல்லுங்க அண்ணி.நானும் எத்தனையோ முறை சொல்லிட்டேன். இவரு கேட்டாதானே” என்ற சுமதியிடம் “இது நம்ம பொண்ணுக்கு பாக்குற பத்தாவது இடம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு புடிச்சு இந்த சம்பந்தமாவது கல்யாணம் வரைக்கும் போகனும்ல்ல சுமதி”  என ஆனந்தும் தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.

   “டேய் அதெல்லாம் போட்டோ பார்த்தே புடிச்சி போய் ஜாதகம் எல்லாம் பொருந்தி வெத்தலை பாக்கு மாத்திக்க தானே வராங்க.அப்புறம் ஏன்டா உனக்கு இவ்வளவு டென்ஷன்,கவலை எல்லாம்”  என தமக்கை கமலா ஆனந்தை சாந்தப் படுத்தினார்.

“அது இல்ல அக்கா..”  என ஆனந்த் கூறிக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்க  “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கனு நினைக்கிறேன்.வா போய் வரவேற்கலாம்” என சோபாவில் இருந்து எழுந்து முன்னே நடந்தார் கமலா.

நன்றாக கொலு பொம்மை போல் அலங்கரிக்கப்பட்ட பெண்ணவள் மாப்பிள்ளை வீட்டாருக்கு முன் வந்து வணக்கம் வைக்க அனைவருக்கும் அவளைப் பிடித்து போய் விட்டது.

“எங்களுக்கு பொண்ணு ரொம்ப புடிச்சிருக்கு”  என மாப்பிள்ளையின் தாயார் பானுமதி கூறவும் அப்போது தான் ஆனந்திற்கு நிம்மதியாக இருந்தது.

“அப்புறம் வரதட்சனைய பத்தி முன்னவே பேசிட்டா கரெக்டா இருக்கும். ஒரு 150 சவரன் நகையும்,ஒரு காரும்,ஒரு டபுள் பெட்ரூம் வீடும் போதும் எங்களுக்கு”  என வாய் கூசாமல் பானுமதி கேட்க  “அதுக்கு என்ன சம்பந்தி என் பொண்ணுக்கு போட்டுட்டா போச்சு”  என ஆனந்தும் வாய் நிறைய பல்லாக சந்தோஷமாக கூறினார்.

“சரிங்க ஆண்ட்டி  நீங்க சொன்ன எல்லாமே எங்க அப்பா போடுவாரு. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க பையன் எங்க வீட்டிலேயே வந்து தங்கிட்டும்”  என மங்கையவள் கூற  “இது என்னம்மா புது  வழக்கமா இருக்கு? கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணு தானே  மாப்பிள்ளை வீட்டுக்கு வரனும்.நீ என்ன தலைகீழா சொல்லிட்டு இருக்க” என பானுமதி  கேட்க  “ஏன் ஆன்ட்டி நாங்க உங்க பையனா 150 சவரன் நகை,ஒரு காரு,ஒரு டபுள் பெட்ரூம் வீடு கொடுத்து வாங்குறோம்.அப்போ எங்க வீட்ல வெச்சு பார்த்துக்கறது தானே முறை” என அவள் கேட்க , “நமக்கு இந்த சம்பந்தம் செட்டாகாது.கெளம்புங்க”  எனக் கூறி மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் எழுந்து சென்று விட்டனர்.
***********************
    “ஏன்டி இதுக்காகவா உன்ன நான் பத்து மாசம் என் வயித்துல சுமந்து பெத்தேன்? பெத்து வளர்த்த எங்களுக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்த. எவனோ ஒருத்தனோட புள்ளைய சுமந்துகிட்டு வந்து நிக்குறியே” என அழுது புலம்பியவாறே சுமதி தன் மகளிடம் கத்த ஆனந்த் அவரை ஏதும் பேசாமல் வெளியே அழைத்து சென்றார்.

    “நான் வேணும்னே பண்ணலடி. இப்படி நடக்கும்னு நான் நெனச்சு கூட பார்க்கல டி” என அழுது அழுது சிவந்த கண்களுடனும், உப்பிய கன்னங்களுடனும் தன் தமக்கை தாராவின் தோள்களின் மீது சாய்ந்து கொண்டு அழுதாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  8 Comments

  1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  3. hani hani

   கல்யாணம் பண்ணுறாங்களா பையன விக்குறாங்களா? இன்னும் கொஞ்சம் கேளுங்க. தப்பே இல்ல.. 🤦 வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️