Loading

மனதில் விழுந்த விண்மீனே-டீசர்-2

    தன் ஆசை மகன் ஆத்விக்கின் வற்புறுத்தலாலும், அடத்தினாலும் எந்தப் பெண் தன் குடும்பத்திற்கு செட்டாக மாட்டாள் எனக் கூறி அவர் நிராகரித்து வந்தாரோ, அவளது வீட்டிற்கே,அவளைப் பெண் கேட்க வந்திறங்கினார் பானுமதி.

பானுமதி ஆத்விக்கை  “இன்னும் ஒரு முறை யோசிடா. இந்த பொண்ணு தான் வேணுமா?” என பாவமாக கேட்க , “கட்டுனா அவள தான் கட்டுவேன்” என தீர்மானமாக கூறியதையே திரும்பி திரும்பி கூறிக் கொண்டிருந்தான் ஆத்விக்.

பானுமதியை கண்ட ஆனந்த்,  ‘இவங்க எங்க இங்க வந்தாங்க’ என யோசிக்க பானுமதி நடந்தது அனைத்தையும் கூற ஆனந்திக்கும் சுமதிக்கும் சந்தோஷம் தாளவில்லை.

தன் மகளின் விருப்பத்தை கூட கேட்காமலேயே சம்மதம் தெரிவித்தனர். “சம்பந்தி வரதட்சனை..” என தயங்கி கொண்டே ஆனந்த் கேட்டார்.

இவர்கள் சம்பாஷணையை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதி கண்ட புதுமைப் பெண்ணவள், “கடைசியில எங்கக்கிட்டே திரும்பியும் உங்க பையன விக்க வந்துட்டீங்களா ஆன்ட்டி?” என நக்கலாக தன் கைகடிகாரத்தை கட்டிக்கொண்டே வெளியே வந்து கேட்டாள்.

“இந்த வாயாடி பொண்ணாயடா கட்டிப்பேன்னு  ஒத்தக்கால்ல நிக்கிற?” என பானுமதி ஆத்விக்கை கேட்க “மா வாயாடுறது தான்மா அவளோட தொழிலே” என தன் தாயிடம் கூறிவிட்டு தன் மனம் கவர்ந்தவளே நோக்க, அவளோ அவனை வெட்டவ குத்தவா என்னும் ரீதியில் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“வாதாடறது தான்மா அவளோட தொழிலே. டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு” என இளித்து கொண்டே சமாளித்தான் ஆத்விக்.

***********************

மயக்கம் தெளிந்து எழுந்தவள், தன் முன்னால் இருக்கும் காதலனை கண்டவுடன் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவள் எப்போது கண் விழிப்பாள் என காத்துக் கொண்டிருந்தவன், அவள் விழிகளை திறந்து “ஜலால்” என அழைத்து தான் தாமதம் அவளது கழுத்தில் மாங்கல்யம் ஏறி இருந்தது.

என்ன நடந்தது என புரியாமல் ஒரு கணம் முழித்தவள், தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலியை கண்டு அதிர்ச்சியாகி அவளது ஆருயிர் காதலன் ஜலாலின் சட்டையை பிடித்து, “ஏன்டா இப்படி பண்ண?”  என கோபத்துடன் கத்தினாள்.

“நாம தான் ஆல்ரெடி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்ல. இப்போ உங்க முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அவ்வளவு தான் அதுக்கு எதுக்கு நீ இப்படி கத்துற?” என தன் சட்டை காலரை பிடித்திருந்த அவளின் கையை விடுவித்தவாறே கேட்டான் ஜலால்.

“ஐயோ நான் இப்போ எங்க அப்பா,அம்மா முகத்தில் எப்படி முழிப்பேன்.தாரா கூட இதை ஒத்துக்க மாட்டாளே. எல்லார் சம்மதத்துடன் தான் நம்ம கல்யாணம் நடக்கனும்னு எத்தனை வாட்டி உன் கிட்ட சொல்லி இருப்பேன்.இப்படி பண்ணிட்டியே” எனவே பேதைவள் அப்படியே அழுதழுது ஜலாலின் மீதே மயங்கி சரிந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்