Loading

    நெஞ்சத்தில் தஞ்சமானவளே -07

முகில் ராகவிடம் தான் தஞ்சாவூர் வரவில்லை என்று கூறி விட்டு தனது வீட்டிற்கு கிளம்பினான்.

ராகவ் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லத்திற்கு சென்று கொண்டிருந்தான். ஏகௌரியம்மன் கோவில் திருவிழாவிற்காக சென்று கொண்டிருக்கிறான் ….. ஆரண்யா தீர்த்தன்யா இருவரும் குடும்பத்தினருடன் அங்கே தான் சென்று கொண்டிருக்கின்றனர்.

கனகத்தின் பிறந்த ஊர் வல்லம் அவர்கள் ஊருக்கு திருவிழாவிற்காக சென்றிருந்தனர்.

(ஏகௌரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோயிலாகும். இக்கோயிலானது தஞ்சையிலிருந்து தஞ்சை-திருச்சி சாலையில் 12கிமீ தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கிமீ தொலைவில் உள்ளது.[1]

ஆடிப்பதினெட்டு அன்று வல்லம் கடைவீதியிலுள்ள மாரியம்மன் கோயில் விழாவோடு ஏகெளரியம்மன் கோயில் திருவிழா நடத்தப்பெறுகிறது. ஏகௌரியம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய உற்சவமூர்த்திகளைத் தனித்தனியே அலங்கரித்து வீதி உலா நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை ஆடிக்கழிவு திருவிழா நடைபெறுகிறது. தீமிதி, அம்மனுக்கு பகலில் சைவ பூசை, தொடர்ந்து இரவில் எருமைக்கிடா பூசை போன்றவை நடத்தப்பெறும். கோயில் காவல் தெய்வங்களுக்கு ஆடு,கோழி வெட்டி பூசை செய்கின்றனர். இத்திருவிழாவைக் காண வல்லம் அருகில் வாழும் மக்களும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்

இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவில் தேவிக்கு நடத்தப்படும் சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமி விழா அடங்கும். சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர். )

ஆடிக்கழிவு திருவிழாவிற்காக வந்து உள்ளனர் .

கனகத்தின் அம்மா அகிலாண்டம் அம்மாள் பேரப்பிள்ளைகளை வரவேற்க வாசலிலேயே காத்திருந்தார்.

“அடி தங்கங்களா வாங்க வாங்க காலையில் இருந்து வர்றீங்களா வர்றீங்களான்னு பார்த்து கண்ணு பூத்து போச்சு ” என பேத்திகளை அணைத்து கொண்டார். 

“அம்மாச்சி….  அதான் வந்துட்டோமே வாங்க உள்ள….  செம பசி….  சூப்பரா நாட்டு வெல்லம் போட்டு ஒரு டீ போட்டு தருவீங்களே அது வேணும்….  உங்களுக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேனே….”என்று வாசலிலேயே தொணதொணத்து கொண்டிருந்தாள் தீர்த்தன்யா .

“வாசல்ல நின்னுட்டு என்ன பேச்சு வேண்டி கிடக்கு உள்ள போங்க “என அவளின் தாத்தா திட்ட .,”ம்ம்க்கும் வந்துட்டாரு வால்டர் வெற்றிவேலு இனி ஏதாவது பேசினோம் எடுத்து டப் டப் னு சுட்டுடுவார் “என்று முணுமுணுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

எல்லோரையும் வரவேற்று விட்டு டீ போட சென்றார் அகிலாண்டம். பின்னாலேயே கனகமும் செல்ல இளம்பரிதி தன் மாமா அறைக்கு சென்றான் உடை மாற்ற.. 

“ஏன் மா நாங்களே வந்துட்டோம் இன்னும் அண்ணன் அண்ணியை காணோம்…. எப்ப வர்றாங்களாம்…. ??” 

“நேத்து கிளம்பும் போது உன் மருமவன் நேத்ரனும் நானும் வரேன் ஆபிஸ் ல லீவ் தந்துட்டாங்க னு சொன்னானாம்  அதான் இன்னைக்கு நேரமே கிளம்பி வந்துகிட்டே இருக்காங்க….  ஏன் டி பேத்திக்கு வரன் எதுவும் வந்துச்சா… ???”

“வருது மா … மாமனார் நல்ல இடமா பார்த்துட்டு இருக்கார்….  காசு பணம் இல்லாட்டியும் கொணமா வச்சுக்கிறவங்களா விசாரிச்சு தான் தரனும் னு சொல்லிட்டு இருக்காரு…”  

“சரி டி அப்ப நம்ம சொந்தத்தில் ஒரு பய இருக்கான்  மெட்ராஸுல வேலை பார்க்கிறான் பொறுப்பான பிள்ளை…  குடும்பத்தை அவன் தான் பார்க்கிறான் நம்ம ஆருவுக்கு பொருத்தமா இருப்பான்… இவ அமைதிக்கும் அவனோட குணத்துக்கும் நல்லா பொருந்தி போகும்…  என்ன அப்பன் தான் குடிகாரன்…அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு…. .  ஒரு தங்கச்சி இருக்கிறா அவளை கட்டி தந்துட்டா இவ தான் அங்க ராசாத்தி… அம்மா காரி அவ்வளவு அமைதியா இருப்பா….  நீ மாமனார் கிட்ட கேளு நானும் சொல்றேன்…. “

“ஏன் மா நான் ஆருவை  நம்ம நேத்ரனுக்கு கட்டி வைக்க நினைக்கிறேன் நீ வேற இடத்தில் மாப்ள பார்க்கிற….”  

“ப்ப்ச்…. உங்க அண்ணி சம்மதிப்பாளா அவ தான் தான் அண்ணன் பொண்ணை தான் கட்டனும் னு சொல்லிட்டு இருக்காளே அப்புறம் எங்கிருந்து நம்ம பிள்ளைகளை கட்டுவா….  நாம கேட்டா உன் பேத்திங்க கலரா இல்லை னு பேசுவா….  அவ கிட்ட என் பேத்திக எப்படி இருக்காங்கனு கேட்கவா வளர்க்கிறேன்….  அதெல்லாம் அவளுகளுக்கு நல்ல மாப்பிள்ளையா வருவாங்க…  நேத்ரனுக்கு கட்டி வைக்க வேணாம்….  அதுவும் நம்ம ஆரு வேண்டவே வேண்டாம்… இவ அமைதிக்கு அவளுக ஏறி மிதிச்சிருவாளுக…. அப்படியே பொண்ணு கேட்டாலும் தீருவை குடுக்கலாம் இவ தான் உன் அண்ணிகாரிக்கு லாயக்கு…. நல்லா வெளுத்து வாங்குவா…” என கூறி விட்டு டீயை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார் அகிலாண்டம்.

தன் மகளிடம் கூறியதை அப்படியே ஆருவின் தாத்தா  அரங்கநாதனிடம் சொல்ல  அவரும் டீயை உறிஞ்சியபடியே “உன் பேரனுக்கு கேட்பன் னு பார்த்தேன்…  இப்படி வேற மாப்பிள்ளை பார்த்து இருக்க… ??”

“இல்லண்ணா கட்டிகிட்டு போறவங்களுக்கு விருப்பம் வேணும் இல்ல….  அவங்களே விருப்ப படாத போது நாம ஏன் வலியக்க போகனும் பெத்த மகனா இருந்தாலும்…  நாம சொல்றதை கேட்கும் போது தான் நமக்கு மரியாதை அதை கேட்காத போது நாம ஏன் அவங்க குடும்ப விஷயத்தில் தலையிடனும்….  அதுவும் இல்லாமல் வச்சு வாழப் போறவங்க அவங்க…  அவங்களுக்கே விருப்பம் இல்லாத போது நாம நம்ம பிள்ளையை தர்றது தப்பு…. “

“சரிம்மா நீயே இவ்வளவு தூரம் சொல்லும் போது இந்த பேச்சு இனி வேண்டாம்…. நீ பார்த்திருக்கிற மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க வர சொல்லு பிடிச்சிருந்தா மேற் கொண்டு பேசலாம்… “என பேச்சை முடித்துக் கொண்டார்.

“ஆரு போச்சு டி உன் லவ் ஸ்டோரிக்கு அம்மாச்சி என்ட் கார்ட் போட பார்க்குது…  “என கிசுகிசுத்தாள் தீர்த்தன்யா.  அவளது முகம் மாறினாலும்  “பொண்ணு தானே  பார்க்க வர்றாங்க….  நாளைக்கே கல்யாணத்தை வச்சிடலாம் னா சொன்னாங்க  விடு பார்த்துக்கலாம்….  “

இளம்பரிதி சோகமே உருவாக அறையில் அமர்ந்து இருந்தான். 

“ஏ ராசா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்கிற….  உன் மாமன் வண்டியை எடுத்துகிட்டு ஊருக்குள்ள ஒரு வட்டம் போயிட்டு வாரது….  உன் சோட்டுக்கார பயலுக எல்லாம் வந்திருப்பாங்க இல்ல…  இந்த டீயை குடிச்சிட்டு போயிட்டு வா…..  நாளைக்கு தீமிதி இருக்கு… போ ” என அனுப்ப அவனும் கிளம்பினான் மனமாற்றம் வேண்டி… 

போகும் போதே வழியில் நாலு பெண்கள் ரோட்டை மறைத்தபடி நடந்து சென்று  கொண்டிருந்தனர்.  பரிதி ஹாரன் அடித்து அடித்து ஓய்ந்து போனான்….. 

 

ஆட்டுமந்தையில் விடும் போது எவ்வளவு மெதுவாக செல்ல வேண்டுமோ அது போல செல்ல அவர்கள் செயலில் கடுப்பானவன் வேகமாக அடித்தான்  ஹாரனை நால்வரும் ஒரு வாக்காக திரும்பி பார்த்து விட்டு நகர வேகமாக அருகில் வந்தவன் .,”வழியை விட்டு நடக்க மாட்டீங்களா… அறிவு இல்ல வண்டி ஹாரன் கூடவா கேட்கலை….  ஊர்வலமா போறீங்க…  ஆளுகளை பாரு  இனி இன்னொரு தடவை இப்படி நடக்கிறதை பார்த்தேன்…  அவ்வளவு தான்…. வழியை விடுங்கல” என்றபடி செல்ல.,”  ஹே மைனரு யார் ஊர்ல வந்து யார் கிட்ட சவுண்ட் விடுற  கேளுங்க ந்த நம்ம தெருவுல நாம எப்படி நடக்கனும் னு இவரு பாடம் எடுக்கிறாரு…  அப்படி எல்லாம் வழியை விட முடியாது என்ன பண்ணுவ….”  புருவம் உயர்த்தி கேட்டாள் ஒரு சிறு சிட்டு…

“அடிங்க முக்கா படி உலக்காட்டம் இருந்துகிட்டு வாய்….  யார் வீட்டு புள்ள ந்த நீயி….  இரு வாரேன் உங்க மேல வண்டியை விட்டு ஏத்தி குறுக்கெலும்பை ஒடிச்சு போடுறேன்…. ஆளை பாரு “என பரிதி எகிற  அவள் அவனுக்கு மேல் எகிறினாள்.

“யார் எலும்பை யார் உடைக்கிறது….  என்ன ஒரண்டு இழுக்கிறீகளோ….  எங்க அண்ணன் வரட்டும் நீ இந்த ஊர்ல தானே இருப்ப உனக்கு வச்சுக்கிறேன் கச்சேரி….  “என்க இருவருக்கும் வாய் சண்டை அதிகமாக  “அடியே கார்த்தி நமக்கு எதுக்கு டி வம்பு வா போகலாம்….  “என தோழிகள் ஒரு வழியாக அழைத்து சென்றனர்.

போனவள் சும்மா போயிருக்கலாம் இரு விரல்களை நீட்டி கண்ணை நோண்டிடுவேன் என ஜாடை காட்டி விட்டு நகர்ந்தாள்.  பரிதிக்கு கோவம் தாங்கவில்லை.

“நீ இந்த ஊரு தானே மாட்டுவ டி பாப்பா மாதிரி இருந்துகிட்டு என்ன பேச்சு பேசுறா….” என கோபத்துடன் சென்றான்.

இங்கே தீர்த்தன்யா ஊர் வாண்டுகளுடன் கூட்டுசேர்ந்து தென்னந்தோப்பிற்குள் சுற்றி வந்தாள் ஆரண்யா தன் அம்மாச்சிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

“ஏந்த சரணு…..  உங்க ஊர் காரங்க உள்ள வந்திட மாட்டாங்களே…  ??”

“அதெல்லாம் வர மாட்டாங்க நீ பறி பார்த்துக்கலாம்…..  “என்றதும் மிக சரியாக கல்லை விட்டு அடித்து அந்த சிவப்பு கொய்யாப் பழத்தை கீழே விழ வைத்தாள்

“ஹான் தீருவா கொக்கா… அடிச்சோம் ல…..  எடுத்துட்டு வாங்க டி போகலாம் “

“ஏய் இது பத்தாது….  இன்னும் அஞ்சு பழமாவது வேணும் அதுவும் அந்த பப்ளிமாஸ் ரெண்டு கேட்பா…”

“சரி இரு… “என அடித்தவள் மூன்று அடித்து கொடுக்க நாலாவது பழத்தை அடிக்கும் போது கல் வேறு திசையில் போய் அடிக்க அங்கே” அம்மா” என்று சத்தம் கேட்டதும் ஏந்த “எவன் மண்டையவோ  உடைச்சிட்ட போல வாந்த ஓடிருவோம்….  சிக்குனோம்….  வீட்லயும் அடி கிடைக்கும் இவனுக கிட்டயும் வசவு வாங்கனும்…. “என  ஓட அவர்களின் கையை பிடித்து கொண்டு தீர்த்தன்யா அங்கேயே நின்று இருந்தாள்…..  திமிராக

“அடி நீ வேணுன்னா நில்லு எங்களையும் ஏன் டி மாட்டி விடுற “கையை பிடுங்கி கொண்டு திமிறினாள் சரண்யா.

“ஏய் யாருந்த கல்லெறிஞ்சது….  “என  நெற்றியை தேய்த்தபடி வந்தான் ராகவ்.

வந்தவன் தீர்த்தன்யாவை பார்க்க வலியை மறந்து .,”நீங்க எங்க இங்க ???”என்றான்.

“லூசா இருப்பானோ …. இல்ல தலையில் கல்லு பட்டதில் மூளை குழம்பி போச்சா…. !!”என மனதில் எண்ணிக் கொண்டு இருந்த தீரு “கல்லு எறிஞ்சது கொய்யாப் பழத்துக்கு….  அது வந்து  உங்க மண்டையில் விழுந்திடுச்சு…  அதான்…” என விஷயத்தை கூறியவள் மன்னிப்பு கேட்கவில்லை.

“ஆரண்யா என்னை நினைவு இல்லையா ….நான் ராகவ் கொடைக்கானலில் மீட்டிங் வந்திருந்தீங்களே ??” என நினைவுபடுத்த….  தீருவோ .,”எத்தனை பேர் டா கிளம்பி இருக்கீங்க ??”என நினைத்து கொண்டு  .,”நான் ஆரண்யா இல்ல தீர்த்தன்யா அவளோட ட்வின் சிஸ்டர்….  நீங்க எம்கே கம்ப்யூட்டர் சென்டர் ல ஒர்க் பண்றிங்களா நானும் அங்க தான் வொர்க் பண்றேன்…. ”  என அறிமுகப்படுத்தி கொண்டு தன் அம்மாச்சி வீட்டிற்கு திருவிழாவிற்காக வந்திருப்பதாக கூறி விட்டு சென்றாள்.

“அதானே பார்த்தேன் அந்த பொண்ணு எவ்வளவு அமைதியா இருந்தா இவ தோரணையே ரௌடி மாதிரியே இருக்குது…. அடிச்சாளே ஒரு சாரியாவது கேட்டாளா திமிர் பிடிச்சவ…. யப்பா….  வலிக்குதே !!! “என தேய்த்து கொண்டே சென்றான் ராகவ்.

தீர்த்தன்யா சுற்றி முடித்து விட்டு வீட்டுக்கு வர கனகம் கோபமாக நின்றிருந்தார்.

“மம்மி வொய் கோவம்…. மீ பாவம்….  அம்மாச்சி சமைச்சிடுச்சா…  செம பசி… ” 

“ஏன் டி எவ்வளவு நேரம் சுத்திட்டு வருவ….  வா உன் மாமா அத்தை எல்லாம் வந்துட்டாங்க கொஞ்சம் மரியாதையா பேசு” என அழைத்து சென்றார்.

“ஹாய் மாம்ஸ் எப்படி இருக்கீங்க??” என  சத்தமிட கனகம் முறைத்தார்.

“இவ்வளவு நேரம் எங்க டா போன நல்லா இருக்கியா??” சிலபல விசாரிப்புகளுக்கு பிறகு தான் நேத்ரன் அவளை பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

“என்ன லுக்கு கண்ணு காணா போயிடும் ஜாக்கிரதை…..”என முணுமுணுத்துக் கொண்டு சத்தமாக .,”அப்புறம் நேத்ரன் மாமா நல்லா இருக்கீங்களா…. அப்புறம்… ஜாப் எல்லாம் எப்படி இருக்கு…”  என்றாள்.

“யப்பா இவ ஜெக ஜால கில்லாடியா இருக்காளே… இவ சங்காத்தமே நமக்கு வேண்டாம் பா நமக்கு ஆரண்யா தான் லாயக்கு” என நினைத்து “நல்லா இருக்கேன் மா “என எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.

தீமிதி திருவிழாவில் வரதராஜனும் இளம்பரிதியும் பால் குடம் எடுத்து தீமிதித்தனர்.  எல்லோரும் வேகமாக சென்று கொண்டிருக்க வரதராஜன் தீமிதியின் நடுவே நிதானமின்றி தடுமாற மிகச் சரியாக ராகவ் தனது  பால்குடத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் அவரையும் பிடித்து லாவகமாக அழைத்து வந்து விட்டான்.

“ரொம்ப நன்றி பா….  நீ பிடிக்கலைனா விழுந்திருப்பேன்…  யார் வீட்டு பையன் பா நீ??? பேர் என்ன ??”

“மேட்டு தெரு சண்முகம் பையன்…பேரு  ராகவ் ” என்றான். அதற்குள் அரங்கநாதன் வந்து விட நடந்ததை கூறிவிட்டு  வீட்டிற்கு வாப்பா என்று கூறி விட்டு செல்ல அகிலாண்டம் தான்  “அண்ணே நான் சொன்னேனே பையன் அது அந்த பையன் தான்….  எப்படி இருக்கான்… ??”

“ம்ம்ம்ஹ்ம்…. பையனை பார்த்தா பொறுப்பா தான் தெரியுது….  வெடையாத்தி (மஞ்சள் நீராட்டு விழா) முடிஞ்சு வர சொல்லு பேசுவோம் “என  பேசியபடி கிளம்பினர்.

தீமிதி சைவ பூசை எல்லாம் முடிந்து அன்றிரவு எருமைக்கிடா பூசை முடிந்து கெடாவெட்டி  பொங்கலிட்டு படையல் இட்டனர்.

ஆரண்யா அகிலாண்டத்திற்கு உதவி செய்ய  நம்ம தீரு செல்லம் கடைவீதியை சுற்றி வந்தாள்.

நேத்ரன் ,இளம்பரிதியுடன் சேர்ந்து சுற்ற…  ராகவ் தனது ஊர் நண்பர்களுடன் இணைந்து கொள்ள  கடை வீதியை சுற்றி வந்தனர்.  ஒரே ஊர் என்பதால்  பசங்க பட்டாளமாக திரிந்தனர்.  சம்பிரதாயமாக இளம்பரிதி நேத்ரனுடன் பேசினான்  ராகவ்.

…… தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.