நெஞ்சத்தில் தஞ்சமானவளே -06
முகிலிடம் ஆரண்யாவை விரும்புகிறாயா என ஜீவா கேட்க அவன் குழப்பி விட்டு ஒருவாறாக விரும்புவதாக ஒப்பு கொண்டான்.
தீர்த்தன்யாவும் இதே கேள்வியை ஆருவிடம் கேட்க …. அவளிடம் அமைதியே விடையாக கிடைத்தது .
“ஆரு நான் கேட்கிறேன் இல்ல பதில் சொல்லு…. ப்ப்ச் ஆரு…. ”
“சரி காதல் னா நீ என்ன நினைக்கிறாய் தீரு… “
“நான் இது வரையில் யாரையும் லவ் பண்ணது இல்லை அதனால எனக்கு தெரியலை…. நீங்க சொல்லுங்க மேடம்… ஏன் னா “
“ச்ச்சு சும்மா இரு தீரு…. சரி நானே சொல்றேன்… என்னை பொறுத்தவரை நல்லா கேட்டுக்க இது என்னோட பாயிண்ட் ஆஃப் வியூ மட்டும் தான்…. அது அப்படி இல்ல இது இப்படி இல்லைனு சொல்லக் கூடாது ஓகே… அன்பு நம்ம பெத்தவங்க கூடப் பிறந்தவங்க சொந்தங்கள் மீது ஏற்படுகிற உணர்வு…. எல்லோரையும் பிடிக்கும்…. பாசம் வச்சிடுவோம்…. அதுவே யார் னே தெரியாத நமக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒருத்தர் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். வரும் பாரு ஒரு அளவில்லா அன்பு அது தான் என்னை பொறுத்தவரை காதல்… அவங்களுக்காக என்ன வேணும் னாலும் செய்ய தோணும்… அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுனா நமக்கு மனசு துடிக்கும்…. அதே போல நம்ம அப்பா அம்மா கூட இருக்கும் போது கிடைக்கிற ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்றும்… நமக்காக அவங்க வருவாங்க நமக்கு துணையா இருப்பாங்கன்னு தோணும் அதே போல நாமளும் அவங்களுக்காக இருக்கனும் னு தோணனும்…. அது எனக்கு முகிலை பார்த்து தோணுச்சு… கொடைக்கானலில் இருக்கும் போது தோன்றாத ஓர் உணர்வு அங்கிருந்து திரும்பி வரும் போது இருந்தது. என்னை காரில் விட்டுட்டு அவர் இறங்கும் போது பார்த்த பார்வை…. உன்னை விட்டு போகனுமான்னு கேட்பது போல இருந்தது. வீட்டிற்கு வந்ததும் நான் முதலில் முகிலுக்கு தான் ஃபோன் பண்ணி சொல்ல நினைச்சேன்… அப்போ அவர் கிட்ட பேச ஒரு தயக்கம் இருந்தது…. நான் நினைப்பது போல தான் அவரும் நினைக்கிறாரா இல்லை எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கோன்னு நினைக்கும் போது அவரோட கால் வரவும் நான் எவ்வளவு ஹாப்பியா ஃபீல் பண்ணேன்னு தெரியுமா…. அப்புறம் அவர் திருச்சி வரேன் னு சொல்லிட்டு மெசேஜ் அனுப்பினாரே அன்று முழுவதும் நான் தூங்கவே இல்ல…. மனசு சந்தோஷத்தில் துள்ளி குதிச்சது…. இந்த உணர்வுகளுக்கு பெயர் காதல் னா கண்டிப்பாக நான் முகிலை விரும்புறேன்… அவரோட காலம் முழுக்க வாழ ஆசை படுறேன்… அதுக்காக அக்கா போல குடும்பத்தை விட்டு போகவும் எனக்கு எண்ணம் இல்லை… கண்டிப்பாக காதலை வீட்டில் சொல்லி ஏத்துகிட்டா மட்டும் தான் முகிலுக்கு நான் சொந்தம் ஆவேன்…. இல்லையா வரதராஜன் மகளாகவே இருந்துட்டு போறேன்….. காதல் வேண்டாம் னு சொல்ல அவங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கும் போது வேணும் னு சொல்ல என் கிட்ட பத்து காரணம் கூடவா இல்லாமல் போகும்…. பட் முதல்ல முகிலுக்கு என் மேல வந்திருக்கிறது வெறும் நட்பு மட்டும் தானா இல்லை அதை தாண்டிய ஒரு உணர்வா னு தெரிஞ்சுக்கனும்….. வெறும் நட்பு மட்டும் தான் னா கண்டிப்பாக அவருக்கு ஒரு நல்ல தோழியா இருப்பேன்… அதை தாண்டிய உணர்வு என்றால் கண்டிப்பாக அவருக்கு எல்லாமுமா இருப்பேன்…. “என்றாள் தெள்ள தெளிவாக
“ப்பா நீ சான்ஸ்லெஸ் ஆரு…. பார்க்க பச்சை புள்ளை மாதிரி இருந்துகிட்டு உனக்குள்ள இவ்வளவு தெளிவு இருக்கும் னு நான் எதிர்பார்க்கவே இல்லை கண்டிப்பாக உனக்கு துணையா நான் இருப்பேன் டோன்ட் வொர்ரி என் அருமை ஆரண்யாவே…. ஆமா நம்ம ஜீவாண்ணா மேட்டர் என்ன ஆச்சு…. காபி கடைகாரி என்ன சொல்றா….. ஒத்துகிட்டாளா…. ??”
“அதை நீயே காலையில் உங்க அண்ணா கிட்ட கேளு…. வா வீடு வந்திடுச்சு இதுக்கு மேல இதை பத்தி பேசாத…” என உள்ளே நுழைந்தனர் இருவரும்.
“என்னம்மா லீவு சொல்லிட்டிங்களா ரெண்டு பேரும்… “உள்ளே நுழையும் போதே இருவரின் தாத்தா கேள்வி கேட்டார்.
“ம்ம்ம்ஹ்ம்…. சொல்லியாச்சு தாத்தா… தந்துட்டாங்க அதுக்கு பதிலா ரெண்டு ஞாயிற்றுக்கிழமை ஃபுல் டே வேலை இருக்கு….”
“இதுக்கு தான் சொன்னோம் வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் னு… எங்க என் பேச்சை கேட்குறீங்க…. இன்னும் கொஞ்ச நாளைக்கு தானே அதனால தான் பேசாமல் இருக்கேன்… சரி போங்க நேரமாச்சு சாப்பிட்டு தூங்குங்க…. “என்றவர் தன் அறைக்கு சென்றார்.
இளம்பரிதி அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான் .
“என்ன அரிசி ஆலை அதிபரே அமைதியா சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க வாட் இஸ் தி மேட்டர் ??”
“ஏய் வாயாடாம போய். முகம் கழுவிட்டு வாங்க….. சாப்பிடலாம் “என்று கனகம் சொல்ல பரிதி அப்போதும் அமைதியாக இருந்தான்.
“என்ன அண்ணன் இந்நேரம் நான் இப்படி சொன்னதுக்கு கொட்டி இருப்பான் அமைதியா இருக்கானே…. என்னவா இருக்கும் ஏதோ பெருசா நடந்திருக்கு” என குறுகுறுவென்று பார்த்து விட்டு சென்றாள் தீர்த்தன்யா.
“சாப்பிடுயா…. நம்ம குடும்பத்துக்கு இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் தேவையாயா…. வேண்டாம் யா நமக்கு இந்த கண்றாவி எல்லாம் அப்பா தாத்தா குணம் எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி நடந்துக்கலாமா… ஏற்கனவே ஒருத்தியை நான் இழந்துட்டு நிற்கிறது பத்தாதா…. வேண்டாம் சாமி…. “பரிதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் கனகம்.
“ம்மா…. நான் என்ன ஊரை விட்டு ஓடி போயா உங்க மானத்தை வாங்கினேன்…. இல்லையே உங்க கிட்ட சம்மதம் வாங்கி தானே கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறேன்…. ஏன் என் விருப்பத்தை காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறிங்க…. ??”
“ஸ்ஸ்ஸ் அய்யோ சத்தம் போடாத டா அவர் காதில் விழுந்தா அவ்வளவு தான்….. நான் பொறுமையா பேசி புரிய வைக்கிறேன் நீ சாப்பிடு….” சமாதானம் செய்தார் கனகம்.
“ஓஓஓ… அண்ணனும் லவ் ல விழுந்துட்டானா …சூப்பர் ஆரு இந்த மேட்டரை வச்சே உன் காதலை சேர்த்து வச்சிடலாம் அப்படியே அக்காவையும் கண்டு பிடித்து குடும்பத்தோட சேர்த்து வச்சிடலாம்…. செம தீரு உன் மூளை யாருக்கும் வராது டி…. “தன்னை தானே மெச்சிக் கொண்டு வெளியே வந்தாள் உணவருந்த
ஆரண்யாவும் முகிலும் தங்களது சொல்லாத காதலை வைத்து கனவு கண்டு கொண்டிருக்க காலம் என்ன செய்தி வைத்திருக்கிறதோ அவர்களுக்கு.
சிறிது நேரத்தில் முகில் ஆரண்யாவிற்கு அழைத்து பேசி கொண்டிருந்தான்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஆரண்யாவிடம் பேசி விட்டு வைத்தவன் ராகவிற்கு அழைத்தான்.
“டேய் என்னடா திருச்சி போனவன் ஒரு ஃபோன் கூட பண்ணலை… சார் அவ்வளவு பிஸியா இருக்கிங்களோ ” என ராகவ் கிண்டல் செய்ய.,” ச்சே அதெல்லாம் இல்ல டா.. டைமே இல்ல உன் தோசையை ரொம்ப மிஸ் பண்றேன் டா…. ஆமா என்ன சொல்றியே நீ ஃபோன் பண்ணி பேசுனியா டா “
“ப்ப்ச் இங்க அந்த அரை மண்டையன் மேனேஜர் அடுத்த வாரம் போடப் போற லீவுக்கு சேர்த்து வச்சு வேலை வாங்குறான் டா….. உனக்கும் சேர்த்து லீவ் கேட்டேனா…. உனக்கு லீவ் எம்டி கிட்ட மெயில் அனுப்பி தான் கேட்கனும் னு சொல்லிட்டார்.”
“அச்சோ நீ ஏன் டா எனக்கு லீவ் கேட்ட…… ஆமா எம்டிக்கு மெயில் அனுப்பிட்டாரா மேனேஜர்… “
“இன்னும் இல்ல டா… நாளைக்கு தான் அனுப்புவார் ஆமா நீ ஏன் டா இவ்வளவு பயப்படுற…. “
“ப்ப்ச் பயம் எல்லாம் இல்ல….அது உனக்கு புரியாது சரி சாப்டியா…..” என்று சிறிது நேரம் பேசி விட்டு வைத்தவன் யாருக்கோ அழைத்து பத்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தான் .
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இளம்பரிதி நிலைமை தான் அந்தோ பரிதாபம்…. அவன் தன் குடும்பத்தினருடன் கலந்து பேசி கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக அவனது காதலியிடம் சொல்ல அவளோ….. திருமண பத்திரிக்கையை நீட்டினாள்.
“மன்னிச்சிடுங்க இளா எனக்கு வேற வழி தெரியலை அப்பா செத்து போயிடுவேன் னு மிரட்டுனாரு…. எனக்கு வேற வழி தெரியலை ஒத்துக்கிட்டேன்….” என்றவள் நிற்காமல் சென்று விட்டாள்.
உண்மையில் அவளது தந்தைக்கு இவர்களது காதலே தெரியாது…. இளம்பரிதியை விட வசதியில் சற்று அதிகமான வரன் வரவும் மனம் மாறி இந்த திருமணத்திற்கு ஒப்பு கொண்டு விட்டாள் அவள்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மறுநாள் காலையில் வழக்கம் போல இருவரும் அலுவலகம் சென்று இருக்க முகில் திருச்சி மாவட்டத்தின் மற்ற கிளைகளுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றான்.
“ஜீவாண்ணா…. என்ன ஆச்சு…. காபி கடைகாரி ஒத்துகிட்டாளா இல்லையா நான் வேணும் னா பேசவா… ???”
“அட போம்மா நானே வேதனையில் இருக்கேன் நீ வேற ??”
“அட என்ன ஆச்சு ப்ரதர் சொன்னா ஏதாவது பண்ண முடியுமான்னு பார்ப்போம் இல்ல.. “
“தீரு சொன்னா சிரிக்க கூடாது…. !!”
“நீ சொல்லு சிரிக்கிறதா வேண்டாமா னு நான் சொல்றேன்…. “
“அது…. அது…. அது… அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சாம் இரண்டு பசங்க வேற இருக்காம்…. நல்ல வேளை நான் போய் லவ் சொல்லலை… அதுக்குள்ள அவங்களுக்கு ஹஸ்பண்ட் குழந்தைகளும் இருக்கிறது தெரிஞ்சிடுச்சு ….”
“அடப்பாவி கல்யாணம் ஆனது கூடவா தெரியலை மக்கு பிளாஸ்திரி…கடைசியில் ஓசியில் காபி குடிக்கலாம் னு நினைச்ச என் ஆசையில் மண்ணள்ளி போட்டியே ….சரி விடு வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்….” சமாதானம் செய்தாள் தீர்த்தன்யா… ஆரண்யாவோ ஃபோனில் ஒரு பார்வையும் கம்ப்யூட்டரில் மறு பார்வையும் பார்த்தபடி அமர்ந்திருக்க ஜீவா சிக்னல் செய்தான்.
“ஆரு…. என்னடா செல்லம் ஆச்சு…. க்ளாஸ் போகலை…. ” என நக்கலாக தீரு கேட்க
“ப்ப்ச் ஒண்ணும் இல்ல நீ கிளாஸ் எடு போ….. எனக்கு அக்கவுண்ட் ஃபைலை சிஸ்டத்தில் ஏத்தனும்…. மேடம் ஃபோன் பண்றேன் னு சொல்லி இருக்காங்க அதான் வெயிட் பண்றேன் “
“ஜீவாண்ணா கேட்டியா மேடம் ஃபோனுக்கு வெயிட்டிங்காமா…. வா வா போகலாம் “என்றாள் சிரிப்புடன்.
“தீரு அடி வாங்க போற போடி ஸ்டூடண்ட்ஸ் வெயிட் பண்றாங்க… “என்றவள் அவர்கள் அறியாமல் சிரித்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் முகில் ஆரண்யாவிற்கு அழைக்க அவளது முகம் செம்மையை அப்பி கொண்டது.
“ஹலோ….. ஆரு (ஆரண்யா ஆருவாகிப் போனாளா) !!”
“ம்ம்ம்ஹ்ம் சொல்லுங்க முகி !!”
(பாருடா முகி யா )
“என்ன பண்ற….. ஆபிஸ் வந்தாச்சா…. நாளைக்கு சென்னை கிளம்பிடுவேன் ஆரு உன் கிட்ட தனியா பேசனும்…. வெளியே வர முடியுமா ??”
“அது ரொம்ப கஷ்டம் முகி… வீட்டில் யாராவது பார்த்துட்டா அவ்வளவு தான்… நீங்க ஃபோனில் சொல்லுங்க…. “
“இதை எல்லாம் ஃபோனில் சொல்ல முடியாது… ப்ளீஸ் ஆரு ஒன் ஹவர் மட்டும் தான் அதுக்குள்ள அனுப்பி வச்சிடுறேன்…. ப்ளீஸ் ஆரு… ப்ளீஸ் ப்ளீஸ் டா “…கெஞ்சியவனிடம் என்ன சொல்வது என தெரியாமல் தவித்தாள்.
“நான் தீரு கிட்ட கேட்டு சொல்றேன் முகி ப்ளீஸ்… “
“நீ ஃபோனை வாயாடி கிட்ட தா நான் சொல்றேன்…” என்றதும் தீருவை அழைத்து கொடுத்தாள்.
“கண்டிப்பாக பேசனும் னா ஈவ்னிங் பர்மிஸன் போட்டு அனுப்பி வைக்கிறேன் முகில் சார்…. வீட்டுக்கு போகும் போது கூட்டிட்டு போற மாதிரி டைம் பிக்ஸ் பண்ணா சரியா இருக்கும்… “என சம்மதித்து விட்டாள்.
இருவரும் அன்று மாலையே ஹோட்டல் சங்கீதாஸில் சந்தித்தனர்.
முதல் முறையாக வெளியே வருவதால் பதட்டத்துடன் ஆரண்யா அமர்ந்திருக்க… முகில் வந்து விட்டான்.
“ஹாய் ஆரு கூப்டதும் வந்ததுக்கு தாங்க்ஸ் டா…. ” அழகாய் புன்னகைத்தான்.
“என்ன சாப்பிடுற ஆரு…. “
“எதுவும் வேண்டாம் முகி… “
“ப்ப்ச் இரு “என்றவன் காபி மட்டும் ஆர்டர் செய்தான்.
“என்ன விஷயம் நேரா பார்க்கனும் னு கூப்பிட்டு இருக்கீங்க ??”
“ம்ம்ம்ஹ்ம்…. சொல்றேன் அதை தான் எப்படி சொல்றது னு தெரியலை…. நீ என்னை பத்தி என்ன நினைக்கிற ஆரு… “
“ம்ம்ம்ஹ்ம்… நல்ல ப்ரெண்ட்லியா பழகுறீங்க…. தென் நல்ல பையன் “
“அவ்வளவு தானா !!”
“அதுக்கு மேல சொல்ல தெரியலை முகி….”
“சரி ஓகே விடு…. கண்ணை மூடு…. “
“எதுக்கு…??”
“ப்ப்ச் கண்ணை மூடு “…என்றதும் கண்களை மூடிக் கொண்டாள்.
ஐந்து நிமிடத்தில் இப்ப கண்ணை திறக்கலாம் என்க ஆரண்யா விழி திறந்தாள்.
எதிரே ஒற்றை பிங்க் நிற ரோஜாவை நீட்டியபடி முழங்காலிட்டிருந்தான்.
“இது என்ன முகி ??”எழுந்திருங்க
“ஐ லவ் யூ ஆரண்யா…. என் வாழ்க்கை முழுவதும் நீ வேண்டும்…. என்னடா ஒரு மாதத்திற்கு முன்னாடி பார்த்து விட்டு இந்த ஒரு வாரமா பேசுறவன் திடீர் னு லவ் சொல்றான்னு நினைக்காத…. ஒரு வேளை சும்மா பொழுது போக்கிற்காக லவ் பண்றானோன்னு சந்தேகம் எல்லாம் வேண்டாம்…. உன்னை பார்த்த நிமிடத்தில் இருந்து இன்று இந்த நொடி இதுக்கு மேலயும் லைப் லாங்கும் உன் கூட வாழ ஆசைப்படுறேன்…. கண்டதும் காதல் சும்மா புற அழகை பார்த்து வந்த அட்ராக்ஷன் இப்படி எது வேண்டுமானாலும் நீ நினைச்சுக்க பட் என் மனதில் உனக்கான இடம் மனைவி என்ற ஸ்தானம் மட்டும் தான்….அப்புறம் என் காதலை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன் விருப்பம் தான்….பிடிக்கலைனா நான் எந்த விதத்திலும் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்…. ஆனால் நீ என்னை ஏத்துகிட்டா நம்ம லைஃப் நல்லா இருக்கும் னு தோணுது… வில் யூ “என்றான் ….. எதிர்பார்ப்புடன்.
“நான்… நான் யோசித்து சொல்றேன் முகி ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க….உங்களை எனக்கு பிடிக்கும் இருந்தாலும்…. நான் யோசிக்கனும். “
“கண்டிப்பாக எடுத்துக்கோடா… உன் பதிலுக்காக நான் வெயிட் பண்றேன்… என்றதும் சிரிப்புடன் ஒரு ப்ரெண்ட்லியா கூட ரோஸ் வாங்கிக்கலாமே… ப்ளீஸ் “என முகம் சுருக்கி சொல்ல வாங்கி கொண்டாள் .
“சரி கிளம்பலாமா உன் சிஸ்டர் இல்லாட்டி திட்ட போறா…. “
“ம்ம்ம்ஹ்ம் “என்று இருவரும் கிளம்பினர்.
கண்டிப்பாக தன் காதலை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் சென்னை கிளம்பினான் முகில்.
ஆரன்யா ஜீவாவிடம் முகில் பேசியதை கூற தீரு அவளை திட்டினாள்.
“ஏன் டி அதான் லவ் பண்ற இல்ல அவர் கிட்ட சொல்ல வேண்டியது தானே…”
“உனக்கு என்ன தெரியும் எனக்கு அவரை பார்த்தா”
“பார்த்தா… ஜீவாண்ணா ஆரு குட்டி வெட்கப்படுறா டா….. டேய் அண்ணா பையா…. இதெல்லாம் காண கிடைக்காத ஒண்ணு “என்று கிண்டல் செய்து ஒரு வழியாக்கி விட்டாள் தீர்த்தன்யா.
அன்றிரவே தன் காதலை கைபேசியின் குறுஞ்செய்தி வழியாக சொல்லி விட முகில் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தான்.
“ஆரு ஃபோன் பண்ணவா ப்ளீஸ்… ”
“ம்ம்ம்ஹ்ம்….. “
லவ்வர்ஸ் ரெண்டு பேரும் ரொமாண்டிக்கா பேசுவாங்க அதை எல்லாம் நாம கேட்க வேண்டாம்… இந்த முகி பையன் ஒட்டு கேட்கிறோம் னு சண்டைக்கு வந்திடப் போறான் வாங்க மக்களே நாம போவோம்… நீங்க படம் ஓட்டுங்க … தீரு டார்லிங் நீ என்ன பண்ற… அட செல்லக்குட்டி டோரா புஜ்ஜி பார்க்கிறா…. நான் அவ கூட சேர்ந்துக்கிறேன் பா யாரெல்லாம் என் கூட வர்றீங்க…
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நாட்கள் அழகாக செல்ல…. ஆரண்யா முகிலின் காதலும் வளர்ந்தது. ஒரு வாரத்தில்…. ஒரு வருடம் பேச வேண்டிய பேச்சுக்களை எல்லாம் பேசி விட்டனர். ஆனால் முகில் இதுவரை தன் குடும்பம் பற்றி அதிகம் பேசியதில்லை.
“முகி திருவிழாவிற்கு போறோம்…. ரெண்டு நாள் கழிச்சு வந்திடுவோம் அதுவரை உங்க கிட்ட பேச முடியாது… சாரி… நான் போயிட்டு வந்ததும் உங்க கிட்ட பேசுறேன் சரியா… “
“ப்ப்ச் ரெண்டு நாளைக்கா ….என்னடா…இந்த மொபைல் தெரியாம தானே வச்சிருப்பீங்க…. நான் பேசுறேனே…”
“அச்சோ முகி புரிஞ்சுக்கங்க…. அங்க எல்லோரும் எங்களை சுத்தி தான் இருப்பாங்க… தீரு இந்த மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிடுவா… நான் கண்டிப்பாக ரெண்டு நாள் ல வந்திடுவேன் பேசுவேன்… சரியா… ”
“சரி… போ.. ” என சமாதானம் ஆகி விட்டான்.
ஆரண்யா தீர்த்தன்யா இருவரும் திருவிழாவிற்காக தஞ்சாவூர் கிளம்பினர்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
“மச்சான் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்… கிளம்பலாமா…. “என ராகவ் பேசியபடியே வர முகிலுக்கு மிகச் சரியாக அந்த ஃபோன் வந்தது.
“என்ன இந்த நம்பர்ல இருந்து ஃபோன் வருது….” என யோசித்தவன் “ராகவ் நீ வெளியே வெயிட் பண்ணு நான் பேசிட்டு வரேன்…. “என அட்டெண்ட் செய்தான்.
எதிர் முனையில் என்ன சொல்லப்பட்டதோ…. சற்று பதட்டமடைந்தவன்… “சரி உடனே கிளம்பி வரேன்” என வைத்து விட்டான்.
“ராகவ் ரொம்ப சாரிடா…. வீட்ல இருந்து ஃபோன் உடனே போயே ஆகனும்…. நான் கண்டிப்பாக இன்னொரு தடவை வரேன் இப்பவே வர சொல்றாங்க…..” என சொல்ல ராகவ் முக்கியமான விஷயம் போல என நினைத்தபடி அவனை பஸ் ஏற்றி விட்டு தஞ்சாவூர் கிளம்பினான்.
……. தொடரும்.