நெஞ்சத்தில் தஞ்சமானவளே -05
தீர்த்தன்யா முகிலிடம் ஆருவைப் போல பேசிக் கொண்டிருக்க ஜீவாவும் ஆரண்யாவும் வந்து கொண்டிருந்தனர்.
காலையில் பேட்ச் மாணவர்கள் வந்ததும் .,”குட் மார்னிங் தீர்த்தன்யா அக்கா !!”என்றிட முகில் அதிர்ச்சியாக அவளை பார்க்க அவளோ உதட்டை மடித்து சிரித்து கொண்டாள்.
“டேய் நீங்க எல்லாம் போய் உட்காருங்க நான் வரேன்…. நேத்து தந்த ப்ரோக்ராமை முடிச்சிட்டா நோட்டை டேபிளில் வைங்க வரேன் ” என கூறி அனுப்பியவள் சிரித்தபடியே “சாரி சார் சும்மா விளையாடினேன் “என சொல்ல முகில் .,”இல்லை பரவாயில்லை மேடம் எப்போ வருவாங்க…. “என்றான். ஆனால் முகம் என்னவோ ஏமாற்றத்தை பிரதிபலித்தது.
ஜீவா ஆரண்யா இருவரும் உள்ளே நுழைந்ததும் முகில் ஆரண்யாவை பார்க்க அவளோ .,”குட் மார்னிங் முகில் சார் “என்க ஜீவாவும் காலை வணக்கத்தை தெரிவிக்க அதை ஏற்றுக் கொண்டவனுக்கு ஜீவாவை கூர்ந்து நோக்கினான்.
“ஜீவாண்ணா இவங்க முகில் சார்…. ஆரு கொடைக்கானலில் மீட்டிங் போயிருந்தா இல்ல அந்த ட்ரெயினிங்கை சார் தான் ஆர்கனைஸ் பண்ணாங்க…. “என தீர்த்தன்யா அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“ஓஓஓ சரி ஹாய் சார் நான் ஜீவானந்தம்…. இங்க C C++ Java எடுக்கிறேன்…” என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முகிலுக்கோ ஜீவா ஆரண்யாவிற்கு யார் என்று குழம்பி கொண்டிருந்தான்.
வாய் மட்டும் புன்னகையாக “சரி “என்றான் முகில்.
“சார் மேம் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்திடுவாங்க “என்க
“ஓகே தீர்த்தன்யா நான் வெயிட் பண்றேன் தென் எனக்கு இந்த மன்த்தோட டோட்டல் அட்மிஷன் லிஸ்ட் அன்ட் எந்த கோர்ஸ் அதிகமா ஜாயின் பண்ணி இருக்காங்க இந்த டீடெயில்ஸ் வேணும்…. “
“கண்டிப்பாக சார்… இதோ ஆரண்யா எல்லா டீடெயிலும் தருவாங்க…. அன்ட் காலையில் பேட்ச் தீர்த்தன்யா தான் கிளாஸ் எடுக்கனும்…. “என பவ்யமாக உரைத்து விட்டு ஆரண்யாவை முகிலுடன் தனியாக விட்டுவிட்டு சென்றார்கள் ஜீவாவும் தீர்த்தன்யாவும்.
“சார் நான் டீடெயில்ஸ் உள்ள ஃபைல் தரேன் “என எடுத்துக் கொடுக்க…. அவனோ” ஹவ் ஆர் யூ ஆரண்யா ??” என்றிட
“ஃபைன் சார்…. நீங்க எப்படி இருக்கீங்க” பொதுவாக பேசினார்கள் இருவரும் அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே….
இங்கே ஜீவாவை .,”ஏன் அவளை தனியாக விட சொன்னாய் “என தீரு திட்ட….
“ப்ப்ச்…. அவர் எப்படா ஆரு கிட்ட பேசலாம் னு காத்திருக்கார்…. நாம அங்க இருந்தா டிஸ்டர்பா இருக்கும்…. அதான் உன்னை தள்ளிட்டு வந்தேன் ….. “என ஜீவா சொல்ல
“ஆமா அப்படியே பேசி முடித்து காதலை கதை கதையா சொல்வாங்க பாரு…. போடா மொக்க பார்ட்டி அண்ணா…. அது ரெண்டும் என்ன பேசும் னு நான் சொல்லவா …!!”
“எங்க சொல்லு பார்ப்போம்…” என்றதும் இங்கிருந்து தீரு டப் செய்தாள்
“ஆரண்யா நல்லா இருக்கீங்களா…??” னு கேட்பார் இவ “ம்ம்ம் நீங்க எப்படி இருக்கீங்க னு கேட்பா…. அப்புறம் சாப்டிங்களா தூங்குனிங்களா… இது தான் அவங்க பேசுற அதிகபட்ச பேச்சா இருக்கும்… “என சிரித்தாள்.
“அது வாது பேசுவாங்கள்ள…. சரி அதுக்கு மேல என்ன பேசுவாங்க….” ஆர்வத்துடன் கேட்டான் ஜீவா.
“இந்த அந்நியன் படம் பார்த்திருக்கியா நீ…???”
“ம்ம்ம்ஹ்ம்… நாலு தடவை பார்த்திருக்கேன் ஏன்..?”
“இப்ப பாரு அதுல வர்ற மாதிரியே பேசுவாங்க…. அதான் அந்த ட்ரெயின் சீன் விவேக் சார் லவ் சொல்ல சொல்லுவார் நம்மாளு லவ் சொல்வாரே அது போல தான் இருக்கும்.
திருவையாறுக்கு பர்ஸ்ட் டைம் அதை பத்தி சொல்லுங்கனு சொல்லிட்டு முகத்தை பச்சை பிள்ளையா வச்சுப்பாரே அது தான் இங்க நடக்க போகுது.
“நான் திருச்சிக்கு பர்ஸ்ட் டைம்…. இந்த ஊரை பத்தி சொல்லுங்களேன்… னு கேட்பார் முகில் இவ அதுக்கு சதா மானச சஞ்சரரே… னு பாடுற மாதிரி மலைக்கோட்டையில் ஆரம்பிச்சு மணப்பாறை மாட்டு சந்தை வரை பேசப் போறா அப்படி தானே !!”என ஜீவா சொல்ல…
“ம்ம்க்கும்… உனக்கு ஆசை தான்… உன் தங்கச்சி பேசிட்டு தான் மத்த வேலை பார்ப்பா அங்க பாரு …. ரெண்டும் பார்த்துட்டு மட்டும் தான் இருக்கு…. அது ரெண்டும் வேலைக்கே ஆகாத கேஸு…. நாம தான் ஏதாவது செய்யனும்… “என தீரு சொல்ல…
“ஏன் தீரு ஆரு தான் பிடிக்கலைன்னு சொல்றாளே அப்புறம் ஏன் நீ இவ்வளவு மெனக்கெடுற… ??”
“டேய் அண்ணா பையா…. அந்த மூஞ்சி ரெண்டையும் கொஞ்சம் க்ளோஸ் அப் ல பாரு… அதுவும் நம்ம ஆரு டார்லிங்கை பாரு…. அவ மூஞ்சியில் என்ன ஒரு ஒளிவட்டம் தெரியுது…. அதை பார்த்துமா உனக்கு தெரியலை அவளுக்கு முகில் சாரை பிடிக்குமா பிடிக்காதான்னு… அதெல்லாம் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா என் தாத்தா மம்மிக்காக வேண்டாம் னு சொல்லிட்டு திரியுறா…. சீக்கிரம் சரி பண்ணிடலாம் “
“ஆமா… நீ ஏன் இவ்வளவு ஆசைப்படுற ஆரண்யா முகில் சாரை லவ் பண்ணனும் னு… நீ சரியில்லையே… ஆமா நீ எதுவும் எங்களுக்கு தெரியாமல் தனி ட்ராக் ஓட்டுறியா ??”சந்தேகமாக கேட்டான் ஜீவா.
“அதானே தீருக்கா… எதுவும் அப்படி ட்ராக் இருக்கா என்ன??” என்று பின்னாலிருந்து குரல் கேட்க…. “டேய் ப்ரோக்ராம் எழுதாம இங்க என்ன டா பண்றீங்க… !!”
“ம்ம்ம்ஹ்ம் ஒரு ப்ரோக்ராமை எவ்வளவு நேரம் எழுதுறது…. நீங்க ரொம்ப சுவாரசியமா பேசுனிங்களா அதை கேட்டு விட்டு இருந்தோம்…. சரி சொல்லு தீருக்கா…. எதாவது ட்ராக்…. ம்ம்ம்…. ம்ம்ம் “என இழுக்க
“வயசுக்கு தகுந்த பேச்சு பேசுங்கடா… வாங்க போகலாம்…. மேடம் வந்தா அவ்வளவு தான்” என வகுப்பு எடுக்க சென்றாள்.
சற்று நேரத்தில் லாவண்யா மேடம் வந்துவிட முகில் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றான்.
“வாங்க முகில்…. வந்து ரொம்ப நேரம் ஆச்சா… சாரி லேட் ஆகிடுச்சு “என்றவர்… அந்த மாத அட்மிஷன் பற்றியும்… மேலும் என்ன செய்தால் நிறைய மாணவர்கள் வருவார்கள் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆரண்யா, தீர்த்தன்யா இருவரிடமும் மாணவர்களிடம் எப்படி பேசி கோர்ஸில் ஜாயின் பண்ண வைக்க வேண்டும் என்பதை விளக்கி கொண்டிருந்தான். மேலும் மீட்டிங்கில் ஆரண்யாவின் பங்களிப்பு ஆர்வம் பற்றியும் கூறி பாராட்டினான் முகில்.
மதியம் ஆகவும் லாவண்யா முகிலை சாப்பிட வீட்டிற்கு அழைக்க அவனோ தான் ஆர்டர் செய்து இருப்பதாக கூறி விட்டான்.
லாவண்யா வீட்டிற்கு சென்று விட ஜீவாவை முகிலை இங்கேயே சாப்பிடுமாறு அழைக்க கூறினாள்.
“முகில் சார்… நீங்க எங்க கூட ஜாயின் பண்ணிக்கிறிங்களா…. ஆரு மா சொல்லுடா அவருக்கு உன்னை தானே தெரியும்… ” என்றிட அவளும் நீங்க… நீங்க…. என இழுக்க தீரு சும்மா இராமல்.,” லஞ்ச் டைம் முடியறதுக்குள்ள அவரை சாப்பிட கூப்பிட்டுருடி …. சார் வாங்க…. ஹோட்டல் ல சாப்பிட்டா உடம்பு எதுக்கு ஆகும்…. அப்படி உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடு தான் வேணும் னா… ஒரு நிமிஷம் நாங்க வந்திடுறோம்” என்றவள் ஜீவாவை அழைத்து கொண்டு வெளியே சென்றாள்.
ஆரண்யா முகிலுடன் தனித்திருக்க… “சார் ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வாங்க…. “
“ப்ப்ச்… ஆரண்யா இந்த சாரை விட மாட்டீங்களா… பேர் சொல்லி கூப்பிடுங்க ப்ளீஸ்… ஆமா தீர்த்தன்யா எப்போதும் இப்படி தானா … !!”
“சாரி சார்…ஸ்ஸ்ஸ்… முகில் முகில் …. அவ ஜாலி டைப் ஆனால் நல்ல பொண்ணு…..” என்றாள் அவசரமாக
அவள் பேச்சில் மென்மையான புன்னகையுடன்.,” நான் அவங்களை தவறா சொல்லலை எல்லார் கிட்டயும் சகஜமாக இயல்பா பேசுறாங்க அதனால கேட்டேன்… உண்மையில் அவங்க கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… ஜீவாவும் நல்லா பழகுறார்… “என்க
“ஜீவாண்ணா ரொம்ப நல்ல டைப்….. எங்க மேல ரொம்ப கேர் எடுத்துப்பாங்க ….”என்றாள்.
அவள் ஜீவாவை அண்ணன் என்று அழைத்ததில் மனம் குளிர்ந்தவன் சிரிப்புடன் பேசிக் கொண்டிருக்க ஜீவாவும் தீருவும் சாப்பாட்டுடன் வந்து விட்டனர்.
“சாரி சார் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு… கை கழுவிட்டு வாங்க சார் சாப்பிடலாம்…” என சொல்லவும் முகில் சென்று விட…
“ஆரு…. சீக்கிரம் டிஃபனை எடுடி செம பசி…”
“இருடி கை கழுவிட்டு வரேன்” என எழுந்து செல்ல முகிலும் சரியாக கை கழுவி விட்டு வர இருவரும் மோதிக் கொண்டனர்.
“ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ…” என ஆரண்யா நெற்றியை தேய்க்க “அச்சோ சாரி டா தெரியாமல் இடிச்சுட்டேன் நீ வர்றதை கவனிக்கலைமா… சாரி சாரி ” என முகில் பதட்டமாக சொல்ல “இல்ல பரவாயில்லை நானும் கவனிக்காம வந்துட்டேன்…” இருவரும் ஒருவரை ஒருவர் சமாதானம் செய்து விட்டு சென்று சாப்பிட அமர்ந்தனர்.
ஆரு சிறு சிறு டப்பாக்களை எடுத்து வைக்க முகில் என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டிருந்தான் .
“ஜீவா ணா அங்க பாரு “என முகிலை கண் காட்ட ஜீவா உதட்டை மடித்து சிரித்து கொண்டான்.
“முகில் சார் சாப்பிடுங்க…. ” என எடுத்து வைத்தான் ஜீவா.
“முகில் சார்…. எங்க சாப்பாடு டேஸ்ட் பண்றீங்களா ??” என தீரு கேட்க
“அது வந்து… இல்ல இதுவே போதும் எனக்கு “என்றிட தீரு சிரித்துக் கொண்டே “என்ன சார் ஆரு டிஃபன் பாக்ஸை பார்த்து பயந்துட்டிங்களா…. அவ அப்படி தான் சார் சொப்பு சாமான் மாதிரி டப்பாவில் தான் சாப்பாடு எடுத்து வருவா…. அவளுக்கு நான் ஆப்போசிட்…. கொஞ்சமா சாப்பிட எனக்கு பிடிக்காது…”. தீரு படபடவென்று பொரிந்து தள்ள ஆருவிற்கு வெட்கம் தாளவில்லை.
அன்றைய நாள் அழகாக செல்ல முகில் மீண்டும் ஹோட்டலுக்கு கிளம்ப ஜீவா அழைத்தான்.
“முகில் சார் !!”
“ஜீவா சும்மா முகில் னே கூப்பிடுங்க…. உங்களுக்கும் எனக்கும் ஒரு வயது தான்” என சொல்ல இருவரும் பேசியபடி நடந்தனர்.
“முகில்….உங்க கிட்ட நேரடியாக ஒரு விஷயம் கேட்பேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ??”
“இல்ல சொல்லு ஜீவா…”
“அது… அது….. உங்களுக்கு ஆருவை பிடிச்சிருக்கா என்ன ??”
“ஏன் கேட்கிறீங்க …??”
“நீங்க பார்க்கிற பார்வையை வச்சு தான்…. நீங்க ஆருவை பார்க்கும் போது பேசும் போது தடுமாறுறீங்க அதை வச்சு தான் கேட்டேன்… ”
“அப்படி இல்லை… அது எனக்கு ஆரண்யாவை பிடிக்கும்…. இன்னும் பேசி பழகலை இல்லையா அதனால முழுசா சொல்ல முடியலை பட் எனக்கு ….. ஆரண்யா கிட்ட பேசனும் னு தோணுச்சு…. அவங்க கூட பழக தோணுச்சு…. அங்க அத்தனை கேர்ள்ஸ் வந்திருந்த போதும் எனக்கு ஆரண்யா கிட்ட தான் பேசனும் னு தோணுச்சு அது தான் அவங்களை பிடிக்கிறதுனா கண்டிப்பாக எனக்கு ஆரண்யாவை பிடிச்சிருக்கு “என்றான் பலவிதமாக ஜீவாவை குழப்பி விட்டு
“முகில்…. நல்லா குழப்பி விடுற…. ஒரு விஷயம் மட்டும் சொல்றேன்…. அதை கவனமாக கேட்டுக்கங்க …. ஆரு ரொம்ப அமைதியான பொண்ணு வீட்டில் என்ன சொல்றாங்களோ அது படி தான் நடந்துப்பா…. அதே தீரு…. அவளுக்கு அப்படியே ஆப்போசிட்…. வாயாடி ரகம் வீட்டில் சொல்வதை கேட்பா ஆனா அவளுக்கு பிடிச்சதை தான் செய்வா…. ஆருவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வா…. ஆரு ன்னு இல்ல அவளுக்கு பிடிச்சவங்களுக்காக எதுவும் செய்ய கூடிய கேரக்டர்…. இது ஏன் நான் உங்க கிட்ட சொல்றேன்னா…. சப்போஸ் உங்களுக்கு ஆருவை பிடிச்சிருந்து லவ் பண்ணா… நாளைக்கு கண்டிப்பாக பிரச்னை வரும் ஏன்னா அவங்க வீட்டில் லவ் மேரேஜ் கண்டிப்பாக அக்ஸப்ட் பண்ண மாட்டாங்க… அப்போதைக்கு…. ஆருவை நீங்க அவங்க வீட்டை விட்டு வர சொன்னா கண்டிப்பாக வர மாட்டா…. அவ வீட்டில் சொல்றதை கேட்டு தான் நடப்பா… ஸோ… அவளை லவ் பண்ற ஐடியா இருந்தா ட்ராப் அவுட் பண்ணிடுங்க….”என்றான் தீர்மானமாக
“ஏன் ஜீவா…. லவ் பண்ணி அவ வீட்டில் முறைப்படி கேட்டா கூட ஒத்துக்க மாட்டாங்களா என்ன…??”
“அப்போ சார் லவ் பண்றீங்க அப்படி தானே…. !!”
“ம்ம்ம்ஹ்ம் இது வரை தெரியலை…. ஆனால் எனக்கு ஆரண்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு….. அவ என்னோட லைஃப் பார்ட்னரா வந்தா கண்டிப்பாக ரெண்டு பேரும் ஹாப்பியா இருப்போம் “என்றான்.
ஜீவா முகிலை மேலும் கீழும் பார்த்து விட்டு” இதுக்கு பேரு தான் லவ்…. புரியுதுங்களா மிஸ்டர் முகில்கிருஷ்ணா… ஆனால் ஆருவை மேரேஜ் பண்ணிக்க நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பாக நிறைய போராட வேண்டி வரும்…. “
இதே கேள்வியை இங்க தீருவும் ஆரண்யாவிடம் கேட்டு கொண்டிருந்தாள்.
அவ என்ன சொல்லி இருப்பா …
….. தொடரும்.